ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில்

Status
Not open for further replies.
ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில்

ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில்


f1687857-ec6b-4446-bc2b-3bde870b960b_S_secvpf.gif



திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் ஐவர்மலை எனும் ஊரில் அமைந்துள்ள கோயில் ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில். இந்தக் கோயில் திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் பழமையும் பெருமையும் வாய்ந்த கோயில்களில் ஒன்று.

தல வரலாறு :

வன வாசத்தின் போது பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியுடன் ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுகிறார்கள். இந்த காரணத்தால் தானோ என்னவோ இம்மலை ஐவர் மலை எனஅழைக்கப்படுகிறது. போகருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. இந்த தோஷம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார்.

வேள்வியின் முடிவில் புவனேஸ்வரி அம்மன் தோன்றி இந்த தோஷம் போக வேண்டுமானால் நவபாஷானத்தினால் ஆன முருகன் சிலை ஒன்று செய்து அந்த முருகன் சிலையை பழனியில் வைத்து வழிபடும் படி கூறினாள். போகரும் இந்த பொறுப்பை தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.

தல சிறப்பு :

ஐவர்மலை தலத்தில் இரண்டு புஷ்கரிணிகள் உள்ளன. ஒன்று தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணி, மற்றொன்று அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணி. புஷகரிணிகளின் அமைப்பு சிறப்பானது. சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படியான அமைப்பு.

ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைந்து கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக நம்புகிறார்கள். இந்தக் காரணங்களுக்காக ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர்.

மற்றொரு சிறப்பு உச்சிப்பிள்ளையார் சன்னதியில் ஆடி அமாவாசை அன்று ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது. ஐவர் மலை தலத்தில் விநாயகர் உச்சிப்பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் துவாபரயுகத்தில் இங்கு வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.

நாராயணபரதேசி என்ற பரதேசி சுமார் 150 வருடங்களுக்கு முன் ஐவர்மலைக்கு வந்தார். கொற்றவை விக்ரகத்துடன் கோயில் ஒன்றை கட்டுகிறார். நாராயணபரதேசி மட்டும் இங்கே முக்தியடைந்துள்ளார்கள். மற்றும் அவர் சீடர் பத்மநாபா களஞ்சிகாட்டில் முக்தியடைந்துள்ளார்கள்.

இம்மலையின் மேற்கு பகுதியில் உள்ள சம தளத்தில் குழந்தைவேலப்பர் கோவிலில் மற்றுமொரு சிறப்பு நவக்கிரகங்கள் வட்டவடிவில் ஒன்றை ஒன்று பார்க்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது. ஐவர்மலைக்கு வந்து வழிபட்டால் பஞ்ச பூத தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள்.

யோக நிலையில் துரியம் என்பது மனம் புலன்களுடன் பொருந்தும் நிலையை குறிப்பதாகும். இதனை யோக சாதகம் செய்பவர்கள் உணரும் வண்ணம் இந்த மலையின் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது

??????? ???????? ?????? ?????? || aivar malai Throwpathi amman Temple
 
Status
Not open for further replies.
Back
Top