• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

ஆடி மாத பண்டிகைகள்.

Status
Not open for further replies.

kgopalan

Active member
ஆடி மாத பண்டிகைகள்.

ஆடி மாத பண்டிகைகள்.

16-7-2014 ஆடி மாத பிறப்பிற்குடைய தக்ஷிணாயண புண்ய கால தர்பணம் செய்ய வேன்டும். 17-7-14 விடியற்காலை 4 -38 மணிக்கு ஆடி மாதம் பிறக்கிறது.. ஆடி பண்டிகை 17 -7-14 அன்று கொண்டாடலாம்.

தந்தை யில்லாத அனைவரும் இன்று (16-7-14) தர்பணம் செய்ய வேண்டும்.
தை மாதம் பிறந்த பிறகு உத்ராயணத்தில் தை மாத பிறப்பு தர்பணமும், ஆடி மாத பிறப்பதற்கு முன் உத்ராயணத்தில் தக்ஷிணாயண புண்ய கால தர்பணமும் செய்ய பட வேண்டும்.

26-7-14. ஆடி அமாவாசை.
ஒவ்வொரு மாதமும் ஸுர்யனும் சந்திரனும் ஒரே நக்ஷத்திரத்தில் ஒன்று கூடி இருப்பதே அமாவாசை எனப்படுகிறது. சந்திரனின் சொந்த வீடான கடகத்தில் ஸூர்யன் சஞ்சரிக்கும் காலம் மிக சிறந்தது. புண்ய நதி ஸ்நானம், ஆலய தரிசனம் , தர்பணம், ஏழைகளுக்கு தானம் செய்து நன்மை அடைவோம்.

30-7-14. ஆடிப்பூரம்.

பொறுமையின் சின்னமான பூமா தேவி பக்தியால் இறைவனை அடையலாம் என்பதை எடுத்துகாட்ட ஆண்டாளாக இந்த பூமியில் அவதரித்த நன்னாள் ஆடிப்புரம்.. துளசி தோட்டத்தில் அவதரித்தாள். கோதை என்று பெயர்

சூட்டப்பட்டது. பெருமாளுக்கு சூட்ட பட வேண்டிய மாலையை தன் கழுத்தில் போட்டு அழகு பார்ர்த்து கோவிலுக்கு அனுப்பிவிடுவாள்.பெருமாள் கோதை சூடிய மாலையையே நான் சூடுவேன். மலரால் மட்ட்டுமல்லாமல் மனதாலும்

உம் பெண் என்னை ஆண்டாள் என்று குரல் எழுப்பினார். ஆதலால் ஆண்டாள் எனப்பெயர் பெற்றாள். இறைவனையே துணைவனாக அடைந்த ஆண்டாளின் பிறந்த நாளை நாமும் கொண்டாடுவோம்.

31-7-14- தூர்வா கணபதி விரதம்.

சிராவண மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி அன்று தூர்வா கணபதி வ்ருதம்.
இன்று காலை சுத்தமான ஓரிடத்தில் கோலம் போட்டு தரை முழுவதும் அருஹம் பில்லை=(தூர்வை) ..நிறைய பரப்பி அந்த அருகம்புல்லின் மீது கணபதியின் படமோ அல்லது விக்கிரஹமோ வைத்து 16 உபசார பூஜைகளும்

அருகம் புல்லால் செய்யவும். கொப்பரை தேங்காய் அவல் நிவேதனம் செய்யவும் .கற்பூரம் காட்டி நமஸ்கரித்து முடிவில் கீழ் வரும் பத்து நாமாக்களால் அருகம் புல்லால் அர்ச்சனை செய்து கீழ் வரும் ஸ்லோகம் ப்ரார்தித்து கொள்ளவும்.

1. கணபதயே நம: 2. உமாபுத்ராய நம: 3. அகநாசனாய நம: 4. ஏக தந்தாய நம: 5. இபவக்த்ராய நம: 6. மூஷிக வாஹணாய நம: 7. விநாயகாய நம: 8, ஈச புத்ராய நம: : 9. ஸர்வ ஸித்தி ப்ரதாயகாய நம: 10. குமார குரவே நம:

கணேஸ்வர, கணாத்யக்ஷ கெளரீபுத்ர கஜானன வ்ரதம் ஸம்பூர்ணதாம் யாது த்வத் ப்ரஸ்ஸாதாத் இபாநந..

இவ்வாறு இன்று பிள்ளையாரை அறுகம் புல்லால் நியமத்துடன் பூஜிப்பவர்களுக்கு அனைத்து இடையூறுகளும் விலகி அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

1-8-2014. நாக பஞ்சமி---கருட பஞ்சமி.
கச்யபருக்கு கத்ரூ என்பவளிடம் உண்டானவர் நாகர். தாய் சொல்லை கேட்காததால் தாயே தீயில் விழுந்து இறக்கும்படி சபித்தாள். அந்த சாபத்தால் பல பாம்புகள் தீயில் மாண்டன. அஸ்தீகர் ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தை

நிறுத்தி சாபத்தை அகற்றினார். அது இந்த சிராவண சுக்ல பக்ஷ பஞ்சமி திதி அன்று தான். ஆகவே இன்று பாம்புகளை பூஜித்தால் நன்மை உண்டாகும். ஆகவே இன்று பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி பூஜை செய்யலாம்.


