ஐயங்கார் என்பதன் பொருள் என்ன?

ஐயங்கார் என்பதன் பொருள் என்ன?

ஐயங்கார் என்பவர் வைணவத்தின் அடையாளமான பஞ்ச சம்ஸ்காரத்தைத் தரித்துக் கொண்டவர் ஆவார். .


சம்ஸ்காரம் என்பது ஐந்து நெறிகளை உள்ளடக்கிய ஒன்றாகும்.


அவை


தாபசம்ஸ்காரம்:-


வலதுதோளில்
சக்கரமும்,
இடதுதோளில்
சங்கும்
தரித்து செய்யப்படுவதாகும். இதை தாப சம்ஸ்காரம் என்பர்.


புண்ட்ரசம்ஸ்காரம்:-


நெற்றி,
நாபி,
மார்பு,
கழுத்து,
இரண்டுதோள்கள்,
பிடரி,
பின்இடுப்பு
ஆகிய உடலின் பாகங்களில்


கேசவ,
நாராயணா,
மாதவ,
கோவிந்த,
விஷ்ணு,
மதுசூதன,
திரிவிக்கிரம,
வாமன,
ஸ்ரீதர,
ரிஷிகேச,
பத்மநாப,
தாமோதர
திருநாமங்களைத் தியானித்து #திருமண் காப்பு அணிதல்! இதை புண்ட்ர சம்ஸ்காரம் என்பர்.


நாமசம்ஸ்காரம்:-


கோத்திரம்,
சூத்திரம்
முதலிய சரீரம் சம்பந்தமான சிறப்புகளை விடுத்து அடியேன் என்னும் பெயரை ஏற்றல்! இதை நாம சம்ஸ்காரம் என்பர்.


மந்திரசம்ஸ்காரம்:-


நல் மந்திரங்களை உபதேசித்தல்! இதை மந்திர சம்ஸ்காரம் என்பர்.


யாகசம்ஸ்காரம்:-


வழிபாட்டு மூர்த்தியை அமைத்து திருவாராதனம் செய்தல்! இதை #யாக சம்ஸ்காரம் என்பர்.


இந்த ஐந்தும் பெற்றவரே ஸ்ரீவைணவ நெறிகளுக்கு உரிய அதிகாரி ஆவார்.


அங்கத்தில் இந்த ஐந்தும் தரித்தவரையே ஐயங்கார் என்பர்.


அய்யங்கார் என்பது சாதியல்ல. அது வைணவத்தின் அடையாளம்
 
Back
Top