• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இனிய தமிழ்க்கவிதைகள் - நான் மிக ரசித்தவை.

Status
Not open for further replies.
இனிய தமிழ்க்கவிதைகள் - நான் மிக ரசித்தவை.

கவிதை என்பது உரைநடையிலிருந்து வித்தியாசமானது. உரைநடையில் பொருளை/கருத்தை தட்டையாகவும் நீளமாகவும் (in the linear mode)அப்படியே மனதில் தோன்றுவது போலவே கூறிவிடுவது தான் வழக்கம். கருத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த வார்த்தைகளால் வாக்கியங்களாகி கேட்பவரை அல்லது படிப்பவரைச் சென்று அடைந்துவிடுகின்றன. ஆனால் கவிதை அப்படியல்ல. அதில் எடுத்துக்கொண்ட கருத்து மெருகூட்டப்பட்டு, வடிவம் கொடுக்கப்பட்டு, உவமை முதலான பல உத்திகளையும் கையாண்டு ஒவ்வொரு சொல்லோடும் இணைந்தே இருக்கும் கொத்துக்கொத்தான எண்ணக் குவியல்களும் நினைத்தது நினைத்தவாறே சென்றடையவேண்டும் என்ற நோக்கத்துடன் கவனமாக தீட்டப்படும் ஒரு வண்ண ஓவியமாகும். கவிதையில் வார்த்தைகள் முன் பின்னாக வருவதுண்டு. அப்படி வராத இடத்தும் கூட முன்பின்னாக மாற்றி அமைத்துக்கொண்டு பொருள் அறியும் வழக்கம் உண்டு. உரைநடையில் "கொசுவை அடிக்க சம்மட்டியை உபயோகிப்பது" போல ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகக் கூற நிறைய வார்த்தைகளைச்
செலவிடவேண்டும். ஆனால் கவிதையில் அதை சுருக்கமாகவும்
சுலபமாகவும் கூறிவிடலாம். கவிதையை, கவிதை வடிவங்களில் ஒன்றான குறளின் மேன்மையை ,


"அணுவைத் துளைத்தேழ்கடலைப் புகுத்திக் குறுகத்தறித்த குறள்"


என்ற வரி அழகாக தெளிவுபடுத்துகிறது.


நான் தமிழ்க் கவிதைகளின் பரம ரசிகன். அடிககரும்பை அணு அணுவாய்
சுவைப்பது போல தமிழ்க்கவிதைகளை எண்ணி எண்ணி ரசித்து மகிழ்பவன்.
நான்மிக ரசித்த கவிதைகளை இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்
என எண்ணி எழுதத்தொடங்குகிறேன். முதலில் நான் விரும்பி ரசித்த
உவமைகளைப் பற்றி எழுதுவேன். வடிவத்தைப்பற்றி எழுதும் போது
கூடவே வடிவத்தின் உள்ளிருக்கும் பொருள் பற்றியும் பேசுவது இயற்கை
தானே.
 
கவிதையில் வார்த்தைகள் முன் பின்னாக வருவதுண்டு. அப்படி வராத இடத்தும் கூட முன்பின்னாக மாற்றி அமைத்துக்கொண்டு பொருள் அறியும் வழக்கம் உண்டு.

But for this attractive provision...:decision:

ANY poetry will be impossible!!! :nono:
 
Dear VR,

கவிதையில் வார்த்தைகள் முன் பின்னாக வருவதுண்டு. அப்படி வராத இடத்தும் கூட முன்பின்னாக மாற்றி அமைத்துக்கொண்டு பொருள் அறியும் வழக்கம் உண்டு.
But for this attractive provision...:decision:
ANY poetry will be impossible!!! :nono:

Are you sure? What about this line from one of my favorite kavithai lines:

"paarthen siriththen pakkam varaththudiththen Unnaithen ena naan ninaiththen
antha malaiththen ithuvena malaiththen"

It is straight and yet beautiful for the meaning, pun and chantham in it. There is no need to juxtapose any word to derive the meaning.
 
Dear Mr. Raju,

"பார்த்தேன்; சிரித்தேன்;
பக்கம் வரத் துடித்தேன்;
உனை தேன் என நான் நினைத்தேன்;
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்"

இது ஒரு விதி விலக்குக் கவிதை அல்லவா?

நடந்தவற்றை, ஒற்றைச் சொல் வாக்கியங்களாகக் கூறும் இதை
எப்படி மாற்றியோ மடக்கியோ போட முடியும்?