மேலும் வம்சத்தில் நல்ல குழந்தைகள் ஏற்படவும் ஏற்படாமல் செய்யவும் சக்தியுடையவர் நாகராஜா. .. ஸந்தானம் உண்டாக நாகப்ரதிஷ்டை செய்ய சொல்கிறது சாஸ்திர விதி. மஹா விஷ்ணு அனந்தன் என்ற பாம்பாக

இருந்து கொண்டு பூமியை தாங்கி வருகிறார், அவருக்கு உதவியாக தக்ஷன் , வாஸுகி, கார்கோடன் என்ற பாம்புகளும் உள்ளன.

தினசரி ஸந்தியாவந்தனத்தில் அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரந்தோ என்று சொல்லி பாம்புகளை ப்ரார்திக்கிறோம்.

வயலில் வேலை செய்து கொண்டு இருந்த ஒரு பெண்மணியின் நான்கு ஸஹோதரர்களை ஸர்ப்பம் தீண்டியது. அந்த பெண்மணி ஸர்ப்ப பூஜை செய்து ப்ரார்தித்து தனது சஹோதரர்களை காப்பாற்றினாள்...

அதுவே நாக பஞ்சமி. ஆகவே இன்று ஸஹோதரிகள் தன் உடன் பிறந்த ஸஹோதரர்களின் நன்மைக்காக வீட்டில் ஏதாவது ஒரு உலோகத்தில் செய்த பாம்பு பிம்பத்தையும், நடுவில் புஷ்பம் கட்டிய ஒரு மஞ்சள் சரட்டையும்

பூஜை செய்து தனது வலது கையில் சரட்டை கட்டி கொள்ள வேண்டும் .வீட்டில் பூஜை முடிந்த பிறகு அருகில் உள்ள பாம்பு புற்றுக்கு சென்று பால் விட்டு தாம்பூலம், பழம் வைத்து நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றி விட்டு

வர வேண்டும் .புற்றுக்கு சென்று பால் விட்டு வர வசதி இல்லாதவர்கள் நாக பிம்பத்திற்கே பாலாபிஷேகம் செய்து விட வேண்டும்.

வீட்டிற்கு வந்ததும் வாயிற்படியின் இரு பக்கங்களிலும் மஞ்சள் பூசி , குங்குமத்தால் – மேலே தலை கீழே வால் இருக்கும்படி – பாம்பு படம் வரைந்து கற்புரம் ஏ|ற்றி நமஸ்கரித்து விட்டு உள்ளே செல்ல வேண்டும்.

பாம்பு புற்று மண் எடுத்து வந்து அத்துடன் சிறிது அக்ஷதை சேர்த்து ஸஹோதரர்கள் வெளியூரில் இருந்தால் தபாலில் அனுப்பலாம். உள்ளூரில் இருந்தால் நேரில் சென்று கொடுத்து ஸஹோதரர் வயதில் மூத்தவராக

இருந்தால் நமஸ்காரம் செய்யலாம். சிறியவராக இருந்தால் ஆசீர்வாதம் செய்யலாம். ஸஹோதரர்களும் தன் சக்திக்கு தக்கப்படி ஏதாவது பொருளை அன்பளிப்பாக தாம்பூலத்துடன் ஸஹோதரிக்கு கொடுக்கலாம்..

3-8-14. பதினெட்டாம் பெருக்கு. சீதளா ஸப்தமி வ்ருதம்.

சிராவண மாத சுக்ல பக்ஷ ஸப்தமிக்கு சீதளா ஸப்தமி எம்று பெயர்.
அம்மனின் பல உருவங்களில் சீதளா தேவி என்ற வடிவமும் ஒன்று..
ஒரு சமயம் தேவர்களுக்கு அஸுரர்கள் தொல்லை கொடுக்க எண்ணி

அஸுர குருவான சுக்ராசாரியாரின் உதவியால் ஆபிசார ப்ரயோகம் என்ற தீய சக்தியான ஏவல் வினைகளை ஏவினர். . இதனால் கடுமையான வெப்பம் உண்டாகி இதன் காரணத்தினால் வைசூரி, அம்மை உடல் கொப்பளம் , கடும்

ஜுரம், உடல் வலியுடன் தேவர்கள் வேதனை பட்டனர். தேவர்களின் துயர் துடைக்க சிவனின் ஜடையிலிருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையினிட மிருந்தும் பேரொளி ஒன்று தோன்றியது. அந்த அம்மனே சீதளா தேவி என்று அழைக்க படுகிறாள்.

