Tamil Brahmins
Page 7 of 7 FirstFirst ... 34567
Results 61 to 63 of 63
 1. #61
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,871
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!
  நல்லஜன்மம்
  எடுப்பாய்என்பதே இதன் ரஹஸ்ய தத்வம்;ஹரியும் ஹரனும்ஒன்றே என்பதையும் கற்பிக்கின்றது...


  செல்வமுள்ளவர்சிலவிற்கு அஞ்சகூடாது என்கிறதுசாஸ்திரம்.
  ரயிலடியில்முன் பின் தெரியாதவர்களிடம்மாட்டி கொள்ள வேண்டாம்.வந்து அழைப்பார்கள்.


  பொதுவாகயாத்திரை செய்யும் வழக்கம்.
  ராமநாதபுரம்வந்து தேவிபட்டிணம் அல்லதுதர்ப சயணம் சென்று அங்குசெய்ய வேன்டியவைகளை முடித்துகொண்டுராமேஸ்வரத்தி,ல்லக்ஷ்மண தீர்த்தத்தில் வபனம்ஸ்நானம் ஸங்கல்பம் ஹிரண்யசிராத்தம் பிண்ட தானம் ஸ்வாமிதரிசனம் செய்து ;


  ஆலயஅருகிலும் ஆலயத்திலும் உள்ளதீர்த்தங்களில் ஸ்நானம் ;சிராத்தம் செய்துஸ்ரீ ராமநாதர்க்கு அர்ச்சனைசெய்து முடித்து தனுஷ்கோடிசெல்ல வேண்டும்.ஸமுத்திரத்தில்எந்த இடத்தில் இருந்தாலும்முதலில்


  நமஸ்காரம்,ஸங்கல்பம்,மணல் அல்லது கல்போடுவது ஸமுத்திரத்திற்குஅர்க்கியம் ப்ரார்த்தனைசெய்து விட்டு ஸ்நானம் செய்யஅனுக்ஞை பெற வேண்டும்.;நமது ஸகல பாபங்களும்அகல 36ஸ்நானம் செய்யவேண்டும்.


  ஒவ்வொருஸ்நானத்திற்கும் அங்கமாகஸங்கல்பம்,ஸ்நானாங்க தர்பணம்மடி வஸ்த்ரம் அணிந்து காயத்ரீஜபம் செய்ய வேன்டும்.தவிர நளன்,மைந்தன்.ஸுக்ரீவன் ஸீதா,லக்ஷமணன் ஸ்ரீராமர் முதலியவர்களை அங்கு
  த்யானம்செய்து பிப்பலாதர் முதல்ஸீதை வரை எல்லோருக்கும் மூன்றுமுறை தர்பணம் செய்ய வேண்டும்.


  தனுஷ்கோடியில்ஒரு சிராத்தம் ஹிரன்யமாகவாவதுசெய்து அரிசி எள்ளு இவைகளால்க்ஷேத்ர பிண்ட தானம் செய்யவேண்டும்.பிறகு ராமேஸ்வரம்
  வந்துகோடி தீர்த்தத்தில் ஸ்நானம்செய்து கோடி தீர்த்தம் எடுத்துவந்து பூஜித்து ப்ராஹ்மணஸமாராதனை செய்து வாத்யார்ஸம்பாவனை கொடுத்து யாத்ரைபூர்த்தி செய்ய வேண்டும்.


  கோடிதீர்த்தம் பெற்றுவிட்டால்உடனே ராமேஸ்வரம் விட்டுகிளம்பி விட வேண்டும்.


  உடனேகாசி யாத்ரை செய்வதாக இருந்தால்தனுஷ்கோடியில் மணல் எடுத்துஸேது மாதவர் பிந்து மாதவர்;வேணி மாதவர் எனமூன்றாக
  பிறித்துபாவித்து பூஜை செய்து வேணிமாதவராக செய்த மணலை எடுத்துக்கொண்டுஉடனே காசிக்கு கிளம்பி விடவேண்டும் என்பது அந்த காலத்தில்வழக்கமாக இருந்தது. தற்காலத்தில்இது முடியாதது.
  ராமேஸ்வரத்திலிருந்துதர்ப சயனம் வரலாம்.இதற்கு திருபுல்லாணிஎன்று தமிழ் பெயர்.


