• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

vedas in Tamizh: translated by shrI M.R.Jambunathan

Status
Not open for further replies.

saidevo

Active member
shrI Brahmanyan gives a beautiful introduction about this author here:
http://www.tamilbrahmins.com/blogs/brahmanyan/1771-sri-m-r-jambunathan-vedic-scholar.html

Other links include:
The Hindu : Arts / History & Culture : Man with a mission
News Today - An English evening daily published from Chennai

alaikaL veLiyITTakam (phone 044-24815474) has brought out a recent edition of the translations by shrI Jambunathan. I bought the Yajur Veda during the BAPASI book fair held in Chennai in last January, but could get around to browsing it only now. Here is the amazing introduction he has given to the publication of Yajur Veda in Tamizh.

I request shrI Vikrama and other members familiar with the Vedas to explain further the esoteric concepts given in the introduction.
 
முகவுரை

வேத நூல்கள் நான்கு. அவை ரிக்வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம், அதர்வ வேதம் எனப்படும். கிருஷ்ணம் சுக்கிலம் என யஜுர் இரண்டாகப் பிரியும். எல்லா சனங்களையும் எது ஆகர்ஷிக்கிறதோ அதற்குக் கிருஷ்ண யஜுர் வேதமெனப் பெயர். சோதியான அறிவு நிறையும் நூலுக்கு சுக்கில யஜுர் வேதம் என்னும் நாமம் வழங்கும்.

சாகைகள்

யஜுர் வேதத்துக்கு 101 சாகைகள் இருந்தன. இதுவரை பல சாகைகள் மறைந்துவிட்டன. இப்பொழுது 56 சாகைகளைப் பற்றித்தான் அறிகிறோம்.

கிருஷ்ண யஜுர் வேத சாகைகளாவன (41) :
அக்கினி வேகம், ஆத்திரேயம், ஆபஸ்தம்பீ, ஆர்ச்சாபினம், ஆருணி, ஆலம்பினம், ஆஹவரகம், உலபம், ஔகேயம், ஐகேயம், ஔப மன்னியவம், கடம், கபிஷ்டல கடம், காண்டிகீயம், காமலாயினம், காலாபம், காலேதை, சரகம், சாகலேயம், சாராணீயம், தாண்டினம், துந்துபம், தும்புரு, தைத்திரீயம், பாதண்டநீயம், பாரத்வாஜீ, பாலங்கினம், பிராச்யகடம், மானவம், மைத்திரணீயம், வாதூலம், வர்தன்தவீயம், வாராயணீயம், வாராஹம், வைகாநசம், சாட்யாயநீ, சியாமாயனம், சுவேதாவதரம், ஹாரித்திரவியம், ஹாரீரதம், இரண்ணியகேசி.

சுக்கில யஜுர் வேத சாகைகளாவன(15) :
வாஜசனேயம், காண்வம், ஜாபாலம், பௌதேயம், மாத்தியன்தினம், தாபாயனீயம், காபோலம், வைநதேயம், பாராசரம், பரமாவடிகம், ஆபடிகம், பௌண்டிரவத்சம், பைஜலாபம், கௌந்தேயம், வைதேயம்.

தைத்திரீயசாகைகளைச் சேர்ந்தவர்கள் தென்னாட்டில் அதிகம். சுக்கில யஜுர்வேத மநுசரிப்பவர்கள் வடநாட்டில் பெருகியுளார்கள். எல்லா சாகைகளுக்கும் வேத மந்திரங்கள் ஏறக்குறைய ஒரே வகையான மந்திரங்களே.

உபநிஷதங்கள்

யஜுர் வேதத்துக்கு சுமார் 49 உபநிஷதங்களுண்டு. கிருஷ்ண யஜுர் வேத உபநிஷங்கள் 32. அவை:
கடம், தைத்திரீயம், பிரமம், கைவல்லியம், சுவேதாவதரம், கருப்பம், நாராயணம், அமிருத பிந்து, அமிருதநாதம், காலாக்னி ருத்திரம், க்ஷுரிகம், ஸர்வசாரம், சுகரகசியம், தேஜோபிந்து, தியான பிந்து, பிரமவித்தை, யோகதத்துவம், தட்சிணாமூர்த்தி, ஸ்கந்தம், சாரீரிகம், யோகசிட்சை, ஏகாட்சரம், அட்சி, அவதூதம், கடருத்திரம், ருத்திர இருதயம், யோக குண்டலினி (திரம்), பஞ்சப் பிரம்மம், பிராண அக்கினி ஹோத், கலிசம்தரணம், வராகம், சரஸ்வதி இரகசியம்.

சுக்கில யஜுர் வேதத்தின் 17 உபநிஷங்களாவன:
ஜாபாலம், ஹம்ஸம், பரமஹம்ஸம், ஸுபாலம், மாந்திரீகம், நிராலம்பம், திரிசிகி பிராமணம், மண்டலப்பிராமணம், அத்வைதயதாரகம், பைங்களம், பிக்ஷு, துரியாதீதம், அத்தியாத்மம், தாராஸாரம், யாக்ஞவல்கியம், சாட்யாயனீ, முக்திகம்.

உபநிஷதங்கள் என்பன வேத மொழிகளினின்று உயரிய ரிஷிகள் கண்ட உண்மைகளாகும். இனி யஜுர் சம்பந்தமான நூல்களின் விளக்கம்.

வேத நூல்கள்

யஜுர்வேத தைத்திரீய பிராம்மணம் என்பது தைத்திரீய மந்திரங்களின் யாக விளக்கமான ஒரு நூல். இதைத் தவிர தைத்திரீய மந்திரங்களுடன் பிராமண பாகமென ஒன்று உண்டு. அதுவும் மந்திரங்களின் விளக்கங்களை சற்று புலனாக்கும். சதபத பிராம்மணம் என்னும் நூல் நான் தான் சுக்கில யஜுர் வேத பாஷ்யமெனக் கூறும். இன்னம் ஆபஸ்தம்பர், போதாயனர், பாரத்வாஜர், சத்திய சாதர், இரண்ணிய கேசினர், வைகாநசர் முதலியவர் எழுதிய சிரௌத சூத்திரங்களுமுண்டு. தைத்திரீயாரண்ணியகம் வேத மந்திரங்களினின்று உண்டாகும் ஞான பண்டாரமாகும். பிருஹதாரண்ணியகம் சுக்கில யஜுனின்று புலனாகும் புனித மொழிகள். இவ்வேத இலட்சணங்களை அறிவிக்கும் பிரதி சாகைகளுமுண்டு.

மூல ஸம்ஹிதை

யஜுர் வேத சம்பந்தமான நூலகளைப் பற்றிச் சுருக்கமாய் சொல்லிவிட்டோம். இனி கிருஷ்ண யஜுர் வேத தைத்திரீய சம்ஹிதையைப் பற்றிக் கூறுவோம். சம்ஹிதை என்றால் மந்திரக் கூட்டங்களாகும். ரிஷி தித்திரி பரம்பரையாய் வரும் கிருஷ்ண யஜுர் வேத மந்திரங்களுக்கு தைத்திரீய சம்ஹிதை எனப் பெயர். இந்நூலை 7 காண்டங்களாகப் பிரித்துள்ளார்கள். காண்டங்கள், பிரபாடகங்கள் அல்லது பிரசினங்கள் என்னும் பிரிவுகளால் பிரிக்கப்பட்டு அவை அநுவாகங்களாக வகுக்கப்படும். அநுவாகங்களில் ஒவ்வொரு ஐம்பது பதங்களுக்கு ஒரு எண் உண்டு. அநுவாகக் கடைசியில் ஒரு குறிப்பு வாக்கியமுண்டு. அதில் ஒவ்வொரு மொழியும் வரிசையாய் அநுவாகத்திலுள்ள ஒவ்வொரு 50-வது பதமாகும். இறுதி எண், அநுவாகக் கடைசியில் 50 பதங்களுக்குக் குறைவானால் அவற்றின் எண்ணிக்கையை அறிவிக்கும். ஒவ்வொரு பிரசினத்தின் முடிவில் எல்லா அநுவாகங்களின் முதல் மொழிகளுடன் அந்த அந்த அநுவாக மொத்தப் பதங்களின் எண்ணிக்கைகளுண்டு. பிறகு கடைசியாக அப்பிரசினத்தில் எத்தனை மொழிகள் உண்டு என்பதை ஒரு எண் அறிவிக்கும். காண்டத்தின் முடிவில் ஒவ்வொரு பிரசினத்தின் முதல் மொழியுடன் அத்துடன் அங்கு எத்தனை சொற்கள் உண்டு என்பதை ஒரு எண் புலனாக்கும். ஏழாவது காண்ட முடிவிலுள்ள குறிப்பாவது. இஷே - 16582. வாயவ்யம் - 19265. பிரசாபதி - 10622. யுஞ்சான - 14105. ஸாவித்ராணி - 19104. பிராசீன வம்சம் - 16992. பிரஜனனம் - 13325. ஸப்தம் - 110296. இஷே என்பது முதல் காண்டத்தின் முதல் பதமாகும். அடுத்த எண் அக்காண்டத்திலுள்ள மொத்தப் பதங்கள். பிறகு மிகுதியான ஆறு காண்டங்களின் முதற் பதங்களும் எண்ணிக்கையுமாகும். ’ஸப்தம்’ என்னும் மொழிக்கப்பால் வருவது ஏழுகாண்டங்களிலும் உள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கையாகும்.

