• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கதை கதையாம் - அனாமிகா

Status
Not open for further replies.

anamika

Active member
கதை கதையாம் - அனாமிகா

ருக்குவா, கொக்கா ?
*************

பகல் மணி பதினொன்று. உண்ட களைப்பில் உருண்டு கொண்டிருந்த ருக்கு என்கிற ருக்மணிக்கு காலிங்பெல் சப்தம் நாராசமாய் ஒலித்தது. வெளியில் போய் 'டபக்' என்று கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டினாள். கூரியரில் தபால் வந்திருந்தது.

"யாரிது? பணம் செலவு செய்து கூரியரில் எனக்கு தபால் அனுப்புவது?" யோசித்தபடி அதைப் பிரித்துப் படித்த ருக்கு, இன்ப அதிர்ச்சியில் "நாயகன்" கமல் போல குரல் எழுப்ப, தூங்கிக் கொண்டிருந்த அவள் மாமனார் அலறிப் புடைத்து ஓடி வந்தார்; கையில் தபால் வைத்தபடி
நின்றிருந்த ருக்குவைப் பார்த்தார்.

"ஐயோ! ருக்கு, யாருக்கு என்ன ஆச்சு! சொல்லிட்டு அழும்மா!"

"மாமா! கொஞ்சம் சும்மாயிருங்கோ" தான் எழுப்பிய சந்தோஷக் கூச்சல் மாமாவுக்கு சோகராகமாய் புரிந்திருப்பது விளங்க, சுர்ரென்று கோபம் ஏறியது ருக்குவுக்கு.

"யாருக்கும் எதுவும் ஆகலே; "கானாபானா" கம்பெனி நடத்தின அதிர்ஷ்டக் குலுக்கல்லே எனக்கு first prize விழுந்திருக்கு!"

தலையை நிமிர்த்தி பெருமையாய் மாமனாரைப் பார்க்க,

"ரொம்ப சந்தோஷம்; என்ன prize?"

"அது வந்து....என்னன்னு போடலே; பரிசுக் கூப்பன்னு மட்டும் போட்டிருக்கு"

ருக்கு இழுக்க, "சரி,சரி" என்று அவர் மீண்டும் தூங்கக் கிளம்ப,

"மாமா! கொஞ்சம் இருங்கோ; ஆத்தைப் பார்த்துக்குங்கோ. நான் போய் அம்புஜத்து கிட்ட மட்டும் சொல்லிட்டு நிமிஷமா வந்துடறேன்"

பதிலுக்கு காத்திராமல் கிளம்பி விட்டாள் ருக்கு.

*****************
சேதி கேட்ட அம்புஜம்," ருக்கு, prize கொடுக்கிற நிகழ்ச்சி டி.வி-ல வருமோல்லியோ? நீ ஒரே நாள்ல பிரபலமாய்டுவே, பாரேன்" என, ருக்கு கற்பனை வானில் பறந்தாள்.

'அம்புஜம், நாழியாறது கிளம்பணும்' என்று சொல்லிக் கொண்டே ஒரு மணி நேரம் ஓட்டிய பிறகு பக்கத்து வீட்டு பார்வதி, அடுத்த வீட்டு அலமு என ஒவ்வொருவராக எட்டிப் பார்த்து விட்டு ( ருக்கு மேல் தப்பே இல்லை; பாவம்; அவள் எட்டிப் பார்த்து விட்டு வருவதற்குள் கடிகாரத்தில் சின்ன முள் இரண்டை எட்டிப் பார்த்து விட்டது!) அவள் வீட்டு வாசற்படியில் கால் வைக்கும் சமயம் தானா, கோடி வீட்டு வனஜா ஞாபகம் வர வேண்டும்?! கூடவே போன மாதம் தான் வனஜா பிரபல பெண்கள் பத்திரிகை 'மங்கையர் மாலை' நடத்திய கோலப்போட்டியில் பரிசு வாங்கி பீற்றிக் கொண்டதும் நினைவில் உறைக்க, முன் வைத்த காலை பின் வைத்து, ருக்கு வனஜா வீட்டுக்கு விரைந்தாள்.

ருக்கு சொல்லச் சொல்ல, வனஜாவுக்கு வயிறு எரிந்தது; புதுவிதமாக இருக்க வேண்டுமென்று, இரண்டு வாரங்கள் தான் மூளையை கசக்கி கோலம் போட்டு பரிசு வாங்க, இந்த ருக்கு எதுவுமே செய்யாமல் அதிர்ஷ்டத்தில் பரிசு வாங்குகிறாளே? எப்படிப் பழி வாங்க? பரபரவென் மனது துடிக்க, யோசனை உருவானது.

ருக்கு ஏற்கனவே சமையல் பைத்தியம்; சாம்பார் பண்ணினால் ரசம் மாதிரி இருக்கும்; ரசம் வத்தக்குழம்பு மாதிரி; இந்த லட்சணத்தில் புதுதினுசாக ஏதாவது செய்கிறேன் என்று அடிக்கடி அனைவரையும் சோதனைக்கு ஆளாக்குவதில் பிடிவாதம் அதிகம்!

