அருள்மிகு சரஸ்வதி அம்மன் ஆலயம், கூத்தனூர

praveen

Life is a dream
Staff member
அருள்மிகு சரஸ்வதி அம்மன் ஆலயம், கூத்தனூர

அருள்மிகு சரஸ்வதி அம்மன் ஆலயம், கூத்தனூர், திருவாரூர் மாவட்டம்


சுவாமி : சரஸ்வதி.


தலச்சிறப்பு : கங்கை, யமுனை, சரஸ்வதி கலக்கும் இத்தலம் தட்சிணதிரிவேணிசங்கம் எனப் பெயர் பெற்றது. இவ்வூர் இரண்டாம் ராஜராஜ சோழனால் தனது அவைப்புலவரான ஓட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டதால் இவ்வூர் கூத்தனூர் என்றாயிற்று. கும்பகோணம் சாரங்கபாணி தீட்சிதர் என்பவரின் புதல்வன் வாய் பேசாதிருந்து கூத்தனூர் அம்பிகை அருளால் விஜயதசமி நன்னாளில் பேச்சுத்திறன் பெற்றதும் இத்தலத்தை திருப்பணி செய்து புருஷேத்தம்பாரதி எனப் போற்றப்பட்டதும் அண்மை கால வரலாறுகள் கூறுகின்றன. இத்தலத்தில் அருள்பாலித்து வரும் அன்னை சரஸ்வதி தேவியை வழிபடுவோர்க்கு கல்வி அறிவு பெற்று மேன்மை அடைவர். தமிழ்நாட்டிலேயே ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு இத்திருக்கோவில் ஒன்று மட்டுமே உள்ளது.


தல வரலாறு : கூத்தனூர் சரஸ்வதி ஆலய தல புராணம் சகோதர சகோதரி மணம் புரிவதற்கான பண்பாட்டுத் தடையினைப் பேசுகிறது. சத்திய லோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது, கல்விக்கரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்து விட்டனர். இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரிய வந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன் தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வது என்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கு" என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக அவள் கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள்.


நடைத்திறப்பு : காலை 7.30 மணி முதல் 1.00 மதியம் மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.


பூஜைவிவரம் : ஒரு கால பூஜை.


திருவிழாக்கள் : நவராத்திரியில் சரஸ்வதி பூஜை-விஜயதசமி முக்கிய திருவிழாவாகும்.


அருகிலுள்ள நகரம் : திருவாரூர்.
 
Back
Top