அஶூன்ய சயன விரதம்.

kgopalan

Active member
அசூன்ய சயன விரதம்.17-08-2019.

அசூன்யம் என்றால் வெற்றிடமிலாதது என்று பொருள். சயனம் என்றால் படுக்கையில் படுத்தல். தம்பதிகளில் பிரிவு ஏற்படாமல் இருக்கவும், படுக்கை எப்போதும் தம்பதிகள் சேர்ந்து படுப்பதாகவே இருக்க வேண்டுமெனில் அவர்கள் பணமும், அசையா/ அசையும் சொத்துக்களும் அவர்களை விட்டு செல்லாமல் இருக்கவும் இந்த அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் எங்கிறது பத்ம புராணம்.

சிராவண மாதம் க்ருஷ்ண பக்ஷ துதியை அன்று ( அதாவது காயத்திரி ஜபம் செய்த மறு நாள்) ஸ்ரீ கிருஷ்ணர் மஹா லக்ஷ்மியுடன் சுகமாக உறங்கும் நாளாகும். இந்த வருடம் 17-08-19 அன்று வருகிறது. 17-08-2019 மாலை ஸ்ரீ கிருஷ்ணரையும் மஹா லக்ஷ்மியையும்

விக்கிரஹம் அல்லது படத்தில் தம்பதிகளாக உட்கார்ந்து 16 உபசார பூஜை செய்து ஏலக்காய், குங்கும பூ போட்டு காய்ச்சிய பசும்பால் நைவேத்தியம் செய்து புதியதாக வாங்கிய போர்வை, ஜமக்காளம், (பஞ்சு மெத்தை), தலையணை, உள்ள படுக்கையில் கிருஷ்ணரையும், தாயாரையும் படுக்க வைக்க வேண்டும்.

ஸ்ம்ருதி கெளஸ்துபம்-147 ல் சொல்லிய படி( லக்ஷ்மியா வியுஜ்யதே தேவ ந கதாசித் யதோ பவான் ததா களத்ர ஸம்பந்தோ தேவ மா மே வியுஜ்யதாம்) நானும் எனது மனைவியும்/ நானும் எனது கணவரும் க்ருஷ்ணா, மஹாலக்ஷ்மியுடன் தாங்கள் சேர்ந்து இணை பிரியாமல் இருப்பது போல நாங்களும் சேர்ந்து இருக்க அருள் புரிய வேண்டும்

என இந்த ஸ்லோகம் சொல்லி வேன்டிக்கொள்ளவும். மறு நாள் காலை மறுபடியும் ஸ்ரீ க்ருஷ்ண லக்ஷ்மி விக்கிரஹங்களுக்கு/படத்திற்கு பூஜை செய்து நிவேதனம் செய்து நமஸ்காரம் செய்து வேண்டிக்கொண்டு ஜமக்காளம், போர்வை, தலையணை, ஸ்ரீ க்ருஷ்ணர், மஹாலக்ஷ்மி விக்கிரஹம்/படம், தக்ஷிணை, வெற்றிலை பாக்கு பழம் புஷ்பம் வைத்து தானம் செய்து விட வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ண ப்ரீத்யர்த்தம் இமாம் சய்யாம் இமம் உபபர்ஹணம், அனுஷ்டித அசூன்ய சயன விரதாங்கம் ஸம்ப்ரததே என்று சொல்லி தானம் செய்து விட வேண்டும்.
 
Back
Top