"ருக்கு, நீ prize வாங்கினதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்; கோலப் போட்டியில பாவம், உனக்கு ஆறுதல் பரிசு கூட தர்லியே; ஏதோ இதானும் கிடைச்சுதே" என்று குத்திக் காட்டிய வனஜா,

"ஆமாம்; இந்த ஸ்வீட் நியூஸ் சொல்லி இருக்கே! என்ன ஸ்வீட் பண்ணப் போறே?" என்று கேட்க,

ருக்கு அப்பாவியாய் 'சின்னத்தம்பி' ஸ்டைலில் விழித்தாள்.

"ஆமாம், என்ன ஸ்வீட் பண்ணலாம்?"

வனஜாவையே கேட்க, தான் யோசனை பண்ணியிருந்த செய்முறையை அழகாக சொன்னாள். ருக்கு நன்றி சொல்லி கிளம்பியதும், வனஜா பி.எஸ். வீரப்பா பாணியில் கடகடவென்று சிரித்தாள்.

"ருக்கு! ஸ்வீட்டா பண்ணப் போறே! இந்த ஸ்வீட் பண்ண உனக்கு ஆகிற செலவு நீ வாங்கபபோற பரிசை விட டபுளா இருக்கும்; உன்னோட 'கைப்பக்குவத்துல' அது ஸ்வீட்டும் இல்லாம, அல்வாவும் இல்லாம, உன்னை பாடுபடுத்தலே, என் பேரு வனஜா இல்லே" கறுவினாள்.

********************
ருக்கு வீட்டுக்குள் நுழைந்த போது மணி மூன்று. மாமா காஃபி குடித்துக் கொண்டிருந்தார். ருக்கு கண்டு கொள்ளாமல் நழுவி, கடைக்குப் போய் சாமான் வாங்கி வந்து கிச்சனில் பரத்தினாள். நெய், முந்திரி, பாதாம், பிஸ்தா என்று பரப்பி வைக்கப்பட்டிருந்த அயிட்டங்களைப்
பார்த்ததும் மாமாவுக்கு வயிற்றில் ஏதோ குடைந்தது. "யாரோ பொறாமை பிடித்து ருக்குவை ஸ்வீட் பண்ணத் தூண்டிவிட்டு இருக்கிறார்கள். நாம் என்ன சொன்னாலும் அவள் கேட்கப் போவதும் இல்லை; ஆண்டவா, என் பையனையும், அவன் பர்சையும், எங்க எல்லார் வயித்தையும் நீ தான் காப்பாத்தணும்" என இறைவனிடம் வேண்டி விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

ருக்குவின் ஸ்வீட் படலம் கோலாகலமாகத் தொடங்கியது. வனஜா சொன்னபடி "Instant mix" பாக்கெட்டுகளை பாத்திரத்தில் போட்டு, நெய் விட்டு, முத்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை பொடி செய்து கலந்து உருண்டைகள் பிடித்தாள். பிறகு சர்க்கரைப் பாகு வைத்து. அவற்றை
ஒவ்வொன்றாகப் போட, படபடவென்று அவை உடைய, கூடவே டமார் என்று சப்தம்! ருக்குவின் இதயம் சுக்குநூறாக நொறுங்கிய ஓசை அது!!

(ருக்குவின் முயற்சி தொடரும்....)
 
ருக்குவா, கொக்கா? - 2
**************
"பாகு பதம் சரியாகவில்லையா? உருண்டை பிடித்ததில் ஏதாவது தப்பா?" - யோசனை பண்ணப் பண்ண, ருக்குவின் மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

அப்போது பார்த்து, FM - ல் "தோல்வி நிலையென நினைத்தால்..." என்று பாடல் பாட, ருக்குவும் மனதைத் தேற்றிக் கொண்டு, "உடைந்ததை என்ன செய்யலாம்?" என்று யோசித்தாள். இனிமேல் வனஜா சொன்ன முறையில் தொடர முடியாது. நாமாக ஏதாவது செய்து பொருள்கள் வீணாகாமல் செய்ய வேண்டும், இல்லையென்றால் கணவர் சுந்தரேசனின் நெற்றிக்கண் அவளை எரித்து விடும். ருக்குவுக்கு ஒழுங்காக செய்ய வரும் ஒன்றே ஒன்று, காராபூந்தி. அதனால் ருக்கு ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.

