அடங்காத ஆற்றல் அசையாது

அடங்காது ஆர்ப்பரிக்கும் ஆற்றலை
அதனுள்ளிருந்து ஆங்காங்கு தேக்கி
அகிலத்தை உருவாக்கினாள் அன்னை
அடக்கியாள்வதே அவள் தன்மை

ஊர்வன பறப்பன நடப்பன
உயர்வன உருள்வன உறைவன
அனைத்துமே ஆற்றலுள் அடங்கும்
அவள் பாசக்கயிற்றில் ஆற்றலே மடங்கும்

அகிலத்தின் ஆற்றலே தேவன்
அவளிடம் அடங்கியதால் மஹாதேவன்
அடங்காத ஆற்றல் அசையாது
அது ஆதிசங்கரர் அருள்வாக்கு

sivah saktya yukto yadi bhavati saktah prabhavitum
na ced evam devo nakhalu kusalah spanditum api

உலகத்தை உயிர்ப்பிக்கும் பெண்மை
உள்ளுக்குள் ஒளிவிடும் உண்மை
வல்லினம் இல்லாத பெருவலிமை
உண்மை ஆகினாள் உமை

-TBT
 
Back
Top