எவ்வளவு கொடுத்தாலும் தாங்கும் மொபைல் போ&

Status
Not open for further replies.
எவ்வளவு கொடுத்தாலும் தாங்கும் மொபைல் போ&

எவ்வளவு கொடுத்தாலும் தாங்கும் மொபைல் போன்



E_1434260091.jpeg




எச்.டி.சி. அண்மையில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள ஒன் மி (One Me) என்னும் ஸ்மார்ட் போன் இதுவரை இல்லாத ஒரு வசதியைக் கொண்டுள்ளது. பொதுவாக ஸ்டோரேஜ் மெமரியைக் குறிப்பிட்டுச் சொல்கையில், 8 ஜி.பி. தரப்பட்டுள்ளது. ஆனால், மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 அல்லது 64 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம் என்று விளம்பரப்படுத்துவார்கள்.


ஆனால், உலகிலேயே முதன் முதலாக இரண்டு டெரா பைட் அளவு வரை நீட்டித்த ஸ்டோரேஜ் மெமரியைத் தாங்கும் வசதியுடன் இந்த போன் வடிவமைத்து வழங்கப்படுகிறது. ஆனால், அந்த அளவிற்கு மெமரியை அதிகப்படுத்திக் கொள்ளும் திறனுடன் இன்னும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தான், மைக்ரோடியா என்ற நிறுவனம், Microdia 512GB Xtra Elite என்ற 512 ஜி.பி. வரை மெமரி கொண்டுள்ள மைக்ரோ எஸ். டி. கார்ட் ஒன்றை ரூ.63,000 விலையில் வெளியிட்டுள்ளது என்ற தகவல் தரப்பட்டது. வரும் ஜூலை முதல் இது கிடைக்கும்.

எச்.டி.சி. நிறுவனத்தின் இந்த போனில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதில் Mediatek's new Helio X10 என்ற சீனாவில் தயாரிக்கப்பட்ட ப்ராசசர் இயங்குகிறது. இதன் ப்ராசசர் சிப் 64 பிட் வகை இயக்கம் கொண்டது. ஆக்டா கோர் வகையுடன் 2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.
இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதன் திரை 5.2 அங்குல அகலத்தில் 1440x2560 பிக்ஸெல் திறன் கொண்ட QHD டிஸ்பிளே கொண்டது. ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0 சிஸ்டம் இயங்குகிறது. இதில் எச்.டி.சி. நிறுவனத்தின் Sense UI சாப்ட்வேர் இயங்கி இடைமுகத்தினைத் தருகிறது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. ஆக உள்ளது. இதனை 2 டெராபைட் வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் வசதியுடன் 20 எம்.பி. திறன் உடையதாக உள்ளது.

முன்புறக் கேமரா 4 அல்ட்ரா பிக்ஸெல் கொண்டு இயங்குகிறது. இதன் பேட்டரி 2,840 mAh திறன் கொண்டது. நெட்வொர்க் இணைப்பிற்கு, 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, எல்.டி.இ., வை பி, புளுடூத் 4.1, என்.எப்.சி. மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இந்த ஸ்மார்ட் போன் கிரே, கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். விலை விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25505&ncat=5


Please also read this

சாம்சங் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் அறிமுகப்படுத்தப்பட்டது

June 12, 2015,

12-1434109188-samsung-galaxy-s6-active.jpg







பல வதந்திகளை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் ஸ்மார்ட்போனினை அமெரிக்கா மற்றும் ஏடி&டி மட்டும் ப்ரெத்யேகமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..! சாம்சங் கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் ஏடி&டி தளம் மற்றும் விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என்பதோடு இதன் விலை குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. புதிய கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கால சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கின்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் IP68 வாட்டர் ப்ரூஃப், தூசி மற்றும் ஷார் ரெசிஸ்டன்ட் மற்றும் ஹோம், பேக் மற்றும் மல்டி விண்டோ ஆப்ஷன்களுக்கான பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

படு கேலக்ஸி எஸ்6 ஆக்டிவ் 5.1 இன்ச் குவாட் ஹெச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 5.0.2 லாலிபாப் மற்றும் சாம்சங் ஆக்டாகோர் 64-பிட் பிராசஸர் கொண்டு இயங்குகின்றது. மொபைல்களில் நான்கு மடங்கு வேகத்தில் இயங்கும் கூகுள் லைட் கேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமராவோடு பல கேமரா அம்சங்களும் 32 ஜிபி இன்பில்ட் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டபடுகின்றது

Read more at: http://tamil.gizbot.com/news/samsung-galaxy-s6-active-with-5-1-inch-qhd-display-launched-009377.html
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top