`ஆண்களுக்கு இளவட்டக்கல்; பெண்களுக்கு உரல்!' -பொங்கல் போட்டிகளுக்குத் தயாராகும் நெல்லை கிராமம்

`ஆண்களுக்கு இளவட்டக்கல்; பெண்களுக்கு உரல்!' -பொங்கல் போட்டிகளுக்குத் தயாராகும் நெல்லை கிராமம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடக்க இருப்பதால் அதில் வெற்றி பெற ஆண்களும் பெண்களும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

1578899518733.png



தென்மாவட்டங்களில் உள்ள கிராமங்களின் நடுவே `இளவட்டக்கல்’ என்ற உருண்டையான பெரிய கல் கிடப்பது வழக்கம். இப்போதும் பல கிராமங்களில் அந்தக் கல் இருந்தபோதிலும் அதன் முக்கியத்துவம் தெரியாத நிலை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இந்தக் கல்லைத் தூக்கியவர்களுக்கு மட்டுமே பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பார்களாம்.

உருண்டையாக இருக்கும் இளவட்டக்கல்லைத் தோளில் தூக்கிச் சுமந்து செல்லும் அளவுக்கு வலிமையான இளைஞர்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள். தற்போதைய அவசரமான உலகத்தில், கிராமிய விளையாட்டுகள் பலவும் மறைந்து வருகின்றன. இருந்தாலும், ஒரு சில கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கான விளையாட்டுப் போட்டிகளின்போது அத்தகைய விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.



மேலும் படிக்க

நன்றி: vikatan.com
 
Back
Top