" ஏகமேவாத்விதீயம் " என்பதன் மூலம் இறைவன் ஒருவனே சத்தியம், இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லை, வேறாக காண்பதன் காரணம் மாயை. இந்த மாயையில் அனைத்து இரண்டானவையும் அடங்கும் - (பிறப்பு - இறப்பு, ஆண்- பெண், பகல் - இரவு, நல்லவை - தீயவை, பாவம்- புண்ணியம், இன்பம்- துன்பம் இவ்வாறு அனைத்தும்). செய்யும் செயல்கள் அனைத்தும் வினைப்பயனாக இன்பத்தையோ, துன்பத்தையோ நல்கும். நாம் செய்யும் எந்த செயலுக்கும் விளைவுண்டு. இதன்படி பிறப்பு மற்றும் இறப்பு என்னும் இந்த வினைவலைக்கு உட்பட்டதே, எவ்வாறு எனில் வினையின் பயனை தீர்க்கும் வரை பிறவி இருந்தே தீரும். பிறக்கும் தோறும் புதுவினைப்பதிவுகள் சேர்ந்தே வரும் - எனவே இந்த சுழலுக்குள் இருந்து தப்பவியலாது.
இதையே வள்ளுவர் இருள் சேர் இருவினை என்கிறார்
இதையே பகவான் ராமகிருஷ்ணர் விலங்கு போன்னலானாலும் இரும்பலானாலும் அது விலங்கே அது நம்மைக்கட்டியே தீரும் என்பார்.
ஆயினும் இந்த சுழலில் இருந்து தப்புவிக்க வள்ளுவர் நமக்கு வழி கூறுகிறார் அது பொருள் நிறைந்த இறைவனின் புகழ் பாடுதல் மற்றும் அணைத்து வுயிர்களும் இன்புற்று புகழும் வண்ணம் நம் செயல்களை செய்து வாழ்தல் (பார்க்க " வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான்..." - குறள்)