ஆன்மிகமும் அறிவியலும்!

Status
Not open for further replies.
ஆன்மிகமும் அறிவியலும்!

ஆன்மிகமும் அறிவியலும்!

மர வழிபாடு ஏன்?

நம் முன்னோர்கள் மரங்களை வழிபட்டு வந்ததை பல வரலாற்று சான்று கொண்டு அறியலாம். அந்த மரபு இன்றும் நம்மிடையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான மரங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது மற்றும் பல மருத்துவ குணங்களை கொண்டது அரச மரம். மரங்களின் அரசனாக கருதப்படும் இந்த அரச மரத்தின் வேர் பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தனை சிறப்பு கொண்ட அரச மரத்தை சுற்றி வந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

spirituvality02%282%29.jpg




இது ஒரு ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது. அரச மரம் அதிகபடியான பிராணவாயுவை வெளியிடுகிறது. இந்த சுத்தமான ஆற்றல் மிக்க பிராணவாயுவை, பெண்கள் சுவாசிக்கும் போது கருப்பை சம்மந்தமான பிரச்னைகள் சீரடைந்து, சுரபிகள் செயல்பாடு தூண்டி விடப்படுகிறது. இதனால் குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்கள் கருவுற வாய்புள்ளது என்பதை ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால், இந்த உண்மையை நமது முன்னோர் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆன்மிகம் வாயிலாக கூறியிருக்கின்றனர். ஆன்மிகம் என்பது, அறிவியலையும் ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியது என்பது அரச மரத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.



spirituvality01%281%29.jpg


ஆடி மாதம் கூழ் ஏன்?


ஆடி மாதம், கோடை காலத்துக்கும், மழை காலத்துக்கும் இடையில் தொடங்குகிறது. இந்தக் காலத்தில் உஷ்ணம் அதிகமாக இருக்கும், ஆடி மாத காற்றோடு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் காற்றில் அதிகம் பரவும். இதனால் அம்மை போன்ற நோய்கள் வேகமாக பரவுகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சரியான தடுப்பு மருந்து வெங்காயமும், மோரும் கலந்த கேழ்வரகு கூழ்தான் என்று ஆராய்ந்து உணர்ந்த நம் முன்னோர், மக்கள் அனைவரையும் கூழ் குடிக்க வைக்க, ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றி, பிராசதமாக கூழை கொடுத்து வந்தனர். இந்த வழக்கம்தான் இன்றைக்கும் தொடர்கிறது.

ஆடி மாதம் கூழ் ஊற்றும் வழக்கம் மட்டும் இல்லை என்றால், ஓர் மருந்தான உணவை நாம் மறந்திருப்போம். நம் முன்னோர் அறிவியல் ஆற்றல் மட்டுமல்லாமல், அதை ஆன்மிகம் வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்லும் பக்குவத்தையும் அறிந்திருந்தனர் என்பது இது போன்ற சான்றுகளால் தெரியவருகிறது.

-ரெ.சு.வெங்கடேஷ்

?????????? ??????????!


 
Status
Not open for further replies.
Back
Top