• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் நிலமை...[ டி வி கே ]

kk4646

Active member
கவிதை எழுத மனம் உண்டு...

கவிதை வரிகள் பல உண்டு ..



கற்பனைகள்.. ஏராளம்...

கனவுகளும் தாராளம்...



கடை மடாய் வழிந்திடுமோ ..

கடைசி வரை நிற்காமல்.



ஆயினும் ....



ஏனோ ஒரு தயக்கம்.....

எங்கிருந்தோ வரும் மயக்கம்...



கவிதை எழுத நீ கவிஞன் இல்லை...

கவிதை உன் திறமை இல்லை...



ஏதோ எழுதுகிறாய் ..புரியாமல்...

எனது கவிதை என்றே நினைவில்..



கவிதை ஓர் உயர்ந்த கலை...

கவிதை எதற்கு உனக்கு...



எங்கிருந்தோ ஓர் குரல்...

ஏன் என்று தெரியாமல்...



உள் மனதில் உரைக்கின்றதே...

உண்மையாய் தெரிகின்றதே..



எழுதுவது எல்லாம் கவிதை என்றால்..

எத்தனை கவிஞர்கள் நாட்டில்..



புரிந்து கொண்டேன் இன்றே ...

கவிதை என் வழியில்லை என்றே ...



எழுதியது இதுவரை கவிதை இல்லை

ஏதோ ஒர் உணர்வின் தாக்கம்....

என்று தீருமோ இந்த நிலமை...



காத்திருக்கிறேன்...





டி.வி. கே.
 
Hi TVK,
I understand.
Buy a Tamil Yaappilakkanam book and study. 6 months enough to understand the basic grammar for writing poetry in Tamil. Then start with Aasiriyappa - the simplest meter to write in. Later you can move to Venpaa.
While prose is plain black and white picture, poetry adds a lot of colour to the idea conveyed.
Start immediately. Its corona times. So a lot of time and little work at hand. Perhaps right time to become a poet. Best wishes.
 
இலக்கணங்கள் கற்றதில்லை...
இலக்கியமும் படித்ததில்லை..
இயல்பாய் ஓடிவரும் வார்த்தைகள்....
இதுவும் ஒரு கவிதை என்பவர் சிலர்...
இது ஒரு கவிதையா என்பவரும் சிலர்...
 
இலக்கணங்கள் கற்றதில்லை...
இலக்கியமும் படித்ததில்லை..
இயல்பாய் ஓடிவரும் வார்த்தைகள்....
இதுவும் ஒரு கவிதை என்பவர் சிலர்...
இது ஒரு கவிதையா என்பவரும் சிலர்...
This certainly not kavithai.
 

Latest ads

Back
Top