• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழ் உப(வ) கதைகள்......!!!!!!

Status
Not open for further replies.
தமிழ் உப(வ) கதைகள்......!!!!!!

தமிழ் உப(வ) கதைகள்......!!!!!!


அன்புள்ளங்களுக்கு,

என் வணக்கங்கள்...!!!!

தமிழக கிராமங்களில், பொதுவாக ஏதாவதொரு விஷயத்தை வர்ணிப்பதற்கு அல்லது அறிவுரை கூறவோ, உபயோகப்படுத்தும் ஒரு தந்திரம் இந்த உபகதைகள். இதை உவமைக் கதைகள் என்றும் கூறுவார்கள்.... மிகவும் ரசிக்கும் வண்ணம் இருக்கும் இந்த சொற்றொடர்கள், மிகுந்த பொருள் உள்ள வாக்கியங்கள்....!!!

இக்கதைகள் எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது...!!!(என் அம்மாவுக்கே தெரியவில்லை!!??)

ஆனால் எதுகை மோனைகளுடன், நாட்டுப்புற மொழிவழக்கில் சொல்லப்படும் இதன் சுவையே தனி தான் ..!!!

எனக்குத் தெரிந்த சிலவற்றை நான் நினைவுகூர்ந்து அதன் பொருள்களுடன் பதிக்கிறேன்...!!!

உங்களுக்கு தெரிந்த அனைத்தையும் தயவு செய்து எழுதுங்கள்....!!! எனக்கு மிகவும் பிடித்த இந்த கதைகள்....நிச்சயம் உங்களையும் கவரும் என்கிற நம்பிக்கையில் நான்....!!!

தமிழனின் அடுத்த அடையாளம் ...!!!

நன்றிகளுடன்
அசோக் குமார்



பின் குறிப்பு :-

பழமொழிக்கும் உப(வ) கதைக்கும் ஒரே வித்தியாசம், பழமொழிகள் படித்த சான்றோர்களால் சொல்லப்பட்டது. பழமொழிகள் என்பது படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது...

ஆனால் உப(வ) கதைகள் கிராமங்களில் உள்ளவர்கள் தங்கள் வசதிக்காக பயன்படுத்திக் கொண்டது....!!! இது யாரையாவது திருத்தவோ / நகைச்சுவைக்காகவோ / இலைமறைக் காயாக சாடவோ அக்காலகட்டத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
 
உப(வ) கதை - 1

"உழுதுட்டு வந்தவனை , ஒட்டுத் திண்ணையில இருந்தவன் , எட்டிக்கிட்டு மிதிச்சானாம் !!!!

இதன் பொருள் :

பொதுவாக ஒட்டுத் திண்ணை என்பது வீடுகளின் முகப்பில் இருக்கும் ஒரு திட்டுப் போன்ற அமைப்பு. இதில் இரவு நேரங்களில் ஒய்வு எடுக்க, வேலை இல்லாத சமயங்களில் அரட்டை அடிக்க பயன்படுத்தப்படும் ஒரு முக்கியஸ்தலமாகும்.

அதாவது, வேலை பார்த்துவிட்டு களைத்து வருபவர்களைக் கண்டு, வேலையில்லாதவன் ஒருவன் ஏய்கிறான் (திட்டுவது) என்று அர்த்தம்....!!!

இதை கணவனை மதிக்காத மனைவியை பார்த்தும் சொல்லுவார்களாம் ... !!!


"உழுதுட்டு வந்தவனை , ஒட்டுத் திண்ணையில இருந்தவ, எட்டிக்கிட்டு மிதிச்சளாம் !!!!



 
உப(வ) கதை - 2

தச்சண்ணன் அடிக்கிறான் ; கிடாய் இழுக்குது !!!

இதன் பொருள் :


திருமணம் செய்துகொடுத்த பெண், வரதட்சணை கேட்பதற்காக பிறந்த வீடு வருகிறாள் , அச்சமயம் பிறந்தவீட்டில் தச்சு வேலை நடைபெற்று வருகிறது. பிள்ளையின் தகப்பன் அவர் வீட்டுச் சூழ்நிலையை தன் மகளிடம் சொல்லுகிறார்

" வீடு வேலை பார்க்கும் தச்சுத் தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்கவில்லை , அதனால் அவன் ஓங்கி அடிக்கிறான் !!!
உன் திருமண விருந்துக்காக வாங்கிய ஆட்டுக் கிடாய்க்கு பணம் கொடுக்கவில்லை அதனால் அதுவும் இழுக்கிறது "

மகள் : ????
 
Last edited:
உப(வ) கதை - 3

சட்டி சரக்குனா, சாடை நம்மலத்தேன் !!!

இதன் பொருள் :

திருமணம் ஆகி வரும் மருமகளிடம், வீட்டுப் பெரியவர்கள் சொல்லும் உபதேசம்.
என்னவென்றால் மாமியார், மருமகளிடம் உள்ள கோபத்தை வீட்டுப் பாத்திரப் புழக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்

பாத்திரம் சறுக்கும் சத்தம் கேட்டால் " உன் மீது உள்ள கோபத்தில்தான்" என்று புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுவார்களாம் !!!
 
The tamil upakathaigal are very interesting. I would like Mr Ashokindeed to keep
contributing these upakathaigal for the benefit of the forum members. These are
relevant to our daily lives and teach good moral values.

PC RAMABADRAN
 
மிதிச்சளாம்??? :decision:மிதிச்சாளாம் ???

சட்டி சரக்குனா, சாடை நம்மலத்தேன் !!!:decision:
சட்டி சறுக்கினா சாடை நம்மளைத்தான்!!!


கிராமத்துத் தமிழ் என்றாலும்

தவறுகள் இல்லாமல் தட்டெழுதாவிடில்

உப(வ) கதைகள் உப(த்திர)வ கதைகள் ஆகிவிடும்!:fear:
 
கிராமத்துத் தமிழ் பேச்சு வழக்கு மிகவும் வித்தியாசமான ஒன்று...!!!
இந்த உவகதைகள் அனைத்தும் பேச்சுத் தமிழிலே சொன்னால்தான் அதன் வெள்ளந்தித்தனம் குன்றாமல் இருக்கும்....!!!


எழுதும் போதே கவனித்துவிட்டுதான் எழுதினேன்....!!! இருப்பினும் உங்களது கருத்துக்கு நன்றி...!!!

இந்த உவகதைகள், உபத்திரவ கதைகள் ஆவதும் ஆகாததும் படிப்பவர்களைப் பொறுத்தது ....!!!

நன்றிகளுடன்
அசோக் குமார்



மிதிச்சளாம்??? :decision:மிதிச்சாளாம் ???

சட்டி சரக்குனா, சாடை நம்மலத்தேன் !!!:decision:
சட்டி சறுக்கினா சாடை நம்மளைத்தான்!!!


கிராமத்துத் தமிழ் என்றாலும்

தவறுகள் இல்லாமல் தட்டெழுதாவிடில்

உப(வ) கதைகள் உப(த்திர)வ கதைகள் ஆகிவிடும்!:fear:
 
கண்டிப்பாக தொடர்ந்து தேடிப் பிடித்து எழுதுகிறேன்...!!!

வாசித்தமைக்கு நன்றிகள்...!!!



The tamil upakathaigal are very interesting. I would like Mr Ashokindeed to keep
contributing these upakathaigal for the benefit of the forum members. These are
relevant to our daily lives and teach good moral values.

PC RAMABADRAN
 
"எலவெடுத்த தமிலில் மட்டும் எதுக்கு
லகர, லகர, லகர வேறுபாடு?" என்று :whoo:

அங்கலாய்த்துக் கொள்ளும் தமிழ்
ஆசிரியர் ஒருவரை அறிவேன் நான்! :doh:

அவரிடம் பயின்ற மாணவர்களின் கதி???
அது போல் ஆகிவிட வேண்டாம் என்று

நல்ல எண்ணத்தில் சொன்னேன் அவ்வளவே!
உங்கள் கிராமம், உங்கள் மொழி, உங்கள் ரசிகர்கள். :flock:

"உபத்திரவம் இப்போது நான் தான்!"
உண்மை தெளிவாகிவிட்டதனால் :tape:!
 
மன்னிக்கவும் ஏதும் தவறாய்ச் சொல்லி இருந்தால்....!!!
 
உப(வ) கதை - 4

"அறுக்கத் தெரியாத ஆம்பிளைக்கு அம்பத்திரண்டு கருக்கருவாளாம் "

இதன் பொருள் :

ஆம்பிளை - ஆண் பிள்ளை
அம்பத்திரண்டு - ஐம்பத்தி இரண்டு
கருக்கருவா - கதிர் அறுக்கும் கத்தி (அரிவாள்)

இந்த கதை பொதுவாக, யாரையாவது கேலி செய்யும் நோக்கில் சொல்லப்படும் உபகதை. கதிர் பிடித்து அறுக்கத் தெரியாதவன் கையில் 52 கதிர் அரிவாள் இருந்தால், அதன் பயன் ஒன்றுமே இல்லை ????
 
உப(வ) கதை - 5

"கொண்டவனை அறிஞ்சுதான் கூரைமேலேறிச் சண்டைக்குப் போகணும் !"

இதன் பொருள் :

திருமணம் ஆன பெண்களுக்குச் சொல்லும் உவமை இது, கணவன் நிலை அறிந்துதான் அடுத்தவர்களிடம் சண்டைக்கு போக வேண்டும்.
சிலசமயங்களில், மாமியார் மருமகள் சண்டையிலும் சொல்லுவார்களாம், " கணவன் அம்மா பிள்ளையாக இருந்தால் , மாமியாருடன் நயமாக நடந்து கொள்ள வேண்டியும் " அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் அந்த கால மருமக்களமார்கள் ...!!!

:)
 
உப(வ) கதை - 6

கூரை மேலேறி கோழி புடிக்கத் தெரியாதவன் ; வானத்துல ஏறி வைகுண்டத்துக்கு போகப்போறானாம்!"

இதன் பொருள் :

ஒருவருடைய இயலாமையை வெளிப்படுத்தும் நோக்கில் இன்றும் சொல்லப்பட்டு வரும் மிகவும் பிரபலமான கதை. கூரை மேல் ஏறி கோழியை பிடிப்பது போன்ற எளிதான காரியம் செய்யத் துப்பில்லாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் போவது - சாத்தியமாகும ????

வைகுண்டம் வானத்திலா இருக்கு ????

:)
 
I know only paza mozhigal. Now only I learn from you about ubakadhaigal and it is very interesting and inba then vandhu payudhu kaadhiniley. "Vaaicha kizhavium paaduval" whether it is pazhamozhi or ubakadhai?
 
"Kepayil kooz vadiyudhunu sonna ketkiravanukku puddhi engey pochu" whether it is pazha mozhi? It is unfortunate that we have not read ubakadhaigal in schools.
 
தோழரே பார்த்து உங்கள் காதில் " எறும்பு " போய்டாம ???

:)

சுமார் ஆயிரக் கணக்கில் சொல்லியிருக்கிறார்கள்...!!! எழுத்து வடிவில் இல்லை என்பதால் அழிந்து கொண்டிருக்கிறது....!!!

தேடிக் கொண்டிருக்கிறேன்....!!


I know only paza mozhigal. Now only I learn from you about ubakadhaigal and it is very interesting and inba then vandhu payudhu kaadhiniley. "Vaaicha kizhavium paaduval" whether it is pazhamozhi or ubakadhai?
 
உப(வ) கதை - 7

" கேப்பையில நெய் வடியுதுனா, கேக்கிற உன் புத்தி எங்கே போச்சு !!! "

இதன் பொருள் :
"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு "
என்பது திருவள்ளுவர் சொன்னது, கேப்பையில் நெய் - உபகதையாய் கூறியது...
 
அதை எழுதிக் கொண்டிருந்தேன் ... நீங்கள் சொல்லிவிட்டீர்கள் ...!!!


"Kepayil kooz vadiyudhunu sonna ketkiravanukku puddhi engey pochu" whether it is pazha mozhi? It is unfortunate that we have not read ubakadhaigal in schools.
 
உப(வ) கதை - 5 "கொண்டவனை அறிஞ்சுதான் கூரைமேலேறிச் சண்டைக்குப் போகணும் !"
அடடா! கொண்டவன் மேலே எத்தனை நம்பிக்கை, அந்தக் காலத்திலேயே! :pound:
 
1. உப(வ) கதை - 6கூரை மேலேறி கோழி புடிக்கத் தெரியாதவன் ; வானத்துல ஏறி வைகுண்டத்துக்கு போகப்போறானாம்! 2. வைகுண்டம் வானத்திலா இருக்கு ???? :)
1. 'கூரை மேலேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்!'

என்று கேலி பேசுவதை நானும் கேட்டுள்ளேன்!

2. வைகுண்டம், வானம் ஏறிச் சென்றால் வரும் என்று ஒரு நம்பிக்கை! :high5:
 
உப(வ) கதை - 8

" சம்மந்தி வாராக, சம்மந்தி வாராக சம்பா நெல்லுக்குள்ளே !!
அவ குதிக்கிற குதியப் பாரு நெருஞ்சி முள்ளுக்குள்ளே !!! "



இதன் பொருள் :

விளக்கம் வரிகளிலேயே இருக்கிறது, இருப்பினும், கடந்த நூற்றாண்டுகளில் பெண் கொடுத்த மற்றும் எடுத்த இடத்தில உள்ளவர்கள் (சம்பந்தி) மீது அபார மரியாதை வைத்திருந்திருக்கிறார்கள். உதாரணத்துக்குதான் இந்த உவகதையும் கூட. சம்பா நெல் விளைந்த பொது, கோழி குருவி கூட அண்ட விடமாட்டார்கள், ஆனால் சம்பந்தி என்றதும் மகிழ்ச்சியில் கடிய மறுத்து, நெருஞ்சி முள் என்றும் பாராமல் கூட அதில் மிதித்து ஓடி வந்து அவர்களுக்கான தக்க உபசரிப்பை கவனிப்பார்களாம்.


இன்றைக்கு இந்த நிலை இருக்கிறதா ???
.
.
.
.
.



கேள்விக்குறிதான் .....!!!

பின்குறிப்பு:

நெருஞ்சி முள் என்பது சிறு சுண்டைக்காய் அளவில் இருக்கும், அதன் மேற்பரப்பில் சுமார் ஆறிலிருந்து எட்டு முட்கள் வரை கூர்மையாக இருக்கும் , கோடி போல் படர்ந்திருக்கும் இந்த முட்கள் கால்களில் பாய்ந்தால் ரண வேதனைதான் !!!
 
உப(வ) கதை - 9

"கறிக் கடையில அடிச்சுக்கிட்டு கள்ளுக் கடையில கூடுற பயமக்க "


இதன் பொருள் :

நிதம் சண்டை போட்டுக்கொள்ளும் கணவன் மனைவியைப் பார்த்துச் சொல்லும் உவகதை இது. காரணம், கறி வாங்கிக் கொண்டு போகிற வழியிலேயே கள்ளுக்கடைக்கும் தரிசனம் செய்யும் நேரம் மிகக் குறைவு. ஆக, சண்டை போட்ட சிறு நேரத்திலே ராசி ஆகிவிடும் நாடகத்தை இவ்வாறு உவகதையாக்கி சொல்லியிருக்கிறார்கள்...!!!

குறிப்பு :
பயமக்க - ???
 
icon3.png

பயமக்க = பயலுடைய பிள்ளைகள் (மக்கள்)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top