• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

Status
Not open for further replies.
தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

thygaraja.jpg


(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்- மஹான் தியாகராஜரின் பாடல்களிலிருந்து)

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்று எங்கள் சுப்ரமணிய பாரதி சொன்னது உங்கள் கீர்த்தனைகளைக் கேட்டுத்தானோ! 13 வயதில் நீவீர் பாடிய முதல் பாட்டு என்ன?

நமோ நமோ ராகவாய

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரே, 96 கோடி தடவை ராம நாமம் ஜபித்தீர், எழுதினீர். “ஓ ராம, நீ நாமமு ஏமி ருசிரா ,ஸ்ரீ ராம, நீ நாமமு எந்த ருசிரா”
என்று பத்ராசலம் ராமதாசர் பாடினார். நீங்கள் ராமனை எப்படிப் பாடினீர்கள்?

மேலு மேலு ராம நாம சுகமு ஈதரலோ
நிண்டு தாஹமு கொன்ன மனுஜுலகு நீருத்ராஹின சுகம் புகண்டே
சண்ட தாரித்ர மனுஜுலகு தன பாந்தமு அப்பின--------

( பொருள்: ராம, இந்தப் பூமியில் உன் நாமமே சுகம் தரும். தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு தண்ணீர் கிடைத்ததைவிட, ஏழைக்குப் பணம் கிடைத்ததைவிட, வெப்பம் தாங்காதவனுக்கு குளிர்ந்த குளம் கிடைத்ததைவிட, பயத்தால் நடுங்குபவனுக்கு துணிவு கிடைத்ததைவிட, தீராப் பசியுடையவனுக்கு பாயசத்துடன் அறுசுவை விருந்து கிடைத்ததைவிட----------- ராமா, உன் நாமமே சுகம் தரும்)
அருமையான பாட்டு. ஆழமான பொருட்சுவை. உங்களைத் திருடர்கள் தாக்கி வழிமறித்த போது ராம லெட்சுமணனே வந்து காப்பாற்றினார்கள். என்ன பாட்டு பாடியவுடன் அவர்கள் வந்தார்கள்?

முந்து வெனுக இரு பக்கல தோடை முரகர ஹர ராரா (தர்பார் ராகத்தில்)
(பொருள்: முர, கரகளை வதம் செய்தோனே, எனக்கு இருபக்கத்திலும் துணையாக வாரும் ஐயா----)

ஒரு முறை ஒரு கிழ தம்பதியர் வந்து உம் கையில் காசையும் கொடுத்துவிட்டு ராமனும் சீதையுமாய் மறைந்தார்களே.என்ன பாடினீர்?

பவனுத நா ஹ்ருதயமுன (மோகன ராகத்தில்)

திருவாரூரில் அவதரித்த த்யாகப்ரம்மமே, உமது தந்தை ராமப்ரம்மத்தின் ராமாயண கதாகாலச்சேபத்தை கேட்டுத்தான் ராம பக்தி ஏற்பட்டிருக்க வேண்டும்.உமது குரு ராமக்ருஷ்ணானந்தா நாரத மந்திரம் உபதேசித்தார். ராமன் மட்டுமின்றி சிவன் முதலியோர் மீதும் கிருதிகள் பாடினீரா?

சிவ சிவ சிவ யனராதா, பவ பய பாதலனண சுகோராதா (பந்துவராளி ராகம்) பொருள்: சிவ சிவ சிவ என்று சொல்லக் கூடாதா? உங்கள் பிறவி என்னும் துயரைப் போகக்கூடதா?)


உமது சங்கீத குரு வேங்கடரமணய்யா உமது கிருதிகளை வியந்து அவருடைய பதக்கங்களையே எடுத்து உம் மீது சூட்ட அதை பெருந்தன்மையுடன் அவரது மகள் கல்யாணத்தில் கொடுத்தீர்கள்.
சரபோஜி மன்னன் அழைத்தபோது போக மறுத்து “பணம் சுகம் தருமா, ராமா உன் முன்னிலையில் இருப்பது சுகமா” என்று பாடினீரே, அந்தப் பாட்டைக் கொஞ்சம்.........

நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவ சுகமா (கல்யாணி ராகம்)

இதனால் உங்கள் தமையனார் கோபத்தில் நீர் பூஜித்த விக்ரகங்களை ஆற்றில் போட்டார். அதையும் கண்டுபிடித்தீர். 2000க்கும் அதிகமான கிருதிகளை எழுதினீர், 200க்கும் அதிகமான ராகங்களைப் பயன் படுத்தினீர்கள். எங்களுக்குக் கிடைத்ததோ 700 கிருதிகள்தான்.உங்கள் தமையன் செய்த அநியாயங்களை ராமனிடம் முறையிட்டீராமே!

அநியாயமு சேயகுரா ராம நன்னன்யுனிகா........
(ராமா, எனக்கு அநீதி இழைக்காதே, என்னை வேற்று மனிதனாகப் பார்க்காதே...........என் அண்ணன் தரும் தொல்லைகள் தாங்கவில்லை.)

உங்களுக்குக் கோபம் அதிகமாமே. ஒருமுறை உங்கள் மனைவி இதைச் சுட்டிக் காட்டியவுடன் கோபத்தின் தீமையை உணர்ந்து ஒரு பாடல்.......

