• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Jokes in Thamizh

Status
Not open for further replies.
I am starting a few jokes in Thamizh. Anybody can contribute. Text has to be Thamizh. No translation needed unless someone asks for it.
OK let us go.
ஒரு கணவன் டாக்டரிடம் தன் மனைவிக்கு சரியாகக் காது கேட்பதில்லை என்று சொல்கிறான். அதற்கு டாக்டர், "உங்கள் மனைவியிடம் முதலில் தூரத்திலிருந்து - பிறகு சிறிது சிறிதாக அருகாமையில் சென்று பேசிப் பாருங்கள்" என்கிறார். கணவனும் வீட்டிற்குப்போய் சற்று தூரத்திலிருந்து "இன்று டிபன் என்ன?" என்று கேட்க, பதிலில்லை. சற்று அருகாமையில் சென்று மறுபடியும் கேட்டான். அதற்கும் பதிலில்லை. இன்னும் அருகாமையில் மீண்டும் சென்று கேட்டான். அவள், "உங்களுக்கென்ன, காது செவிடா? நானும் இதுவரை மூன்று தரம் 'பொங்கல் பொங்கல்' என்று சொல்லிவிட்டேன்" என்றாள் கோபமாக
 
Another one. This is doozy.
ஜபார் என்பவர் சொன்னதாக ஒரு நகைச்சுவை:

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் அரசு ஊழியர் ஒரு வீட்டுக்குப் போனார். அங்கே வீட்டம்மா மட்டும் இருந்தார்.

உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன என்று கேட்டார்.

"என்னங்க, இது கூடப் புரியாம கேக்கறீங்களே? புருஷன் பெயரைப் பெண்டாட்டி சொல்லலாமா?" என்று அந்த அம்மா சீறினார். பிறகு ஆறு விரலைக் காட்டினார்.

"ஆறு"

"ஆமாம்" என்று விட்டு "அதோடு கழுத்துக்கு மேலே இருக்கறத்தைச் சேர்த்துக்குங்க" என்றார்.

"ஓஹோ! முகம். ஆறுமுகமா உங்க புருஷன் பேரு?"

"அப்படித்தாங்க.. அந்த நாயை எல்லாரும் கூப்பிடறது!"
 
டாக்டர், எங்கவீட்டு நாயால சரியா குரைக்க முடியலை...
ஃபீஸ் நூறு ரூபாய் ஆகும்.
கொஞ்சம் குறைங்க டாக்டர்...
நான் குறைச்சா அப்பறம் உங்க நாயால சரியா குரைக்க முடியாதே?
*****

கான்ஸ்டபிளா இருக்கிற எங்க சித்தப்பா இதுவரை நாற்பது திருடர்களைப் பிடிச்சிருக்காரு.
அப்படியா! உங்க சித்தப்பா பேரு?
அலிபாபா.
*****

உங்க பேரு என்ன?
முனுசாமி.
குழந்தைங்க எத்தனை?
மூணு சாமி.
*****

நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
யாரோ, "எங்கே தமிழ் ஆசிரியர் யாரு"ன்னு இவரக்கேட்டதுக்கு ’அடியேன்’ அப்படீன்னு சொல்லியிருக்காரு~
*****

அந்த முனிவர் எப்போ கண்ணை மூடிட்டுத் தவம் செய்தாலும் எதிரிலே ஒரு பாம்பு நிக்கும்!
ஏன்?
அவர் முகத்துலே ’தவக்களை’ தெரியுமே... அதனால்தான்.
*****
 
>>அந்த முனிவர் எப்போ கண்ணை மூடிட்டுத் தவம் செய்தாலும் எதிரிலே ஒரு பாம்பு நிக்கும்!
ஏன்?
அவர் முகத்துலே ’தவக்களை’ தெரியுமே... அதனால்தான்.<<

That munivar's name is maNDUga munivar (maNDUgam in Sanskrit means frog)
 
குடிகாரன்ஒருவன்தனதுகாதல்மனைவியிடம்போதையில்சொன்னானாம்......