  ராமநாதபுரத்திலிருந்து10கிலோ மீட்டர்தெற்கே உள்ளது.இங்கு ஸ்ரீ ராமர்ஸமுத்திர ராஜனை வேண்டினார்., தர்பத்தின்மேல் படுத்து ப்ராயோபவேசம்செய்தார். இங்கும் ஸத்ரம்இருக்கிறது.ஸமுத்ர ஸ்நானம்செய்து பகவானை தரிசித்து வரபேண்டும்.  ;
 2. #62
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,871
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!
  ப்ரயாகையில்செய்ய வேண்டியது


  ஆத்மருணம் தேவ ருணம் பித்ரு ருணம்என்ற மூன்று கடன்களுடன் நாம்பிறக்கின்றோம் .இவைகளைஅகற்றினால் தான் முக்திபெறலாம்.ப்ரயாகை
  யில்ஆத்ம ருணம்;காசியில்தேவ ருணம் கயா வில் பித்ருருணம் அகலும்;


  முக்திபெற விரும்புவோர் அவசியம்இதை செய்ய வேண்டும் இந்த
  கடன்களிலிருந்து விடுபடத்தான் தெய்வங்களையும்பித்ருக்களையும் ஆராதிக்கவேண்டும்.தீர்த்தாடனம்செய்ய வேண்டும் என யாத்ராகல்பம்
  கூறுகிறது.மத்ஸ்ய புராணம்வாயு புராணம் பத்ம புராணங்களில்இந்த ப்ரயாகை காசி கயா யாத்திரைமிக சிறந்தது என க்கூறுகின்றது.


  அலகாபாத்திலிருந்து6கிலோ மீட்டரில்உள்ளது.ப்ரயாகை;தாரா கஞ்ச் என்றரயில்வே ஸ்டேஷனுக்கு மிகசமீபம்..இங்கு சிவ மடம்உள்ளது.


  இந்தசிவ மடத்தில் உள்ள பண்டிதரிடம்என்னால் இவ்வளவு தான் முடியும்எனச்சொல்லி பணம் கொடுத்தால்அதற்கு தகுந்த மாதிரி அவர்உங்களுக்கு

  எல்லாம் செய்துவைக்கிறார்
  ..
  1.ப்ராஹ்மணர்களுக்குதக்ஷிணை தந்து த்ரிவேணிஸ்நானம்/வேணி தாநம் செய்யமுதலில் யோக்கியதை உண்டாவதற்குஅநுமதி பெற வேண்டும்
  .
  2ஸகல பாபங்களும்அகல ப்ராஜாபத்ய க்ருச்சரதாநம் செய்ய வேண்டும்.இதற்கு ஒரு மட்டைதேங்காயுடன் தக்ஷிணை ப்ராமணருக்குகொடுக்கவும்.
  3.பார்வதி பரமேஸ்வரர்;லக்ஷ்மி நாராயணர்அருளை பெற பல தாநம் செய்யவேண்டும்.பழம் தாம்பூலம்,தக்ஷிணை தரவேண்டும்.


  4.கங்கா புத்ரர்களாகக்ஷேத்ர வாஸிகளாக உள்ளவருக்குமுழு தேங்காயும் தக்ஷிணையும்தந்து தீர்த்த ராஜனது பேட்டிபெற வேண்டும்.


  5.ஸ்நானம் செய்தபிறகு நமது பீடை அகல நாம்உடுத்திய புதிய அல்லது பழையவஸ்திரத்தை பண்டாவிற்குதக்ஷிணையுடன் தானமாக தரவேண்டும்..
  6ஸேதுவிலிருந்துகொண்டுவந்த வேணி மாதவர் மணலைபூஜை செய்து ஜலத்தில் போடவேண்டும்.


