அனுமன் துதி நாற்பது

praveen

Life is a dream
Staff member
குருவின் திருவடியை கும்பிட்டு அடியேனும்
உருவாய் ரகுவரனை உள்ளக் கண்ணாடியில்
பெறுவேன் அதனால் பிழைகள் நீங்கிடுமே
சேறும் களைந்து சித்தம் குளிருமே

#புத்தியில்லாபுலன்களோடு #புரியாதுகேட்கிறேன்
#சக்தியுடைவாயுமைந்தா! #சகலவித்தையும்புத்தியும்
#தந்துவிடு_எனக்கு! #தடைகள் #அகற்றிடு!
#மந்தநோய்நீக்கிடு! #மனஅழுக்கைப் #போக்கிடு!



1. ஞானக் கடலே! ஞாலத்தை ஒளிரவைப்பவனே!
வானரத் தலைவனே! வந்தனம் வந்தனம் !

2. ஒய்யார தூதனே! ஒப்பில்லா ஆற்றலே!
அய்யமில்லா வாயுமகனே! அஞ்சலி புதல்வனே !

3. வீரத்தின் திலகமே! வெற்றியின் வைரமே!
ஓரமாய் தீயவைஓடிட ஒளிரும் நல்லெண்ணமே!

4. பொன்னிற உடலுடன் பொலிவான தோற்றமே!
செந்நிற செவிகுண்டலமே! சுருண்ட கேசமே!

5. கரத்தில் ஆயுதம் காத்திடும் கொடியே!
உரமாய் பூணலே உறுதியான தோளே !

6. சங்கரன் அவதாரமே சகம்புகழ் ஆற்றலே
மங்காத கேசரீயின் மைந்தனான ஒளியே !

7. வித்தையில் சிறந்தவனே ! விநயமாய் புரிபவனே!
சத்திய இராமகாரியம் சட்டென செய்பவனே !

8. சிந்தையில் இராமனும் சீதையும் இலக்குவனும்
விந்தையாய் நின்றிட வேந்தன் கதை சுகமே!

9. உருவத்தைச் சுருக்கியே உலகத்தைக் கண்டவனே
உருவத்தைப் பெருக்கியே ஊரினை அழித்தவனே !

10. அரக்கரை அழித்திட ஆவேசம் பூண்டவனே !
அரசனின் வேலையை அழகாய் செய்தவனே !

11. இலக்குவனை மீட்கவே எடுத்தனை சஞ்ஜீவமலையை
கலகலத்து இராமனும் கட்டிஉன்னை அணைத்தனை

12. கட்டித்தழுவி இராமன் களிப்புடன் உன்மீது
குட்டித் தம்பி பரதன்போல் குதூகல அன்புகொண்டானே !

13. ஆயிரம் உடல்கொண்ட ஆதிசேஷனே உன்பெருமை
வாயினால் பாடியதில் வையுலகம் அறிந்ததே!

14. சனகாதி முனிவரும் சரஸ்வதி தேவியும்
தினமும் பாடிட திக்கெட்டும் பரவுமே

15. தெய்வீக புலவரும் திக்பாலரும் பாவாணரும்
மெய்யறிந்து பாடிட முயன்றாலும் இயலாதே !

16. சுக்ரீவன் உன்னால் சுகமாய் பெற்றானே
அக்ரமம் அழிந்து அரசனும் ஆனானே!

17. உன்சொல் கேட்டு உரிமை பெற்றானே!
மன்னனாய் விபீடணன் மகுடம் சூடினானே!

18. வானிலே கண்ட வளமான பழமென்று
ஆணித்தரமாய் நீயும் ஆகாசத்தில் பறந்தாயே !

19. கோதண்டனின் சின்னமாய் கொண்டாயே கணையாழி
சாதனை சிங்கமாய் சமுத்திரம் தாண்டினையே !

20. கடினமான செயலும் கணத்தில் எளிதாகுமே
அடியேனை உன்னருள் அனுதினம் காக்குமே !

21. வள்ளல் இராமனின் வாயிற் காப்போனே !
அள்ளிடும் உன்னருளே அனுமதி தந்திடுமே !

22. உன்னைச் சரணடைய உலகில் யாவும்சுகமே!
என்னைக் காத்திடுவாய் இனிஏன் பயமே !

23. உன்வலிமை அடக்க உன்னாலே முடியுமே
உன்வலிமை அதற்கு உலகம்மூன்றும் அடங்குமே!

24. மாவீரன் உன்நாமம் மனத்தால் ஜபித்திட
ஆவியும் பூதமும் அருகினில் வாராதே !

25. அனுதினம் ஜபித்து அனுமனை நினைத்தால்
அணுகாது நோய்கள் அகலும் வலிகளே!

26. மனத்தாலும் வாக்காலும் மாறாத செயலாலும்
தினமும் நினைக்க தீர்ந்திடும் சங்கடமே !

27. சிந்தையில் இராமனை சிந்தித்து விட்டால்
விந்தையாய் நீயே வேலைகள் முடிப்பாயே!

28. மனத்தின் ஆசைகளை மண்டியிட்டு கேட்டுவிட
விநயமாய் அளித்து வீரியம் தருவாயே !

29. மாறும் யுகங்களில் மங்காது உன்பெருமை
பாரும் புகழ்ந்திட பாதையும் மிளிருமே !

30. நல்லவரைக் காப்பவனே! நாயகனின் நண்பனே
அல்லோரை அழித்து அகிலம் காப்பவனே !

31. எட்டு சித்தியும் எட்டாத செல்வமும்
கட்டுக்குள் வைத்து காத்தருளி நிற்பவனே !

32. பக்தியில் திளைத்து பரவசம் ஆனவனே
மக்களின் நேசனே! மன்னவன் தோழனே !

33. உன்னைப் பாடியவர் உள்ளத்தில் இராமனிருக்க
தன்னாலே அழிந்திடுமே தாரணியின் துக்கமே

34. இப்பிறவியில் உன்னை இனிதே பாடிட
எப்பிறவியிலும் நான் இராமனின் பக்தனே!

35. உள்ளத்தில் குடியாய் உன்னைக் கொண்டவர்
கள்ளமின்றி மறந்தாலும் காத்தருள் புரிபவனே !

36. சங்கடம் நீக்கி சாதனை புரிவாயே!
எங்களின் வலிபோக்க எழுந்தருளும் வீரனே !

37. உருவத்தைக் கொண்டு உணர்வுகள் வென்றவனே!
குருவாய் நின்றே குலத்தைக் காப்பவனே !

38. அனுமன் துதியை அனுதினம் துதிக்க
அணுகாது பிறவிப்பிணியே! ஆனந்தம் பெருகுமே !

39. நாற்பது செய்யுளை நாள்தோறும் படித்திட
காப்பது திண்ணம் கைலாயனே உறுதி !

40. துளசிதாசன் இனிதே துதித்த வடமொழியை
வளமான தமிழில் வந்தனத்துடன் உரைத்தேனே!


(இராம இலக்குமண ஜானகி என்றே
இயம்புவோம் அனுமனின் நாமத்தை )
 
Back
Top