"அன்பே" உனக்குஷாஜகான்போல்தாஜ்மகால்கட்டவா?

அல்லதுவசந்தமாளிகைசிவாஜிபோல்கண்ணாடிமாளிகைகட்டவா? ...... என்றானாம்..அதற்க்குமனைவி...

"நீ" தாஜ்மகாலும்கட்டவேண்டாம்.... கண்ணாடிமாளிகையும்கட்டவேண்டாம்....

இப்போதைக்குஉன்வேட்டியைஒழுங்காகக்கட்டுஎன்றாளாம்....
 
கடி நகைச்சுவை:
அவன் அப்பா பெரிய வாழைப்பழ வியாபாரியா? அதான் பையன் அப்படியே அப்பனை உரிச்சு வெச்சிருக்கான்.

பீச்ல சுண்டல் வித்து இன்னிக்கு எம்.எல்.ஏ. ஆயிட்டார்.
ஓ, சுண்டல்காரர் சுரண்டல்காரராய்ட்டார்னு சொல்லு.

புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?
என்ன?
புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கறோம், கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கறோம்.

லோன் செக்ஷன்ல வேலை பார்க்கிறவரை மாத்திடுங சார்.
ஏன்?
ஏதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்.

தலைவர் அதிகமாக முற்போக்கை விரும்புகிறாரா, பிற்போக்கை விரும்புகிறாரா?
ரெண்டையும்விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்.

நீங்கதானே தமிழ்ச் செல்வன்? உங்க பேர்ல கணக்கு இருக்கா?
கணக்கு இல்லைங்க, தமிழ்தான் இருக்கு.

கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்னு டாக்டர் சொன்னாரு, அதான்...
நீங்க சாப்பிடறது கேரட் இல்ல, முள்ளங்கி.

உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கிறானே சார்?
சீ.. சீ... அவன் பிடிக்கிறதுக்கு ரொம்பநாள் முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

ஏம்பா திடீர்னு ரேடியோல சவுண்டை கம்மி பண்ணிட்டே?
சவுண்டை கம்மி பண்ண்லைங்க, நான்தான் முடிவெட்டும்போது தெரியாம் உங்க காதைக் கட்பண்ணிட்டேன்!

வால்போஸ்டர் பாத்தீங்களா? கோவையில் முக்கிய நபர் கைதுன்னு போட்டிருக்கான்.
ஏன், சேலத்துல முக்கினா கைது பண்ண மாட்டாங்களா?
 
(ரொம்ப இல்லை லைட்டாக "ஏ" ஜொக்)

சுமார் 70 ஆண்டுகளுக்குமுன்பு ஒரு கிராமத்தான் சென்னை வந்தானாம்.

அவனுக்கு நீண்டகாலமாக வெள்ளைக்காரன் போல பேன்ட் சட்டை போட்டுக்கொள்ளவேண்டும் என்று ஆசை.

வயல்வெளியையும் கஞ்சிப்பானையும் பார்த்து பார்த்து அவனுக்கு அலுத்துவிட்டது....

எத்தனை நாள்தான் கோவணம்கட்டிகொண்டிருப்பது? லட்சியத்தோடு ஒருவயலை விற்றுவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைனோக்கிப் புறப்பட்டான்....

சென்னை வந்ததும் ஒரு துணிக்கடைக்குபோய் " வெள்ளைக்காரன்மாதிரி பேன்ட் சட்டை தைக்க எவ்வளவு துணி எடுக்கனும்? " என்கிறான்....

