ஐப்பசி உத்தான ஏகாதசி விரதம் இருந்தால் கோ

ஐப்பசி உத்தான ஏகாதசி விரதம் இருந்தால் கோ

ஐப்பசி உத்தான ஏகாதசி விரதம் இருந்தால் கோடி புண்ணியம்!


ஐப்பசி துலா மாதம் என்றாலே தீபாவளி, மற்றும் துலா ஸ்நானம் தான் பலருக்கு ஞாபகம் வரும் ஆனால் மற்றும் ஒர் சிறப்பு உண்டு ஐப்பசிமாத வளர்பிறையில் வரும் உத்தான ஏகாதசி


உத்தான ஏகாதசி.


மாதந்தோறும் வரும் ஏகாதசி விசேஷம். அதனால் இந்த ஏகாதசி நாளில் மறக்காமல் விரதமிருந்து பெருமாளை ஸேவிப்பார்கள் காரணம்.
இவற்றில் வருடத்தில். மூன்று ஏகாதசிகள் முக்கியத் துவம் வாய்ந்தவை என்றுபோற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்..


கைசிக ஏகாதசி,
வைகுண்ட ஏகாதசி,
உத்தான ஏகாதசி


மேற்கண்ட மூன்று ஏகாதசிகளும் மிக மிக முக்கியமான
ஏகாதசி நாட்கள் என்று வைஷ்ணவ சம்பிரதாயத்தில் போற்றப்படுகின்றன.


விரதம் இருந்து, ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடுவோர் மகத்தான பலன்களைப் பெற்று மிக சிறப்பாக வாழ்வார்கள் என்பது ஆச்சார்யர்களின் வாக்கு.


இன்றைய தினம் உத்தான ஏகாதசி விரதம் இருப்பது,
வீட்டின் தரித்திர_நிலையை மாற்றிவிடும்.
வீட்டில் சுபிட்சம் நிலவும். கூடுமானவரை,
விரதத்தைமுறையாக அனுஷ்டிப்பதுஉத்தமம்.

இயலாதவர்கள், வயதானவர்கள் பால், பழம், மிதமான உணவுகள்
எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை.
காலை அருகில் உள்ள
பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி வழிபடுங்கள். எல்லா சத்விஷயங்களும்
உங்களைத் தேடி வரும்..


உத்தான ஏகாதசி நாளில், பெருமாள் கோயில் தீர்த்தத்தைப் பருகினால், அத்தனைப் புண்ணியம் கொண்டது என்கிறது சாஸ்திரம். மற்றும் தினம் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது சகல சத்விஷயங்களையும் அடைவீர்கள் என்பது உறுதி.


ஆகவே, உத்தான ஏகாதசி நாள் ஆன இன்று விரதம் மேற்கொள்ளுங்கள்.


முக்கியமான ஒன்று ஏகாதசி நாளில் திருத்துலாய் என்று அழைக்கப்படும் துளசியை சாப்பிட வேண்டாம் என்று உபநிஷதங்களிள் குறிப்பிடப்படுகிறது
 
Back
Top