இன்று சீதளா தேவியை பூஜை செய்து மாம்பழமும் , வெள்ளரிக்காயும் தயிர் சாதமும் நிவேதனம் செய்து அதை தானம் செய்ய வேண்டும் .பூஜை செய்ய முடியாதவர்கள் தானம் மட்டும் செய்யலாம். .

இன்று காலை நித்ய கர்மாவை முடித்துவிட்டு “’மம பெளத்ராதி அபிவ்ருத்தி த்வாரா சீதலா தேவதா ப்ரீத்யர்த்தம் சிராவண சுக்ல ஸப்தமி புண்ய காலே ஆம்ர பல கர்கடீ பல ஸஹித கர்கடீ பர்ணஸ்தித தத்யோதன தானம்

அஹம் கரிஷ்யே. என்று ஸங்கல்பம் சொல்லி ஒரு வெள்ளரி அல்லது வாழை இலையில் தயிர்”சாதம் வைத்துகொண்டு ஒரு மாம்பழம் ஒரு வெள்ளரிக்காயுடன் சேர்த்து ஸபரிவார சீதலா தேவதா ப்ரீத்யர்த்தம் இதம்

ஆம்ர பல கர்கடீ பல ஸஹித கர்கடீ பர்ணஸ்தித தத்யோதனம் சீதளா ப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே” என்று சொல்லி தெய்வ ஸன்னதியில் வைத்து விட்டு அதை ஏழைக்கு தந்து சாப்பிட செய்ய வேண்டும்.

இதனால் நீண்ட நாட்களாக தீர்க்கபடாமல் இருக்கும் நோய்கள் உடனே விலகும். குறிப்பாக அதிக வெப்பத்தால் ஏற்படும், கட்டிகள், வஸூரி, அம்மை. முதலான நோய்கள் விலகும்.

இது போன்ற நோய்கள் குடும்பத்தில் ஒரு போதும் யாருக்கும் தோன்றாது என்கிறது ஸ்காந்த புராணம்..
 
ஆடி பெருக்கு.:-ஒவ்வொரு வருஷமும் ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு. அன்று. காவிரி, ஆற்று கரைகள், ஏரி, குளங்களில் அனைவரும் ஒன்று கூடி ஜல தேவதையை பிரார்தித்துகொண்டு ஆனந்த மாக குடும்பத்துடன்

கொண்டாடுவார்கள். . விவசாயம் செழிக்க வேண்டும் என்று விவசாயிகளும் காவிரிக்கு பூஜை செய்வார்கள். இப்போது நெல் கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு

வற்றா நதிகளை பூஜை செய்து பின் உழவு வேலையை தொடங்குவதே சிறந்தது.

8-8-2014. வர லக்ஷிமி விரதம்.
தேவர்களும் அஸுரர்களும் மரண மில்லா தன்மையை அடையும் பொருட்டு
வாஸுகி எனும் பாம்பை கயிறாக்கி மந்திரம் எனும் மலையை மத்தாக்கி
பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து தோன்றியவள் தான் மஹாலக்ஷமி.

தனது பக்தர்கள் விரும்பும் அனைத்து வரங்களையும் அளித்து அருளுவதால் ஶ்ரீ மஹா லக்ஷிமிக்கு வரலக்ஷமி எனப்பெயர். மஹாலக்ஷிமி அவதரித்த நாள் தான் சிராவண மாத பெளர்ணமிக்கு முன்பு வரும்

வெள்ளிக்கிழமை.. அன்று தான் வர லக்ஷமி வ்ரதம் கொண்டாடபடுகிறது.
இன்று ஸுமங்கலி பெண்கள் கோலம் போட்டு தோரணம் கட்டி அலங்கரித்து மண்டபத்தில் நாலா புரத்திலும் யானைகள் ஜக்லத்தால் அபிஷேகம் செய்ய , தாமரைம் பூவில் அமர்ந்திருக்கும் மஹா லக்ஷிமியை வெள்ளி கலசத்தில் ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

விவாஹமான பெண்கள் அனைவரும் பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து மாலையில் முறையாக மஹா லக்ஷிமியை பூஜை செய்து முடிவில் கையில் கங்கணம் (கயிறு ) கட்டிகொள்ள வேண்டும். .

சக்தி உள்ளவர்கள் லக்ஷிமி அஷ்டோத்ரம், த்ரிசதி, சஹஸ்ர நாமம் அர்சனை தாமரை பூக்களால் செய்யலாம். தனது வீட்டில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் சரடு கட்டி விட வேண்டும்.

இந்த சரடு ஒன்பது முடிச்சுகளுடன் கூடியதாகவும் , புதிய நூலில் திரிக்க பட்டதாகவும் இருக்க வேண்டும்.

ச்ராவண பெளர்ணமி பூர்வஸ்த்த சுக்ர வாரே சாருமதி ப்ரப்ருதி பூஜிதா காரே என்று வரலக்ஷ்மி நமஸ்துப்யம் என்றும் தீக்ஷிதர் பாடியுள்ளார்.

