அஷ்ட புஜ அஷ்டகம்

praveen

Life is a dream
Staff member
அஷ்ட புஜ அஷ்டகம்

வேதாந்த தேசிகர் அருளிச் செய்த 'அஷ்ட புஜ அஷ்டகம்' - 2


முதல் ஸ்லோகம்:

கஜேந்திர ரஷா த்வரிதம் பவந்தம்
க்ராஹைர் இவாஹம் விஷயைர் விக்ருஷ்ட:
அபார விஞ்ஞான தயானு பாவம்
அப்தம் சதாம் அஷ்ட புஜம் ப்ரபத்யே


சாரம்:


கஜேந்திரனை முதலையின் மரணப் பிடியிலிருந்து கரையேற்றிட ஓடோடி வந்தாயே எம்பெருமானே. இவ்வுலகத்தின் அல்ப புலன் ஆசைகள், மற்றும் விடாத சம்சார பந்தங்கள்,


எம்மை கஜேந்திரனைப் பிடித்த முதலைகளாகக் கவர்ந்து சம்சார சாகரத்தில் மூழ்கடிக்கத் துடிக்கின்றன. எல்லையற்ற விசேஷ ஞானமும், தயாள குணமும் மிக்கவனாய், சத்வ குணங்கள் நிறையப் பெற்றவர்களுக்கு நண்பனான அஷ்ட புயத்தானே, உன்னை சரண் புகுகிறேன். என்னை ரக்ஷித்து அருள்வாய்.


சம்சார பந்தங்கள் தோற்றுவிக்கும் அல்ப புலனாசைகள், எம்பெருமானைப் பூரணமாய் சரணம் அடைய எஞ்ஞான்றும் விடாமல் தடுத்து நிற்கின்றன,


அவற்றை ஒதுக்கி, கஜேந்திரனைப் போன்றே 'ஆதிமூலமே நீ மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும்' என்ற பரி பூரண நம்பிக்கையோடு, அவனை இறைஞ்சி சரணடைந்து நின்றால் தடையேதும் இல்லாமல் ஓடி வந்து அஷ்ட புயத்தான் நம்மை ஆட் கொள்ளுவான், பந்தங்கள் என்னும் தீராத் தடைகளிலிருந்து விடுவித்து நம்மைக் காப்பாற்றி ரக்ஷிப்பான்.

இரண்டாம் ஸ்லோகம்:

த்வத் ஏவ சேஷ: அஹம் அனாத்ம தந்த்ர:
த்வத் பாத லிப்சாம் திசதா த்வைவ
அசத் சமோ அபி அஷ்டபுஜாஸ் பத ஏஷ
சத்தாம் இதானிம் உபலம்பித அஸ்மி


சாரம்: உன்னிடத்தில் சரணம் கொள்வதல்லால் அடியேனின் உயிர்/ உடல் இருப்பு/காற்பதற்கான வேறு தந்திரங்கள் ஏதும் அறிந்திலேன்.


அஷ்ட புயனே, சமர்த்தம் இல்லாத அடியேனுக்கு, உன்னுடைய திவ்யத் திருவடிகளை பணிந்திடும் மார்கத்தை நீயே காட்டித் தந்திட வேண்டும்.


இந்த இக வாழ்வில் அடியேனின் பிறப்பே உன் தாமரைத் திருவடிகளைப் பற்றிடத்தான் என்னும் எண்ணம் என்னுள் தொடர்ந்து மேல் ஓங்கிட வேண்டும்.


'கார்ப்பண்யம்' என்பது, சரணாகதி, சேதனனுக்கு ஏற்படும் ஒரு அங்க நிலை.


இந்த நிலையில் சேதனன், தான் எம்பெருமானுக்கு என்றுமே தாசன் என்றும், அதல்லாத ஸ்வதந்திரன் இல்லையென்பதை உணர்ந்து,


அவன் திவ்ய திருவடி பரி பூரண சரணம் ஒன்றல்லது இந்த ஆத்மாவுக்கு, ஆணவத்தையும்
பந்தத்தையும், அறுத்து வெளி வர வேறெதுவும் வழியே இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்திடுவான்.
 
Back
Top