வேத மொழிகளில் எச்சொல்லும் தவறாமல் இருப்பதற்கும், மனப்பாடஞ் செய்பவர்கள் ஞாபகமறதியை ஸ்மரணை செய்வதற்கும் ஆதியில் மகரிஷிகள் இச்சூசனைகளை வேத மந்திரங்களுடன் சேர்த்திருக்கலாம்.

மூல சுக்கிலம்

இனி சுக்கில யஜுர் வேதம். ரிஷி வாஜசனேய பரம்பரையாய் வருவது வாஜசனேய சம்ஹிதையாகும். இனி பொதுவாய் இதைச் சுக்கிலம் அல்லது சுக்கில யஜுர் வேதமென அழைப்போம். இதற்கு 40 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயங்களிலும் பல மந்திரங்களுண்டு. இந்த எல்லா மந்திரங்களின் தமிழ் வடிவத்தை இங்கு காணலாம்.
 
தமிழ் வேதம்

இனி தைத்திரீய சம்ஹிதையை கிருஷ்ண யஜுர் வேதம் என அழப்போம். கிருஷ்ண யஜுர் வேதம் பிராமணமும் மந்திரமும் கலந்துள்ளது. பிராமணம் பிரயோக பாகமாவதால் அதை வேதமெனச் சொல்வதற்கில்லை. ஆதலால் மந்திரங்களையே இங்கு மொழிபெயர்த்துள்ளோம். இது 368 அநுவாகங்களில் முடியும். ஒவ்வொரு அநுவாக முடிவில் மூன்று எண்களுண்டு. அவை மூல நூலின் குறிப்புகள். முதல் எண் காண்டம், இரண்டாம் எண் பிரசினம், மூன்றாம் எண் அநுவாகத்தைக் காட்டும். 369-வது அநுவாகத்திலிருந்து கடைசி வரை சுக்கில யஜுர் வேதமாகும். அந்த அநுவாகத்தின் கீழுள்ள எண்கள் மூல நூலின் அத்தியாயம் மந்திரங்களைக் குறிக்கும். பல தைத்திரீய மந்திரங்கள் சுக்கிலத்தில் வருவதால் அவற்றை மறுபடியும் நாம் மொழிபெயர்க்கவில்லை. அவை எங்கே என யஜுர் ஜோதி எனும் அநுபந்தத்தில் இன்னும் பல விஷயங்களுடன் காணவும்.

இத்தமிழ் வேதத்தைச் செய்வதில் ஒவ்வொரு வடமொழி பதத்துக்கும் தமிழ் உரையை எழுதி பரீட்சையில் விடை எழுதும் மாணவன் அநுவாதம்போல் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்துடன் இதைச் செய்யவில்லை. ஒரு மந்திரத்தைப் பூரணமாய்ப் படித்து அதனால் தோன்றும் உணர்வையே முதன்மையாய்க்கருதி அதைப் புலனாக்குவதில் நமது முழுக் கவனத்தையும் செலுத்தி அப்பால் கூடியவரை வடமொழி பதங்களை அனுசரித்துள்ளோம். வேத உணர்வை தமிழில் உயிராக்குங்கால் வேத பாஷ்யஞ் செய்யவோ அல்லது வேத விளக்கஞ் செய்ய வேண்டுமென்னும் வேலையில் சாய்ந்துள்ளதாகவோ நாம் ஒரு பொழுதும் நினைக்கவே இல்லை. இத்தகைய விளக்கம் அத்தியாவசியமேயாயினும் இருக்கும் சந்தர்பத்தைக் கருதி ஒருவனால் இது முடியாது என்பதை முன்னரே யோசித்து இவ்வேலையில் ஈடுபடவில்லை. வடமொழி கற்றவன் வேதமொல்ஹிகளைச் செவியுற்றவுடன் அம்மொழிகளைச் சடேரென்று எக்கருத்துக்களை எல்லாம் அடைகின்றானோ அவற்றையே தமிழ்மொழிகளில் இங்கு குவித்துள்ளோம். தமிழ் செய்யுங்கால் மூல நூலில் வரும் புருஷன், பொருள்களின் பெயர்களைத் தவிர மற்ற பதங்களுக்கெல்லாம் கூடியவரை தமிழ் மொழிகளையும் தமிழ் எழுத்துக்களையுமே பயன் செய்துள்ளோம். தமிழ் மொழி இப்போது பெரிய குழப்பத்தில் மூழ்கியுள்ளது. வடமொழி அறியும் சிலர் எழுதும் மணிப்பிரவாளம் ஒரு தமிழ். ஆரியத்தை அடியுடன் நீக்கி ஒதுங்கி நிற்க முயலும் கூட்டம் ஒன்று உண்டு. யாழ்ப்பாணம் தமிழைக் கேட்பானேன்! பர்மாவிலும் சிங்கப்பூரிலும் எல்லா பாஷைகளுடன் கலந்தோங்கும் உயிர் தமிழை வியாபாரிகள் அறிவார்கள். பிரிட்டிஷ் கயான் முதலிய நாடுகளில் விசித்திர திராவிடன் ஒருவன் தாண்டவமாடுகிறான். இவர்கள் அனைவரும் சாதாரணமாய் வழங்கும் தமிழ்மொழி, எழுத்துக்களையே இங்கு பயன் செய்துள்ளோம்.

தலைப் பெயர்கள்

மூலவேதத்தில் தலைப்பெயர்கள் இல்லை. உங்களுக்கு நன்கு விளங்க வேண்டுமென நாம் அவற்றை அளித்துள்ளோம். ஒவ்வொரு அநுவாகத்துக்கும் தலைப் பெயர்களை அளிப்பது கஷ்டம். அநுவாகங்களுக்கு பரஸ்பரம் சம்பந்தமிருப்பதாக தூல கண்களுக்குத் தோன்றாது. ஒரே அநுவாகத்தில் பல விஷயங்களுண்டு. ஏகமந்திரத்தில் அநேக பொருள்கள் புலனாகலாம். சில சமயத்தில் ஒரே சொல்லில் சகமெல்லாம் சாய்ந்திருக்கும். இவற்றுடன் ஆண், பெண், ஒன்றன், பலர், பலவின் பால்கள், ஒருமை, பன்மை, தன்மை, முன்னிலை, படர்க்கை, இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், கருத்தா கர்மா கிரியை இல்லாம் மறைந்து மலர்ந்து இணைந்து பிரியும். புராதனத்தில் பெரிய மேதாவிகள் ஒரு வேத மந்திரத்தை பல வருஷங்கள் தியானஞ் செய்து அதற்குப் பிறகும் தங்களுக்கு அது சரியாகப் புரியவில்லையென சொல்லுவார்களானால் எல்லா மந்திரங்களுக்கும் தலை பெயர்களைத் திடீர் எனக் கொடுப்பதில் எத்தனைக் கடினம் என்பதை அறியலாம். நாம் ஒவ்வொரு அநுவாகத்துக்கும் அந்தந்த அநுவாகத்தில் தோன்றும் முதன்மையான மொழியை அல்லது எந்த தேவர்களைக் குறுத்து அவ்வநுவாகம் அதிகமாய் நாடுகின்றதோ அத்தேவர்களின் தலைத் தேவரை எழுதியுளோம்.

