ஆண்டளக்கும் ஐயன் - திருஆதனூர்.

Status
Not open for further replies.
ஆண்டளக்கும் ஐயன் - திருஆதனூர்.

ஆண்டளக்கும் ஐயன் - திருஆதனூர்.

100_8688.JPG




கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திரு ஆதனூர் பெருமாள் கோவில். (சுவாமிமலையிலிருந்து 3 கிலோமீட்டர்.) அருகில் உள்ள மற்றொரு திவ்யதேசம் புள்ளம்பூதங்குடி. பேருந்து வசதிகள் சிறப்பாக இருக்கிறது.



மூலவர் - ஆண்டளக்கும் ஐயன். தலையின்கீழ் மரக்காலும், இடது கரத்தில் ஓலை எழுத்தாணியுடன் கிழக்கு நோக்கிப் பள்ளிகொண்ட திருக்கோலம்.


தாயார் - பார்க்கவி, மந்திரபீடேஸ்வரி, கமலவாசினி, ரங்கநாயகி.


பொய்கை - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்.


வரலாறு! திருமங்கை ஆழ்வார் அரங்கனுக்கு மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த காலம். கைப்பொருள் தீர்ந்துவிடுகிறது. ஆழ்வார் அரங்கநாதனை வேண்ட, கொள்ளிடக்கரைக்கு வா; பணம் தருகிறேன் என்றான் அரங்கன். இவரும் கொள்ளிடக்கரைக்கு வரும்போது எம்பெருமான் தலைப்பாகை அணிந்து கையில் ஒரு எழுத்தாணி, மரக்காலுடன் ஒரு வணிகரைப் போன்று தோன்றினார். திருமங்கை நீங்கள் யார் என்று வினவ, உம் பொருட்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள அழகிய மணவாளனே அனுப்பிவைத்தான் என்கிறார்.


வெறும் மரக்காலுடன் வந்திருக்கிறீர்களே என்று ஆழ்வார் வியக்க, இந்த மரக்காலை கையில் எடுத்து வேண்டிய பொளை நினைத்து எம்பெருமானே சரண் என்று மூன்று முறை சொன்னால் அப்பொருள் சித்திக்கும் என்கிறார் வணிகர். இங்குள்ளவர்களுக்குக் கூலி கொடுக்கவேண்டும். ஆற்றுமணலை அளந்து தருக என்கிறார் திருமங்கை. வணிகர், “ அளக்கிறேன். ஆனால் உண்மையாக உழைத்தவர்களுக்குப் பொன்னும், ஏமாற்றியவர்களுக்கு மணல்மட்டுமே கிடைக்கும்” என்ற நிபந்தனையுடன் அளந்து தருகிறார்.


ஏமாற்றிய பெரும்பாலான மக்களுக்கு மணலே கிடைத்தது. உண்மையாக உழைத்தவர்களுக்குப் பொன்! இவன் மந்திரவாதி என்று பலர் அடிக்கவர, வணிகர் மெல்ல நகர்கிறார்; திருமங்கை ஆழ்வார் தன் புரவியில் வணிகரைத் தொடர்கிறார். இவ்வாறு ஓடிவந்து மரக்கால், ஓலை, எழுத்தாணியோடு மங்கை மன்னனுக்குக் காட்சியளிக்கிறார் ஆண்டளுக்கும் ஐயன்!


பெருமாள் ஓடிவரும்போது இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் ஓலைப்பாடி; திரும்பிப்பார்த்த ஊர் திரும்பூர்; கம்பீரமாக நடந்துவந்த ஊர் விசயமங்கை; ஆழ்வார் விரட்டுகிறாரா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர் மாஞ்சேரி; மரக்காலுக்குள் கைவைத்த ஊர் வைகாவூர்; புகுந்தது பூங்குடி; அமர்ந்தது ஆதனூர்!


தலத்தின் சிறப்புகள்!


108 திவ்யதேசங்களில் 11 ஆவது.


ஸ்ரீரங்கத்துக்கும் ஆதனூருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. திருவரங்கத்தைப் போலவே இங்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருபுறமும் காவேரியும், கொள்ளிடமும் ஓடுகிறது. திருவரங்கத்தைப் போன்றே ஏழு மதில்கள் இருந்த ஊர். காலப்போக்கில் அனைத்தும் அழிந்து தற்போது எஞ்சியிருப்பது சிறிய கோவில் மட்டுமே!


ஸ்ரீரங்கத்தில் கர்ப்பக்கிருகத்துக்கு அருகில் இரண்டு தூண்கள் உண்டு. அந்தத் தூண்களைத் தழுவிக்கொள்பவர்கள் எமனைச் சேர்வதில்லை; மறுபிறப்பும் இல்லை! அதே சக்தி கொண்ட இரண்டு தூண்கள் இங்கேயும் பெருமாளுக்கு முன்பு இருக்கிறது. தழுவிக்கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம்!


இத்தலத்தின் கோபுரத்தில் மஹாவிஷ்ணு சிலை ஒன்று உள்ளது. இந்த வாசுதேவனின் திருவடி தெரிந்துவிட்டால் கலியுகம் முடிந்து பிரளயம் உண்டாகும். தற்போது முழங்கால் வரை தெரிகிறது. இந்தச் சிலை வளர்ந்து வருகிறது!


வசியங்கள், ஏவல் இவற்றை நீக்கும் திருத்தலம்.


திருவரங்கத்து எம்பெருமானைப் போலவே ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனும் காணத்தெவிட்டாத பேரழகு வாய்ந்தவர். இவ்வளவு அழகான பெருமாளைத் திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமடலில் மட்டும் பாடியிருக்கிறார். மற்றவர் பாடாதது வியப்பும், வருத்தமும் தருகிறது.


என்னை மனங்கவர்ந்த ஈசனை வானவர்தம்
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை.


பெரிய திருமடல் , திருமங்கை ஆழ்வார்.

???? ??????????????!: ??????????? ???? - ??????????.

Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
Status
Not open for further replies.
Back
Top