  7.மறு நாள் தீர்த்தசிராத்தம் செய்ய வேண்டும்.விசுவே தேவருக்குஒருவர்; அப்பா வர்க்கம்ஒருவர்;அம்மா வர்க்கம்ஒருவர்;தாயின் அப்பாவர்க்கம் ஒருவர்;தாயின் அம்மாவர்க்கம் ஒருவர்;காருண்ய பித்ருக்கள்ஒருவர்.


  மொத்தம்6ப்ராமணர்கள்.வரித்து விதிப்படிவேஷ்டி அளித்து தீர்த்தசிராத்தம் செய்ய வேண்டும்.சிராத்தத்திற்குமுன்பே பரேஹணி தர்பணம் செய்யவேண்டும்.17பிண்டங்கள்வைத்து பிண்ட ப்ரதானம் செய்யவேண்டும்;


  அப்பாவழி 3;அம்மா வழி 3;தாயின் அப்பாவழி 3;தாயின் அம்மாவழி 3;காருண்ய பித்ருக்கள்-1;தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்)-4.மொத்தம்=17
  தசதானம் அல்லது பஞ்ச தானம்செய்வது அவசியம்..


  8.மூன்றாவது நாள்:-தம்பதீ பூஜைசெய்ய வேண்டும்.வேட்டி;புடவை;தக்ஷிணை;ஸெளபாக்கியத்ரவ்யங்கள்;மெட்டி;திருமாங்கல்யம்..தாம்பூலம் புஷ்பம்;பழம்;நலங்கு சாமான்;பால் கொடுக்கும்கிண்ணம் முதலியன


  ஸங்கல்பம்செய்து முடித்துக்கொண்டுபோட் மூலம் கங்கை,யமுனை;ஸரஸ்வதி என்றமூன்று நதிகளும் கூடும்த்ரிவேணிக்கு செல்ல வேண்டும் இங்கு .கங்கைஜலம் பிடிக்க ப்லாஸ்டிக்கேன் கொண்டு செல்ல வேண்டும்


  போட்டில்பண்டா மந்திரம் சொல்லி இந்தமூன்று நதிகளையும் பூஜிக்கசொல்வான் .த்ரிவேணிஸங்கமத்தில் போட்டை நிறுத்துவான்.முதலில் புருஷர்கள்வபனம் செய்து கொள்ள வேண்டும். இனி வபனம் கயாசிராத்தம் முடிந்த பிறகுதான் செய்து கொள்ள வேண்டும்அது வரை வபனம் இல்லை..அதற்குமுன் மனைவி தன்
  புருஷனைமாதவனாக கருதி பூஜை செய்துகல்யாணம் ஆனது முதல் இதுவரைதான் புருஷனுக்கு செய்தஅபசாரங்களை மன்னிக்கும்படிகேட்க வேண்டும்.அப்படியே அதைமன்னித்து மனைவியை த்ரிவேணியாககருதி பூஜிக்க வேண்டும்


  .கணவன்மனைவியின் தலை வாரி பின்னல்போட்டு புஷ்பம் வைத்து தலைமுடியின் நுனியில் இரண்டுஅங்குலம் கத்திரித்து மஞ்சள்குங்குமம் அக்ஷதை அப்ரஹபொடி,சந்தனம்காதோலை கருகமணி வெற்றிலைபாக்கு


  இவைகளுடன்வைத்து மனைவியிடம் கொடுக்கஅதை மனைவி பண்டாவிடம் கொடுக்கவேண்டும்.பண்டா அதை ஜலத்தில்போடுவார்.வெற்றிலைமாத்திரம் மிதந்து சென்றுவிடும் .முறத்தில்உள்ள மற்ற பொருட்களை பண்டா இந்த இடத்தில் போட மாட்டார்.


  முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்றுவிடும்.த்ரிவேணிக்குமூங்கில் (வேணு) தாநம் செய்தால்ப்ரியம்.எனவே சிறியமுறத்தில் சீப்பு கண்ணாடி.குங்கும சிமிழ்;மஞ்சள் பொடி;அப்ரஹ
  பொடி;அரிசி;வெற்றிலை;பாக்கு பழம்;ரவிக்கை;தக்ஷிணை இவைகளைவைத்து மற்றொரு முறத்தால்மூடி தானம் செய்ய வேண்டும்.