தேவர்கள்

இந்த வேதத்தில் அக்கினி, இந்திரன், சூரியன், விஷ்ணு, சோமன், மருத்துக்கள், புவி, சலம், உஷை, வருணன், ருத்திரன், சரஸ்வதி முதலியவர்கள் முதன்மையான தேவர்கள். தேவர் என்றால் நமக்கு உதவி செய்யும் புருஷன் அல்லது நாம் பயன் செய்து கொள்ளும் எல்லா நற்பொருள்களுக்கும் பெயர். சில சமயங்களில் நமது அங்கத்திலுள்ள கண் காது மூக்கும் தேவர்கள் எனப்படும். தேவர்களின் பலவிதமான உரைகளை அங்கங்கு எழுயுளோம்.
 
யக்ஞங்கள்

இதைத் தவிர யக்ஞத்தின் பல வடிவங்களான சோம யாகம் வாஜபேயம் இராஜ சூயம் புருஷமேதம் சர்வமேதம் அசுவமேதம் சௌத்திரமணி பிரவர்க்கியம் எனப் பல அங்கங்களை அங்கங்கு எழுதியுளோம். வேத மூல மந்திரங்களில் சாதாரணமாய் அம்மொழிகளை நாம் காண்பதில்லையாயினும் சாயனரை அனுசரித்து அத்தனை நாமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் யக்ஞங்களின் உட்கருத்துக்களுக்கு உபநிஷதம் நிருக்தம் முதலியவற்றைப் பற்றியுளோம். யக்ஞமென்பது ஒரு மொழி சின்னமாகும். அது எல்லா நற்பணி நற்புருஷன் நற்பிராணி நற்பொருள் நற்செயல் முதலியவற்றைக் குறிக்கும் பொது மொழியாகும். இயல்பில் நடைபெறும் செயல்களும் யக்ஞங்கள் என அழைக்கப்படும். அந்த யக்ஞங்களின் சில உண்மைகளை இங்கு அறிவிப்போம்.

யக்ஞ உண்மைகள்

யக்ஞமென்றால் விஷ்ணுவுக்குப் பெயர். விஷ்ணு என்பது வியாபகமான பொருளின் நாமம். யக்ஞமென்றால் வாமனன் அல்லது குள்ளனுக்குப் பெயர்.

ஒருகாலத்தில் அசுரர்கள் பிரபஞ்சத்தை எல்லாம் பற்றியிருந்தார்கள். அமரர்கள் அவர்களிடஞ் சென்று எங்களுக்குச் சிறிய பாகம் நிலம் கொடுத்த போதிலும் போதுமெனச் சொன்னார்கள். இருள் என்னும் அரக்கர்கள் சரி கீழ்த்திசையில் சற்று அக்கினியை வைக்க நிலை தருகிறோம் என்றவுடன் தேவர்கள் யக்ஞனை உதய சூரியனாக அங்கு ஸ்தாபித்தார்கள். காலையில் வாமனனாய்ச் சென்ற அவன் உச்சியில் வந்து தன் பாதங்கள் என்னும் கிரணங்களால் முவ்வுலக வியாபகனானான். சதா.பிரா.1.2.5.1.

யக்ஞமென்றால் புவியிலுள்ள எல்லாச் செல்வங்களுக்கும் பெயர். அரக்கர்கள் எல்லாப் பொருள்களையும் வராஹன் என்பவனிடத்தில் வைத்திருந்தார்கள். எல்லா நற்பொருள்களும் குவியுமிடத்துக்கு வராஹமெனப் பெயர். அதை விஷ்ணு என்னும் யக்ஞன் இந்திரன் உதவியால் பற்றினான். தைத்திரீயம்.6.2.4.2.

யக்ஞமென்றால் எல்லா மேன்மைகளைச் சுமக்கும் இரதமாகும். ரிக்.3.2.8. நம்மை சலத்தில் கடத்திச் செல்லும் கப்பலுக்கு யக்ஞமென்னும் நாமமுண்டு. ரிக்.1.140.12. நிலம் உழுது விதைத்துக் காத்து பயிர் செய்து, தானியம் அறுப்பதற்கும் இன்னும் எல்லாத் தொழில்களுக்கும் யக்ஞமெனச் சொல்வதுண்டு. ரிக்.10.101.3.5. யக்ஞமென்றால் சிருட்டிக்குப் பெயர். இந்த யக்ஞத்தினின்றே பூவுலகம் இன்னும் எல்லாப் பொருள்களும் வேதமும் தோன்றும்.397.6.7. யக்ஞத்துக்கு வடிவம் கொடுத்தால் அவன் பிரஜாபதி முதலிய தேவர்களாயுளான்.217. அவன் அங்கங்கள் நட்சத்திரங்கள், பன்னிரண்டு மாதங்கள் இன்னும் அனைத்துமாகும்.216 யக்ஞமென்றால் என்ன? பசு ஆடு குதிரைகள் நிறைந்துள்ள பொருளே யக்ஞமாகும். யக்ஞம், பிரசை உணவு மிகுந்து தீர்க்கத் திரவியம் விரியும் மூல சபைகள் நிறைவதாகும்.99.17

புரோகிதர்களான பருவ காலங்கள் பட்சங்கள் என்னும் பாண்டங்களுடன் மாதங்களை ஆகுதி செய்வதால் வருஷம் என்னும் யக்ஞமாகும். சத.பிரா.11.2.7.33. சோதி அக்கினி ஆதித்யன் சமித்து. கிரணம் புகை. பகல் சுவாலை. திசை தணல். இது ஒரு யக்ஞம். பி.6.2 அகங்காரம் அத்வர்யு. சித்தம் ஹோதா. வியானன் பிரஸ்தோதா. உதானன் உத்காதன். சமானன் மைத்திரா வருணன். சரீரம் வேதி, தலை துரோண கலசம், ஓங்காரம் யூபம், மனம் இரதம், காமம் பசு, தியாகம் தட்சிணை ஆத்மா யஜமானன். பிராணாக்னிஹோத்திர உபநிடதம். மனிதர் பேசும் போது மூச்சு விடுவதில்லை. ஏனெனில் அப்பொழுது பிராணனை மொழியில் யக்ஞஞ் செய்கிறார்கள். மூச்சு விடும் பொழுது பேச முடிவதில்லை. அப்பொழுது மொழியை பிராணனில் யக்ஞஞ் செய்கிறார்கள். இவ்வழியாத அமுதமான யக்ஞம் விழிப்பிலும் தூக்கத்திலும் நடைபெறுகின்றது. கௌஷீதகம்.5.4 .மனிதர் வாழ்க்கையே ஒரு யக்ஞம் போலாகும். முதல் 24 வருஷம் காலை யக்ஞம். அடுத்த 44 வருஷங்கள் பகல் யக்ஞம். மிகுதியான 48 வருஷங்கள் மாலை யக்ஞமாகும்.4.3.16.. பிரமச்சரிய வாழ்க்கையே ஒரு யக்ஞமாகும். சா.8.5.

யாகங்கள்

யக்ஞம் என்றாலும் யாகம் என்றாலும் ஒன்றுதான். சோம யாகமென்றால் சோமனான அமிருதத்தை நாடுவதற்கான செயல்கள். நீங்கள் செல்வம் நாடினால் அதற்கு வாஜபேயம் எனப்படும். நீங்கள் ஒரு தேசத்தை அரசு புரிய விரும்பி அதற்காக முயன்றால் இராஜசூய யாகம் செய்பவர்களாவீர்கள். இயல்பிலே நடைபெறும் சிருட்டி விசித்திரங்களை அறிய விரும்புவது புருஷமேதமாகும். பொருள்களின் பரஸ்பர சம்பந்தங்கலை அறிய விரும்புவது சர்வமேதமாகும். தோல்வியானாலும் மறுபதியும் ஜயிக்க விரும்புவது சௌத்திரமணியாகும். நாம் திடகாத்திரர்களாவதற்கு செய்யும் முயற்சிகள் பிரவர்க்கிய எனப் பெயர்.
 