எல்லா உருண்டைகளையும் சர்க்கரை பாகில் போட்டு பொரித்து...இல்லை, இல்லை....உடைத்து எடுத்தாள்; அடுத்தது, மிக்சிக்கு வந்தது சோதனை! அதில் போட்டு எல்லா உருண்டைகளையும் தூளாக்கினாள். அதில் கடலைமாவும், வெல்லமும் (ஸ்வீட் அல்லவா?) போட்டு கலந்து, ஜாரணியில் போட்டு பொறித்தாள். முதல் ஈடு எடுத்ததும், பள்ளி விட்டு ஓடி வந்த மகன் வசந்த், வாயில் போட்டுக்கொண்டு,"அம்மா, சூப்பர் ஸ்வீட்மா" என்று சொல்ல, ருக்கு தன்னைத் தானே கிள்ளிப் பார்த்தாள்; கொஞ்சமாக வாயில் போட்டுப் பார்த்தாள்.

ருக்குவுக்கு நிஜமாகவே அன்று அதிர்ஷ்டம் தான்; எப்படியோ ஸ்வீட் புதுவிதமான ருசியோடு நன்றாகவே இருந்தது. வசந்த் வந்து, "இது என்ன ஸ்வீட்மா?" என்று கேட்க, ருக்கு திருதிருவென விழித்தாள். ஒருநொடிதான்; சட்டென "கன்ஜனாபின்னா" என்றாள். கன்னாபின்னா என்று செய்தது என்று சொல்ல வந்தவள், வாய் தவறி உளறிவிட, வசந்த் அதையே ஸ்வீட்டுக்கு நாமகரணம் சூட்டிவிட்டான்.

ருக்கு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். மாலை சுந்தரேசன் வந்ததும் கன்ஜனாபின்னாவோடு இனிப்புச் செய்தியைச் சொல்ல, அவருக்கும் சந்தோஷம்தான்; ஆனால் அதற்கு அல்பாயுசு; ருக்குவின் மூலமே வந்தது.

"prize கொடுக்கிறதை TV-யில காட்டுவாளாம்; அதுக்கு கட்டிண்டு போக நல்லதா ஒரே ஒரு புடவை வாங்கணும்; எனக்கு இந்த டிசைனர் ஸாரி,அது, இதுல்லாம் பிடிக்கிறதேயில்லை."

"கரெக்ட், ருக்கு, ஒரு புடவைக்கு ரெண்டாயிரம், மூவாயிரம்- அப்படின்னு கொள்ளையடிக்கறாங்க! அதனால நீ சிம்பிளா..." என்று அவர் சொல்லி முடிக்கு முன்,

"அதான்னா, நானே சொல்ல வந்தேன், சிம்பிளா ஒரே ஒரு பட்டுப்புடவை, ரெண்டு பக்கம் ஜரி போட்டு, லேட்டஸ்ட் டிசைன்ல..! எனக்கு அது போதும். என்ன, நாளைக்கு நல்லியா, குமரனா?"

காற்று பிடுங்கிய பலூனாக சுந்தரேசன் முகம் சுணங்கிப் போனது. ருக்குவுக்கு பரிசளித்த 'கானாபானா' கம்பெனிக்கு மனசுக்குள் அர்ச்சனை நடந்தது. பின்னே சும்மாவா? அவருடைய பணத்துக்கு (குறைந்தபட்சம் 6,000/-) வேட்டு வைத்து விட்டார்களே!!

******************
"கானாபானா" கம்பெனியின் பரிசளிப்பு விழா. "பன்" டி.வி- யில் நேரடி ஒளிபரப்பு. மினுமினு என்று வெளிச்சப் புடவைக்குள் ருக்கு; கதர் வேட்டி, சட்டையில் சுந்தரேசன், ருக்குவின் தொல்லை தாங்காமல் உடன் வந்திருந்தார்.

"ஏன்னா, ஜம்ஷெட்பூர்ல என் ஒண்ணு விட்ட சித்தியோட நாத்தனார் இருக்காளே, அவாளுக்கு இன்னிக்கு TV பார்க்க சொல்ல மறந்துட்டமே?!

"ருக்கு, இது ரொம்ப அநியாயம், தெரியுமா? "சின்னத்திரையில் முதல்முதலாக..." அப்படின்னு இன்னும் எல்லா TV-யிலும் விளம்பரம் கொடுக்கறது தான் மிச்சம். மற்றபடி உலகம் முழுக்க உனக்கு பரிசு வந்த விவரம் தெரியும், போதுமா?"

ருக்கு பரிசு வாங்கும் நிகழ்ச்சி முடிந்தது. ஆசையாக பிரித்துப் பார்த்த ருக்கு நொந்து போனாள். உள்ளே, சின்ன ஷோகேஸ் பொம்மை ஒன்று! விலை மதிப்பு அறுபதைத் தாண்டது!!

அடுத்ததாக, "இப்போது சில சிறப்புப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி. இந்தப் பரிசுகள் வாங்கியவர்களுக்கே இன்னும் இது பற்றித் தெரியாது. எங்கள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், திரு. "பன்" பானா அவர்கள் இப்போது பரிசு பெறும் நபர்கள், அதற்கான காரணங்களை அறிவிப்பார்."

"பன்" பானா வந்தார்.