  வேணிதானம் செய்த பின் தம்பதிகள்இருவரும் சேர்ந்து யமுனையில்ஸ்நானம் செய்து போட்டின்வழியாக கோட்டை அருகே செல்லவேண்டும்.அங்குகோட்டைக்குள் பூமிக்கு அடியேஒரு பெரிய கோவில் உள்ளது அதில் மனித உரு


  அளவில்சந்திரன்;சூரியன்;யமன்;வால்மீகி;வ்யாஸர்;துர்வாஸர்;தத்தாத்ரேயர்முதலிய விக்கிரஹங்களும்ஆலமரத்தின் அடியும் தெரிகிறது;
  இந்தஆல மரம் அக்ஷயமானது இந்த ஆலமரத்தில் மத்ய பாகம் காசியிலும்;நுனிபாகம் கயா விலும் உள்ளது;ப்ரளய காலத்தில்இந்தஇலையின் மீது பகவான்படுத்து இருப்பார்.


  இங்கிருந்துவீட்டிற்கு ஆட்டோ அல்லதுடாங்கா வைத்துக்கொண்டு செல்லவேண்டும்.போகும் வழியில்பூமியில் ஹனுமார் படுத்தவண்ணம் இருக்கும் கோவிலில்சென்று பார்த்து விட்டு செல்லவேண்டும்..ஆனந்த பவன் பார்.


  இங்குபரத்வாஜர் ஆச்ரமத்தில் ஸப்தரிஷிகள்;பார்வதி பரமேஸ்வரர்;காளி வாசுகி;ஒரு குகை இவைகள்இருக்கின்றன.காஞ்சி சங்கராசார்யார்விமான மணடபம் பார்க்க வேண்டியஒன்று வேணி மாதவரை இங்குபார்க்க வேண்டும். ராமானுஜ மடம்;மத்வ மடம்பார்க்கலாம்.


  ப்ரயாகையின்காவல் தெய்வம் வாஸுகி என்றஸர்ப்ப ராஜன்.இந்த ஆலயத்தில்அம்பு படுக்கையில் பீஷ்மர்படுத்து இருப்பதையும்பார்க்கலாம்.
  அலோபிமாதா சோமேச லிங்கம் பார்க்கலாம்பெரு வேள்விகள் கண்ட பூமி ஆனதால் ப்ரயாகை என்று அழைக்கபடுகிறது;சிராத்தம் ஆனபிறகுவேணி மாதவரை அவசியம் தரிசனம்செய்ய வேண்டும்.


  அக்பர்சக்கிரவர்த்தி இந்த ஊருக்குவந்தவுடன் ஊரை அல்லா+ஆபாத்=இறைவன் உறைவிடம்என்று சொன்னான்.இதுவே மருவிஅலஹாபாத் ஆயிற்று;.
  மாதவர்கோவில் ஆதி சேஷன் கோவில்உள்ளது.


  கங்கைஜலம் வேண்டியதை வாங்கி ஈயபற்று வைத்து ஊருக்கு எடுத்துசெல்ல தயார் செய்து கொள்ளலாம்.கங்கையைபூஜித்து கங்கா ஸமாராதனைசெய்து ஆச்சார்ய ஸபாவனை செய்துகிளம்ப வேண்டும் காசிக்கு..


  தேசீயநெடுஞ்சாலை அலகாபாத்திலிருந்துகாசிக்கு 170கிலோ மீட்டர்.உள்ளது.நடுவில் 85கிலோ மீட்டரில்விந்தியாசல் உள்ளது.இங்கு துர்க்காவிந்தியா வாஸினி என்ற பெயருடன்அருள் பாலிக்கிறாள்.;


  காசியிலிருந்துகயா 276கிலோ மீடர்.ரயிலில் சென்றால்220கிலோ மீட்டர்.
  கோஆசூப்பர் எக்ஸ்ப்ரஸ் (12358 ) 4 மணி நேரத்தில்சென்று விடலாம்..
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #63
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,871
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!
  ப்ரயாகையில்ஆண்கள் வபநம் பெண்கள் வேணிதாநம் செய்து வேணி மாதவர்உள்ளிட்ட தெய்வங்களை வழிபடவேண்டும் .இதனால்ஆத்ம ருணம் விலகுகிறது.