வரலக்ஷிமி நோன்பு சரடு கட்டி கொள்ள மந்திரம்.வலது மணிகட்டில் கட்டி கொள்ள வேண்டும். நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி சமன்விதம் பத்னீயாம் தக்ஷிணே ஹஸ்தே தோரகம் ஹரி வல்லபே.

நாராயணின் மனைவியான மஹா லக்ஷிமியே. ஒன்பது இழைகளால் கூடியதும் ஒன்பது முடிச்சுகளுடன் கூடியதுமான இந்த சரட்டை வலது கையில் கட்டி கொள்கிறேன். எனக்கு நீ முழுமையாக அருட்செய்வாயாஹ.
என்பதே இதன் அர்த்தம்.

10-8-2014. ஸர்ப்ப பலி: ரக்ஷாபந்தன்; ஹயக்ரீவ ஜயந்தி.

ஸர்ப்ப பலி ஹோமம்;- ஜாதகத்தில் ஸர்ப்ப தோஷம் விலக முறையாக வேதத்தில் கூறப்பட்ட ஸர்ப்ப பலி என்னும் இந்த கர்மாவை செய்யலாம்..

ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அஸ்தமிதே ஸ்தாலீபாக: என்னும் ஆபஸ்தம்ப மஹர்ஷியின் வாக்யப்படி ச்ராவண மாத பெளர்ணமி யன்று மாலையில் ஒளபாஸனம் செய்துவிட்டு பலாஸ புஷ்பங்களாலும்,

சரக்கொன்னை ஸமித்துகளாலும் ஸர்ப்ப தேவதைகளுக்கு அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். பிறகு செடிகள் அடர்ந்த இடத்தில் அரிசி மாவு முதலியவற்றால் ஸர்பங்களுக்கு மந்த்ரம் சொல்லி பலி போட வேண்டும்.


இதுவே ஸர்ப்ப பலி எனப்படும். ருக், யஜுர், ஸாம வேதம் ஆகிய மூண்று வேதத்தை சேர்ந்த விவாஹமான அனைவரும் இதை செய்யலாம். குடும்பத்தில் சர்ப்ப தோஷம் விலகி காலத்தில் குழந்தைகள் பிறந்து வம்ச வ்ருத்தி உண்டாகும்.

20-8-14-. ரக்ஷா பந்தனம்.:--
ச்ராவண பெளர்ணமியன்று மாலை பெண்கள் தங்களது சஹோதரர்களின் வலது கையில் மஞ்சள் கயிற்றை கட்டி விடுவதே ராக்கி அல்லது ரக்ஷா பந்தனம் என்று கூறப்படுகிறது.

மஹா விஷ்ணு வாமன மூர்த்தியாக அவதரித்து மஹாபலி சக்ரவர்த்தியை ஆட் கொண்டார். மஹா பலியால் அர்பணிக்கப்பட்ட உலகத்தை பாதுகாக்க அங்கேயே தங்கி விட்டார்.

தனது கணவரின் பிரிவை தாங்க முடியாத ஶ்ரீ மஹாலக்ஷிமியும் ஸாதாரண பெண்ணாக உருவம் தாங்கி ஶ்ரீ விஷ்ணுவிடம் சென்றடைந்தார்.. அப்போது

மஹா பலி சக்ரவர்த்தியை தனது ஸஹோதரனாக பாவித்து ஶ்ரீ மஹா லக்ஷ்மி மஹா பலிக்கு ரக்ஷா பந்தனம் செய்வித்ததாக புராணம் கூறுகிறது.


அதை ஒட்டியே இன்று ஒவ்வொரு பெண்மணியும் மஞ்சள் கயிற்றை தெஇவ ஸன்னதியில் வைத்து ப்ரார்தித்துக்கொண்டு அதை எடுத்து தாங்கள்

ஸஹோதர்ர் கையில் “”யேந பத்தோ பலீ ராஜா தாநவேந்த்ரோ மஹா பல:
தேந த்வாமபி பத்னாமி ரக்ஷே. மா சல மாசல.

ஸஹோதரன் நலமாக வாழ வேண்டும் என்னும் எண்ணத்தோடு அஸுரராஜாவும் பலசாலியுமான மஹா பலி சக்ரவர்த்தி கையில் ரக்ஷயை
கட்டிகொண்டாரோ , அதே ஸஹோதர நலன் எண்ணத்துடன் இந்த ரக்ஷை

கயிற்றை உனது கையில் கட்டி விடுகிறேன். ஏ ரக்ஷை கயிறே நீ கையிலிருந்து விலகாமல் இருந்து, இவரை பாதுகாத்து அருள் செய். என்னும் மந்திரம் சொல்லி பெண்ணானவள்

தன் ஸஹோதரனுக்கு ரக்ஷயை கட்டி விட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இந்த ரக்ஷையை ஏற்றுக்கொள்வதால் அந்த ஸஹோதரன் அந்த பெண்ணின் வாழ்க்கை நலத்திற்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன் என்பதை ஏற்று கொள்கிறான்.