"சிறந்த மனிதநேய உணர்வுக்கான பரிசு பெறுபவர்: திரு. சுந்தரேசன்" என்று கூறி அவரது முகவரியைக் கூற, சுந்தரேசனுக்கும், ருக்குவுக்கும் இன்ப அதிர்ச்சி! அதற்கான காரணம், இப்போது திரையில் ..." என்று கூற, அருகிலிருந்த திரையில் படம் தெரிய ஆரம்பித்தது. திரையில் ஒரு பிச்சைக்காரன் (இல்லை....அது "பன்" பானா தான் என்பது இப்போது சுந்தரேசனுக்கு புரிந்து விட்டது!!) சுந்தரேசனிடம் பிச்சை கேட்க, பையில்
இருந்த டப்பாவைத் திறந்து அதிலிருந்தவற்றை அப்படியே அவன் தட்டில் சுந்தரேசன் போடுவதும் திரையில் வந்தது. "பன்" பானா தொடர்ந்தார்:

"பிச்சை கேட்பவர்களை கேவலமாக விரட்டும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில், அவனையும் ஒரு மனிதனாக மதித்து தன் டப்பாவில் இருந்த அனைத்தையும், அதுவும் ஸ்வீட் முழுவதையுமே தானமாக கொடுத்த திரு. சுந்தரேசன் அவர்களை சிறந்த மனித நேய உணர்வுக்கான பரிசைப் பெற இப்போது அழைக்கிறோம்" என்று கூறி முடிக்க, கரகோஷம் வானைப் பிளந்தது!!

சுந்தரேசன் அவசரமாக "பிளாஷ்பேக்"கை மனதில் ஓடவிட்டார்; நினைவு வந்துவிட்டது. ருக்கு செய்த 'கன்ஜனாபின்னா' செலவாகாமல் ஒரு நாள் மதிய உணவுக்கு வைப்பதாக சொல்ல, சுந்தரேசன் மறுக்க முயன்று வழக்கம் போல் தோற்றார். ஆஃபீஸ் போகும் வழியில் பிச்சை கேட்டவனுக்கு அதனை மனப்பூர்வமாய் தானம் அளித்ததும், மதியம் ஆஃபீஸ் கேன்டீனில் வாய்க்கு ருசியாக சாப்பிட்டதும் இப்போது ஞாபகம் வந்துவிட்டது. காமெரா ஃப்ளாஷ்களுக்கு இடையில் சிரித்தபடி சுந்தரேசன் பரிசு பெற்ற போதும், ருக்குவின் பார்வை தன்னை நெருப்பாக எரிப்பதை அவரால் உணர முடிந்தது.

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்வரை இருவரும் எதுவும் பேசவில்லை. வீட்டுக்குள் நுழைந்ததும் மாமா அன்று கூரியரில் வந்ததாக ஒரு கடிதத்தை ருக்குவிடம் தந்தார்; பிரித்துப் பார்த்த ருக்குவின் கோபம் போன இடம் தெரியவில்லை! முகத்தில் 1000 வாட்ஸ் பல்பும் தோற்கும் அளவு பிரகாசம்!! சுந்தரேசனுக்கு ஒன்றும் புரியவில்லை; ருககு்வே விளக்கினாள்!!

"கன்ஜனாபின்னா"வை "moon tv" 'சமையல் சமையல்' - போட்டிக்கு அனுப்பி இருந்தேன்; first prize கிடைச்சிருக்கு! TV-யில வந்து செய்து காட்டச் சொல்லித்தான் லெட்டர் வந்திருக்கு!!!"

சுந்தரேசன் தடாலென மயங்கி விழுந்தார். ருக்கு தண்ணீர் கொண்டு வர உள்ளே ஓட, அப்பா மெதுவாக சுந்தரேசனை எழுப்பி காரணம் கேட்டார். அழாக்குறையாக சுந்தரேசன் தொடங்கி,

"கானாபானா கம்பெனி கொடுத்த பரிசு 60-ரூபாய்க்கு ஒரு பொம்மை, எனக்கு ஒரு பட்டம்! இதுக்கு ருக்கு செய்த செலவு என்ன தெரியுமா? ஏழாயிரம் ரூபாய்க்கு புது பட்டுப்புடவை,கன்ஜனாபின்னா செய்றதுல அவ வேஸ்ட் பண்ணின முந்திரி, பாதாம், பிஸ்தா, நெய், அவ prize வாங்கினதை அவ சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, friends, அப்படி எல்லாருக்கும் சொல்ல சிகாகோ, துபாய், லண்டன் - டெலிபோன் பில்! இப்படி இதை எல்லாம் நான் சமாளிக்கிறதுக்கே 2 மாசம் ஆகும்; இப்போ மறுபடி prize, அதுல டி.வி- யில செய்து காட்டணும்; அதுக்கு இன்னும் ரெண்டு புதுப்புடவை, புது டிசைன்ல நெக்லெஸ், சமையல் பண்ண புது பாத்திரங்கள், புது மிக்ஸி, மறுபடி முத்திரி, பாதாம், பிஸ்தா, நெய்- ஐயோ, மளிகைக் கடை பாக்கி கட்டிடறேன், நாடார், துரத்தாதீங்க!!"

