ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும்
Pictures shows people marching on Delhi-Haridwar national highway with Kavadi
எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும், ஆரிய ஹல்வாவும் திராவிட சர்க்கரைப் பொங்கலும், ஆரிய லட்டும் திராவிட புட்டும், ஆரிய ரங்கோலியும் திராவிட கோலமும், ஆரிய கஜலும், திராவிட தெருக்கூத்தும், ஆரிய ஹிந்துஸ்தானி சங்கீதமும் திராவிட கர்நாடக இசையும், ஆரிய சம்ஸ்கிருதமும் திராவிட தமிழும்--- இப்படி நான் சொல்லிக்கொண்டே போகலாம்.. இப்படிச் சொல்லித்தான் வெளிநாட்டுக் காரன் நம்மைப் பிரித்தான். அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, கூலிக்கு மாரடிக்கும் ஒரு சிறிய எட்டப்பன் கும்பல் அவர்களுக்கு இன்று வரை ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறது. உலகில் எல்லா நாட்டிலும் கருத்து வேறுபாடுகள், கலாசார வித்தியாசங்கள், சிறிய மோதல்கள் உண்டு. அங்கெல்லாம் இனம் பற்றியே பேசாத ‘’அறிஞர்கள்’’ இந்தியாவில எதைப்பர்த்தாலும் ஆரிய திராவிட இனச் சாயம் பூசி விஷ(ம) சாம்பிராணி போட்டு வருகிறார்கள். காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்!!
இதே கொள்கையை பாப்புவா நியூகினி என்னும் தீவுக்கும் பயன் படுத்தினால், அங்கே 700 இனங்களைக் காட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் அங்கே 700க்கும் மேலான மொழிகளைப் பேசும் மக்கள் இருக்கிறார்கள்.
ஆரிய இனவெறிக் கொள்கையை ஐரோப்பாவில் பரப்பிய வெள்ளைதோல் அறிஞர்களுக்கு செமை அடி கிடைத்தது. ஹிட்லர் தான் ஒரு தூய ஆரியன் என்று சொல்லிக் கொண்டு சிந்து சமவெளியில் காணப்படும் இந்துமத ஸ்வஸ்திகா முத்திரையை ஜெர்மனியின் கொடியிலும் தபால்தலையிலும் போட்டுக்கொண்டு ஆறு கோடிப் பேர்களைக் கொன்றான். இப்படி செமை அடி வாங்கியதும் வெள்ளைத்தோல் அறிஞர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு, ஆரிய இன வெறிக் கொள்கையை குழி தோண்டிப் புதைத்துவிட்டனர். ஆனால் இந்தியாவைத் துண்டாடவும் இந்துமதத்தை அடியோடு ஒழிக்கவும் இது பயன்படும் என்பதால் இந்தியாவில் மட்டும் இதற்கு ‘’சூட தீபாராதனை காட்டி’’ ஜாகிரதையாக ஆராதித்து வருகின்றனர்.
பைபிளிலும் குரானிலும் ஆதிக்கிரந்தத்திலும், செண்டவஸ்தாவிலும் இன வேறுபாடு காணாதவர்கள் ரிக்வேதத்திலும் இந்துமதக் கடவுளரான முருகன், சிவன், கிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஆரிய –திராவிட இன வேற்றுமையைப் புகுத்தியதை இந்துக்கள் உணரத் துவங்கிவிட்டனர்.
யாருக்காவது வரலாறு சம்பந்தமான ஜோக்குகள் தேவைப்பட்டால் வெளிநாட்டுக்காரன் எழுதிய வரலாறு, சமூகவியல், மானுடவியல் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு ஹைலைட்ட்ர் பேனாவையும் வைத்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் ஆரிய திராவிட என்ற சொற்கள் வருகிறதோ அதை எல்லாம் ஹைலைட் செய்யுங்கள் அல்லது கலர் பேனாவால் அடிக்கோடு இடுங்கள். பத்துப் புத்தகம் படிப்பதற்குள் உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.
