எந்த ஒர் எண்ணையும் 5 ஆல் பெருக்க (www.vedic-maths.in)

Status
Not open for further replies.
எந்த ஒர் எண்ணையும் 5 ஆல் பெருக்க (www.vedic-maths.in)

எந்த ஒர் எண்ணையும் 5 ஆல் பெருக்க கீழ்கண்ட முறையை பின்பற்றி ஒரே வரியில் விடை காண முடியும்.
[h=4]வழிமுறை :[/h] ஒர் எண்ணை 5 ஆல் பெருக்குவதற்கு பதிலாக அதை சரி பாதியாக்க வேண்டும் (அ) இரண்டால் வகுக்க வேண்டும். மீதி வந்தால் அதை விட்டுவிட்டு ஐந்தை விடையின் கடைசி இலக்கமாக சேர்த்துக்கொள்ளவும், மாறாக மீதி வரவில்லையெனில் பூஜ்ஜியத்தை விடையின் கடைசி இலக்கமாக சேர்த்துக்கொள்ளவும்.
நாம் இங்கு ஓர் எண்ணை 5 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 10 ஆல் பெருக்கி 2 ஆல் வகுக்கிறோம்.
அதாவது,
X * 5 = (X * 10)/2
[h=4]உதாரணம் 1: 98 X 5 = ?[/h][h=4] 98 X 5
98/2 ஈவு 49, மீதி 0
490 (மீதி 0 எனவே பூஜ்ஜியத்தை விடையின் கடைசி இலக்கமாக சேர்த்துக்கொள்ளவும்)

[/h][h=4]வழிமுறை :[/h] படி 1 : இங்கு 98 ஐ 5 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 2 ஆல் வகுக்க வேண்டும் அல்லது எண்ணை சரிபாதியாக பிரிக்க வேண்டும். எனவே 98 / 2 = 49, மீதம் வரவில்லை எனவே பூஜ்ஜியத்தை 49 இன் பக்கத்தில் கடைசி இலக்கமாக சேர்த்துக் கொள்வோம். எனவே 490 என்பது விடையாகிறது.

[h=4]உதாரணம் 2: 51 X 5 = ?[/h][h=4] 51 X 5
51/2 ஈவு 25, மீதி 1
255 (மீதி 1, எனவே ஐந்தை விடையின் கடைசி இலக்கமாக சேர்த்துக்கொள்ளவும்)


வழிமுறை :
படி 1 : இங்கு 51 ஐ 5 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 2 ஆல் வகுக்க வேண்டும் அல்லது எண்ணை சரிபாதியாக பிரிக்க வேண்டும். எனவே 51 / 2 = 25, மீதம் 1 வருகிறது, எனவே ஐந்தை 25 இன் பக்கத்தில் கடைசி இலக்கமாக சேர்த்துக் கொள்வோம். எனவே 255 என்பது விடையாகிறது.


For More Info : vedic-maths.in


[/h]
 
Status
Not open for further replies.
Back
Top