அலறிக்கொண்டே சுந்தரேசன் மயங்கி விழ, தண்ணீர் கொண்டு வந்த ருக்கு இப்போது மாமாவும் சேர்ந்து மயங்கிக் கிடப்பதன் காரணம் புரியாமல் திகைத்து நினறாள்.

****************
 
anamika,

good one.

every once in a while, i get a phone call. i am a lucky winner of 3 days stay in a resort in florida.

can i please give the caller my credit card number to 'reserve' my prize. ;)

also, i get emails from nigeria, of untold millions which can be mine. all i need is to put upfront 50,000 dollars to clear some outstanding bribes. ;)

i think TV companies advertise and spend more money on the advertisements, than on the prize itself.
 

எனக்குத் தெரிந்த ஒரு மாமி, T V நிகழ்ச்சியில் பாட்டுப் போட்டிக்குப் போனார். முதல் பரிசு,

பட்டுப் புடவை; முதல் பரிசு அவருக்கே என அறிவிப்பு! பரிசுப் பெட்டியை, வாய் நிறையப்

பல்லாக வாங்கி வந்த பின், வீடு வரை வரப் பொறுமை இல்லாமல், ஆட்டோவிலேயே

திறந்தார். பெட்டி காலி! ஆட்டோவைத் திருப்பி, நிலையத்திற்குச் சென்று சண்டை

போடத் துவங்க, ஒரு கதை பதிலாக வந்தது! புடவை 'ஸ்பான்சர்' செய்த கடையின்

உரிமையாளரின் இல்லத்தரசி மாமி, தானும் பாட வேண்டும் என்று கேட்க, அவரின்

பேச்சுக் குரலில் வந்த கரகரப்ரியாவைக் கேட்டு மிரண்ட தொலைகாட்சி நிலையத்தார்,

'சான்ஸ்' கொடுக்க மறுத்துவிட, கோபம் உச்சந்தலைக்கு ஏறிய அந்த மாமி, புடவைப்

பெட்டிகளுக்குள் இருந்த புடவைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு போய்விட்டாராம்!


இது எப்படி இருக்கு?

:first: . . :drama:
 
Last edited:
raji,

i think, re your post #4, the lady can sue the t.v. station.

at the least, she can send letters to the newspapers about this fraud. yes, as far as she is concerned, this is 100% fraud.

shame on the tv station.
 
வாழ்க்கை வட்டம் - அனாமிகா

வாழ்க்கை வட்டம்
***********

"இத பாரு, ராகுல், முதல்லே கொஞ்ச நாள் கஷ்டமாத் தான் இருக்கும்; ஆனா அப்புறம் பழகிடும்! நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம்; வீட்டுல உன்னை சரியா கவனிக்கவும் முடிய்லை; உனக்கும் 'கம்பெனி' இல்லை....

அம்மா நிறுத்தி மூச்சு விடவும், உடனே அப்பா தொடர்ந்தார்:

"இங்கே எவ்ளோ ஃப்ரெண்ட்ஸ் பாரு! 'combined' ஸ்டடி பண்ணலாம்; பெரிய்ய்..ய 'playground' இருக்கு; எல்லா games-ம் விளையாடலாம்; ஹார்ஸ் ரைடிங், ஸ்கேடிங் - இன்னும் என்னெல்லாம் சொல்லித் தராங்க, தெரியுமா?"

அவர் சொல்லிக்கொண்டே போனதை எல்லாம் காது கேட்டாலும், மனசு உணர்ந்தது தனிமையே!

அன்று, அவர்கள் அவனை விட்டுச் சென்றது - பிரபலமான 'போர்டிங் ஸ்கூலில்' !

***************

இன்று -

"இங்க பாருங்கப்பா, முதல்லே கொஞ்ச நாள் கஷ்டமாத்தான் இருக்கும்; ஆனா, அப்புறமா பழகிடும். நான், மது ரெண்டு பேரும் பொறுப்பான வேலையில இருக்கோம்; வீட்டுல உங்களை சரியா கவனிக்கவும் முடியலை; 'கம்பெனி' இல்லை...."

அவன் இடைவெளி விட்டு நிறுத்த, மருமகள் மது தொடர்ந்தாள்:

"இங்கே உங்களுக்கு எவ்ளோ ஃபிரெண்ட்ஸ் இருப்பாங்க! தியானக் கூடம், பஜன் கிளாஸ், லைப்ரரி, கோவில், in-house medical facility, ஹவுஸ்கீப்பிங் ஆட்கள்.....அப்பப்பா.....என்னென்ன சௌகரியம்......."

