• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அர்ச்சனைப் பாக்கள் - அனாமிகா

Status
Not open for further replies.

anamika

Active member
அர்ச்சனைப் பாக்கள் - அனாமிகா

காமாக்ஷி
*********

ராகம் : ஹம்ஸாநந்தி


கருணைக் கடலே கனிவின் வடிவே
கண்ணன் சோதரியே காமாக்ஷியே


காஞ்சிநகர் தன்னில் நீ உறைந்தாய்
காமனை வென்று கரும்புவில் கொண்டாய்
பிறை நிலவதனை சூடி மகிழ்ந்தாய்
புன்னகை மின்ன திருக்காக்ஷி தந்தாய்!

ஜகத்குரு வணங்கிய திருக்ஷேத்திரம் - இந்த
ஜகமெலாம் புகழும் ஒருக்ஷேத்திரம்!
காஞ்சி மாமுனி சந்திரசேகரர்
காமதேனுவாய் அருள் க்ஷேத்திரம்!!
 
காமாக்ஷி
*********

ராகம் : ஹம்ஸாநந்தி


கருணைக் கடலே கனிவின் வடிவே
கண்ணன் சோதரியே காமாக்ஷியே


காஞ்சிநகர் தன்னில் நீ உறைந்தாய்
காமனை வென்று கரும்புவில் கொண்டாய்
பிறை நிலவதனை சூடி மகிழ்ந்தாய்
புன்னகை மின்ன திருக்காக்ஷி தந்தாய்!

ஜகத்குரு வணங்கிய திருக்ஷேத்திரம் - இந்த
ஜகமெலாம் புகழும் ஒருக்ஷேத்திரம்!
காஞ்சி மாமுனி சந்திரசேகரர்
காமதேனுவாய் அருள் க்ஷேத்திரம்!!
Very Good... Anandi
 
படித்துப் பாராட்டிய ராஜி மேடம், ஆனந்தி மேடம் இருவருக்கும் என் அன்பு நன்றி!!

விசாலாக்ஷி:

விழியாலே ஒரு பார்வை போதுமே
வினையெல்லாம் எனைவிட்டு ஓடுமே - விசாலாக்ஷி உன்

அங்குச பாசம் ஏந்தி நின்றாய்
அன்னபூரணியாய் அமுதளித்தாய்
அபயம் நீயென்று தேடிவந்தேன்
அம்மா உன்னை சரணடைந்தேன்

இமயத்தில் இருந்து சிரிக்கின்றாய்
குமரியில் காவல் காக்கின்றாய் - என்
இதயத்தில் இருந்திட வாராயோ?
நாளும் நல்லருள் தாராயோ?
 
.............
விசாலாக்ஷி:

விழியாலே ஒரு பார்வை போதுமே ...............
Dear Hema,

Nice lyrics. You can suggest the ragam and thalam too for each song.

Ragam 'sAmA' came in my mind... may be the influence of 'annapoornE VisAlAkshi' - krithi by Dheekshidhar! :music:

Best wishes,
Raji Ram
 
Raji Ma'am,

Thanks for the nice suggestion; I wrote the lyrics and it was my Mom who decided on the ragas which may suit that lyric. For some songs, I have a raga and for some I don't. It will be a pleasure if you can pls post the Raga/thala suitable for the song. (My knowledge ends with listening to nice carnatic songs..)

Thanks
Anamika

சின்னக் கண்ணன்:

சின்னக் கண்ணன் ஊதும் குழலின் கானம் கேட்குது - அது
செவியில் விழுந்து இதயம் முழுக்க இனிமை சேர்க்குது
"இதோ கண்ணன், இதோ கண்ணன்" இடையரும் தேட - என்
இமைகள் மூடி நானும் அவனை மனதினில் தேட ....

யமுனை நதியின் கரையிலொரு மாலைநேரம் - அந்த
யாதவனும் பிள்ளைபோல மகிழ்ந்திடும் நேரம்
ஓடி வரும் வெள்ளி அலையில் நீராடினான் - தன்னை
தேடி வந்த காளிங்கன் மேல் நடனமாடினான்

முழுநிலவின் தேனொளியில் ஜொலித்திடுல் தோட்டம்
மன்னனுக்காய் காத்திருக்கும் மங்கையர் கூட்டம்
இரவு முழுதும் நடந்திடும் அங்கு ராசக்கிரீடை
இளங்கன்னியரின் விழிகளிலே இன்ப நீரோடை...


Dear Hema,

Nice lyrics. You can suggest the ragam and thalam too for each song.