அசுவ மேதம்

குதிரை யாகத்துக்கு அசுவ மேதம் எனப் பெயர். துரகமொன்றை சுதந்திரமாய் அவிழ்த்துவிட்டு எங்குஞ் சுற்றச் செய்ய வேண்டும். இதைத் தடுப்பவனை நீ ஜயிக்க வேண்டும். இதன் நோக்கம் ஒருவன் பூமண்டலாதிபதியாக எச்செயலைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டுமென்பதாகும். அசுவ மேதத்தைப் பற்றி சதபதஞ் சொல்வதாவது: பரிக்கு பலியளிப்பதென்பது பகைவர்களை பயங்கரமாய் யொழிக்க வேண்டும் என்பதைக் குறிக்கும். பூஷனுக்கு அஜமளிப்பதென்பது நாம் புவியில் நிலையாயிருக்க வேண்டு மென்பதாகும். தைத்திரீய சம்ஹிதை பிராமண பாகமான 5.14.12--வது மொழிகளின்று நாம் அறிவதாவது: துரகயாகமென்றால் 15 மாதங்கள், ஐந்து பருவங்கள் முவ்வுலங்கள், பிரஜாபதி ஒன்று சேரும் செயலாகும்.

அரி யாகத்தைப் பற்றி பிருகதாரண்ணியகஞ் சொல்வதாவது: உஷையே யக்ஞ குதிரைகளின் தலையாகும். சூரியன் கண். காற்று பிராணன். அக்கினி வாய். வருஷம் ஆத்மா. சோதி பின்புரம். அகாசம் வயிறு. புவி குளம்பு. திசைகள் பக்கங்கள். நடுத்திசை விலா எலும்புகள். ருதுக்கள் அம்புகள். மாசம் பட்சம் கணுக்கள். பகல் இரவு பாதங்கள். நட்சத்திரம் எலும்புகள். மேகம் மாமிசம். பாதி சீரண உணவு மணல். நதிகள் உதிர நாடிகள். மலை ஈரற்குலை, செடி கொடி ரோமங்கள், முன்பாகம் உதய சூரியன், பின் பாகம் அஸ்த சூரியன், மின்னல் வாய் திறப்பது, தேக அதிர்ச்சி இடி முழக்கம், சலம் பொழிவது மழை, கர்ச்சனை கனைப்பாகும். பி.1.1.

இதைப்பற்றி யஜுர் வேதம் சொல்வதாவது: அரியாகம் என்பது சோதி மண்டல நிலைகளைக் குறிக்கும். 240.7. துரகத்தை அதித்தியன் யமன் எனச் சொல்வார்கள். 238.3.

புவியிலுள்ள புரவிக்கு அனல் சகோதரன், வான குதிரையுடனிருப்பவன் வாயுவாகும். சோதியசுவத்துடன் இருப்பவன் சூரியனாகும். கால குதிரைக்கு ஆதித்யன் சகோதரனாகும். 365 நீ குதிரை, நீ அசுவம், நீ துரகம், நீ துரிதன், நீ ஆணாகும், நீ திட குதிரை, நீ வன்மையுள்ளவன், நீ சூழ்பவன், நீ சகமாகும், நீ அடக்குபவன் நீ புவியினரசனாகும். 365. வசுக்கள் அனல் நிலம் வாயு வானம் ஞாயிறு சோதி, சந்திரன் நட்சத்திரங்கள். சூரியனிடமிருந்து குதிரையை குணமாக்கினார்களம். இந்தப் புரவி எது? எவன்? ஒருவேளை வேதப்பரி, அறிவின் ஆரோபமாயிருக்கலாம். 353.2.

குதிரையை இப்படி யாரோபஞ் செய்து புவியின் ஞான பண்டாரத்தை வேத யாக காண்டத்தில் சொல்லியுள்ளார்கள். இங்கு நாம் அறியும் இன்னும் பல விஷயங்களாவன: கணித சாஸ்திரமான எண்களின் மூலங்கள். 327-336-வது அநுவாகங்களைப் பார்க்கவும். அங்கங்களின் ஞான பீஜங்கள். 342.344. திசையறிவு. 321 ருது மாதம் பட்சத்தின் ஆராய்ச்சி. 231. தேவ ஞானம் திரிகால அறிவு வேதக் கல்வி, பிராண சக்தி உழவுத் தொழில், பிரசோற்பத்தி முதலியன. 337-339,354.

அறிவுடன் மனிதர்கள் வீரமுடன் வாழ வேண்டுமென்பது குதிரையாக நோக்கமாகும். 238,11. குதிரையைப் போர்க்களமாகவும் எண்ணும் சமர் சாதனங்களான வில் பேரிகை தூலப் புரவிகளின் பெருமைகளைப் பற்றி 237-வது அநுவாகத்தில் காண்கிறோம். குதிரை ஒருவேளை எங்கும் புலனாகும் பரம சக்தியைக் குறிக்கலாம்.

314-வது அநுவாகஞ் சொல்வதாவது: சோதி உன் முதுகாகும். உன் நிலையம் புவி, உனதாத்மா வானமாகும். கடல் உன் மூல நிலையம். உன் கண் சூரியன், பிராணன் காற்று, உன் செவி சந்திரன், உன் சக்திகள் பட்சங்களும் மாதங்களுமாகும். உன் அங்கங்கள் ருதுக்கள், உன் மகிமை வருஷமாகும்.

இம்மர்மமான குதிரையை 317.5. கிருஷிக்கு சுகத்துக்கு செல்வத்துக்கு செழுமைக்கு சுகத்துக்கு சோதிக்கு எல்லா சீவராசிகளுக் காகவும் பற்ற வேண்டும். ஏனெனில் இவ்வசுவம், 365. நமது பிராணன் அபானன் வியானன் தாங்கு. அவனே நமது கண் காது உயிருமாகும்.

இந்த அசுவமேத வழியாய் அகண்ட ஞானத்தை அறிவித்து வேதம் வாழ்க்கையின் இரகசியத்தையும் கோஷிக்கும்.
 
வேத கோஷம்

புவி கனவாகும். பரமன் புறத்திலுளான். பொருள் மாயையாகும், எனப் புகலுபவர்களுக்குப் புவி கனவில்லை. பரமன் இங்குமுண்டு. பொருள் வாழ்க்கைக்கு அவசியமென மறை கூறி மேலும் மொழிவதாவது: நீ மரஞ் செடி மலைகளை அடையவும். பொன் வெள்ளி இரும்பு தாமிரத்தைப் பற்றவும். தேன் நெய் பால் தயிரைப் பருகவும். நெல் கோதுமை பயறு தானியத்தைப் பயிர் செய்யவும். வீடு நிலம் தேசம் தோட்டம் உனக்கு வேண்டும். இராஜ்யம் சாம்ராஜ்யம் புகழ் பெருமை பேச்சும் பிரகாசமும் அவசியம். மனோ சக்தி ஆன்ம வலிமை பெற்று தஸ்யுவாகாமல் புதிய புதிய பொருள்களையெல்லாம் கண்டுபிடிக்கவும். (241-245) இவற்றை அடைவதற்கு சிவ சங்கற்பமென்னும் (400) சௌம்யமான பிடிவாதம் வேண்டும். பிடிவாத மன்னியில் நீ ஒரு பொருள்களையும் அடைய முடியாது. நீ பிடிவாதமுடன் முயலுங்கால் உனக்குத் தடை செய்ய சத்துருக்கள் தோன்றுவார்கள். உடனே உன்னகத்திலுள்ள ருத்திரனை நாட அஞ்சாதே. ருத்திரன் யார் தெரியுமா? கோபம் வந்தால் அவனுக்குத் தலைகால் தெரியாது. பெண் பிள்ளை தாயானாலும் அவன் கவனியான். தன் செயலைச் சாதித்துத்தான் வேறு வேலை எண்ணுவான். அப்படி நீயும் பகைவர்களை ஒழித்துத்தான் தூங்கலாம். பகைவர்களைப் பாழாக்க உனக்கு ஆயுதம் வேண்டும். அதைக் கூரியதாக்கவும். பகைவர்களிடத்தில் செலுத்தவும். அவர்களில் ஒருவனையும் உயிருடன் விட்டு வைக்காதே. (235) பகைவர் ஒழிந்தால் நீ ஜயமுடைவனாவாய். அப்பொழுது உனக்கு எது வேண்டுமோ அது கிடைக்கும் என இவ்வேதம் கோஷஞ் செய்யும்.