இன்னும் அவள் சொல்லிக்கொண்டே போனது அவர் காதுகளில் விழுந்தாலும், அவர் மனத்தில் உணர்ந்தது - தனிமை மட்டுமே!

அவர்கள் அவரை விட்டுச் சென்றது - பிரபலமான முதியோர் இல்லத்தில்!!

******************
 
கதை கதையாம் - அனாமிகா

அந்த நாட்களில் வேதம் பயில இளம் பிரம்மச்சாரிகளை வேத பாடசாலைகளில் விட்டு விடுவார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன் .அதே மாதிரித்தான் இக்காலத்தில் போர்டிங் பள்ளிக்கூடங்களில் சிறுவர்களை சேர்க்கிறார்கள் . இதில் தவறொன்றும் இல்லையே . அதனால் வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுவது சரியாக எனக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை . நானும் ஓர் முதியோனே இவ்வயதில் எனது சுற்றத்தாரின் அன்பும் அரவணைப்பும் தான் எனக்குத்தேவை .
தங்கள் நலம்கோறும்
ப்ரஹ்மண்யன்,
பெங்களூர்
 
முதியோர் இல்லம்...

எல்லோரும் 'முதியோர் இல்லம்' என்பதையே வெறுக்க, எனக்கோ அது சரி என்றே

படுகிறது! இக்காலத்தில், வெளிநாட்டில் குடியேறிவிட்ட அனைத்துப் பிள்ளைகளாலும்

தம் பெற்றோரைத் தம்முடன் வைத்துக்கொள்ள முடிவதில்லை! பல்வேறு காரணங்கள்!

மேலும், ஒன்று இரண்டு குழந்தைகளே ஒவ்வொருவருக்கும் இருப்பதால், நிலைமை

இன்னும் கடினமாகிறது! தம்முடைய தனி வீடு அல்லது 'அபார்ட்மென்ட்' - ஐப் பாராமரிக்க

முடியும் வரை, எல்லாமே OK . அது முடியாதபோது, முதியோர் இல்லம் செல்லுவது

எனக்குத் தவறாகத் தோன்றவே இல்லை! ஒருவேளை, என் மகன் கடல் கடந்து settle

ஆகிவிட்டதால், இந்த யோசனை தோன்றுகிறதோ, என்னமோ!!


நட்புடன்,
ராஜி ராம் :ranger:
 
raji,

i salute you for a practical and realistic approach to the inevitable. one person, who will thank you for this attitude is your son. God Bless you dear lady.

there is only one point of discord that i wish to raise - why should this be seen as a good solution only for folks whose children are abroad? can it not be equally good for those within india itself.

i should like to state, even here in canada, there is a stigma attached to 'homes', though increasingly less, than what it was 30 years ago.

then, there are homes and 'homes'. i think, if you are willing to pay good money, you will get the care and quality that you can appreciate. matters become more difficult when we become ill to take care of ourselves or even worse, become senile in its various avatars. those period of second childhood, is hard on ourselves. much more so, for the caregiver. :(

a sudden quick death is a gift. worth praying every day for it. atleast i think so.

folks like brahmanyan, are among the luckiest for the type of old age they experience. and that does not mean, that where folks move to old age homes for one reason or other, need to think of their progeny as 'wanting' in love or affection.

வீட்டுக்கு வீடு வாசைப்படி.
 
Last edited:

Yes Kunjuppu Sir! As you say, Brahmanyan Sir is very lucky to be with his loved ones.

God bless his family! Now that many senior citizen homes give 5 * comfort, the seniors will not

have much problem to lead a peaceful life. No need to pay electricity bill, buy monthly milk card,

run to the ration shop to keep the card 'live', follow up the day to day house hold repairs etc.

Thanks to Anamika for giving us a chance to discuss about S C Homes!!

Raji Ram
 
Dear Mrs Raji Ram,

Well, It is not that I am against aged parents living in Old age homes, if there is absolute need. But the children who live in India or abroad should consider the option of taking their parents to live with them first, unless the parents themselves prefer to live in their home town. It is a difficult decision.
Regards,
Brahmanyan,
Bangalore.

Shri Brahmanyan Sir,

Excuse me for spoiling the "good mood" of this thread. Today, in every Tamil brahmin family, the aged parents of the husband have become "garbage" which cannot be easily disposed of. This is the undiluted stark truth. The daughter-in-law just cannot tolerate the two old "Saniyans" with their pains, medicines, restrictions, etc. Some of them are bold enough to induce their husbands to exile the two "useless items" to the cheapest Old Age Home (OAH), while others curse and grumble their fate and make it a real ordeal for their in-laws to live with them.

In such a climate if the old man/old woman have some assured source of regular income, it is best for them to go live in an OAH which will suit their pocket. But like everything else in our country, OAHs have already become rackets in the hands of unscrupulous fellows. Next to orphanages, special schools for the mentally retarded, etc., OAH is the latest money-making scandal. So my advice to old persons in India is try to live alone - away from your worthless son/s who are slaves to their wives; think twice before joinig an OAH, because you will realize soon that getting kicked and abused by your DIL is a shade better than getting kicked and abused by some xyz employee of the OAH.