இந்த ரக்ஷா பந்தனத்தை 10-8-14 அன்று மாலை 6 மணிக்கு மேலும் அல்லது மாலை 3 முதல் 4-30 வரையிலும் கட்டிக்கொள்ளலாம்.

இவ்வாறு ரக்ஷை கட்டி விட்ட தன் சஹோதரிக்கு சஹோதரன் அன்பு பரிசுகளை தந்து தன் சஹோதரியை மகிழ்விக்க வேண்டும்.

10-8-14-. ஞாயிறு. ஹயக்ரீவ ஜயந்தி.

சிராவண பெளர்ணமியும் திருவோண நக்ஷத்திரமுமான இன்று நாமும் ஹயக்ரீவரை பூஜித்து ப்ரார்தித்து நன்மை அடைவோம்.

ப்ருஹ்மாவை சிருஷ்டித்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர் என்கிறது ச்வேதாச்வதர உபநிஷத்.

மது; கைடபர் என்ற இரு அசுரர்களும் ப்ரஹ்மாவிடம் சண்டை யிட்டு நான்கு வேதங்களையும் அபகரித்து சென்று விட்டனர். ஶ்ரீ மஹா விஷ்ணு வெள்ளை குதிரை முகம் கொண்டு ஹயக்ரீவராய் தோன்றி மது கைடபரை

கொன்று வேதங்களை மீட்டார்.அனைத்து கலைகளுக்கும் வித்யைகளுக்கும் –மந்திரங்களுக்கும் தலைவராக ப்ரகாசிக்கும் ஶ்ரீ மஹா விஷ்ணுவின் வடிவமே ஹயக்ரீவர்..

10-8-2014- யஜுர் உபாகர்மா.

11-8-2014 காயத்திரி ஜபம்.
 
10-08-2014 ;_ ஞாயிறு,. காமோகாரிஷீத் ஜப ஸங்கல்பம்..


இது தலை ஆவணி அவிட்டம் உள்ளவர்களுக்கும் ருக் வேதிகளுக்கும் கிடையாது.ஆசமனம்.- மோதிர விரலில் பவித்ரம் ,2 தர்பை தரித்து காலின் கீழ் இரு தர்பைகளை போட்டுக்கொண்டு ஸங்கல்பம் தொடங்கவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே. ஓம் பூஹு , ஓம் புவஹ, ஓம் ஸுவஹ;ஓம் தமஹ ஒம்தபஹ; ஒகும் சத்யம்,

ஒம் தத் சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோ யோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்

சுபே சோபனே முஹூர்தே ஆத்ய ப்ருஹ்மணஹ, : த்வீதிய பரார்த்தே .ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே

கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ; தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாஹண சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே

((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்) –விந்த்யஸ்ய உத்தரே ஆர்யாவர்த்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்தே மஹாக்ஷேத்ரே தக்ஷிண வாஹிண்யாஹா யமுநாயாஹா, பச்சிமே தீரே பார்ஹஸ்பத்ய மானேன
சோபக்ருத் நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்துக்கொள்ளவும்.

ஸெளர சாந்த்ரமானாப்யாம் ஜய நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் சுபதிதெள வாஸரஹ பானு வாஸர யுக்தாயாம் சிரவண நக்ஷத்திர யுக்தாயாம் ஆயுஷ்மான் நாம யோக

பத்ர கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் பூர்ணிமாயாம் சுபதிதெள ஸர்ஜன அகரண ப்ராயசித்தார்த்தம் மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சிராவண்யாம் பூர்ணிமாயாம்
அத்யாயோத் ஸர்ஜன அகரண ப்ராயசித்தார்த்தம் அஷ்டோத்தர சத ஸங்க்யயா காமோகாரிஷீத் மன்யூரகாரிஷீத் மஹா மந்திர ஜபம் கரிஷ்யே.
என்று ஸங்கல்பம் செய்யவும். தர்பத்தை வடக்கில் போடவும்.ஜலத்தை தொடவும்.

ப்ரணவஸ்ய ரிஷி ப்ருஹ்ம: தேவி காயத்ரி சந்தஹ பரமாத்மா தேவதா
பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு குத்ஸ வஸிஷ்ட கெளதம

காச்யப ஆங்கீரஸா: ரிஷய: காயத்ரி உஷ்ணிக் அநுஷ்டுப் ப்ருஹதி, பங்க்தி த்ருஷ்டுப் ஜகத்ய; சந்தாகும்ஸி அக்னி வாயு அர்க வாகீச வருண இந்த்ர விச்வே தேவாஹா தேவதாஹ;

பத்து ப்ராணாயாமம் செய்யவும். பிறகு ஆயாத்வித்ய அநுவாகஸ்ய வாமதேவ ரிஷி: அநுஷ்டுப் சந்த: காயத்ரி தேவதா.

ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம ஸம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வனஹ
ஓஜோஸி ஸஹோஸி –பலமஸி ப்ராஜோஸி தேவாநாம் தாமநாமாஸி விச்வமஸி விஸ்வாயு: ஸர்வமஸி

ஸர்வாயுஹு; அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி
ஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ரஹ நிச்ரித் காயத்ரீ சந்த: ஸவிதா தேவதா.

முடிய சொல்லி காமோகாரிஷீன் மன்யூரகாரிஷீன் நமோ நம: என்று 108 தடவை சொல்லி முடிவில் ப்ராணாயாமம் செய்து உத்தமே சிகரே தேவி

பூம்யாம் பர்வத ரூபிணி ப்ராஹ்மணே ப்யோ ப்யநுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம்.என்று உபஸ்தானம் செய்யவும் .நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை எடுத்து அவிழ்த்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.

11-08-2014 திங்கள் காயத்ரி ஜப ஸங்கல்பம்.. ரிக்,யஜுர், ஸாம வேதிகளுக்கு.

மோதிர விரலில் தர்பை பவித்ரம் தரித்து , காலின் கீழ் இரண்டு தர்பங்களை போட்டுக்கொண்டு பவித்ர விரலில் இரண்டு தர்பங்களை தரித்து கொண்டு தொடங்கவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம். ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.
ஓம்பூஹு++++++===பூர்புவஸ்ஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; துதீய பரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே கலியுகே

ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ஜய நாம

ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸோம வாஸர சிரவிஷ்டா நக்ஷத்ர

யுக்தாயாம் சோபந நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் , ப்ரதமாயாம் சுப
திதெள மித்யாதீத ப்ராயஸ்சித்தார்த்தம் தோஷவஸ்து அபதனீய ப்ராயஸ்சித்தார்த்தம் , ஸம்வத்சர அகரண ப்ராயஸ்சித்தார்த்தம் அஷ்டோத்திர

ஸஹஸ்ர சங்கியயா காயத்ரீ மஹா மந்திர ஜபம் கரிஷ்யே.என்று சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பை புல்லை வடக்கில் போடவும்..ஜலத்தை கையால் தொடவும்.

ப்ரணவஸ்ய ரிஷி ப்ருஹ்ம: தேவி காயத்ரி சந்தஹ பரமாத்மா தேவதா
பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு குத்ஸ வஸிஷ்ட கெளதம

காச்யப ஆங்கீரஸா: ரிஷய: காயத்ரி உஷ்ணிக் அநுஷ்டுப் ப்ருஹதி, பங்க்தி த்ருஷ்டுப் ஜகத்ய; சந்தாகும்ஸி அக்னி வாயு அர்க வாகீச வருண இந்த்ர விச்வே தேவாஹா தேவதாஹ;

பத்து ப்ராணாயாமம் செய்யவும். பிறகு ஆயாத்வித்ய அநுவாகஸ்ய வாமதேவ ரிஷி: அநுஷ்டுப் சந்த: காயத்ரி தேவதா.

ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம ஸம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வனஹ
ஓஜோஸி ஸஹோஸி –பலமஸி ப்ராஜோஸி தேவாநாம் தாமநாமாஸி விச்வமஸி விஸ்வாயு: ஸர்வமஸி

ஸர்வாயுஹு; அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி
ஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ரஹ நிச்ரித் காயத்ரீ சந்த: ஸவிதா தேவதா.

1008 தடவை காயத்ரி ஜபம் செய்யவும்.( ஓம்---பூர்புவஸ்ஸுவஹ---தத்ஸ விதுர்வரேண்யம் ---பர்கோ தேவஸ்ய தீ மஹி----தியோயோனஹ ப்ரசோதயாத்.) முடித்தவுடன் ப்ராணாயாமம் செய்து உபஸ்தானம் செய்யவும்.

உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மணேப்யோ ப்யனுஜ் ஞானம் கச்ச தேவி யதா சுகம். நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்..

தலை ஆவணி அவிட்டத்திற்கு தேவையான சாமான்கள் மற்றும் காயத்ரி ஹோமத்திற்கு தேவையான சாமான்கள்.

மஞ்சள் தூள். 100 கிராம்.; குங்குமம் 10 கிராம்.; சந்தனம் 10 கிராம். மஞ்சள் கிழங்கு 50 கிராம்.; வெற்றிலை 50; பாக்கு 50 கிராம்; பூவன் வாழைப்பழம். 10;
புஷ்பம் தொடுத்தது 4 முழம்.; உதிரி புஷ்பம், துளசி 200 கிராம்; ஊதுபத்தி 10 குச்சி.; கற்பூரம் 20 கிராம்; மஞ்சள்

அக்ஷதை 25 கிராம்; ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரப்பொடி 5 கிராம்; வாழை நுனி இலை 4; கோதுமை ஒரு கிலோ;.

