இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ&

Status
Not open for further replies.

shridisai

You Are That!
இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ&

[h=3]இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.[/h]

குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
துன்பம் (இடுக்கண்) வரும் பொழுது எவரால் மகிழ்வோடு
எதிர் கொள்ளமுடியும்? பின் எப்படி வள்ளுவர்
" இடுக்கண் வருங்கால் நகுக" என்று கூறுகிறார் .
வள்ளுவர் குறிப்பிடுவது இன்பத்தை அடுத்து வரும் துன்பத்தையன்று .ஒருவர் சோதனைக்கு உள்ளாகும் பொழுது எதிர்கொள்ளும் துன்பத்தையே .
சோதனை என்னும் செயல் சோதிப்பவர் மற்றும் சோதனைக்கு ஆட்படுத்த படுபவர் என இருவருக்கும் பொருந்தும்.மேலும் இவ்விருவரும் ஒருவரையொருவர் அறிந்தவராகவே இருப்பர்.இத்தகைய (இடுக்கண்) சோதனை ஒருவரை மேம்படுத்தவேயன்றி துன்புறுத்த அல்ல .
ஆகையால் இத்தகைய சோதனைக்கு ஆட்பட்டவர் மற்றவரின் பார்வைக்கு சொல்லன்னா துயரங்களை அனுபவிப்பது போல் தோன்றினாலும் அவர்கள் தாம் உயர்நிலை எய்தவே இத்தகைய சூழ்நிலை என்பதை நன்கு அறிந்திருந்தமையால்" இடுக்கண் வருங்கால்" மகிழ்வுடனே இச்சூழலை எதிர்நோக்குவார்கள்.
உம் :எவ்வாறு 63 நாயன்மார்களும் இறைவனால் மிக மிக கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் மகிழ்வுடனே இவ்விடுக்கண்களை (சோதனைகளை) ஏற்றுக்கொண்டு அதன் மூலம் தெய்வநிலை என்னும் அரிய நிலையை எய்தினார்களோ அவ்வாறே.
sairam
 
Status
Not open for further replies.
Back
Top