  காசியில்கங்கா ஸ்நானம் செய்து காலபைரவரிடமும் தன்டபாணியிடமும்
  தண்டத்தால்அடி பெற்றுக் கொண்டு அங்குபல தெய்வங்களை வழி படுவதால்தேவ ருணம் விலகும்.


  ராமேஸ்வரம்ப்ரயாகை;காசி;கயா ஆகியக்ஷேத்ரங்களில் தீர்த்தசிராத்தம் செய்து விஷ்ணுபாதத்திலும் அக்ஷய வட சாயையிலும்பிண்டங்கள் இடுவதால் பித்ருருணம் விலகும்..


  ..சிலர்சென்னையிலிருந்து நேரேகாசிக்கு ரயிலில் சென்றுவிட்டு காசியிலுள்ள வாத்யாரையும்அழைத்து கொண்டு 3மணி நேரத்தில்கார் மூலம் ப்ரயாகை வந்துஒரே நாளில் எல்லாம் முடித்துகோண்டு காரில் காசி


  திரும்பிவிடுகிறார்கள்.மறுபடியும்காசியிலிருந்து காரில் 4மணி நேரத்தில்கயா சென்று ஒரே நாளில் எல்லாம்முடித்துக்கொண்டு காசிவருகிறார்கள்.காசியிலிருந்துநேரே ரயிலில் சென்னை வருகிறார்கள்.இது அதம பக்ஷம்.
  சிலவாத்யாரிடம் சொந்த கார்உள்ளது.அதில் வாத்யாரேகாரை ஓட்டி சென்று திரும்பிவிடுகிறார்.


  திரிவேணிக்குமுதல் முறை போகும் போது மட்டும்தான் வேணி தானம்.அதன் பிறகு எத்தனைமுறை சென்றாலும் வேணிதானம்செய்ய வேண்டியது இல்லை.


  சாஸ்திரிகள்வீட்டிலேயே ஸ்நானம் செய்துவிட்டு பிள்ளையார் பூஜை மஹாஸங்கல்பம் செய்து கிரஹ ப்ரீதிக்ருச்சர ப்ரதிநிதி தானம்செய்து
  விட்டுமனைவி கணவனுக்கு பாத பூஜைசெய்து கணவனின் நல்வாழ்வுவேண்டி வேணி தானம் செய்யஅநுமதி கேட்டு பெற வேண்டும்.பிறகு நதிக்கரைசெல்ல வேண்டும்.யுவதிகளும்வேணி தானம் செய்ய வேண்டும்.


  வேணிதானம் செய்வதனால் ஸெளபாக்கியம்,செல்வ செழிப்புசந்ததி ஆயுள் விருத்தி பதியிடம்ப்ரியமும் உண்டாகும்...


  பரித்ராஜகோபனிஷத்எல்லா பாபங்களும் தலை முடியில்போய் தங்குகிறது.ஆதலால் முடியைசுத்தமாக எடுத்து.காணிக்கையாகஅளித்து விட வேண்டும் என்கிறது.
  வேணிதானம் செய்யும் போது சொல்லவேண்டிய ஸ்லோகங்கள்.


  திரிவேணிதேவிக்கு அநேக நமஸ்காரங்கள்.எனக்கு எப்போதும்பாதி வ்ரத்யம் கொடுப்பாயாக;.என் ஸெளபாக்கியம்பெருகட்டும்;.நான் இங்கு வந்துவேணி தானம் செய்ததால் இந்தஜன்மாவிலும் முன் ஜன்மாக்களிலிலும்நான் செய்த பாபங்கள் என்னைவிட்டு நீங்கட்டும்..