Ragam 'sAmA' came in my mind... may be the influence of 'annapoornE VisAlAkshi' - krithi by Dheekshidhar! :music:

Best wishes,
Raji Ram
 
Raji Ma'am,

Thanks for the nice suggestion; I wrote the lyrics and it was my Mom who decided on the ragas which may suit that lyric. For some songs, I have a raga and for some I don't. It will be a pleasure if you can pls post the Raga/thala suitable for the song. .............
My pleasure too to interact in this thread, dear Hema! Just give me some time...
Need to sing a couple of times before I finalize the Ragam and Thalam! :lalala:

Raji Ram
 
Raji Ma'am,................. It will be a pleasure if you can pls post the Raga/thala suitable for the song. ...........

சின்னக் கண்ணன்:

சின்னக் கண்ணன் ஊதும் குழலின் கானம் கேட்குது - அது
செவியில் விழுந்து இதயம் முழுக்க இனிமை சேர்க்குது

The first two songs you have posted could be set to Adi Thalam.

For this Krishna song, Yamuna kalyani will be suitable (the word Yamuna appears in the lyrics)

Thisra Ekam ( 3 beats... Tha ki ta ) or Adi thalam in thisra gathi will be good.

Raji Ram
 
ஸ்ரீ மஹா சக்தி ......

ராகம் - சிந்துபைரவி


ஸ்ரீ மஹா சக்தி மாயே
மனம் கனிந்தருள் புரிவாயே - தாயே

திருவருள் துணையின்றி தவித்திடும் சிறுபிள்ளை
துணையும் நீயன்றி வேறொரு கதியில்லை
கருணை செய்தெனை ஆட்கொள யாருண்டோ?
காமாக்ஷி உனையன்றி வேறொரு பேருண்டோ?

ஆசையும் கோபமும் ஆட்டிப் படைத்திடும்
அனுதினம் உனைத் துதி பாட மறந்திடும்
மகளென் குறைகளை மாற்றிடு நீயே
மாதா பராசக்தி காத்தருள்வாயே
 
ராமன் பாதம் நாடிடுவோம்...
*************************

ராமன் பாதம் நாடிடுவோம்
ரகுகுல புகழை பாடிடுவோம்

அரியணை ஏறிட வேண்டுமென்று
ஐயன்சொல் கேட்டதும் புன்னகை தான்
கானகம் சென்றிட வேண்டுமென்று
அன்னை சொல் கேட்டும் புன்னகை தான்
இன்ப துன்பங்கள் இரண்டையுமே
இங்கு சமமாய் காட்டிய ஸ்ரீராமா! - என்
இதயத்தை உன்னிடம் அளித்தேனே!
உனை என்றும் நினைத்திட அருள் நீயே!

மைதிலி மனம்கவர் நாயகன் நீயே
குகனொடு ஐவராய் ஆனவன் நீயே
அஞ்சனை மைந்தன் அனுமன் தனக்கு
அருளிடும் குருவாய் ஆனவன் நீயே
சேதுவில் பாலமிட்ட சீலனும் நீயே
சீதையை சிறைமீட்ட வீரனும் நீயே
அரக்கரை வெற்றிகொண்ட தீரனும் நீயே
என்றும் என் பாதையில் துணை நீயே
 
அபிராமி பிள்ளைத்தமிழ்
***********************

தங்கத் தமிழ்க் கனியே - என்
தொட்டில் வந்த பொன்விளக்கே!
அன்னை அபிராமியம்மா - உனக்கு
ஆராரோ பாடுகின்றேன்!

பிஞ்சுக் கைகள் தான் அசைந்தால்
பால் நிலவும் ஓடி வரும்
மண்ணில் வந்த நிலவைக் கண்டு
மதி வெட்கப்பட்டு மறைந்து விடும்

சின்னக் குயில் பேசுகையில்
கிளிகளும் தான் கேட்டு நிற்கும் - என்
அன்னையவள் கண்ணுறங்க
அவை தாலேலோ பாடி நிற்கும்

முத்து நகை சிரித்து விட்டால்
மின்னல் ஒன்று கோலமிடும் - சிறு
கண்ணசைவும் காட்டி விட்டால் - ஏழு
கடல்களும் தான் தாள் பணியும்

தத்தித் தத்தி நீ நடந்தால்
அந்த அன்னமது நாணி நிற்கும் - உன்
தாமரைப்பூம் பாதங்களை தன்
தலையாலே வணங்கி நிற்கும்

ஆராரோ ஆரிரரோ - என்
அஞ்சுகமே ஆராரோ
அகிலமும் பதம் பணியும்
அன்னை அபிராமி ஆராரோ

தாலேலோ தாலேலோ - என்
தங்கக் கிளி தாலேலோ
தரணியெல்லாம் பணிந்து நிற்கும்
தாயே அபிராமி தாலேலோ!!
 