அதுக்குஎல்லாம் காசு ரொம்ப செலவாகும்....என்கிறான் கடைக்காரன்

நான் வயலை விற்று கொண்டு வந்திருக்கிறேன் பணத்துக்கு பஞ்சமில்லை...இது கிராமத்தான்

நீண்டநாள் விற்காத துணி பண்டல் ஒரு 20 மீட்டர் இருப்பதால் அதை இவன் தலையில் கட்ட எண்ணிய கடைக்காரன்

அதுபோல் தைக்க 20 மீட்டர் துணி வேண்டும்..... இது கடைக்காரன்

"சரி குடுங்க" என்று பணத்தைக்கொடுத்து வாங்குகின்றான் கிராமத்தான்.. இதை ,"வெள்ளைகார துரை" போல் தயாரிக்க அடுத்தது என்ன செய்யணும்...இது கிராமத்தான்

கடைக்காரன் ஒரு டைலர் கடையை காட்டி இதுபோல் மிஷின் வைத்துஇருப்பவனிடம் கொடுத்தால் அவன் உனக்கு இதை வெள்ளைக்கார துரைபோல் தைத்துக்கொடுப்பான் என்கிறான் கடைக்காரன்.

துணி மூட்டையை தலையில் சுமந்தபடி கிராமத்தான் நேராக டைலர் கடைக்கு போகிறான்.

துணிக்கடைக்காரன் சொன்ன டைலர் கடை பூட்டியிருந்ததால் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு துணி மூட்டையை தலையில் வைத்து டைலர் கடைவாசலில் படுக்கின்றான் கிராமத்தான்.

எதிரே வேறோரு டைலர் இதை பார்த்து ஏதோ கல்யாண ஆர்டர் என்று நினைத்து காஜா பையன்மூலம் இவனை அழைத்து வருகின்றான்....

இவனது லட்சியத்தை கேள்விப்பட்ட அந்த டைலர் (அவனும் கிராமத்திலிருந்து பிழைக்க பட்டணம் வந்தவன் என்பதால் சக கிராமத்தானை ஏமாற்ற அவனுக்கு மனமில்லை) அதனால்....

ஐயா உங்களுக்கு (வெள்ளாய்க்கார துரைபோல்) பேண்ட் தைக்க 2 மீட்டர் போதும்.அதனால் இதில் 2 மீட்டரை கிழிதுக்கொண்டு மீதி " 18 மீ " திருப்பி தருகிறேன் . வீட்டில் பத்திரமாக அட்த்க்கொள்ளுங்கள். இது கிழிந்தவுடன் எடுத்துவாருங்கள்.அப்பொழுது அடுத்தது தைத்துக்கொடுக்கின்றேன்...என்கிறான்.

மகிழ்ச்சியடைந்த கிராமத்தான் கடையிலேயே டைலர் பேண்ட் தைக்கும் வரை படுத்து உறங்கினான்.

பேண்ட் தைத்தாகிவிட்டது. பேண்டை உடுத்திக்கொண்டு சினிமாவிற்க்கு செல்கின்றான் கிராமத்தான்.

கிராமத்திற்க்கு திரும்பிசென்றவுடன் பட்டணத்தில் சினிமாபார்த்த பெருமையை சொல்லவேண்டும்...அவனுக்கு

நேராக சினிமாவிற்க்கு செல்கின்றான்... இடைவேளை வந்தது.எல்லோரும் எழுந்து வெளியே போனார்கள்.....

இவன் பக்கத்திலிருந்தவனிடம் கேட்டான் "ஆட்டம் முடிந்துவிட்டதா? என்று.....

அவன் சொன்னான் " ஒண்ணுக்கு போக விட்ட இடைவெளி " என்று..

சரியென்று இவனும் போனான்..

சிப்பை திறந்துவிட்டு போனவன் பழக்கமில்லாததால் அப்படியே விட்டுவிட்டான்.

எதிரே வந்தவன் கேட்டான் ...இது என்ன என்று?

உடனே கிராமத்தான் சொன்னான் " இது 2 மீ தான் ,. மீதி 18 மீ டைலர் கடையில் இருக்கின்றது " என்று....
 
ஒரு முறை, “யார் அழகு?” என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி விட்டது. தீர்வு சொல்லும்படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ நிஜமாகவே சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார்!

ஸ்ரீதேவியாகிய லட்சுமிதான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கி விடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி கோபித்துக் கொண்டு தன் வீட்டை விட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும் விதமாக, “எங்கே... சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள்” என்றார்.

ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், "ஸ்ரீதேவி வரும்போது அழகு; மூதேவி போகும் போது அழகு!" என்று சொல்ல... இரு தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல... நாரதர்தான்!
 
