அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்க&#

Status
Not open for further replies.
அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்க&#

அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில்


T_500_806.jpg



அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு-624 709 திண்டுக்கல் மாவட்டம்.


காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Ph:+91- 451-255 7232

மதுரை அழகர்கோயிலுக்குண்டான நேர்த்திக்கடனை இங்கே செலுத்தலாம்.


தலபெருமை:

கல்வி வழிபாடு:
இக்கோயிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர். திருவோணத்தன்று ஹயக்ரீவருக்குதேனபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது.படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுகுறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது. அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடக்கிறது. இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் விசேஷ மானவர்.

இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். இத்தகைய அமைப்பைக் காண்பதுஅபூர்வம். விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், பெருமாளின் தசாவதாரம், லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர், சொர்ண பைரவர் ஆகியோருக்கும் சன்னதி உண்டு.

தல வரலாறு:

"மண்டூகம்' என்ற சொல்லின் பொருள் "தவளை'. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். இதனால், அவர் "மண்டூக மகரிஷி' என பெயர் பெற்றார். தன் சாப நிவர்த்திக்காக இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வேண்டி தவமிருந்தார். அப்போது, அசுரன் ஒருவன் அவரை தொந்தரவு செய்யவே, அவனிடமிருந்து தன்னைக் காக்கும்படி மதுரையில் அருளும் கள்ளழகரை வேண்டினார். அவருக்கு அருளிய சுவாமி, அசுரனை அழித்தார்.மேலும், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். "சவுந்தரராஜர்' என்றும் திருநாமம் பெற்றார். மதுரை அழகர் கோயிலுக்கு இணையான சிறப்பை பெற்ற இத் திருத்தலத்தை 500 வருடங்களுக்கு முன்பு விஜய நகர ஆட்சி வழி வந்த அட்சுத தேவராயர் கட்டியதாக வரலாறு கூறுகிறது.


Source:Soundararaja Perumal Temple : Soundararaja Perumal Temple Details | Soundararaja Perumal- Thadikombu | Tamilnadu Temple | ??????????? ????????
 
Status
Not open for further replies.
Back
Top