அரிச் சந்திரன்,சிபி சக்கரவர்தி கதைகள்...

Status
Not open for further replies.
அரிச் சந்திரன்,சிபி சக்கரவர்தி கதைகள்...

ஓரு கானகத்தில் ஒரு சிவாலயம் இருந்தது. கர்பகிரகத்தில் தொங்கும் சர விளக்கிலிருக்கும் நெய்யை திருடி குடிக்க ஒரு எலி சிவாலயத்திற்க்கு இரவு நேரங்களில் செல்வது வழக்கம்.

வழக்கம் போல் அன்றும் இரவு தனது நெய் வேட்டைக்கு அந்த எலி சிவாலயம் சென்றது.

சரவிளக்கிலும் ஏறி விட்டது. நெய்யையும் ருசிக்க தயாராகியது. எதிர்பாராத விதமாக எரிந்துகொண்டிருக்கும் விளக்கில் தனது மூக்கு முடி பட்டு நெருப்பு எலியை சுட்டு விட்டது.

இதை எதிர்பாராத எலி நெய்யில் மூக்கை முக்கி வாயை இங்கும் அங்கும் ஆட்டியது.

இதில் விளக்கில் இருந்த திரி தூண்டப்பட்டு கர்ப்பக்கிரகம் பிரகாசமானது.

முழுக்க முழுக்க எதிர்பாராமல் நடந்த செயல் என்றாலும், சிவன் கோவில் கர்ப்பகிரகம் பிரகாசமடைந்ததால் அந்த எலிக்கு அதன் அடுத்த இரண்டு ஜென்மங்களும் ராஜாவாக பிறக்கும் பாக்கியம் கிடைத்தது.
 
Status
Not open for further replies.
Back
Top