உதாரணத்துக்கு கால்டுவெல் பாதிரியார் எழுதிய புத்தகம் ஒன்று போதும்! தமிழனை மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து ஓடிவந்தவனாகவும், நாகரீகம் அடையாதவனாகவும், சிங்களவர்களை விரட்டி அடித்த வனாகவும்— இப்படிப் பல ஜோக்குகள் கிடைக்கும். இது பற்றி தனியாக பல கட்டுரைகள் வரும்.
இந்தியா போன்ற பெருநிலப் பரப்பில் காலநிலை (பருவ நிலை), நிலவியல் மாறுபாடுகள் முதலியவற்றால் இடத்துக்கு இடம் சில விஷயங்கள் மாறுபடும். கோவில் பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி பெட்டி வெல்லம், மதுரை சேலைகள், காஞ்சீபுரம் பட்டு, மணப்பாறை முறுக்கு, --என்று பல சிறப்புகள் இருக்கும் இதனால் ஒருவர் ஆரியர் என்றும் மற்றொருவர் திராவிடர் என்றும் சொன்னால் எவ்வளவு அறியாமையோ அவ்வளவு அறியாமை ஆரிய திராவிட வாதத்திலும் உண்டு.
சேர சோழ பாண்டியர்கள் என்னும் மூவேந்தர்களும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு இடைவிடாமல் சண்டைபோட்டு ஆயிரக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள். உலகில் வேறு எந்த இனமும் இப்படிச் சண்டை போட்டதில்லை என்பதை சரித்திரம் படித்தோர் அறிவர். ஆயினும் கூட இவர்களை ஆரியர் திராவிடர் என்று இனம் பிரித்துப் பார்க்கவில்லை. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் அப்படியும் 1500 ஆண்டுகளுக்கு அடிதடி! வெள்ளைகாரன் நினைத்தால் இதிலும் ஆரிய திராவிட விஷத்தைத் தூவியிருப்பான்.
காவடி, தமிழன் சின்னமா?
ஆரிய திராவிட இனவெறிக்கொள்கைக்குத் தூபம் போடும் நம்மவர்களுக்கும் கொஞ்சம் அறிவு ‘மட்டு’தான். சிந்து சமவெளி பற்றி எழுதும் அறிஞர்களுக்குக் கூட நுனிப்புல் மேயும் சிற்றறிவு தான். காவடி எடுக்கும் வழக்கத்தை நாம் எல்லோரும் அறிவோம். முருகனுக்கு காவடி எடுப்பதைப் பார்க்கிறோம். இதே போல காவடி பட எழுத்து சிந்து சமவெளி முத்திரையிலும் கிடைத்திருகிறது. உடனே இதை தமிழ் வழக்காகவும் ஆகையால் சிந்து சமவெளியினர் திராவிடரே என்றும் இனபேதம் காட்டி கட்டுரை எழுதிவிட்டார்கள். உண்மையில் இது பாரதம் முழுதும் உள்ள வழக்கம். சொல்லப்போனால் காவடி என்பது உலகம் முழுதும் இருக்கிறது.
நம் தமிழர்கள் ஆண்டுதோறும் முருகனுக்குக் காவடி எடுப்பதுபோலவே வடக்கேயுள்ள ஹிந்துக்கள் சிவபெருமானை வழிபட ஹரித்வாருக்கு லட்சக் கணக்கில் காவடி எடுக்கிறார்கள். ஹரித்வாரில் கங்கை நதியை வணங்கிவிட்டு இரு புறமும் தொங்கும் பானைகளில் கங்காஜலம் கொண்டு போகிறார்கள். இப்படி காவடியில் தண்ணீர் கொண்டு போகும் வழக்கம் இதாலி, மேரற்கிந்தியத் தீவுகள், சீனா போன்ற பல நாடுகளில் இருந்திருக்கிறது. சாலைப் போகுவரத்து மற்றும் வாஹன வசதிகள் இல்லாத இடங்களில் காவடி இருப்பது சகஜம். இதில் ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை.
ஐயப்ப பக்தர்கள் கொண்டுபோகும் இரு முடியும் கூட காவடி போன்றதே. மலைபாங்கான பகுதிகளில் 40 நாட்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால் இப்படி சுருக்கமாக இரு முடி என்று வைத்தனர்.
