• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

ஆதார் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பிக&#

Status
Not open for further replies.
ஆதார் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பிக&#

ஆதார் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்: கேஸ் மானிய திட்டத்தில் சேர 14ல் சிறப்பு முகாம்!


சென்னை: ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்களும் சமையல் எரிவாயு மானியத் திட்டதிற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி நேரடி மானியத்திட்டம் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் சிலிண்டர் மானியத்தொகை போடப்படும். வினியோகஸ்தர்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் முழுத்தொகை கொடுத்து சிலிண்டர்களைப் பெற வேண்டும்.

மானிய திட்டத்தில் பலன் பெற நுகர்வோர் தங்களது ஆதார் அட்டை எண்ணை சமையல் கேஸ் விநியோகஸ்தரிடமும், வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியிலும், விண்ணப்ப படிவம் 1 மற்றும் 2 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3, 4–யை பூர்த்தி செய்து கேஸ் வினியோகிஸ்தர், வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதற்காக சமையல் எரிவாயு தொடர்புடைய 17 இலக்க குறியீட்டு எண் ஏற்கனவே எஸ்.எம்.எஸ் மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சமையல் கேஸ் நேரடி மானிய திட்டத்தில் சேர நுகர்வோருக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆதார் அட்டை இல்லாமல் மானியத்திட்டத்தில் சேர முடியுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கேஸ் ஏஜன்சி அலுவலகம் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிகிறது. தனியார் கேஸ் ஏஜன்சி நிறுவனங்கள் வங்கிகளில் விண்ணப்பிக்கச் சொல்லி வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்புகிறார்கள். இந்நிலையில் படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கவும் இந்தியன் ஆயில் நிறுவனம் வருகிற 14 ஆம் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் ஆயில் நிறுவன தலைமை அலுவலகம், அரும்பாக்கம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், நேரடி மானிய திட்டத்தில் பலன்பெற சமையல் கேஸ் வினியோகஸ்தரையும், வங்கி கணக்கு எண்ணையும் இணைப்பது கேஸ் எண்ணுடன் தொடர்புடைய 17 இலக்கு எண் தான்.

ஐ.ஓ.சி. நுகர்வோருக்கு 3 என்ற எண்ணுடன் தொடங்கும் இந்த 17 இலக்க எண் ஏற்கனவே எஸ்.எம்.எஸ் மூலம் அவர்களது செல்போனுக்கு அனுப்பப்பட்டு விட்டது. மேலும் www.indane.co.in என்ற இந்தியன் ஆயில் நிறுவன இணையதளம் மூலமும் இந்த 17 இலக்க குறியீட்டு எண்ணை நுகர்வோர் தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் அட்டை இல்லாதவர்களும் நேரடி மானியம் பெறும் வகையில் இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ஆதார் அட்டை இருந்தால் படிவம் 2–யை நிறைவு செய்து கியாஸ் ஏஜென்சியிலும், படிவம் 1-யை நுகர்வோர் தங்களது வங்கி கணக்கிலும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3–யை வங்கியிலும், படிவம் 4–யை கேஸ் ஏஜென்சியிலும் அளிக்க வேண்டும். சில சமையல் கேஸ் வினியோகஸ்தர்களிடம் ஆலோசனையின் படி ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3–யை மட்டும் நிறைவு செய்து வங்கியில் அளித்தால் மட்டும் போதுமானது. இந்த தகவல் தொடர்ந்து எஸ்.எம்.எஸ் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

சமையல் கேஸ் மானியம் தேவையில்லை என்றால் படிவம் 5-யை நிறைவு செய்து அளிக்கலாம். நுகர்வோரின் குழப்பம், சந்தேகத்தை போக்க வருகிற 14 ஆம் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதில் நுகர்வோர் தங்களது கேஸ் புத்தகம், 17 இலக்க எண் ஆகியவற்றுடன் வந்தால் போதுமானது. சிறப்பு முகாமிலேயே பூர்த்தி செய்த படிவம் பெறப்பட்டு நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்ததற்கான ஒப்புகை சீட்டு உடனடியாக வழங்கப்படும்.

மானியத்திட்டத்தில் சேர வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே இதுவரை இத்திட்டத்தில் சேராதவர்கள் அவசரப்பட தேவையில்லை.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


????? ?????? ?????????????? ????????????????: ???? ????? ??????????? ??? 14?? ??????? ??????!
 
Status
Not open for further replies.
Back
Top