அறுபத்துமூவர் விழாவும் அன்னதானமும்

Status
Not open for further replies.
அறுபத்துமூவர் விழாவும் அன்னதானமும்

அறுபத்துமூவர் விழாவும் அன்னதானமும்

தமிழகத்தில் சங்க காலம் தொட்டே, பசிப்பிணி தீர்க்கும் அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறம், பக்தி இயக்க காலகட்டத்தில், வேறு பரிணாமம் கொண்டது. சைவத்தில், சிவனடியார்களுக்கும், வைணவத்தில், பாகவதர்களுக்கும் அன்னம் அளிப்பதை அவ்வச்சமயத்தவர், பெரும்பேறாக கருதினர்.

பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்ட, 63 நாயன்மார்களில் பெரும்பாலோர், அன்னதானம் அளித்தவர்கள் தான். அவர்கள் வழங்கும் உணவை உண்பதற்காக, இறைவனே, வந்தான் என, பெரியபுராணம் விதந்து கூறும். பசித்த வயிற்றுக்கு அன்னம் அளிப்பதையே பெரியபுராணம் ஒருவகையில் முன்னிறுத்துகிறது எனலாம். பூம்பாவையை உயிர்ப்பித்த போது, பத்து பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர், அதன்பின், மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல் உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் என கூறிய பின், பூம்பாவை உயிர்பெற்று வந்ததாக, சேக்கிழார் உரைப்பார்.

சைவ சமயம் கொண்டாடும், உண்மை பொருள்கள் என, அவர் வகைப்படுத்தும் இரண்டு தலையாய அறங்களுள், முதன்மையானதாக, அடியார்களுக்கு அன்னம் வழங்குவதையே அவர் முன்னிறுத்துகிறார். அதன் தொடர்ச்சியாகவே, இன்றும், மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழாவில், அன்னதானம் அனைவராலும் விருப்பத்தோடும், பக்தியோடும் செய்யப்படுகிறது. தற்போது, அறுபத்து மூவர் விழா அன்று அன்னதானம் செய்வோரின் எண்ணிக்கை, அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த அறத்தில் ஈடுபடும் ஒரு சில அமைப்புகள் பற்றிய விவரங்கள்:

ஸ்ரீ சிவஞான சம்பந்த சுவாமிகள் தண்ணீர் பந்தல்: கடந்த, 1860ம் ஆண்டு துவங்கப்பட்ட அமைப்பு இது. தொடர்ந்து, 157வது ஆண்டாக, அன்னதானம் செய்து வருகின்றனர். இந்த அமைப்பின், ஸ்ரீநிவாசன் கூறுகையில்,'' ஐந்தாம் நாள் சுக்கு காப்பியில் துவங்கி, அறுபத்து மூவர் விழா வரை தொடர்ந்து, காலை முதல் இரவு வரை, அன்னதானம் செய்கிறோம். நீர்மோர், பானகம், இனிப்பு, சாம்பார் சாதம், பொங்கல், புளி சாதம் ஆகியன வழங்குகிறோம். கைக்குழந்தையோடு வருவோருக்கு மட்டும், பாலாடையுடன் கூடிய பால் வழங்குகிறோம்,'' என்றார்.

வியாசர்பாடி விநாயக முதலியார் சித்திரச் சத்திரம்: கடந்த, 1852ல் இந்த சித்திரச் சத்திரத்தைக் கட்டிய வியாசர்பாடி விநாயக முதலியார், தொடர்ந்து அன்னதானமும் செய்து வந்தார். அது இன்றும் தொடர்கிறது. அறுபத்து மூவர் விழா அன்று லட்டு, சாம்பார் சாதம், பொங்கல், புளி சாதம், ரோஸ் மில்க், நீர்மோர் ஆகியவை இந்த சத்திரத்தில் வழங்கப்படுகின்றன.

மயிலை உழவாரப் பணிக்குழு: பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த குழு, திருவிழா பத்து நாட்களிலும், கோவில் அருகே, நீர்மோர், பானகம் கொடுக்கிறது. அறுபத்து மூவர் விழா அன்று, சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்குகிறது.

திருமுறை அபிஷேக குழு: கடந்த 40 ஆண்டுகளாக செயல்படும் இந்த அமைப்பின், கண்ணன் கூறுகையில்,''அறுபத்து மூவர் விழா அன்று, 25க்கும் அதிகமான அன்ன வகைகளை வழங்குகிறோம். ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். காலை 8:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் நடக்கும். கோவிலுக்கு தேவையான அபிஷேகப் பொருட்களும் கொடுத்து வருகிறோம்,'' என்றார். இந்த அமைப்புகள் தவிர, பல தனி நபர்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் ஆகியவையும், அறுபத்து மூவர் திருவிழா அன்று, அன்னதான புண்ணியத்தில் ஈடுபடுகின்றனர்.

ஆருத்ரா என்றால் நடராஜர்; அதனால் சிவன் எனக்கு பிடிக்கும். குடும்பத்தோடு, மயிலாப்பூர் திருவிழாவிற்கு வருவோம். அதேபோல், நாயன்மார்களின் குருபூஜைஅன்றும், கோவிலுக்கு வருவேன். கபாலீஸ்வரர் கோவி லில் உள்ள, அறுபத்து மூவர் சிலைகள் எனக்கு பிடிக்கும்.

ஆருத்ரா, 6, தாம்பரம்

கர்நாடக சங்கீதம் கற்பதற்காகத் தான், சென்னை வந்தேன். இரண்டு மாதங்களாக சென்னையில் தான் உள்ளேன். அதிக முறை வந்தது, கபாலீஸ்வரர் கோவிலுக்கு தான். தற்போது திருவிழா நடந்து வருகிறது. திருவிழா, இன்னும் அழகாக இருக்கிறது.

கேத்ரினா, 28, ரஷ்யா
- நமது நிருபர் -

| ????????????? ???????? ??????????? | Dinamalar



மயிலை அறுபத்து மூவர்

Please open the link to read

http://isatsang.blogspot.in/2014/03/blog-post_11.html
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top