  வேணிதானம் சுக்கில பக்ஷத்தில்செய்ய வேண்டும்.திதி,நக்ஷத்திரம்இரண்டும் நன்மை செய்ய க்கூடியதினம் பார்த்து ப்ரயாகைக்குசென்ற நாளன்றோ அல்லது மறுநாளோ வேணி தானம் செய்ய வேண்டும்.


  தலைமுடிபிரிந்து விடா வண்ணம் முடிந்துகொண்டு முகத்தில் மஞ்சள்பூசிக்கொண்டு கணவன் மனைவிஇருவரும் கைகோர்த்து கொண்டுஇருவரும் சேர்ந்து திரிவேணிசங்கம ஸ்நானம் செய்ய வேண்டும்


  பிறகுஇருவரும் போட்டில் வந்துகிழக்கு அல்லது வடக்கு நோக்கிஉட்கார்ந்து மனைவி கணவனிடம்வேணி தானம் செய்ய அனுமதிவாங்கி
  பின்னர்கணவன் மனைவியின் தலை முடியைபிண்ணி விட்டு பூச்சூடி தலைமுடியை இரண்டு அங்குலம்நுனியில் வெட்டி மனைவியிடம்கொடுக்க வேண்டும்.மனைவி அதை ஸெளபாக்கியத்ரவ்யங்களுடன் சேர்த்து


  பண்டாவிடம்தானம் செய்து விட்டு பண்டாவிடம்முடியை த்ரிவேணியில் போடசொல்லி கொடுக்க வேண்டும்முடி மிதந்து வெளியே போகாமல்தண்ணிரில் அடியின் செல்வதுநல்லது.பிறகு தம்பதிகள்கை கோர்த்து


  மறுபடியும்ஸ்நானம்:போட்டிற்கு வந்துவேறு காய்ந்த ஆடை உடுத்தித்ரிவேணிக்கு பூஜை செய்யவேண்டும்.ப்ராஹ்மணர்களுக்கும்
  சுமங்கலிகளுக்கும்தானம் செய்ய வேண்டும்.பிறகு தம்பதியர்வீட்டுக்கு வந்து தம்பதிபூஜை செய்து சாப்பாடு போடவேண்டும்.பிறகு தம்பதியர்சாப்பிட வேண்டும்..
  தலைமுடி நுனியை கத்தரித்துபண்டாவிற்கு தானமாக கொடுத்துஅதை கங்கை,யமுனை ஸரஸ்வதிசங்கமிக்கு மிடத்தில்போடச்சொல்லி முத்தேவியற்கும்காணிக்கையாக போடுவதற்கு வேணீதானம் எனப்பெயர்..
  .

  வேனிமாதவர் மணலை தண்ணீரில் கரைக்கவேண்டும்.ஸங்கம இடத்திலிருந்துசற்று நகர்ந்து சுத்த கங்கைநீரை கேனில் பிடித்து கொள்ளவேண்டும்.
  த்ரிவேணிஸங்கமம் இடத்திலும் மற்றஇடங்களிலும் சுமங்கலிகளுக்குதாம்பூலம் பழம் புஷ்பம்ரவிக்கை துண்டு.கண்ணாடி சீப்பு;மஞ்சள் பொடி;குங்குமம்;கண்ணாடி வளையல்;;கண்மை;மருதாணி பவுடர்தக்ஷிணை கொடுக்க வேண்டும்


  வீட்டிற்குவந்து ஈர வஸ்த்ரம் தானம் செய்யவேண்டும்.


  தீர்த்தசிராத்தம் செய்ய வேண்டும்.17 பிண்டங்கள்பிண்ட தானம்;தர்பணம் செய்யவேண்டும்.சிராத்தம்முடித்த பிற்கு வேணி மாதவர்கோயில் செல்ல வேண்டும்.தச தானம் செய்யவேண்டும்.
  த்ரிவேணிகரையில் பூஜை செய்யும் போதுஅந்தந்த தேவிகளுக்கு இந்தப்ரார்த்தனைகளும் சொல்லலாம்.


