என்றும் நாங்கள் உயர்ந்திட
எங்களை தாங்கும் ஆணிவேரின்
ஆழம் அதிகமானது இன்று
அந்த நிலத்துக்கு நன்றி!
என்றும் பயணம் சிறப்புற
எங்களை திருப்பும் பாய்மரம்
அகன்றது மேலும் இன்று
அந்த காற்றுக்கு நன்றி!
என்றும் வளமை கொடுக்கும்
எங்களின் ஆதார நதியின்
ஆழம் அதிகமானது இன்று
அந்த நீர்நிலைக்கு நன்றி!
என்றும் பார்வை தந்திடும்
எங்கள் வீட்டு ஒளிவிளக்கின்
அழகுத்திரி நீளமானது இன்று
அந்த நெருப்புக்கு நன்றி!
என்றும் ஏற்றம் பெற
எங்களை ஏற்றிவிடும் ஏணிக்கு
அதிகமானது ஒருபடி இன்று
அந்த வானத்துக்கு நன்றி!
ஆம், அம்மாவுக்கு பிறந்தநாள்!
-TBT
எங்களை தாங்கும் ஆணிவேரின்
ஆழம் அதிகமானது இன்று
அந்த நிலத்துக்கு நன்றி!
என்றும் பயணம் சிறப்புற
எங்களை திருப்பும் பாய்மரம்
அகன்றது மேலும் இன்று
அந்த காற்றுக்கு நன்றி!
என்றும் வளமை கொடுக்கும்
எங்களின் ஆதார நதியின்
ஆழம் அதிகமானது இன்று
அந்த நீர்நிலைக்கு நன்றி!
என்றும் பார்வை தந்திடும்
எங்கள் வீட்டு ஒளிவிளக்கின்
அழகுத்திரி நீளமானது இன்று
அந்த நெருப்புக்கு நன்றி!
என்றும் ஏற்றம் பெற
எங்களை ஏற்றிவிடும் ஏணிக்கு
அதிகமானது ஒருபடி இன்று
அந்த வானத்துக்கு நன்றி!
ஆம், அம்மாவுக்கு பிறந்தநாள்!
-TBT