பச்சரிசி 1 கிலோ. நெய் 500 கிராம்; தேங்காய் 2; பஞ்ச பாத்திர உத்திரிணி;.; சொம்பு—2; கும்ப வஸ்திரம் 3 முழ துண்டு ஒன்று. ஹோமம் பண்ண கிண்ணம் -6; குத்து


விளக்கு 2; இதற்கு நல்ல எண்ணெய்; திரி. தீப்பெட்டி; விராட்டி 10; சுள்ளி ஒரு கிலோ; ;பலகை அல்லது தடுக்கு 2; செங்கல்10; மணல் 2 கிலோ; அல்லது ஹோம குண்டம்; ஹாரத்தி கரைசல்; நாந்தி 10 பேருக்கு அனுக்ஞை; வாத்யார் சம்பாவனை; அரச மர குச்சி அல்லது புரச மர குச்சி 1200;;

அப்பம்; சுண்டல் நைவேத்யத்திற்கு.;பால் 500 மில்லி;

யஜுர் வேதத்தை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியவை: 1. ஸ்நானம்; ஸந்தியா வந்தனம்; 2. வபனம் ப்ருஹ்மசாரிக்கு; 3. சமிதாதானம் ப்ருஹ்மசாரிக்கு;ஒளபாசனம் கிருஹஸ்தர்களுக்கு; 4.காமோகாரிஷீத் மந்த்ர

ஜபம்(( முதல் வருட பையனுக்கு கிடையாது)5. மாத்யானிகம்; ப்ருஹ்ம யஞ்யம்; 6. ஸ்நானத்துக்கு மஹா ஸங்கல்பம்; 7. முறையாக ஸ்நானம் செய்தல்; 8. புதிய பூணூல் போட்டு கொள்ளூதல்; 9. காண்டரிஷி தர்பணம்.

10.வேத வ்யாஸ காண்டரிஷி பூஜை 11.உபாகர்மா ஹோமம் ;12. அனுக்ஞை நாந்தீ ச்ராத்தம் முதல் வருட பையனுக்கு; 14. வேதராம்பம், வேத அத்யயனம் நமஸ்கரித்து ஆசி பெறுதல்.

ருக் வேதிகளுக்கு சாகாதீசனான குரு பகவான் மெளட்யத்திற்கு பிறகு 15 நாள் பால்யாவஸ்தையில் இருப்பதால் ருக் உபாகர்மா செய்ய கூடாது என்று உள்ளதால் “”அஸிம்மார்க்கே ப்ரெளஷ்ட்ரபத்யம் ச்ரவணே

வ்யவஸ்தயா என்று சொல்ல பட்டதால் பாத்ர பத சிரவணத்தில் செய்யும் படி சொல்லி உள்ளதால் உதய காலத்திலிருந்து 2 நாழிகை முழுமையாக
உள்ள ச்ரவண நக்ஷத்திரத்தில் செய்யும் படி உள்ளதால் இந்த வருடம் ஆவணி 22ந்தேதி ( 7-9-14 )அன்று ருக் உபாகர்மா அநுஷ்டிக்க வேண்டும்.

ரிக் வேதத்தை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியவை.

1. ஸ்நானம் ஸந்தியாவந்தனம்; 2. வபனம் ப்ருஹ்மசாரிகளுக்கு; 3. ஸமிதாதானம் ப்ருஹ்மசாரிகளுக்கு. ஒளபாஸனம் கிரஹஸ்தர்களுக்கு.
4. மாத்யானிகம், ப்ருஹ்மயக்ஞம். 5. உத்ஸர்ஜனம், புண்யாஹ வசனம்;

6. மஹா ஸங்கல்பம், அவப்ருத ஸ்நானம்; 7. தேவ ரிஷி பித்ரு தர்பணம். 8. உபக்ரம ஹோமம். 9. யக்ஞோப வீத ஹோமம். 10. தயிர், ஸத்து மாவு ப்ராசனம்

.11. புதிய பூணல் அணிதல். 12. அனுக்ஞை நாந்தி சிராத்தம் முதல் வருட பையனுக்கு.13. வேதாரம்பம், வேதாத்யயனம் 14. நமஸ்கரித்து ஆசி பெறுதல்.
 
ருக் வேதிகளுக்கு சாகாதீசனான குரு பகவான் மெளட்யத்திற்கு பிறகு 15 நாள் பால்யாவஸ்தையில் இருப்பதால் ருக் உபாகர்மா செய்ய கூடாது என்று உள்ளதால் “”அஸிம்மார்க்கே ப்ரெளஷ்ட்ரபத்யம் ச்ரவணே

வ்யவஸ்தயா என்று சொல்ல பட்டதால் பாத்ர பத சிரவணத்தில் செய்யும் படி சொல்லி உள்ளதால் உதய காலத்திலிருந்து 2 நாழிகை முழுமையாக
உள்ள ச்ரவண நக்ஷத்திரத்தில் செய்யும் படி உள்ளதால் இந்த வருடம் ஆவணி 22ந்தேதி ( 7-9-14 )அன்று ருக் உபாகர்மா அநுஷ்டிக்க வேண்டும்.