வேத நூல்

இப்படி கோஷஞ் செய்யும் இக்கிரந்தமான வேத நூல் இதுவரை தமிழில் வரவில்லை. ஆரியமும் திராவிடமும் பல வருடங்கள் இணைந்திருந்த போதிலும் வேதம் தென் மொழியில் வராதது ஒரு பெருங் குறையாகவே இருந்தது. இக்குறை பெருஞ் சந்தர்ப்பமாகக் கருதி பல அறிஞைகள் இதுதான் வேத ஆக்ஞை என தங்கள் மனம்போன வண்ணஞ் சொல்லி சமூகம் செழிப்பதற்கும் பல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். வேத அறிவிலிகள் வேதத்தில் சொல்வது பசு இம்சை, அது முக்குணங்கள் உடையது, அது கரும காண்டமே ஆகையால் நாம் அநுசரிக்க அருகதையில்லஈ என்பார்கள். சில மேதாவிகள் உபநிஷதங்களே வேதமெனச் சொல்லி சுருதியை மறந்து விடுகிறார்கள். வேதாந்தமே வேதமெனச் சொல்லி சில மாயாவாதிகள் சூத்திரங்களையே படித்துப் பிரசாரஞ் செய்து மறை மொழிகளை கவனிப்பதில்லை. சில சண்டிகள் வேதத்திலுள்ள ஏதோ ஒரு சொல்லைக் குரங்குபோல் பிடித்து இலக்கியமாகப் பிழிந்து தங்கள் சித்தாந்தங்களுக்கு சாதகமாய் புலனாக்குகிறார்கள். சுருங்கச் சொல்லின் இவர்களது மொழிகளை அமுத வாக்காய் கருதி வடமொழி அறியாத யோகிகளும் ரிஷிகளும் வேதத்தில் விருப்பையும் வெறுப்பையும் அடைந்துள்ளார்கள். பெரியவர்களுக்கும் படித்தவர்களுக்குமே இத்திண்டாட்டமானால் பாமரர்கள் நிலையைக் கேட்பானேன்!
 
தமிழர்களே!

இப்பொழுது வேதம் தென் மொழியில் வந்து விட்டபடியால் இக்கஷ்டம் நீங்கும். வேதவிரோதங்களை இனி நீங்களே கண்டுபிடித்துத் துரத்துவீர்கள். வனம் திரியும் இருளனே! நிலம் உழும் ஏழுமலையே! வணிகஞ் செய்யும் வைசியயே கலம் ஓட்டுங் கல்வி குவியுங் கணக்கனே! ஆண், பெண், கிழவர் குமரர்களே! நடர், சூதர், ஒற்றர், கலைஞர், வங்கர், கன்னார்களே! மாலுமி மாவலர்களே! கொல்லர், தச்சர், தட்டார்களே! பரத புத்திரர்களே! கண்டி வாசிகளே! கடல் கடந்து வசிக்குந்தமிழர்களே! இந்துதர்மத்தில் இனி என்ன சந்தேகந் தோன்றிய போதிலும் இத்தமிழ் வேதம் அதைத் தீர்த்துவிடும். இதற்கு மாறானவை எல்லாம் வேத விபரீதமென நீங்கள் அறிவீர்கள். புரிந்தாலும் புரியாவிட்டாலும் இதைக் கட்டாயமாக ஒருமுறை படியுங்கள். பன்முறை படனஞ் செய்யுங்கள். தினந்தோறும் எல்லா விசேஷ நாட்களிலும் இதைப் பாராயணஞ் செய்யுங்கள். இவற்றின் பல மொழிகளைப் படித்து சற்று ஈசனை தியானஞ் செய்து புரோகிதர் உதவி உதவியன்னியில் விவாக முதலிய எல்லா சம்ஸ்காரங்களையும் நடத்துங்கள். இதை வீட்டில் படிக்கவும். சபையில் கோஷிக்கவும். சமரில் நாடவும். கடலில் எடுத்துச் செல்லவும். ககனத்தில் பறந்து கவனமாய்ப் படிக்கவும். இவ்வேதம் மானிட கோடிகளுக்கு சூரியன் ஒளிபோல், வீசுங் காற்றுப் போல், பருகுஞ் சலம்போல் சொந்தமாகையால் விரும்புவர்க்கெல்லாம் வேத இரகசியத்தை அறிவிக்கவும். வேதப் பிரசாரஞ் செய்வது உங்களுக்கு கடமை என தித்திரி ரிஷி கூறுகிறார்.

நன்றி

இக்கடமையை உணர்ந்து இதுவரை தமிழ் காணாத இந்நூலை தென்மொழியில் பிரசுரஞ் செய்ய பொருள் உதவியளித்தவர்களும் இதுபோல் பல வடமொழி தென்மொழிகளிலுள்ள பல புத்தகங்களை அச்சியற்றி யாருக்கும் இலவசமாய்க் கொடுத்து வருபவர்களுமான தருமபுரம் ஆதீனத் திவ்யத் தலைவரான ஶ்ரீ.ல.ஶ்ரீ. ஷண்முக தேசிக ஞானசம்பந்த மகா சந்நிதானம் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாயிருப்பேன். தமிழ் மொழியுள்ளவரை இப்பெரியாரின் புவிபுகழும் புனிதவேத தானத்தை பண்டிதர் முதல் பாமரர் வரை ஒரு நாளும் மறக்கப் போவதில்லை. சர்வேசன் அவருக்கு திடகாயம் தீர்க்காயுசை அளிக்க வேண்டுமென நாம் பரமனைத் துதி செய்து தமிழர் கைகளில் இந்நூலை அளிக்கிறோம்.

இந்நூல் அச்சு ஏறி வருங்கால் அருமையான பல யோசனைகளை எனக்குக் கூறி பல விட்டுப்போன பதங்களைப் புலனாக்கி எனக்குப் பெரும் உதவியளித்த தருமபுரம் ஆதீனம் சமஸ்கிருத வித்வான் அரியூர் பிரம்மஶ்ரீ கெ.நாராயண சாஸ்திரிகள் அவர்களுக்கும் ஶ்ரீமான் அ.பொ.சிதம்பரம் தேசிகர் அவர்களுக்கும் என் அன்பார்ந்த வந்தனங்கள்.

இதைப் படிக்கும் தமிழர்கள் என் குற்றங்களை எல்லாம் நீக்கி குணங்களைக் கிரகித்து என்னை மேன்மேலும் வேதத் தொண்டில் சாய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கவேண்டுமென எல்லாம் வல்ல ஈசனைப் போற்றி தமிழர்களிடம் இந்நூலை சமர்ப்பிக்கிறோம்.

கார், பம்பாய்.21 எம்.ஆர்.ஜம்புநாதன்
11-8-38
 
யக்ஞமென்பது ஒரு மொழி சின்னமாகும். அது எல்லா நற்பணி நற்புருஷன் நற்பிராணி நற்பொருள் நற்செயல் முதலியவற்றைக் குறிக்கும் பொது மொழியாகும். இயல்பில் நடைபெறும் செயல்களும் யக்ஞங்கள் என அழைக்கப்படும்.
...............

மனிதர் பேசும் போது மூச்சு விடுவதில்லை. ஏனெனில் அப்பொழுது பிராணனை மொழியில் யக்ஞஞ் செய்கிறார்கள். மூச்சு விடும் பொழுது பேச முடிவதில்லை. அப்பொழுது மொழியை பிராணனில் யக்ஞஞ் செய்கிறார்கள். இவ்வழியாத அமுதமான யக்ஞம் விழிப்பிலும் தூக்கத்திலும் நடைபெறுகின்றது.

நமஸ்காரம் ஸ்ரீ ஸாயிதேவருக்கு.
நல்ல பணியை ஆரம்பித்துள்ளீர்கள். தொடர்ந்து செய்யுங்கள். எதிர்வினை இல்லை என்று தளராமல் தொடருங்கள்.

நான் கடந்த மூன்று வருடமாக, ஏகலைவன் போல, ரிக் வேதத்தைப் படித்து இப்போது ஒரு முறை முடித்த நிலையில் மேலே மேற்கோளாகக் காட்டப்பட்ட கருத்தை உணர்ந்தேன். ஸ்ரீ ஜம்புநாதனின் புத்தகத்தை முதலிலேயே பார்த்திருந்தால் என் வேலை எளிதாக இருந்திருக்கும்.

தங்கள் பணி தொடரட்டும்.

ஒரு வேண்டுகோள். புத்தகத்திலிருந்து அப்படியே பக்கம் பக்கமாகக் கொடுப்பதை விட சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து உங்களது விளக்கங்களுடன் கொடுத்தால் படிக்க எளிதாக இருக்கும.
Fast foods are liked more than a full sumptuous dinner, you know.
 
namaste shrI Vikrama.

My intention was to post the introduction in full, so experienced members might add value to the esoterica in it. With my sporadic efforts at getting familiar with the Vedas, I can hardly do justice if I seek to 'explain' shrI Jambunathan's translation of the YV. However, I would take your kind words as an encouraging prod in the spiritual direction and try to share my thoughts on some vedic hymns, with the hope that yourself and other members add value to them with corrections and additions.
 
I have translated some portions of the above introduction for those who can't read and understand Tamizh:

Yajur veda comes in two recensions: kRShNa-yajur veda, shukla-yajur veda. While the kRShNa-yajur is popular among the people in South India, the shukla-yajur is followed by most people in the North.

• MRJ explains that the text that attracts the common people is the kRShNa-yajur, while that which filled with the light of knowledge and appeals to the scholars is shukla-yajur.

Structure of the Yajur veda texts

• The root Veda texts are called saMhitAs--methodically arranged collections of mantras. The primary division of the text is called a kANDam--part/portion in the case of kRShNa-yajur, sAma and atharva vedas, maNDalam in the Rig veda and adhyAyam--chapter in the shukla-yajur veda.

• In kRShNa-yajur, the kANDas are further divided into prapAThakas--chapters/lectures/subdivisions, and those into anuvAkas--sections.

• In the mUla-saMhitAs--root texts, a number is given in the anuvAkas for each fifty padas--words; a note at the end of the anuvAkam denotes all the fiftieth words. The last number denotes the number of words where they are less than fifty.

• At the end of each prapAThakam, all the first words of the anuvAkas are given along with their word count. Then a number mentions the count of words in the whole prapAThakam.

• At the end of a kANDam, similarly, the first words and count of words of the prapAThakas are given.

• Thus, the note at the end of the seventh kANDam reads: iShe-16582, vAyavyam-19265, prajApati-10622, yunjchAn-14105, sAvitrANi-19104, prAchIna-vaMsham-16992, prajananam-13325, thus giving the statistics of all the seven kANDas and then shabdam-110296 as the total number of words in the kANDam.

• These sUchanas--indexes were probably added by the RShis of the yore to keep the orders in the text intact and help their students to flawlessly memorize the texts for chanting.

Devas

The primary devas of YV are agni, indra, sUrya, viShNu, soma, mAruts, bhUmi, Apas, ushas, varuNa, rudra, and sarasvatI. Deva means the puruSha--divine entity, which helps us or all the good things we make use of. Occasionally, even our eyes, ears and nose are known as devas.

yajnas and their esoteric imports

There are many kinds of yajnas--vedic sacrifices: soma-yAgam, vAjapeyam, rAjasUyam, puruShamedham, sarvamedham, ashvamedham, sautramaNi, pravargya and such others. Although these names are not found in the Vedic root texts, they are usually given, following SAyaNAchArya (a renowned translator of the Vedas).

yajna is a name for viShNu; viShNu is the name of the divine entity that is sarva-vyApakam/sarva-vyApinam--all pervading. yajna also denotes the dwarf vAmana.

• Once upon a time, the asuras were in complete hold of the prapancham--universe. Devas went and told the asuras that if they are given even a small piece of land, it would be sufficient for them. The asuras of darkness agreed and gave them a small piece of land in the east for devas to keep their agni there (for their sacrificial rites). Devas placed Yajna (a name for ViShNu) in the form of udaya-sUrya--rising sun. He who rose as the dwarf VAmana in the morning, quickly ascended to the apex of the sky and engulfed all the three worlds with his rays that were his pAda--feet (shatapatha brAhmaNa 1.2.5.1).

yajna represents all the wealth in the world, which the asuras had kept with VarAha. The place were all the good wealth are heaped is known as varAham. The Yajna named ViShNu with the help of Indra seized all the wealth from the asuras (taittirIyam 6.2.4.2).

yajna is a ratham--chariot that carries all things of eminence (RV 3.2.8). The ship that takes us through the ocean (of birth) has a name, yajna (RV 1.140.12). The agricultural activities of plowing the field, watering and sowing the seeds, raising the crops and finally harvesting them are known as yajna (RV 10.101.3). In fact all occupations are yajnas.

sRuShTi--Creation is called yajna, in which this earth with all its wealth appears along with the Vedas (KYV 397.6.7). If the yajna is given a form, he becomes PrajApati and other devas (217). His limbs are the stars, the twelve months and all other things (216). yajna comprises cows, sheep, horses and all the wealth that are consumed by the citizens (99.17).

• The year is a yajna where the seasons as purohits--officiators do-Ahuti--offer oblations in fire, the months, with fortnights as the vessels (shatapatha brAhmaNa 11.2.7.33).

jyoti--fire is agni, Aditya-sun, is samidh--fuel, kiraNa--rays are the smoke, daytime is the jvAlA--flame, disha--directions are the bhasman--embers: this is one yajnam (P.6.2).

ahaMkAram is the adhvaryu--priests performing rites, chittam--mind is the hotRu--priest who chants the Rig Veda mantras, vyAna--air diffused in body, is the prastotRu--assistant priest, udAna--air that rises up in body, is the udgAta--priest who sings the sAma veda mantras, samAna--air that digests, is the mitra and varuNa, sharIram--body, is the vedi--altar, head is the droNa-kalasham--wooden vessel for the soma, omkAram--the sacred and mystical syllable AUM, is the yUpam--post to tether the sacrificial animal, manas--mind is the ratham--chariot, kAmam--desires are the pashu--sacrificial animal, tyAgam--giving up, is the dakShiNa--honorarium paid to the priests, and Atman--Self is the yajamAna--the institutor of the sacrifice (prANAgnihotra upaniShad).

• When people are talking, they do not breathe (normally). This is when they sacrifice their prANa--vital air, in language. When people breathe normally, they do not talk, and sacrifice language in prANa. Such never-ending yajnam is performed even in sleep (kauShItaki 5.4).

• The very life of a human being is like a yajnam. The first 24 years are the yajna performed in the morning. The next 44 years are the daytime yajnam; and the remaining 48 evening yajnam (4.3.16). The brahmacharya--bachelor life is itself a yajnam (chA.8.5).

yAgas

Both yajna and yAga mean the same ritual performance. Thus, somayAgam means the efforts towards imbibing the nectar that is soma. If you seek wealth it is vAjapeyayAgam. You are doing rAjasUyayAgam when you seek to rule a country. puruShamedham is the desire to gain knowledge about the wonders of creation. sarvamedham is the knowledge of relations between things. sautramaNi is exerting to win after a setback; and pravargya are our efforts towards becoming strong in body.

Thus, even while the Vedas give a clarion call to us to lead a life of fullness and enjoy the wealths of the world, the veda mantras that make such calls are also embedded with esoteric meanings for those who look beyond the comforts of the three worlds and seek to realize the Atman in them.
 
darsha-pUrNa-mAsau yajnas: TS 1.1.1-14.

taittirIya saMhitA of the kRShNa-yajur veda in anuvAkas TS 1.1.1 to 1.1.14 gives the mantras relating to the vedic sacrifice called darsha-pUrNa-mAsau iShTi, which is performed every fortnight on the days of new moon--darsha and full moon--pUrNima.

