அசையாதா ஆழித்தேர் - ஆரூரா... தியாகேசா..!

Maha52

Active member
அசையாதா ஆழித்தேர் - ஆரூரா... தியாகேசா..!

By மு. ஹரி காமராஜ்

கிலமே வியந்து பார்க்கும் ஆழித்தேர் அது. அதற்கு முன்னால் நடனமாடிக்கொண்டிருந்தாள், கொண்டி. வெறும் சதிராட்டமல்ல அது. ஆனந்தவயப்பட்ட, அனைத்தையும் மறந்தநிலை... தான் ஈசனோடு இரண்டறக் கலந்துவிட்டதாக நினைத்துத் திளைத்தபடி ஆடும் நடனம். ஆட்டம்.
திமிலை, மத்தளம், இந்தளம், உடுக்கை, கொம்பு, குடமுழா, துந்துபி, பாரி நாயனம், சங்கு, பிரம்ம தாளம், குட்டத்தாரை, எக்காளம், திருச்சின்னம், நெடுந்தாரை, தாரை, கொம்புத்தாரை, உடுக்கை, சேமக்கலம், தப்பு, கர்ணா, குழித்தாளம், உறுமி, கொக்கரை, தவண்டை, கொடுகொட்டி, நகரா, யாழ், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு, மொந்தை, தகுணிதம், தாளம், வீணை, கரடிகை, சச்சரி, தக்கை என ஈசனுக்கு விருப்பமான 70 வகை இசைக்கருவிகளும் இசைக்க, அவற்றின் அதிர்வுகளுக்கேற்ப கொண்டி ஆடிக் கொண்டிருந்தாள். ஆரூர் மக்களும் சோழப்பேரரசனும் அவள் ஆடுவதை அச்சத்தோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அது ஓர் அதிசய நிகழ்வு. பின்னே... ஒரு பெண் நடனமாடினால் ஆழித்தேர் அசைந்துவிடுமா என்ன... ஆவல் மேலோங்க எல்லோரும் நடனத்தையும் ஆழித்தேரையும் மாறி மாறிப் பார்த்தபடி இருந்தார்கள்.

1571710032010.png


10 தேர்க்கால்கள், 9 லட்சம் கிலோ எடைகொண்ட அந்த பிரமாண்டத் தேர் கொஞ்சமும் அசையாமல் இருந்தது. அதன் தொம்பைகள்கூட மந்திரத்தில் கட்டுண்டாற்போல அப்படியே கிடந்தன. 20,000 கரங்களும், யானைகளும், குதிரைகளும் இழுத்தும் நகராத தேர், இப்போதும் அமைதி காத்தது. ஒருமுறை முசுகுந்த சக்கரவர்த்தி, இந்திரனிடமிருந்து ஏழு திருவிடங்கப் பெருமான் திருவுருக்களைப் பெற்றார். அவற்றை மண்ணுலகுக்குக் கொண்டுவர மயனால் உருவாக்கப்பட்டது ஆழித்தேர். `ரத ஸ்தாபன சாஸ்திரம்’ என்னும் புதிய சாஸ்திரமே உருவாகக் காரணமானது இந்தத் தேர்தான்.

ஏழு விடங்க மூர்த்தங்களையும் அருளச்செய்து முசுகுந்தன் வடம்பிடிக்க, பிரம்மன் தேரோட்ட பூமிக்கு வந்தது இந்தத் தேர். `இதனோடு வந்தவை 70 வகை சிவ வாத்தியங்கள், ஈராயிரம் வகை தேவ மலர்கள், ஐந்து வகை புண்ணியத் தீர்த்தங்கள்’ என்று திருவாரூர்ப் புராணம் சொல்கிறது. தேவர்களே வியந்துபோற்றும் இந்த ஆழித்தேர் பல நூறு ஆண்டுகளாக அசைந்தாடி வலம்வந்து மண்ணகத்தின் புகழ்க்குறியீடாக இருந்தது. அந்த வேளையில் அந்த ஆண்டு பங்குனி உத்திரத்தில் மட்டும் நகர மறுத்தது. `ஏன் இப்படி ஆனது?’ என்று எல்லோரும் கலங்கியிருந்த வேளையில்தான் கொண்டி ஆட ஆரம்பித்தாள்.

கொண்டியின் மனதில் எந்த வன்மமும் இல்லை. தன்னை அவ.......

மேலும் படிக்க
https://www.vikatan.com/spiritual/gods/a-devotional-story-related-to-aazhi-ther-procession

நன்றி: விகடன்
 
Back
Top