"பக்கம் வரத் துடித்தேன்; சிரித்தேன்; பார்த்தேன்;"
என்றால் நிகழ்சிகளின் தொடரே (Sequence ) மாறிவிடுமே!!
 
Respectable members, Greetings.

Kindly let us not debate, please. I am eager to taste the nectar of the poetry. Thank you.

Cheers!
 
அது ஒரு 'மாப்பறவை'. பெரிய உடலை உடைய ஒரு நீர்ப்பறவை. உடல் தான் பெரிதே தவிர அறிவு குறைவுதான். ஒரு நாள் இரவு களைத்திருந்த போது துறை முகத்தில் நின்றிருந்த ஒரு பாய்மரக்கப்பலின் கூம்பின் மீது(கொடி மரத்தின் மீது) அமர்ந்தவாறு உறங்கிப்போயிற்று. விடியும் முன்பே மீனவன் அந்தக்கப்பலை கடலில் செலுத்தி நடுக்கடலுக்கு சென்று விட்டான். கப்பல் நடுக்கடலில்அலையின்தாக்கத்தால்அசைந்ததாலும், பொழுது விடிந்து சூரியனின்
கிரணங்கள் பளிச்சென்று
ஒளிவீசியதாலும் அந்தப்பறவை கண் விழித்து விட்டது. கண் விழித்த பறவை
இணையையும் கரையையும் தேடலாயிற்று. அங்கும் இங்கும் பறந்து பறந்து
தேடியும் கரையைக்காணாது ஓய்ந்து போயிற்று. ஓய்வு எடுக்க சற்றே வந்து கூம்பின் மீது அமரும். பின் மீண்டும் கரையை தேடி பறக்கும்.


இந்த மாப்பறவை போன்று நானும் அல்லல் படுகின்றேன். மீண்டும் மீண்டும்
கொடிமரத்தை வந்தடையும் அந்தப்பறவையை போன்று நானும் உன்னையே சரணாகப்பற்றினேன். எனக்கு வேறு கதியோன்றும் இல்லை.உன்
சரணல்லால் சரணில்லை. எனவே நீ தான் என்னை ரட்சிக்கவேண்டும் என்று
குலசேகர ஆழ்வார் இந்தக்கவிதையில் கூறுகிறார். இதில் அவர் அமைத்துள்ள மாப்பரவையின்
உவமை நான் மிக அனுபவித்த ஒன்று. கவிதை இதோ:

வெங்கட்டிண் களிறடர்த்தாய்! வித்துவக்கோட்டம்மானே!
எங்குப்போய் உய்கேன்? உன் இணையடியே அடையலல்லால்
எங்கும் போய் கரை காணாது எறிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்beறும் மாப்பறவை போன்றேனே. (பெருமாள் திருமொழி 5 -5 )
 
Last edited:
குலசேகர ஆழ்வாரின் கவிதை அதிலிருந்த அழகிய உவமையால் என்னை மயக்கியது என்றால் இன்னொரு கவிதை அதன் எளிமையால் என்னை மயக்கியது. இந்த கவிதை யில் ஒரு மகான் இறைவனிடம் தனக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று கேட்கின்றார். இறைவனிடம் அவனைத்தவிர வேறெதையும் கேட்காதவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமாக எனக்கு வேண்டும் வேண்டும் என்று கேட்பன வற்றை பாருங்கள்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசாதிருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுகவேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்கவேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வில்
நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தன்முகத்துய்யமணி உண்முகச்சைவ மணி
சண்முகத்தெய்வ மணியே


ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத
இயல்பும் என்னிடம் ஒருவர் ஈ திடு
என்ற போதவர்க்கிலை என்று சொல்லாமல்
இடுகின்ற திறமும் இறையாம்
நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும்
உன் நினைவிடா நெறியும் அயலார்
நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று
நெகிழாத திடமும் உலகில்
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்தமைத்
தீங்கு சொல்லாத தெளிவும்
திறம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின்
திருவடிக்கு ஆளாக்குவாய்
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்த வேளே
தன்முகத்துய்ய மணி உண்முகச்சைவ மணி
சண்முகத்தெய்வமணியே


இரண்டு பாடல்களும் இராமலிங்க அடிகளின் திரு அருட்பாவிலிருந்து.
 
எளிமைக்காகவும் கருத்துச் செறிவுக்காகவும் நான் மிக விரும்பிப்படித்து மறக்கவே முடியாத இந்த கவிதையை படியுங்கள்:

தேம்படு பனையின் திரள் பழத்தொரு விதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கிருக்க நிழலாகாதே,
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒருவிதை
தெண்ணீர் கயத்துசிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணி தேர் புரவி ஆட்பெரும்படையோடு
மன்னருக்கு இருக்க நிழலாகும்மே.

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிரியோறேல்லாம் சிறியரும் அல்லர்.

இந்தக்கவிதைக்கு விளக்கமே தேவை இல்லை. இது அதிவீரராம பாண்டியனின்
வெற்றி வேற்கை யில் வரும் கவிதை.
 
Last edited:
........... இறைவனிடம் அவனைத்தவிர வேறெதையும் கேட்காதவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமாக எனக்கு வேண்டும் வேண்டும் என்று கேட்பன வற்றை பாருங்கள்.....................
இதோ ஒரு புதிய வேண்டுதல்!

Saththam Illatha - YouTube
 
Dear VR,



Are you sure? What about this line from one of my favorite kavithai lines:

"paarthen siriththen pakkam varaththudiththen Unnaithen ena naan ninaiththen
antha malaiththen ithuvena malaiththen"

It is straight and yet beautiful for the meaning, pun and chantham in it. There is no need to juxtapose any word to derive the meaning.
that is the beautiful song from Veera abimanyu (AVM Rajan and Kanjana )
 
Sri. Raju, Greetings.

Reference to post #10, please. Google transliteration gave you the word " தேம்படு பணியின்" as the default choice while the first alternative choice was " தேம்படு பனையின்". Thanks for the poem. I enjoyed the literature and the deep meaning.

Cheers!
 

'தேம்படு பனை' என்னும் சொற்கள் நினைவில் கொண்டுவருகின்றன, நான் சிறுமியாக இருந்தபோது படித்த

'நாரை விடு தூது' என்னும் பாடலை. நல்ல உரைநடை போலவே விளங்கி,
என் மனதில் பசுமரத்தாணி போலப்

பதிந்த அந்தப் பாடல் இதோ:



'நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் நின்
மனைவியும் தென் திசைக் குமரியாடி

வடதிசைக்கு ஏகுவீராயின்

எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி

பாடு பார்த்திருக்கும் எம் மனைவி கண்டு

எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்தி

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே!'
 
Last edited:
Dear RR,

'நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரியாடி

வடதிசைக்கு ஏகுவீராயின்

எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி

பாடு பார்த்திருக்கும் எம் மனைவி கண்டு

எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்தி

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே!'


I was about to post that kavithai also because it is one which I like very much for the single line "pavalakkoorvaai chengaal naaraai". I come from southern rural background and I know what a "pazhampadu panaiyin kizhangu" looks like when it is split. this kavithai is a beautiful work. the line "Aadai inri vaadaiyil melinthu kaiyathu kondu meyyathu poththi kaalathu kondu melathu thazheeyi" again brings vividly before our eyes the scene of the poor poet's condition. Very often I ruminate over this poem because my High School Tamil Teacher Mr. Appu Satakopan introduced my class mates to this kavithai during a chirappu thamizh period. The kavithai was not part of the syllabus but he wanted us to enjoy the richness of the language. I remember every word of the lecture he gave to the class on that day after writing down the poem on the black board with a chalk.
He was a great teacher. Thanks for posting this kavithai in full here.

Cheers.
 
Last edited:
Dear Raju Sir,

I could not wait, after seeing the word
'தேம்படு பனை'! My high school education was in a rural school - Anaimalai village -

and we had a wonderful teacher for Tamil by name Amudhan, whose original name was Ramaswamy! He married his dear

'muRai poNNu' Amudhavalli and changed his name to match hers! :thumb:
 
நல குடிப்பிறந்தார் வறுமையிலும் கொடையளிப்பர் என்று கூறும் இந்த கவிதை எனக்குப்பிடித்ததொன்று:

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந் நாளும்
ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இயைந்து.

source ஔவையாரின் 'நல்வழி'.
 
நம்மில் பலரும் பாலை அடுப்பில் ஏற்றி காய்ச்சியிருப்போமே. பாலிலிருந்து நீர் வற்ற வற்ற அது பொங்கி வழிந்து அடுப்பையே அணைத்துவிடுவதை பார்த்திருக்கிறோம். பொங்கியதை வழிந்துவிடாமல் தடுக்க அதில் நாம் தண்ணீரையும் ஊற்றி பாலின் சீற்றத்தை தணித்திருப்போம். இந்த நித்தம் காணும் வினையில் ஒரு உயர்ந்த உவமையை காண முடிகிறது இந்த புலவரால். நட்பின் மேன்மையை, வள்ளுவர் கூறிய உடுக்கை இழந்தவன் கைபோல் விரைந்து ஆங்கே இடுக்கண் களையும் நட்பை, பொங்கிய பாலில் காண்கிறார் இந்த புலவர். இதிலுள்ள உவமை நயம் என்னை பெரிதும் கவர்ந்தது. கவிதை இதோ:

பாலின் நீர் தீயணுகப் பால் வெகுண்டு தீப்புகுந்து
மேலும் நீர் கண்டு அமையும் மேன்மைபோல் - நூலின்நெறி
உற்றோர் இடுக்கண் உயிர் கொடுத்தும் மாற்றுவரே
மற்றோர் புகல மதித்து.


source நீதி வெண்பா -ஆசிரியர் யாரோ.
 
நீதி வெண்பாவிலிருந்து இதோ இன்னொரு கவிதை இன்னின்னார் பிரிவால்
இன்னவை போம் என்று கூறும் இந்தக்கவிதையில் பளிச்சிடும் யதார்த்தம்
எனக்கு பிடித்தது:

மாதா மரிக்கின் மகன் நாவின் நற்சுவை போம்
தாதா வெனில் கல்வி தான் அகலும் - ஒதினுடன்
வந்தான் மரித்துவிடின் வாகுவலி போம்: மனையேல்
அந்தோ! இவை யாவும் போம்.


(தாதா -தந்தை, வாகு- தோள், ஒதினுடன் வந்தான்-துணை நிற்கும் உடன் பிறப்பு)
 
கம்ப இராமாயணத்தில், கைகேயியிடம் விடை பெறும் இராமன் உரைக்கும் சொற்கள்:

'மன்னவன் பணி அன்றாகின், நும் பணி மறுப்பெனோ? என்

பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?'


'மன்னவன் கட்டளை அல்லாது தங்கள் கட்டளை ஆயினும் நான் மறுப்பேனோ? என் தம்பி பரதன் பேறு பெற்றால்,

அது நான் பெற்றது போல அன்றோ?' - இது பொருளாகத் தோன்றினாலும், இதையே



'மன்னவன் கட்டளை அன்று; ஆனால் உங்கள் கட்டளையே! இதை மறுப்பேனோ? என் தம்பி பரதன் பெற்ற செல்வம்

நான் பெற்றது போன்ற மரவுரி தரிக்கும்
நிலை அன்றோ?' - எனவும் பொருள் கொள்ளலாமே!

என் கல்லூரி நாட்களில், புலவர் கீரன் அவர்கள் சொற்பொழிவில்
கேட்டு மனத்தைக் கவர்ந்த விளக்கம்.
:high5:
 
Last edited:

என் மனத்தில் பதிந்த கம்பரின் கைவண்ணங்கள்:


பரதன் படைகளுடன் போருக்கு வருவதாக எண்ணிய குகன்,
தன் கூட்டத்தினரிடம் உரைப்பதாக வரும் இந்த வரிகள்:


”ஆடு கொடிப்படை சாடி அறத்தவ ரேஆள
வேடு கொடுத்தது பார்எனும் இப்புகழ் மேவீரோ
நாடு கொடுத்தஎன் நாயக னுக்கிவர் நாம்ஆளும்
காடு கொடுக்கில ராகி எடுத்தது காணீரோ”


வீரத்தைச் சொற்களிலே அடக்கியவை இந்த வரிகள்.

பரதனை அருகில் கண்டதும், குகனின் சொற்கள் மென்மை ஆகின்றன!


'நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?' என்றான்.

:thumb:
 
என் பள்ளி நாட்களில் ’கலிங்கத்துப் பரணி’யின் இந்த வரிகளை மேற்கோள் காட்டியே பேச்சுப்போட்டிகளில் முதல் பரிசு வென்றிடுவான் என் நண்பன் ஒருவன்:

404
எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. 1

405
வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே. 2
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top