மருதமலை வாழும்...
******************

மருதமலை வாழும் வேல்முருகன் - நம்
மனக்குறை தீர்க்கும் மால்மருகன்!
அழகு தமிழிலே கந்தன் அவன்
அன்பு வள்ளி, தெய்வானை மன்னனவன்!

பழனி மலையிலே ஆண்டியவன் - திருப்
பரங்குன்றம் தனிலே வீரன் அவன்!
பழமுதிர் சோலை பிள்ளை அவன் - கடல்
பரவிடும் சீரலை செந்தில் அவன்!

திருத்தணி தன்னில் மணக்கோலம் - நம்
தீவினை அகற்றும் திருக்கோலம்!
சுவாமிமலையிலே வேத உபதேசம்
சிவனுக்கே சொன்ன அருட்கோலம்!

ஆறுபடை வீடும் கண்டிடுவோம் - அவன்
அடியினைப் பாடி மகிழ்ந்திடுவோம்!
ஏறு மயிலேறும் குமரன் அருளால்
ஏற்றம் கண்டு நாம் மகிழ்ந்திடுவோம்!!
 
பாடல் : விநாயகனே வருவாய்..
ராகம் : பிலஹரி


விநாயகனே வருவாய் - எனக்கு
வேண்டும் வரம் தந்து அருளிட


தாயிடம் பழம் பெற்று மகிழ்ந்தாயே
தம்பியை பழனி செல்ல வைத்தாயே
இங்கு சேய் எனக்கருள் செய்ய வாராயோ?
என் சிந்தை குளிர ஆசி தாராயோ?


பாரதம் எழுதிடவும் முன்வந்தாய்- அவ்வைப்
பாட்டிக்கு தமிழ் தந்து புகழ் கொண்டாய்
புவிமீதினில் துயருறும் எந்தனுக்கு
பாதமலரினில் ஓரிடம் தாராயோ?
 
பாடல் : இறைவன் எங்கும்..


இறைவன் எங்கும் இருக்கின்றான் - நம்
இதயத்தில் இருந்து பார்க்கின்றான்
உலகே மெய்யாய் பணமே துணையாய்
வாழ்வோர் கண்டு நகைக்கின்றான் - அவர்
விதியை நினைந்து சிரிக்கின்றான்


கோடி கோடி ஜீவன்களிலே
நாமும் ஒன்று என எண்ணு - இது
காலம் முடிந்ததும் சேர வேண்டிய
கடவுளின் திருவடி தினம் எண்ணு


புல்லாய் பூண்டாய் புழுவாய் விலங்காய்
பிறவிகள் எடுத்தே சோர்ந்திட்டோம் - இந்த
மானிடப் பிறவி தன்னிலேனும்
மாசுகள் நீக்கி உய்ந்திடுவோம்
 
பாடல் : ஸ்ரீராமஜெயம் என்னும்...


ஸ்ரீராமஜெயம் என்னும் ஒரு மந்திரம் - அது
நாள்தோறும் நமைக் காக்கும் திருமந்திரம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
என்ற மந்திரம் ஒன்றே திருமந்திரம்


முனிவரின் வேள்வி கெடுத்திட வந்த
தாடகை அழிந்ததும் அவனாலே (ராம் ராம்)
கல்லொன்று திருமலர்ப் பாதம் பட்டு
கன்னி ஆனதும் அவனாலே (ராம் ராம்)
சீதையை அடைய சிவதனுசென்னும்
வில் உடைந்ததும் அவனாலே (ராம் ராம்)
தந்தை ஆணை கேட்டு கானகம் சென்ற
சீலம் நிலைத்ததும் அவனாலே


மயில்போல் வந்த மாய அரக்கியின்
மமதை அழிந்ததும் அவனாலே (ராம் ராம்)
மாய மானான மாரீசனுக்கும்
முக்தி கிடைத்ததும் அவனாலே (ராம் ராம்)
அரக்கர் தலைவன் இராவணன் கோட்டை
அடியோடு அழிந்ததும் அவனாலே (ராம் ராம்)
அனுமன் என்ற அடியவன் இங்கு
அருள் புரிவதும் அவனாலே
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top