  த்ரிவேணிசங்கமத்தில் கங்கைக்கு பூஜைசெய்யும் போது இந்த ஸ்லோகம்சொல்லலாம்.
  விஷ்ணுபாதோத்பவே தேவி மாதவ ப்ரியதேவதே தர்சனே மம பாபம் மேதஹத்வக்நிரிவேந்தனம்.லோக த்ரயேபிதீர்த்தாணி யானி ஸந்தி சதேவதாஹா.

  தத் ஸ்வரூபாத்வமேதாஸி பாஹி ந ஹ பாப ஸங்கடாத்
  கங்கேதேவி நமஸ்துப்யம் சிவசூடாவிராஜிதே சரணத்ராண ஸம்பன்னேத்ராஹி மாம் சரணாகதம்.


  யமுநாவிற்குபூஜை செய்யும் போது இந்தஸ்லோகம் சொல்லலாம்.


  இந்த்ரநீலோத்பலாகாரே பானுகன்யேயசஸ்வினி ஸர்வ தேவஸ்துதேமாதஹ யமுநே த்வாம் நமாம்யஹம்
  ஸர்வதீர்த்த க்ருதாவாஸே ஸர்வ காமவரப்ரதே ஸர்வ பாப க்ருதத்வம்ஸேநமஸ்தே விஸ்வபூஜிதே.


  ஸம்ஞ்ஞாகர்பஸமுத்பூதே ஸம்ஜ்ஞோசாரண புண்யதேவிஷ்ணு ப்ரியதமே தேவி யமஜ்யேஷ்டேநமோ நமஹ.
  ஸரஸ்வதிநதிக்கு பூஜை செய்யும்போதுஇதை சொல்லலாம்.
  ப்ரஜாபதிமுக்கோத்பூதே ப்ரணதார்திப்ரபஞ்சினி ப்ரயாக மிலிதேதேவி ஸரஸ்வதி நமோஸ்துதே


  பத்மராகதலாபாஸே பத்மகர்ப அருணேக்ஷனேபத்மமாலா வினிதாங்கே பாபக்ந்யைதே நமோநமஹ
  வீணாவாதரஸாபிஞ்ஞே வீணயா ஸமலங்க்ருதேகீத வீணாரவே மாதஹ பாஹிமாம்சரணாகதம்;


  த்ரீவேணியில்பூஜிக்கும் போது சொல்லக்கூடியஸ்லோகம்
  த்ரிவர்ணேத்ரியம்பிகே தேவி த்ரிவித–அக-விநாசினி த்ரிமார்கே த்ரிகுணே த்ராஹித்ரிவேணி சரணாகதம்;ஸம்சார அநலசந்தர்பம் காம க்ரோதாதிவேஷ்டிதம் பதிதம் த்வத்பாதாப்ஜே மாம் சீதளம் குருவேணிகே


  தீர்த்தராஜே ப்ரயாகே அஸ்மின்ப்ரத்யக்ஷவாஸி ஜகத் ஹிதேநானா ஜன்ம க்ருதா ப்யாஸாத்பாதகாத் உத்தரஸ்வ மாம்
  அரசமரத்தின் வேர் அக்ஷயவடம்காணும் போது சொல்ல வேண்டியஸ்லோகம்
  ஜடரே அகிலமாதாய த்வயி ஸ்வபிதிமாதவஹ;க்ருத்வா முகாம்புஜேபாதெள நமோ அக்ஷயவடே நமஹ


  த்வன்மீலேவஸதே ப்ருஹ்மா தவ மத்யே ஜநார்தனஹத்வதக்ரே வஸதே சூலி தாத்ருசம்த்வாம் நமாம்யஹம்.
  ஸெளவர்ணானிதலான்யஸ்ய ஸப்த பாதாலகா ஜடாஹா யாவன் மண்டல விஸ்தாரோ வடராஜாயதே நமஹ.