ரிக் வேதத்தை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியவை. I'm not able to understand what you have told what is that Modiyathirkku piragu?

அஸிம்மார்க்கே ப்ரெளஷ்ட்ரபத்யம் ச்ரவணே iduvum puriyavillai
 
QUOTE=kgopalan;247474 Dear Sir,

ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அஸ்தமிதே ஸ்தாலீபாக: என்னும் ஆபஸ்தம்ப மஹர்ஷியின் வாக்யப்படி ச்ராவண மாத பெளர்ணமி யன்று மாலையில் ஒளபாஸனம் செய்துவிட்டு பலாஸ புஷ்பங்களாலும்,

சரக்கொன்னை ஸமித்துகளாலும் ஸர்ப்ப தேவதைகளுக்கு அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். பிறகு செடிகள் அடர்ந்த இடத்தில் அரிசி மாவு முதலியவற்றால் ஸர்பங்களுக்கு மந்த்ரம் சொல்லி பலி போட வேண்டும்.

What is PALASA PUSHPAM ? What is Sarakonnai samithu? --- Is it related to shiva ?
 
பஞ்சாக்கத்தில் கிரஹ பாத சாரம் காலத்தில் குரு 5-7-14 மேற்கே அஸ்தமனம் என்றும் 4-8-14 குரு கிழக்கே உதயம் என்றும் எழுதி இருப்பார்கள் வாக்ய பஞ்சாக்கத்தில் . திருகணித பஞ்சாங்கத்தில் 14-7-2014= ஆனி 30ஆந்தேதி மேற்கே அஸ்தமனம் என்றும் ஆடி மாதம் 24ந்தேதி=9-8=2014 குரு கிழக்கே உதயம் என்றும் போட்டிருப்பார்கள். .

இந்த குரு அஸ்தமன காலத்தில் சுப கார்யங்கள் எதுவும் செய்ய கூடாது. ரிக் வேத சாகைக்கு அதிபதி குரு. யஜுர் வேத சாகைக்கு அதிபதி சுக்ரன் இந்த வருடம் சுக்ரன் 20-10-14 மேற்கே அஸ்தமன.ம் 3-12-14 கிழக்கே உதயம்

குழந்தை பிறந்தவுடன் பால்யாவஸ்தை பிறகு யெளவனம் பிற்கு வ்ருத்தன்=கிழவன். இம்மாதிரி கிரஹங்களுக்கும் உண்டு. உங்கள் பிறந்த ஜாதக கட்டத்தில் உள்ள கிரஹங்களின் டிகிறீஸ் கணக்கு பார்த்து அந்தந்த கிரஹம் எந்த அவஸ்தையில் உங்கள் ஜாதகத்தில் உள்ளது என்று பார்த்து அந்த அவஸ்தைப்படி பலன் சொல்ல வேன்டும்.

அஸ்தனனமாகி உதயமானவுடன் ஒவ்வொரு கிரஹத்திற்கும் தன் பழைய சக்தி பெற சில நாட்கள் ஆகும். இந்த நாட்களை பால்யாவஸ்தயில் உள்ளது என்கிறோம். இக்காலத்திலும் சுப கார்யம் செய்ய கூடாது என்று தான் அக்காலத்தில் எழுதி இருக்கிறார்கள்.

இம்மாதிரி வருங்காலத்தில் சாந்திரமான மாதம் 12 உண்டு. இது அமாவாசைக்கு மறுநாள் முதல் அடுத்த அமாவாசை முடிய வரும் மாதம். சித்திரை. வைகாசி மாதிரி சைத்ரம், வைசாகம்,ஜ்யேஷ்டம், ஆஷாடம்,சிராவணம், பாத்ரபதம் என்று பெயர்கள் வரும்.

ஆதலால் 7-9-14 குருவின் முழு பலம் குருவிற்கு இருக்கும்போது, ரிக் உபாகர்மா செய்யலாம் என ஜ்யோதிடம் வேதமறிந்த பெரியோர்களால் நிச்சயிக்க பட்டது.

பெரிய பணக்காரர்களின் பங்களாகளின் வாசலில் மே மாதத்தில் பெரிய மரத்தில் பச்சை இலையும் மஞ்சள் கலர் பூக்கள் கொத்து கொத்தாக மலர்ந்திருக்குமே. அதுதான் சரக்கொன்றை பூ. இது சிவனுக்கு மிகவும் பிடித்தமன்னது.
இந்த மரத்தின் சிறு கிளையே சரக்கொன்றை சமித்து.

புரச மரம் சமித்து வடமொழியிம் பலாச சமித்து என்ப்பெயர். இந்த மரத்தின் பூவே பலாச புஷ்பம். இது திருப்பதியில் நிறைய வளர்கிறது.
 
Status
Not open for further replies.
Back
Top