One speaker quoted this in an english language and literature seminar, the chairman, while summing up, said some uncomplimentary comments on the author's use of this example in support of his theory. The women participants too tore the author (male) to pieces, as justification failed on all accounts.

ஒரு முறை, “யார் அழகு?” என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி விட்டது. தீர்வு சொல்லும்படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ நிஜமாகவே சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார்!

ஸ்ரீதேவியாகிய லட்சுமிதான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கி விடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி கோபித்துக் கொண்டு தன் வீட்டை விட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும் விதமாக, “எங்கே... சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள்” என்றார்.

ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், "ஸ்ரீதேவி வரும்போது அழகு; மூதேவி போகும் போது அழகு!" என்று சொல்ல... இரு தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல... நாரதர்தான்!
 
One speaker quoted this in an english language and literature seminar, the chairman, while summing up, said some uncomplimentary comments on the author's use of this example in support of his theory. The women participants too tore the author (male) to pieces, as justification failed on all accounts.

You don't say where this incident took place--India or the US. Even if it is in India they conduct beauty contests with all the trimmings common to the western ones. It is all done in good spirit. Why object to this innocuous piece? The women in question who tore up the male speaker must be thinking they are not beautiful themselves and that men should not admire the beauty of the female species.
 
Here is one (it may generate chuckles in some quarters and disapproval in some others)

கைடு : "இதுதான் நயாகரா அருவி. இந்த அருவி சத்தத்துல ரெண்டு சூப்பர்சானிக் ஏரோப்ளேன் போனாக் கூட அந்த சத்தம் கேட்காது.

பயணி : அப்படியா?!

கைடு : ஆமாம்! லேடிஸ்.. அட்டென்ஷன் ப்ளீஸ்.. நீங்க கொஞ்சம் பேசாம அமைதியா இருந்தா இந்த அருவி சத்தத்தை நாம கேட்கலாம்!!!
 
நீதிபதி: நீ இரண்டாம் கல்யாணம் பண்ணியதற்கான குற்றம் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப் படவில்லை.எனவே உன்னை விடுதலை செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர்:: எந்த வீட்டுக்குங்கய்யா?
 
The following is from the ezine nilAccAral.

Women and Computers---An analogy:

பெண்களை கம்ப்யூட்டர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யாரோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இணையத்தில் பறக்கவிட, அது நம் கண்ணில் மாட்டியதும் 'யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற' மொழியாக்கம் செய்துவிட்டோம்... . இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே. பெண்கள் ஆண்களை விட அனேக விஷயங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பது வேறு விஷயம்!

1)இரண்டுமே அதிகம் செலவு பிடிக்கிற சமாச்சாரங்கள், எதிர்பார்த்ததை விட.

2)கம்ப்யூட்டரும் சரி, பெண்ணும் சரி.. நீங்கள் நினைப்பது போல் நடப்பதில்லை.

3)கொஞ்சம் பழகிய பிறகு, “சரி! போ” என்று விட்டு விட முடியாது.

4)ரொம்பப் பழகிய பிறகு, ஒன்று போதாதோ என்று உங்களை சிந்திக்க வைப்பதில்தான் எத்தனை ஒற்றுமை!

5)சில கம்ப்யூட்டர்கள் சில பெண்களைப் போல நிறைய பேருக்கு சேவை செய்யும்.

6)சரியாக அணுகத் தெரிந்தால், உங்கள் விரல்களாலே அற்புதங்கள் நிகழ்த்தலாம், இரண்டிலும்.

7)ஒரு பதினைந்து நிமிடங்கள் நீங்கள் ‘கண்டு கொள்ளவில்லை’ என்றால் இருவருமே ‘OFF’ ஆகி விடுவார்கள்.

8)திடீரென்று தடங்கல் ஏற்பட்டால், முந்தைய நிலைக்கு மறுபடி மீள்வது ரொம்பக் கடினம்.