  வேணிமாதவரை காணும் போது சொல்லவேண்டிய ஸ்லோகம்;
  நீலஜிமூத ஸங்காச பீத கெளசேய பூஷிதப்ரயாக நிலய ஸ்வாமின் வேணிமாதவ தே நமஹ


  சங்கசக்ர கதா பத்ம விபூஷித சதுர்புஜசதுர்வர்க பலாதார வேணி மாதவதே நமஹ; த்வத் பாத ப்ரணதம்மாம் த்வம் கமல ஸ்ரீ முகாத்ருசா உத்தரஸ்வ மஹோதாரவேணீமாதவ தே நமஹ.
  சனகாதிமுனிவருக்கு ஆதிசேஷன் உரைத்தத்ரிவேணி தேவி ஸ்தோத்ரம்வ்யாஸர் அருளிச்செய்தது.


  உடல்இந்திரியங்கள்.ப்ராணன் மனது,புத்தி.சித்தம் அஹங்காரம்அஞ்ஞான துகள்கள் போன்றஅனைத்தையும் தனது ப்ரகாசத்தால்ப்ரகாசிக்க செய்யம் த்ரிவேணிதேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாகஇருக்கட்டும்.
  ஜாக்ரத்ஸ்வப்ணம் சுஷுப்தி ஆகிய மூன்றுநிலைகளிலும் ப்ரகாசிக்கசெய்பவளும் இவற்றின் விகாரங்களைமாற்றுபவளும் விகாரங்களைஅகற்றுபவளுமாக

  உபனிஷத்துகளால்போற்றப்படும் த்ரிவேணி தேவிஎனக்கு ஸித்தி அளிக்கட்டும்
  .
  ஸுஷுப்திநிலையில் அறிவு அழியும்போதும்இந்திரியங்களின் ஆளும் சக்திகுறையும் போதும் கூட என்னைநடமாட வைக்கும் த்ரிவேணிதேவி எனக்கு

  ஸித்தி அளிப்பவளாகஇருக்கட்டும்

  அனைத்துஉலக விஷயங்களிலும் தினம்கட்டுண்டு கிடக்கும் எம்மோடுதாமே வந்து கலந்து அபரிமிதமானப்ரியம் செலுத்தி ஆதரிக்கும்ஸாக்ஷாத் திரிவேணி தேவி எனக்குஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.
  மறைபொருளானவிஞ்ஞானம் பரந்த ப்ரபஞ்சத்தின்பலவிதமான வேறுபாடுகளைப்ரகாசபடுத்தி ஞானமளிக்கும்த்ரிவேணி தேவி எனக்கு ஸித்திஅளிக்கட்டும்.


  ஆரம்பத்தில்ப்ருஹ்மாவையும் மத்தியில்விஷ்ணுவையும் இறுதியில்சிவனையும் ப்ரகாசபடுத்திகாட்டும் திரிவேணி தேவி எனக்குஸித்தி அளிக்கட்டும்..
  அகாரவடிவில் ப்ருஹ்மா விசுவேதேவஸ்வரூபி;மகார வடிவில்அக்னி ஸ்வரூபி;என்றுதேஜஸ் ஸூத்ரம் சொல்வதைஉணர்த்தும் த்ரிவேணி தேவிஎனக்கு

  ஸித்தி அளிக்கட்டும்
  ;
  சிவபெருமானின்தேகத்திலிருந்து வேறுபடாதவளும்முக்தி தேவி ஸ்வரூபியும் அஞ்ஞானிகளுக்கு சூன்ய மானவளும்ஓங்கார லக்ஷ்மியுமான திரிவேணீதேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்
  இந்ததுதியை தினமும் காலை,மதியம் மாலைசொல்பவர்களுக்கு திரிவேணிதேவிபிரசன்னமாகி அருள் புரிவாள்என்பதில் சந்தேகம் இல்லை;


  மந்திரஸாரமான இந்த ஸ்தோத்ரம் வ்யாஸபகவான் செய்தது.இதை ஜபிப்பதால்திரிவேணி தேவி நம்மோடு எப்போதும்இருந்து காபாற்றுவாள்.
  சிவமடம் தாரா கஞ்ச் அலஹாபாத் (0532 ) 2500799.


  இனிகாசியில் செய்ய வேண்டுபவற்றைபார்ப்போம்..
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 7 of 7 FirstFirst ... 34567

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •