• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எமதீபம்

எமதீபம்
எமதீபம் எமதர்மன் இராஜாவின் நலம் பெற வேண்டி ஏற்றபடும் தீபம் .
இந்த ஏமதீபம் ஏற்றும் நாள் தீபாவளி பண்டிகையின் ஒரு பகுதி.
இருதினங்கள் வழிபாடு செய்யபடுகிறது ஒவ்வொரு பகுதியில்
தீபாவளி பண்டிகை முன்தினம் திரியோதசி தினம்
அன்று தன்வந்திரி பகவான் அவதார தினம் இந்த வருடம்(05/11/2018)வருகிறது.
அன்று மாலை ஒரு பெரிய அகல்விளக்கில் நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றி வீட்டுக்கு வாசலி வைப்பது சால சிறந்து.
வட இந்திய பகுதியில் ஐப்பசி வளர்பிறை துவதியை (09/11/2018) அன்று வழிபாடு செய்யபடுகிறது.
இல்லத்தில் உடல்நிலை சரியில்லதவர்கள்
மற்றும் முன்னோர்களில் துர்மரணம் அடைந்தவர்கள் அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும் இந்த வழிபாடு செய்யபடுகிறது.
ஶ்ரீ எமதர்மன் அவருடைய சகோதரி எமி இல்லத்தில் நிகழ்த வழிபாடு நிகழ்வு
எம துவிதா'வாக வட மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். 'பால்பிஜி' என்றும், 'பையாதுஜ்' என்றும் போற்றப்படுகிறது இந்தத் திருநாள். மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
ஒரு முறை... ஐப்பசி மாத வளர் பிறை துவிதியை அன்று தன் சகோதரி 'எமி'யின் வீட்டுக்குச் சென்றார் எமதர்மன். அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை சூடி, திலகம் இட்டு அன்புடன் வரவேற்றாள் எமி. இருவரும், ஒருவருக்கு ஒருவர்... பரிசுகள், இனிப்புகள் வழங்கி தங்கள் பாசத்தைப் பகிர்ந்து கொண் டனர் அப்போது எமதர்மன், ''இந்த தினத்தில், தன் சகோதரியின் கைகளால்
திலகம் இட்டுக் கொள்பவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு எமவாதனை கிடையாது!'' என்று வரம் தந்தாராம். எனவே... எம துவிதியைத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள்! சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, 'எமனுக்குப் பிடித்த விழா' என்று புராணங்களும் போற்றுகின்றன!
ஆக, தீபாவளியை ஒட்டி வரும் எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய தினங்கள் தனக்கு உகந்தவை ஆதலால், தீபாவளிப் பண்டி கையை எமதர்மன் விரும்புவதாக ஆன் றோர்கள் கூறுவர்.


சகோதர்களை சந்தித்து ஆசிபெற்று வருக.
வட இந்திய பகுதியில் சகோதரிகளுக்கு புது துணிகள் எடுத்து எடுத்து விருந்து வைத்து சிறப்பாக கொண்டாடுவார்கள்.


உங்கள் சகோதரர் நிலை அறிந்து அவரிடம் இருந்து ஒரு ரூபாய் வாங்கினாலும் பெரும்பாக்கியம்.


மகிழ்வோடு தீபாவளி மற்றும் எமதர்ம ராஜாவின் பண்டிகை,தன்வந்திரி ஜெயந்தி முன்று மகிழ்வோடு கொண்டாவும்.


5th
November 2018
(Monday)


God Yamaraj


Yama Deepam Time = 17:42 to 19:00
Duration = 1 Hour 17 Mins


A Deepak, for the God of death Yamaraj, is lit outside home on Trayodashi Tithi during Diwali to ward off any untimely death of any family members. This ritual is known as Deepdan for Yamraj.


The Deepak is lit outside home during Sandhya time. It is believed that Deepdan pleases Lord Yama and He protects family members from any accidental death.
 
ஐப்பசி திரயோதசி 05.11.2018 நாளை யம தீபம் ஏற்றுங்கள் !

"யமதீபம் "

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும்.

அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.

அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.

இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும்.

யம தீபம் ஏற்றி ஹிந்து பலிதானிகளுக்கும், முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது.

அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.

சாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:

1. உங்கள் வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம்.

2. தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.

3. விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.

4. பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய

ம்ருத்யவே சாந்த காயச

வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:
 

Latest ads

Back
Top