If your son is abroad, don't go there at all to spend your last days.
 
Let us allow dear Anamika to go :focus: !!

Dear Mrs. Raji Ram,

You are correct. We have digressed away from the thread started by Anamika. I have deleted my earlier reply, allowing Anamika to continue her thread.

Regards,
Brahmanyan,
Bangalore.
 
வாழ்க்கை வட்டம்
***********

"இத பாரு, ராகுல், முதல்லே கொஞ்ச நாள் கஷ்டமாத் தான் இருக்கும்; ஆனா அப்புறம் பழகிடும்! நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம்; வீட்டுல உன்னை சரியா கவனிக்கவும் முடிய்லை; உனக்கும் 'கம்பெனி' இல்லை....

அம்மா நிறுத்தி மூச்சு விடவும், உடனே அப்பா தொடர்ந்தார்:

"இங்கே எவ்ளோ ஃப்ரெண்ட்ஸ் பாரு! 'combined' ஸ்டடி பண்ணலாம்; பெரிய்ய்..ய 'playground' இருக்கு; எல்லா games-ம் விளையாடலாம்; ஹார்ஸ் ரைடிங், ஸ்கேடிங் - இன்னும் என்னெல்லாம் சொல்லித் தராங்க, தெரியுமா?"

அவர் சொல்லிக்கொண்டே போனதை எல்லாம் காது கேட்டாலும், மனசு உணர்ந்தது தனிமையே!

அன்று, அவர்கள் அவனை விட்டுச் சென்றது - பிரபலமான 'போர்டிங் ஸ்கூலில்' !

***************

இன்று -

"இங்க பாருங்கப்பா, முதல்லே கொஞ்ச நாள் கஷ்டமாத்தான் இருக்கும்; ஆனா, அப்புறமா பழகிடும். நான், மது ரெண்டு பேரும் பொறுப்பான வேலையில இருக்கோம்; வீட்டுல உங்களை சரியா கவனிக்கவும் முடியலை; 'கம்பெனி' இல்லை...."

அவன் இடைவெளி விட்டு நிறுத்த, மருமகள் மது தொடர்ந்தாள்:

"இங்கே உங்களுக்கு எவ்ளோ ஃபிரெண்ட்ஸ் இருப்பாங்க! தியானக் கூடம், பஜன் கிளாஸ், லைப்ரரி, கோவில், in-house medical facility, ஹவுஸ்கீப்பிங் ஆட்கள்.....அப்பப்பா.....என்னென்ன சௌகரியம்......."

இன்னும் அவள் சொல்லிக்கொண்டே போனது அவர் காதுகளில் விழுந்தாலும், அவர் மனத்தில் உணர்ந்தது - தனிமை மட்டுமே!

அவர்கள் அவரை விட்டுச் சென்றது - பிரபலமான முதியோர் இல்லத்தில்!!

******************

Sow Anaamikaa,

After that horribly unintelligent story from you, it is really difficult to believe that this short story is from the same person :)
 
வாழ்க்கை வட்டம்
***********

"இத பாரு, ராகுல், முதல்லே கொஞ்ச நாள் கஷ்டமாத் தான் இருக்கும்; ஆனா அப்புறம் பழகிடும்! நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம்; வீட்டுல உன்னை சரியா கவனிக்கவும் முடிய்லை; உனக்கும் 'கம்பெனி' இல்லை....

அம்மா நிறுத்தி மூச்சு விடவும், உடனே அப்பா தொடர்ந்தார்:

"இங்கே எவ்ளோ ஃப்ரெண்ட்ஸ் பாரு! 'combined' ஸ்டடி பண்ணலாம்; பெரிய்ய்..ய 'playground' இருக்கு; எல்லா games-ம் விளையாடலாம்; ஹார்ஸ் ரைடிங், ஸ்கேடிங் - இன்னும் என்னெல்லாம் சொல்லித் தராங்க, தெரியுமா?"

அவர் சொல்லிக்கொண்டே போனதை எல்லாம் காது கேட்டாலும், மனசு உணர்ந்தது தனிமையே!

அன்று, அவர்கள் அவனை விட்டுச் சென்றது - பிரபலமான 'போர்டிங் ஸ்கூலில்' !

***************

இன்று -

"இங்க பாருங்கப்பா, முதல்லே கொஞ்ச நாள் கஷ்டமாத்தான் இருக்கும்; ஆனா, அப்புறமா பழகிடும். நான், மது ரெண்டு பேரும் பொறுப்பான வேலையில இருக்கோம்; வீட்டுல உங்களை சரியா கவனிக்கவும் முடியலை; 'கம்பெனி' இல்லை...."

