அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் வேலை நிற

Status
Not open for further replies.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் வேலை நிற

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் வேலை நிறுத்தம்: பயணிகள் அவதி!


bus%20SETC%20200%283%29.jpg



சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 29ஆம் தேதி (நாளை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த 22ஆம் தேதி அறிவித்தனர்.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் முதற்கட்ட சமரச பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் (26ஆம் தேதி) நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று (27ஆம் தேதி) நடைபெற்றது. தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு துணை ஆணையர் யாஸ்பீன் பேகம் தலைமையில் நடைபெற்ற இதில், போக்குவரத்து நிர்வாகம் தரப்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பர்ட் தினகரன், சேலம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சவுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தொழிற்சங்கங்கள் தரப்பில், அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., தே.மு.தொ.ச., பட்டாளி தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எப். ஆகிய தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி 29ஆம் தேதி (நாளை) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில், இன்றே (28ஆம் தேதி) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஸ்களை இயக்காமல் தொழிலாளர்கள் இன்று நள்ளிரவு முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.


???? ???????????? ??? ????????? ???? ?????????: ??????? ????!
 
பேச்சுவார்த்தை தோல்வி டிச.29ல் பஸ்கள் ஓடாது


 
சென்னை: நாளை வழக்கம் போல் பஸ்கள் இயங்கும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

| ?????? ???? ??????? ???? ????????: ???????????? ???? Dinamalar
 
ஸ்டிரைக்குக்குப் பணிந்தது அரசு

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களாக நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் டிசம்பர் 28 ஆம் தேதியில் இருந்து, கடந்த 3 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி 29 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அரசின் பிடிவாதம் காரணமாக, ஒரு நாள் முன்னதாகவே டிசம்பர் 28 ஆம் தேதியன்றே போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்து விட்டனர். இதனையடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். தற்காலிக பணியாளர்களால் பேருந்துகள் இயக்கப்பட்டும் மக்கள் தவிப்படைந்து வந்தனர். புத்தாண்டுக் கொண்டாட்டம், விடுமுறைக் கொண்டாட்டம் என மக்களின் திட்டம் அனைத்தும் பாழாய்ப் போனது. இந்நிலையில், எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சியான அதிமுக தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்ததால் அரசு அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து வேறு வழியில்லாத நிலையில், தற்போது இறங்கி வந்துள்ளது.
அதன்படி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 100 சதவீதத்தில் இருந்து 107 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அது அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படியானது கணக்கிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பினை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். இந்த 7% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பினைத் தொடர்ந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

[FONT=latha, TSCu_paranar, Arial, Helvetica, sans-serif] Courtesy:Oneindia Tamil[/FONT]
 
Status
Not open for further replies.
Back
Top