9)நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரிதான் எல்லாம் நடக்கப்போகிறது என்று நீங்கள் உறுதியாக நம்பும்போது இருவருமே ‘ரூட்’ மாறி
விடுவார்கள்.

10)எப்பவுமே எதிர்பாராத முடிவுகளைத் தருவார்கள் என்று மட்டும் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

11)அடுத்தவன் கம்ப்யூட்டரைப் பார்க்கும் போது ‘அடடா! நமக்கு அது போல இல்லையே!’ என்று தோன்றும். அடுத்தவன் மனைவியைப் பார்க்கும் போதும் டிட்டோ.

12)எவ்வளவுதான் மேம்படுத்தினாலும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மீண்டும் பழைய [SUP]நிலைக்கே[/SUP] [SUP]போய்விடுவார்கள்[/SUP]
 
This is a spoof regarding cheap/no-frill airlines in India.


சீட்டுக் கிழித்தபின் சிக்கனமாய் இந்தியில்
கூட்டம் தலைஎண்ணிக் குர்நாம்சிங்- ஓட்டச்
சமொசாவும் கெட்டிலில் சாயுமாய் நாயர்
விமானம் பறக்குது பார்.
 
A little diversion and a look at some veNbA with a double meaning.

செல் பேசிக்கும் (cell phone) குழந்தைக்கும் சிலே
டை(double entendre)
மெல்லச் சிணுங்கும் மெதுவாய் விரல்பதியும்
தொல்லை சில நேரம் தந்திடும் - பல்மறைவாம்
மார்பாடும் பேச்சு மனம்பதியும் கைப்பேசி
சீரார் குழந்தையாம் செப்பு !

Author -அரிமா இளங்கண்ணன்
சிறு குறிப்பு;பல்=புளூ டூத்; பல் வளராத குழந்தை;மார்பாடும்=கழுத்தில் தொங்கவிடுதல்;கொஞ்சுபவர்கள் மார்பில் குழந்தை சாய்ந்துகொள்ளும்; மனம்பதியும்= நினைவுப்பகுதியில் சேமித்தல்;குழந்தையின் பேச்சு மனதில் நிற்கும்;
 
It was a literature seminar in maharashtra, india. Heavy stuff with most of the speakers and participants with phds. Perhaps the reference was inappropriate for the topic presented by the author.

You don't say where this incident took place--India or the US. Even if it is in India they conduct beauty contests with all the trimmings common to the western ones. It is all done in good spirit. Why object to this innocuous piece? The women in question who tore up the male speaker must be thinking they are not beautiful themselves and that men should not admire the beauty of the female species.
 
கடி நகைச்சுவை:
"தலைவரே, இப்ப நீங்க சொன்னது நூத்துக்குநூறு உண்மை!"
"சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை... கொட்டாவிதான் விட்டேன்!"

"பாயாசம்தான் ரெடியாயிருச்சே, அப்பறம் ஏன் பாயாசம் ஒரு தரம், பாயாசம் ரெண்டு தரம், பாயாசம் மூணு தரம்னு கத்தற?"
"பாயாசம் இறக்கின உடனே ஏலம் போடச் சொன்னாங்க..."

டாக்டர்: தினமும் குளூக்கோஸ் சாப்பிடுங்க.
நோயாளி: அது கிடைக்கலைனா முட்டைக்கோஸ் சாப்பிடலாமா?

நேத்து ஏன் டாக்டர் நீங்க ஆஸ்பத்திரிக்கு வரலை?"
"ஜுரம் அதான் வரலை."
"எனக்கும்தான் ஜுரம், நான் வரலியா?"

"நான்தான் உனக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்..."
"அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க?"

"டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக்குடுங்க..."
"தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தர முடியும். தலைவலி வேணும்னா போய் டீவி பாருங்க."

"என் பூட்டை உடைத்து அஞ்சுலட்சம் கொள்ளையடிச்சிட்டாங்கடா!"
"பூட்டுக்குள்ள எப்படிடா அஞ்சுலட்சம் வெச்சிருந்தே!"

ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம்: "எங்கப்பா ரொம்ப பயந்தாங்குள்ளிடா?"
"ஏண்டா?"
"பின்ன என்னடா? ரோடைக் கிராஸ்பண்ணும்போது என் கையைப் பிடிச்சிக்கிறார்..."

கணவன்: பதினஞ்சு வருஷத்துக்கு முன் நீ எப்படி இருந்தயோ அதே மாதிரி இப்பவும் இருக்கே!"
மனைவி: இருக்காதா பின்ன? அந்தக் காலத்தில எடுத்துக்கொடுத்த அதே புடவைங்களத்தானே இப்பவும் கட்டிகிட்டிருக்கேன்!

"மச்சி, நாளக்கு சினிமாவுக்கு போறேன், வர்றியாடா?"
"முடிஞ்சா வரேன்."
"முடிஞ்சதும் ஏண்டா வரே? படம் ஆரம்பிக்கும்போதே வாடா!"
 
Last edited:
நன்றாக உள்ளது. எல்லாமே புது பிளேடு; பழசு இல்லே.
 
"டாக்டர், உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது.""சும்மா இரு, ஜுரம் வந்தா வலிக்காம கிசுகிசுவா பண்ணும்"

Real life joke; I was the patient.
 
ஒரு ஹிக்ஸ் போசான் ஒரு பாருக்குள் நுழைந்து உட்கார்ந்து ஒரு விஸ்கி ஆர்டர் செய்தது. பார்மன் (Barman) சொன்னான் ஐ டோன்ட் அன்டர்ஸ்டான்ட் யூ!

Some explanation is needed: Most of the time when men go to the bar and order drinks, after a couple of them they start telling the barman their worries, "My dog and wife do not understand me":blabla:. Higgs Boson (called a God Particle for the sake of simplicity) was recently confirmed to exist by scientists at the Large Hadron Collider in Geneva, Switzerland. That particle is supposed to confer mass to every other particle in order to explain the creation of the universe. Most people don't understand the concept. Here when the Higgs Boson actually entered the bar the barman says "I don't understand".
 
புத்திசாலிமனிதன்+ கடவுள்

பும: உங்களுக்கு கோடிவருஷம் எவ்வளவு பெரிசு?
க: ஒரு நிமிஷம்
பும: உங்களுக்கு கோடி ரூபாய் எவ்வளவு?
க: ஒரு ரூபாய்
பும: எனக்கு ஒரு ரூபாய் தரீங்களா?
க: ஒரே நிமிஷத்தில்
 
ஆசிரிய மாணவ (ஐந்து வயது) சம்வாதம்:ஆ: சரியான பதில் சொல்றவனுக்கு பத்து பவுண்ட். இதுவரை வாழ்ந்தவர்களில் பிரபலமானவர் யார்?
மா (ஐரிஷ்): செயின்ட் பாட்ரிக்
ஆ: தப்பு பாடீ
மா (ஸ்காட்): செயின்ட் அன்ட்ரு
ஆ: தப்பு ஹமீஷ்
எல்லா பசங்களுமே தப்பு பதில் கொடுத்தாங்க; கடைசியா
மா(குஜ்ஜு): ஜீசுஸ் கிரிஸ்ட்
ஆ" சரியான பதில், ஹரிஷ். நீ ஹிந்து குஜராத்தி. உன் பதில் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு'
ஹரிஷ்: கிருஷ்ணா தான் சரியான பதில்; ஆனால் இது பிசினெஸ்
 
கடித்துக் குதறுவதில் ஒரு மாமா வல்லவர். இதோ ஓர் உரையாடல்:

பெண்: மாமா! மாம்பழம் நறிக்கிப் போடவா?


மாமா: நரிக்கு ஏம்மா போடறே! எனக்கே போடேன்!
:heh:
 

முதல் Rank வாங்கிய மருமகனிடம், 'கையைக் குடுடா!' என்று சந்தோஷித்து நான் கேட்க,


'அய்யய்யோ! உங்களுக்குக் கையை குடுத்தூட்டா, எனக்கு வேண்டாமா?' என்றான்! :suspicious:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top