அத்தை மகள், மாமன் மகள்—முறைப்பெண்
முறைப் பெண்களை மணப்பது தமிழர்களிடையே காணப்படுகிறது. இதை 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த போதாயனர் என்பவர் எழுதிய தர்ம சாஸ்திரத்தில் இது தென்னாட்டில் காணப்படும் முறை என்று எழுதி இருக்கிறார். உடனே வெள்ளைத்தோல் அறிஞர்களுக்கு--- வெறும் வாயை மெண்டவர்களுக்கு அவல் கிடைத்தது போல ஆயிற்று. அடடா, தமிழன் திராவிடன், அதனால்தான் முறைப் பெண்ணைக் கட்டிக் கொண்டான். ஆரியர்களுக்கு இது பிடிக்காத விஷயம் என்று ‘’ஆராய்ச்சிக் கட்டுரைகளை’’ எழுதத் துவங்கி விட்டனர். அவர்களுக்கு எவ்வளவு ஞான சூன்யம் என்பது இப்போது விக்கிபீடியா படிப்பவர்களுக்குக் கூடத் தெரியும்.
அர்ஜுனன் கூட முறைப்பெண் சுபத்திரையைக் கல்யாணம் செய்துகொண்டான். அவன் என்ன திராவிடனா?
‘’கஸின் மேரியேஜ்’’ Cousin Marriage என்று அழைக்கப்படும் இந்த வழக்கம் குஜராத், ஒரிஸ்ஸா, மஹராஷ்டிரத்திலும் , மத்திய தரை கடல் நாட்டு முஸ்லீம்களிடமும், பாகிஸ்தான் முஸ்லீம்களிடமும் ஆஸ்திரேலிய,ப் பழங்குடி மக்களிடமும் கூட உண்டு. இதில் ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை.
உலகம் முழுதும் உடை உணவு, உறைவிடம், ஆடல்,பாடல் ஆகிய எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு எங்களைப் போல ஐரோப்பாவில் வாழ்வோருக்கு பிரிட்டன் என்ற சிறிய நாட்டிலேயே நாலு முக்குகளில் நாலு கலாசாரம், நாலு மொழிகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இங்கெல்லாம் இனவெறிக் கொள்கைகளைக் காணாதவர்கள் இந்தியாவில் வடக்கிலும் தெற்கிலும் மட்டும் ஏன் இன வெறி போதனை செய்தார்கள் என்பதை தயவு செய்து அமைதியான இடத்தில் உட்கார்ந்து சிந்தித்துப் பாருங்கள். ‘’இளிச்சவாயனை கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடுமாம்’’. இது ஒரு தமிழ் பழமொழி. ‘’ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’’ என்பதும் தமிழ் பழமொழிதான். இந்துக்களுக்கு இவ்வளவு பழமொழிகளும் பொருந்தும் என்று நினைத்தார்கள் அறியாத-- ‘’விளங்காத’’--- அறிஞர்கள்!! இப்போது இந்தியர்கள் விழித்துக் கொள்ளத் துவங்கிவிட்டார்கள்.
அடுத்த கட்டுரையில் ரோகிணி நட்சத்திரத்தில் சங்கத் தமிழன் ஏன் கல்யாணம் செய்தான்? நிலவில் ஏன் முயலைப் பார்த்தான்? சிந்துவெளியில் இந்துக்கள் ஏன் அரச மரத்தை வைத்தார்கள்?, பேயை விரட்ட ஏன் ஐயவி புகைத்தார்கள்? என்பதையும் இவை ஆரியமா? திராவிடமா? என்பதையும் பார்ப்போம்.
Indus symbols with Kavadi
Pictures are taken from various sites; thanks.
Please read my (London Swaminathan) articles posted earlier:
1.Aryan Hitler and Hindu Swastika
2.Sibi Story in Old Tamil Literature
3.Were Moses and Jesus Aryans? (Two Parts)
4.திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் (in Tamil)
5.சோழர்கள் தமிழர்களா?? (In Tamil)
6. ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்(in Tamil)
and 600 more articles on Indus Valley Civilization and Hinduism.