சாந்தமுலேக சவுக்கியமுலேது -----(சாந்த குணம் இல்லாவிடில் சௌக்கியமும் இல்லை)

நாதத்தின் தோற்றம், சப்தஸ்நரங்களின் பிறப்பு, ராகங்களின் குணம் பற்றியே 15 கிருதிகள் எழுதினீர். அவைகளில் சில......

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே
நாபி, ஹ்ருத், கண்ட, ரசன நாச ஆதுலயந்து
சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

(பொருள்: ஏழு ஸ்வரங்கள் எனப்படும் சுந்தரர்களை வழிபடுவாய். கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றில் திகழும் சுந்தரர்களை வழிபடுவாய். ருக் சாம முதலிய வேதங்களிலும் காயத்ரி மந்திரத்திலும்,வானோர், அந்தணர் உள்ளங்களிலும், தியாகராஜனின் கீர்த்தனைகளிலும் நடமாடும் சப்தஸ்வரங்களை வழிபடு).

வெறும் வாய்ப்பாட்டு மட்டும் இறைவனிடம் அழைத்துச் செல்லுமா?

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே
ப்ருங்கி, நடேச, சமீரஜ, கடஜ, மதங்க நாரத ஆதுலு உபாசிஞ்சே
சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

(பொருள்: பக்தி இல்லாமல் பாடும் இசை, சன்மார்க்கத்துக்கு இட்டுச் செல்லாது. ப்ருங்கி முனிவர், நடேசன், வாயு மைந்தன், அகத்தியன், மதங்கர், நாரதர் முதலியோரால் உபாசிக்கப்பட்ட இசை ஞானம் (அவர்களைப் போல பக்தியுடன் பயிலப்பட வேண்டும்) பக்தி இலாவிடில் நல் வழிக்கு கொண்டுசெல்லாது.)

18 வயதில் பார்வதியையும் அவர் 5 ஆண்டுகளில் இறக்கவே அவர் தங்கை கமலாம்பாவையும் கல்யாணம் செய்தீர். ஒரு மகளை ஈன்றெடுத்தீர். நீங்கள் மூன்று நாடகங்கள் எழுதினீர்கள், அவை யாவை?

பிரஹலாத பக்தி விஜயம், நவ்க சரித்திரம், சீதாராம விஜயம்

புத்தூரில் கோவில் கிணற்றில் ஒருநல்ல மனிதர் தவறி விழுந்து இறந்தபோது என்ன பாட்டு பாடி அவரை உயிர்ப்பித்தீர்கள்?

நா ஜீவாதார நாநோமு பலமா
ராஜீவ லோசன ராஜராஜ சிரோமணி
நாஜீபு ப்ரகாசமா, நா நாசிகா பரிமளா
நா ஜப வர்ண ரூபமா, நாது பூஜாஸீமமா (பிலஹரி ராகம்)
(பொருள்: என் ஜீவனுக்கு ஆதாரமே, என் நோன்புகளின் பலனே, தாமரைக் கண்ணனே, ராஜ ராஜனே, என் கண்களின் ஒளியும் நீயே, மூக்கில் நறுமணமும் நீயே, என் ஜபங்களின் வடிவும் நீயே, என் பூஜை மலரும் நீயே)

திருவையாயாற்றில் சமாதி அடையும் முதல் நாளன்று பிரம்மாநந்தாவிடம் சந்யாசம் பெற்றீர். இறுதி நாள் நெருங்கிவிட்டதை அதற்கு சில நாட்களுக்கு முன் கனவில் கண்டு பாடிவிட்டீரே, அது என்ன பாட்டு?

கிரிபை நெல (சகானா ராகம்)

திருவையாற்றிலுள்ள உங்கள் சமாதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆராதனையில் பாடப்படும் (ஐந்து) பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் எவை?

நாட்டை ராகத்தில்- ஜகதாநந்த காரக
ஆரபி ராகத்தில் – சாதிஞ்செனே, ஓ மனசா
கௌளை ராகத்தில் – துடு குகல நன்னே தொர
வராளி ராகத்தில் - கன கன ருசிரா
ஸ்ரீ ராகத்தில் –எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கு வந்தனமுலு


கர்நாடக சங்கீத பிதாமஹர் புரந்தர தாசர் தனது பாடல்களில் புரந்தர விட்டல என்றும் சியாமா சாஸ்திரிகள் சியாம கிருஷ்ண என்றும் முத்து சுவாமி தீட்சிதர் குரு குஹ என்றும் முத்திரை வைத்து பாட்டு எட்டுக் கட்டினர். உங்கள் முத்திரை என்னவோ?

பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு
நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்
ப்ர்ஹ்லாத நரதாதி பத்லு பொகடி ஸண்டு
ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன

(தியாகராஜரின் சுந்தரத் தெலுங்கு வாழ்க, எங்கும் மங்களம் பொங்குக)
 
Last edited:
நன்றி. தவற்றைத் திருத்திவிடுகிறேன்.ராகவாய என்று தாங்கள் குறிப்பிட்டது சரியே.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top