• Details of this yajna are given under the chapter 'Description of Yajnas' in the book Principles of Yajna-vidhi by Prof.S.K.Ramachandra Rao, which can be downloaded here:
http://yajurvedaustralasia-resources.info/wp-content/uploads/2010/11/Yajna-Vidhi.pdf
Prof.SKR's memorial website address is: Professor S. K. Ramachandra Rao Memorial Website | The official website of the Prof. S. K. Ramachandra Rao Memorial Trust ®

• Although the ritualistic meaning of the anuvAka's is well known, as translated in English by authors who followed SAyaNa, there are others who have discovered the esoteric meaning of the mantras. Publications that I know of, which speak of the spiritual meaning include:

1. KriShNa Yajur Veda taittirIya-saMhitA by Prof.R.L.Kashyap (SAKSI publications)
2. shrI M.R.Jambunathan's Tamizh translation recently published by AlaikaL VeyITTakam

3. கிருஷ்ண யஜுர்வேத மந்த்ரங்கள்: ஆராய்ச்சிப் பொழிப்புரை
பாரத்வாஜ. பாலசுப்ரமண்ய சர்மா
kiruShNa yajurvEda ma~ntra~gkaL: ArAychchip pozhippurai
by bhAratvAja. bAlasubramaNya sarmA (in summary)

4. Online publication of Vedas by Arya Samaj
Aryasamajjamnagar.org-- Welcomes you all Veda, rigved, yajurved, samved, athrvaved,arya samaj,organization,arya samaj organisation organization jamnagar, Vedic Marriage Ceremony , arya pratinidhi sabha, dayanand saraswati,vaidic prachar,propkarini sa

• Whatever the spiritual implications, there is no doubt that the mantras of KYV were--and still are--used only in ritualistic performances, whatever be the shortcomings of such interpretations are pointed out.

Let us try to see if we can appreciate some instances of how the esoteric meaning of the mantras are arrived at from the literal meaning. The very first mantra beings with the words:

इषे त्वा ऊर्जे त्वा वायवः स्थ उपायवः स्थ
देवो वः सविता प्रापयतु श्रेष्ठतमाय कर्मण... ॥१.१.१ ॥

iShe tvA Urje tvA vAyavaH stha upAyavaH stha
devo vaH savitA prApayatu shreShThatamAya karmaNa... ||1.1.1 ||

01. The person who chants/on whose behalf the mantra is chanted, is the
yajamAna--patron of the sacrifice in the ritual interpretations (RI) of SAyaNa and MahIdhara;
sAdhaka--seeker in the spiritual interpretation (SI).

02. Who is the deity/entity the mantra is addressed to as indicated by the word tvA--you/yours?

• In the RI, it is the palAsha tree. The yajamAna says to the tree: "I cut thee for food, I sanctify thee for vigour". The idea of 'food' comes from the meaning 'sappy, juicy' for the word iSha, but was the palAsha tree ever used for food? Its seeds, flowers and the sap that freezes into gum are used in Ayurvedic treatment, its twigs--samidh are fed in the sacrificial fire and its leaves are used in the place of a spoon to pour ghee into the fire.

• In the SI, Prof.R.L.KAshyap (RLK) says that the deity of the mantra is the vAyu--life-energies: "You VAyu (life-energies) are (invoked) for impulsion (iShe and for abounding energy (Urje)."

• M.R.Jambunathan (MRJ) interprets the term tvA as the human mind, vAyavaH as the senses and deva-savitA as aRivu--knowledge/wisdom. Other meanings he seeks in the mantras of the anuvAka are: sorrow for Rudra's weapon, prANas for pashupati, Atman--Self for yajamAna and the senses for pashus.

• BalasubramaNya Sarma (BSS) gives the following meaning for the entire anuvAka:

"O annam--food, that resides in the jIvarAsis--life species, and the energy that abides in them, the power that nourishes for growth, may Savitru-deva consign you for your best efforts. You who are free of disease, and who develop, nourish, and provide the kin, make the divine energies flourish. May not the wicked energies and bad thoughts rule over you. May Rudra's weapons be kept away from you. May you abide firmly in the wisdom of the YajamAna and secure his different kinds of knowledge."

03. R.T.H.Griffith, in his translation of the Shukla-yajur veda has some interesting observations about the darsha-pUrNa-mAsau yajnas, quoting from the brAhmaNas (text quoted and paraphrased):

• "The new moon sacrifice, like all others, has also its equivalences in terrestrial, astronomical and adhyAtma senses." In the terrestrial sense "it symbolizes the origin of vegetation and crops on the earth."

• "In its astronomical sense, it signifies the origin of moon from the earth." For this and for the origin of vegetations, "earth acts as the fire-altar."

• "...and in its adhyAtmika sense, it signifies the birth of a child... Physiology of a woman is considered to be the somIya one and that of a man to be the Agneya one. DarshapUrNimAsa, i.e. new moon and full moon sacrifices, are related in AdhyAtmika sense with the birth of a child, as it is clearly mentioned in S.Br.(11.63.7). Apastamba-sUtra (4.18.19) explains this fact clearly as under:

'The altar of DarshapUrNimAsa sacrifice is narrow on the front side, wide on the back side and pressed in the middle part this symbolizing a lady.'"
 
Namaste Sri Saidevo,
Thank you for giving a comparative statement of the three interpretations of the first mantra of Yajurveda. If possible, you can give the meanings of all the mantras in the serial order in all the three interpretations.

I have some doubts which I request You to clear and help me arrive at the truth.

On what basis does MRJ arrive at the meaning, arivu for Savita, senses for vayu etc. Has he explained anywhere else? It seems arbitrary and designed to impose his views into the mantra. Please let me know.

Regarding RLK's interpretation, the first mantra is ok. But in subsequent verses his interpretation seems forced. That I will tell as and when you give comparative statements of other verses serially.

I hop you understand my position. I am not blaming RLK or MRJ. In fact we have to be thankful to them for inducing us to think out of the box. But we want to arrive at the best possible true meaning of the mantras.
 
namaste shrI Vikrama.

Thanks for your kind feedback. Certainly it would NOT be possible for me to give comparative meanings of ALL the mantras in TS. As for your 'doubts' my thoughts are as under:

• MRJ clearly mentions in his introduction that in his translation he has accumulated only his first impressions as a scholar in Sanskrit:

வடமொழி கற்றவன் வேதமொழிகளைச் செவியுற்றவுடன் அம்மொழிகளைச் சடேரென்று எக்கருத்துக்களை எல்லாம் அடைகின்றானோ அவற்றையே தமிழ்மொழிகளில் இங்கு குவித்துள்ளோம்.

Earlier to this he makes it clear that it was not his intention--nor did he have time for it--to do a veda-bhAShyam. He has not explained in his book anything about how he arrived at the spiritual meanings.

• I think MRJ uses the Tamizh word aRivu[/i] as the equivalent of the Sanskrit word jnAnam. Now, knowledge, whether it is worldly or spiritual, is strongly associated with vision, which in turn requires light. Quantum physics says that the all matter in the universe is possibly a play of photons. The Sun-deity, savitRu also has the names gAyatrI, sAvitrI and sarasvatI, so I think the equivalence to aRivu-jnAnam is only appropriate.

• Perhaps we might understand MRJ's purport better if I quote in English what he has translated for the entire first anuvAkam:

01. For uNavu--annam/food, for balam--strength, I seek you(1).
02. You are vAyukkaL(2). You are who come nearby.
03. May deva-savitA(3) impel you towards good actions.
04. O peaceful! Increase the bhAgam--share for the Devas.

05. May not any thief or one who does bad do-svAdhInam-of--control you who are free from disease and increase the number of prajai/i]--people, who are filled with strength and milk, and lessen the sorrows.

06. May the weapons of uruddiran--Rudra(4) be kept away from you.
07. May you(5) fill and abide in this pashupati(6).
08. You are the yajamAnan--sponsor(7), take care of your pasukkaL(8).

Footnotes:
1. karuthtu--purport--seek SavitA.

darisam is the name for amAvAsai--new moon. On amAvAsai SUriyan swallows Chandiran. In the same way, we might say that actions that are sAdhakangKal--effective towards making-aikkiyam--integrating the sakti--power or chatru--enemy within oneself are the darisa-yajnas. Thus, paurNami-yajnam are those actions that help one obtain pUraNamAna balam--complete strength.

1. manathtai--mind; 2. pulankaL--senses; 3. aRivu--jnAnam/wisdom;
4. dukkathtin--of sorrow; 5. pirANankaL--vital airs; 6. dekathtil--in the body; 7. AtmAvin--of the Self; 8. pulankaLai--senses.

• It may be noted that MRJ equates both vAyus and pashus to the senses. This may be due their caprice and animal nature. At the same time he interprets dhruvA asmin bahu as prANas and gopati as pashupati to refer to the human body, wherein the prANas should fill and abide.

While I read MRJ's Tamizh translation (which I have only begun), I too cannot avoid the feeling that his 'thinking out of the box' is not consistent. It seems that he (unlike RLK) mixes up both ritualistic and spiritualistic interpretations.
 
KYV TS 1.1.1: an analysis

With all humility of one who is only a novice--shaikSha, I venture to present my thoughts on the first anuvAkam: KYV TS 1.1.1. (I have serially numbered the points for quoting in discussions).

01. Although the RShi, devatA and Chandas--seer, deity and metre, associated with each mantra are given in the mUla-mantras themselves in Rg Veda, we do not see them in the Yajur Veda. Yet, each mantra has a seer, an entity as subject matter which is usually presented as manifestation of divinity, and a metre.

02. The first anuvAkam reads as follows (in pada-pATham--text divided into words). RLK has identified eight mantras in it (four yajus and 4 riks), which are numbered at their end in the transliteration below:

इषे त्वा ऊर्जे त्वा वायवः स्थ उपायवः स्थ
देवो वः सविता प्रापयतु श्रेष्ठतमाय कर्मण
आ प्यायध्वम् अघ्निया देवभागम्
ऊर्जस्वतीः पयस्वतीः प्रजावतीर् अनमीवा अयक्षमा
मा वः स्तेन ईशत माऽघशँसो
रुद्रस्य हेतिः परि वो वृणक्तु
ध्रुवा अस्मिन् गोपतौ स्यात बह्वीर्
यजमानस्य पशून् पाहि ॥१.१.१ ॥

iShe tvA (1) Urje tvA (2) vAyavaH stha upAyavaH stha (3)
devo vaH savitA prApayatu shreShThatamAya karmaNa (4)
A pyAyadhvam aghniyA devabhAgam
UrjasvatIH payasvatIH prajAvatIr anamIvA ayakShmA
mA vaH stena Ishata mA&ghasha~Mso (5)
rudrasya hetiH pari vo vRuNaktu (6)
dhruvA asmin gopatau syAta bahvIr (7)
yajamAnasya pashUn pAhi (8) ||1.1.1 ||


03. We understand that the meanings derived for the words and phrases in the mantra should be in accordance with their associations in the nirukta and nighaNTu texts.

• We are also aware that words in the Vedas could be yaugika--where the meaning is derived, so connotative; laukika or rUDhi--where the word is an arbitary name with no connotations, so denotative; and yoga-rUDhi--where the word is a combination of both of these features. The same word might be interpreted in these three levels of meanings.

*****

04. Who is the deity of this first anuvAkam? In one sense, the deity could well be gomAtA--Mother Cow, if we go by the following analysis:

• The term iShuH stands for the terrestrial deity in (Kashyapa maharShi's) nighaNTu ('ng' henceforth), while the term iSham means food in YAskAchArya's nirukta[/b] ('nk' henceforth). The term Urjam means strength as well as food in nk.

• Mother Cow is addressed as the source for food and strength: not in the sense that her meat can be consumed because she is aghniyA--should not be killed; but in the sense that she gives us milk which is the first and staple food across all humanity, from which humans derive their primary strength.

• Thus the first two mantras, iShe tvA (1) Urje tvA (2) could mean "You are the food, you are the strength (in us)".

*****

05. What about the attributes vAyavaH stha upAyavaH stha (3) in the third mantra? What is the connection between the Cow and the deity VAyu?

• Our PurANas say that all deities reside in the Cow, but we cannot resort to them for pramANa--proof/testimony, as they are derived from the Vedas and are later in time.

atharva veda (AV) gives us the connection:

अन्तरिक्षं धेनुस्तस्या वायुर्वत्सः ।
सा मे वायुना वत्सेनषमूर्जं कामम् दुहां ।
आयुः प्रथमं प्रजां पोषं रयिं स्वाहा ॥ ४.३९.४ ॥

antarikShaM dhenustasyA vAyurvatsaH |
sA me vAyunA vatsenaShamUrjaM kAmam duhAM |
AyuH prathamaM prajAM poShaM rayiM svAhA || 4.39.4 ||
--AV 4.9.4

4.39.4: The atmosphere/sky (AkAsha) is the Cow and air--vAyu, her calf. May she with her calf yield me food, strength, my nice resolve, noble life, offspring, plenty and wealth. This is our excellent prayer, let pure air blow, and cure our ailments.--(Tr.Devi Chand)

upAyavaH stha--you are 'approachers' indicates that cows always seek human company (unlike the other domestic animals which can live in groups without human help).

• RLK finds the word Ayu--mankind, in vAyavaH/upAyavaH for his spiritual interpretation, which also applies here.

• Thus, the third mantra could mean "You are abiding in VAyu (who is your calf) and you are the approachers (who seek and bless mankind with prosperity)."

*****

06. The connection between the Cow and SavitA is indicated in AV 4.39.5: "Heaven is the Cow--dyaurdhenustasyA, her calf is the Sun--Adityo vatsaH".

• Thus, SavitA the Sun God is invoked in mantra 4, to impel/lead the Cow towards excellent works (of nourishing her, nourishing mankind with her product and calves).

*****

07. Mantra 5 reads as follows:

A pyAyadhvam aghniyA devabhAgam
UrjasvatIH payasvatIH prajAvatIr anamIvA ayakShmA
mA vaH stena Ishata mA&ghasha~Mso (5)


• The first line is straighforward: "Yes, Unslayable--aghniyA, increase--pyAyadhvam the Deva's share in the yajna (by giving copious rich milk)."

• This mantra refers to Cow as unslayable, that is, it should not be killed. There are mantras in the Vedas which pronounce killing animals as a sin.

• The second line lauds the Cow as full of strength, full of milk, endowed with calves, in happy state and free from disease.

• The last line cautions: "Let no thief or evil worker--aghashaMsaH--take control over you."

*****

08. rudrasya hetiH pari vo vRuNaktu (6)

"Let Rudra's weapons--hetiH surround and cover/protect you--pari-vRuNa."

The caution against thieves steeling and controlling cows, and proctection of Rudra's weapons is found in the Rg veda too, in the go-sUktam (RV 6.28).

*****

09. dhruvA asmin gopatau syAta bahvIr (7)

"Abide ye--syAta, who are surely numerous--dhruvA bahvIr, with this lord of cattle--gopati."

*****

10. yajamAnasya pashUn pAhi (8) ||1.1.1 ||

"Protect--pAhi (from the root pA--protect), the cattle of the yajamAna--one who sponsers the sacrifice."

*****
 
05. What about the attributes vAyavaH stha upAyavaH stha (3) in the third mantra? What is the connection between the Cow and the deity VAyu?

• Our PurANas say that all deities reside in the Cow, but we cannot resort to them for pramANa--proof/testimony, as they are derived from the Vedas and are later in time.

atharva veda (AV) gives us the connection:

अन्तरिक्षं धेनुस्तस्या वायुर्वत्सः ।
सा मे वायुना वत्सेनषमूर्जं कामम् दुहां ।
आयुः प्रथमं प्रजां पोषं रयिं स्वाहा ॥ ४.३९.४ ॥

antarikShaM dhenustasyA vAyurvatsaH |
sA me vAyunA vatsenaShamUrjaM kAmam duhAM |
AyuH prathamaM prajAM poShaM rayiM svAhA || 4.39.4 ||
--AV 4.9.4

4.39.4: The atmosphere/sky (AkAsha) is the Cow and air--vAyu, her calf. May she with her calf yield me food, strength, my nice resolve, noble life, offspring, plenty and wealth. This is our excellent prayer, let pure air blow, and cure our ailments.--(Tr.Devi Chand)
**********
06. The connection between the Cow and SavitA is indicated in AV 4.39.5: "Heaven is the Cow--dyaurdhenustasyA, her calf is the Sun--Adityo vatsaH".

• Thus, SavitA the Sun God is invoked in mantra 4, to impel/lead the Cow towards excellent works (of nourishing her, nourishing mankind with her product and calves).

*****
Namaste. Brilliant analysis. Thank you, sir. Please continue.

Kindly permit me to intervene to get my doubts cleared.

In the Atharva mantra quoted Akasha is likened to cow and Vayu is likened to calf. Can we, on the strength of this, take Vayu to mean calf in the Yajur Veda mantra?

In the same way, can we take Savita to mean calf because of a simile in some other context?

Can Vayu be taken to mean one that wanders/ moves? (vaati iti vaayuH). Then it may mean that the cow is likened to Vayu because it wanders freely as it likes.

If we do not labour to establish a connection between cow and Savita, then the mantra, by itself, makes good sense. "Let Savita direct you to noblest deeds."
Let your milk be useful for yagnas.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top