• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகள் ‘ல

Status
Not open for further replies.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகள் ‘ல

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகள் ‘லெகிங்ஸ்’ அணியத் தடை:

leggings_2530292f.jpg



அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு நாளை தொடங்குகிறது. மாணவிகள் ‘லெகிங்ஸ்’ ஆடை அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) கட்டுப்பாடு விதித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து இரண்டாம்கட்ட கலந்தாய்வு கடந்த 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடந்தது.

இந்த இரு கட்ட கலந்தாய்வு முடிவில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 597 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னை யில் உள்ள தமிழ்நாடு அரசு மருத் துவக் கல்லூரியில் இருந்த 85 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. 17 தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக் கீட்டுக்கான 912 பிடிஎஸ் இடங்களில் 911 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் மட்டும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கான ஒரு பிடிஎஸ் இடம் மட்டும் காலியாக உள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்ற மாணவ, மாணவி கள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரி யில் அனுமதி கடிதத்தை கொடுத்து சேர்ந்துவிட்டனர். அந்தந்த கல்லூரி யில் டீன் தலைமையில் பெற்றோர், மாணவர்கள் ஆலோசனை கூட்டமும் நடந்து முடிந்துவிட்டன.

லெகிங்ஸ் அணிய தடை

இந்நிலையில் 20 அரசு மருத்து வக் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத் துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு செப்டம்பர் 1-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. மருத்துவக் கல்லூரியில் படிக்க வரும் மாணவ, மாணவிகள் என்ன மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் மூலம் தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை அணியக் கூடாது. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். தலை முடியை விரித்து விடாமல் இறுக்க மாக கட்டிக்கொண்டு வகுப்புக்கு வரவேண்டும். அதேபோல மாணவர் கள் பேன்ட், சட்டை அணிந்து இன் செய்து கொண்டும், ஷூ அணிந் தும் வர வேண்டும்.

மாணவ, மாணவிகள் வகுப்பறையில் செல்போன் உபயோகப்படுத்தக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவிகள் ‘லெகிங்ஸ்’ ஆடையை அணிந்து வரக்கூடாது என்ற புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

டீன்களுக்கு சுற்றறிக்கை
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறும்போது, “அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ் லெஸ், லெகிங்ஸ் போன்ற ஆடை களை மாணவ, மாணவிகள் அணிந்து வருவதற்கு தடை விதிக் கப்பட்டுள்ளன. மாணவ, மாணவி களை கண்காணிக்கும்படி அனைத்து கல்லூரி டீன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன” என்றார்.

பெண்களின் உரிமை

இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் பி.பத்மாவதி கூறும்போது, “பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு தெரியும். விருப்பமான ஆடைகளை அணிந்துகொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது. எனவே ஆடைக் கட்டுப்பாடு தேவையற்றது. குழந்தைகள் முதல் எல்லோரும் பார்க்கும் சினிமாவில் பணம் சம்பாதிப்பதற்காக பெண்களை அரைகுறை ஆடையில் ஆபாசமாக காட்டுகின்றனர். இதை முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்றார்.


http://tamil.thehindu.com/tamilnadu/
 
டீன்களுக்கு சுற்றறிக்கை
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறும்போது, “அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ் லெஸ், லெகிங்ஸ் போன்ற ஆடை களை மாணவ, மாணவிகள் அணிந்து வருவதற்கு தடை விதிக் கப்பட்டுள்ளன. மாணவ, மாணவி களை கண்காணிக்கும்படி அனைத்து கல்லூரி டீன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன” என்றார்.
Hereafter, Deans would lose interest in monitoring girls !
 
Status
Not open for further replies.
Back
Top