ஐங்குறு நூற்றில் வேதக் கருத்துகள்

Status
Not open for further replies.
ஐங்குறு நூற்றில் வேதக் கருத்துகள்

Green_Paddy_Field.jpg


இரண்டாயிரம் ஆண்டுப் பழமையுடைய சங்க நூல்களில் இந்துமதக் கருத்துக்களை ஆங்காங்கே காணமுடிகிறது. எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறு நூற்றில் 500 பாடல்கள் உள்ளன. மருதத் துறை பற்றி ஓரம் போகியாரும் நெய்தல் துறை பற்றி அம்மூவனாரும் குறிஞ்சித் துறை பற்றி கபிலரும் பாலைத் துறை பற்றி ஓதல் ஆந்தையாரும் முல்லைத் துறை பற்றி பேயனாரும் பாடியுள்ளனர். இதில் ஓரம்போகியார் பாடிய 100 பாடல்களில் முதல் பத்துப் பாடல்களை வேட்கைப் பத்து என்று கூறுவர். ஒவ்வொரு பாடலிலும் உள்ள வரிகள் வேதங்களிலும் ஏனைய இந்து மத நூல்களிலும் உள்ள கருத்துக்கள் ஆகும்.


இமயம் முதல் குமரி வரை பாரதப் பண்பாடு ஒன்றே என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தமிழ்ப் பண்பாடு என்பது இமயம் முதல் குமரி வரை பாரதம் முழுதும் நிலவிய ஒரே பண்பாடுதான்.
கீழ்கண்ட வடமொழி வாழ்த்துப் பாடல்களில் வரும் கருத்துகள் அழகிய, குறுகிய தமிழ் சொற்றொடர்களில் மந்திரம் போலவே ஓரம்போகியாரால் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் வேதம் போற்றும் கருத்துக்களை பிரதிபலிக்கும் வடமொழி வாழ்த்துப் பாடல்கள்:


1.ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசா:
கோப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம் லோகா சமஸ்தோ சுகினோ பவந்து
சுருக்கமான பொருள்: ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும்; பசுக்கள் பிராமணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்

2.காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருதுவி சஸ்ய சாலினீ
தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மண சந்து நிர்பயா:
பொருள்: காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிர்களுடன் குலுங்கட்டும், நாடு முழுதும் வளம் பெருகட்டும், பிராமணர்கள் பயமின்றி வாழட்டும்.

3.அபுத்ரா: புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண:
அதனா: சதனா: சந்து ஜீவந்து சரதாம் சதம்
பொருள்: குழந்தைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் எடுத்தோர் பேரப் பிள்ளைகள் பெறட்டும், செல்வமில்லாதோருக்கு செல்வம் கொழிக்கட்டும், நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க.


இதோ ஓரம் போகியாரின் வாழ்த்து:

1.நெற்பல பொழிக பொன் பெரிது சிறக்க
ப்ருதுவி சஸ்ய சாலினீ
தேசோயம் க்ஷோப ரஹிதோ

2.விளைக வயலே வருக இரவலர்
ப்ருதுவி சஸ்ய சாலினீ
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்தி ஆத்மகாரணாத் (கீதை 10-13 எவர்கள் தமக்காகவே சமைக்கிறார்களோ அவர்கள் பாவிகள்)

3.பால்பல ஊறுக பகடு பல சிறக்க
கோ ப்ராம்மணேப்ய சுபமஸ்து நித்யம்

4.பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
ப்ராஹ்மண சந்து நிர்பயா:

5.பசியில்லாகுக பிணிகேன் நீங்குக
அதனா: சதனா: சந்து ஜீவந்து சரதாம் சதம்

ஜன்ம, ம்ருத்யு, ஜரா, வ்யாதி, பயம் நைவோப ஜாயதே
(விஷ்ணு சஹஸ்ர நாமம்)

6.வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசா:
ஜீவந்து சரதாம் சதம் (பஸ்யேம சரதச் சதம் என்று துவங்கும் வேத மந்திரமும் இங்கே ஒப்பிடற்பாலது)

7.அறம்நனி சிறக்க அல்லது கெடுக
பரித்ராணாய சாதூணாம் விநாசாய துஷ்க்ருதாம் (பகவத் கீதை)

8.அரசுமுறை செய்க களவில் லாகுக
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்
ந்யாயேன மார்கேன மஹீம் மஹிசா:

9.நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து

10.மாரிவாய்க்க வளம்நனி சிறக்க
காலே வர்ஷது பர்ஜன்ய:
தேசோயம் க்ஷோப ரஹிதோ

dark_clouds-4.jpg

பாடல் 62ல் இவர் இந்திர விழா பற்றியும் குறிப்பிடுகிறார். ஆதன் அவினி என்ற சேர மன்னனை வாழ்த்திய பாடல்களில் இந்தக் கருத்துகள் வருகின்றன. வாழ்த்தும் முறையும் வேத கோஷங்களில் வரும் முறையில் உள்ளது. ஒவ்வொரு பாடலிலும் மூன்றாம் வரி ஒரே மாதிரியாக இருக்கும் (எனவேட் டோளே யாயே யாமே). ஓரம்போகியார் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் உண்டு.


திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் இதே பொருளைப் பாடி இருப்பதும் படித்து இன்புறத்தக்கது:

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

தொல்காப்பிய செய்யுள் 109ல் வாழ்த்தப்பட வேண்டிய விஷயங்கள் எவை எவை என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். இதற்கு உரையாசிரியர்கள் எழுதிய கருத்துக்கள் பாரதம் முழுதும் நிலவிய கருத்துகளே. எல்லா கல்வெட்டுகளும் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் துவங்கும். பல கல்வெட்டுகளில் இதை ஸ்வஸ்திகா அடையாளம் மூலமும் குறிப்பிட்டனர்.

planting+paddy.jpg


வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற அருமையானதொரு நூலை திரு.கே.சி. லட்சுமிநாராயணன் எழுதி இருக்கிறார். அதில் நான் மேலெ ஒப்பிட்டுக் கூறிய கருத்துகள் இல்லை. பார்ப்பார் ஓதுக என்ற ஒரு வரியை மட்டும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அனைவரும் படிக்க வேண்டுய நூல் அது.


Read related Previous Posts
புறநானூற்றில் பகவத் கீதை—பகுதி 1, பகுதி 2
வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்
 
Status
Not open for further replies.
Back
Top