அவன் இடைவெளி விட்டு நிறுத்த, மருமகள் மது தொடர்ந்தாள்:

"இங்கே உங்களுக்கு எவ்ளோ ஃபிரெண்ட்ஸ் இருப்பாங்க! தியானக் கூடம், பஜன் கிளாஸ், லைப்ரரி, கோவில், in-house medical facility, ஹவுஸ்கீப்பிங் ஆட்கள்.....அப்பப்பா.....என்னென்ன சௌகரியம்......."

இன்னும் அவள் சொல்லிக்கொண்டே போனது அவர் காதுகளில் விழுந்தாலும், அவர் மனத்தில் உணர்ந்தது - தனிமை மட்டுமே!

அவர்கள் அவரை விட்டுச் சென்றது - பிரபலமான முதியோர் இல்லத்தில்!!

******************

anamika,

there is an innuendoish admonition of children, for having, 'failed' their parents by not taking care of them in their old age.

ofcourse, it would be nice. terribly nice. if the oldsters could spend their golden years with their youngsters.

in many cases it is possible. many not.

i think, what is important, is that the solutions should flow naturally. not be forced, because of some morality and 'value' issue.

today's cirucmstances are such, that old age homes can be as viable an alternative, or even a superior one, to living with children.

for many oldsters, they are tired after a lifetime of work and struglle. a good oah provides a natural environment to relax and spend time with folks their own age.

part time grand parenting is an undiluted joy. spend some quality time with the grandchildren, treat them, have fun with them, play with them, and hand them back to the parents for feeding, changing, clothing, napping and what not.

unfortunately, in today's environment, the parents, especially the grand mother becomes a de facto servant - cook, caregiver, mother, grandmother and much much more.. all when she is in her 50s or 60s.

initially for the first couple of weeks it is pleasure, but after that it is a chore. the poor lady can neither spit nor swallow.

all i am saying, is that there is no fixed formula. whatever works for one, need not necessarily work for another.

there is no need to criticize one solution because one does not like it. jut let it be.

thank you.
 
Kunjuppu Sir,

"all i am saying, is that there is no fixed formula. whatever works for one, need not necessarily work for another.

there is no need to criticize one solution because one does not like it. jut let it be."

I also agree with and like your view. Also I feel, irrespective of the place they are staying - son/ daughter/ separate establishment/ OAH - they are ENTITLED to treatment with RESPECT and DIGNITY and they can choose and live there with REAL peace of mind. I feel in our country though they are known by attractive names like Senior Citizens home, Retirement paradise etc, still there is a stigma attached to stay in OAH. As Sarma Sir points out, there are many elderly people who suffer silently in their own families due to insult and disrespect meted out by their son and his family members as they feel moving out to OAH will spoil the "GOOD" name of their son and family in the society.

Thanks to all for sharing their views.

Anamika.
 
...... there are many elderly people who suffer silently in their own families due to insult and disrespect meted out by their son and his family members as they feel moving out to OAH will spoil the "GOOD" name of their son and family in the society.

...

dear anamika,

can you please explain this?

are the parents feeling let down, because it was their expectation, that they will spend the old age with their sons, and now they cannot fulfil that wish?

are they feeling 'shame' or loss of face, because, they now, instead of living with their son (a great brag line) they have to live in a oah.

how does it reconcile the fact, that they expect the dil to clean up and nurse them? after all she is a 3rd party. would not a daughter be a natural candidate to spend the old age with? a daughter will always have feelings for her parents, but a dil is just that - dil.

would a good quality oah make a difference? if they get better food, better companionship, better entertainment and above all a rest from household chores - would this be consolation enough? or is it 'my son - whether i be a slave or master?'

anamika, hopefully i have given you some pointers. i need to understand, if possible, why there is so much stigma against oah. thank you.
 
Dear Mrs. Raji Ram,

You are correct. We have digressed away from the thread started by Anamika. I have deleted my earlier reply, allowing Anamika to continue her thread.
...............
Dear Sir,

You need not have deleted your earlier posts. I was afraid that many people will enter this

thread to show their debating skills and disturb Anamika! I liked your replies, Sir!

Regards,
Raji Ram
 
Hello Kunjuppu Sir,

AFAIK, our culture emphasizes on the role and due respect towards one's Parents right from the beginning as "மாதா பிதா குரு தெய்வம்" and not only the children are expected to take care of their Parents until they are alive and even after their demise there is a lot of ceremonies to be performed as the 'Amavasya Tharpanam' so that the next generation gets their blessings. Given this base surely all Parents will expect and consider their it their children's duty to take care of them in their old age. Very few realistic and practical people may be the exception. So, when they are forced to be in OAH,( when the children are in India) surely they may feel it is a blot on their upbringing too. If the children are settled abroad, the stigma for a stay in OAH is somewhat less. This is attributed to the fact that everyone knows older people cannot adjust to the extreme weather conditions and a new attitude and medical facility abroad is a lot expensive in foreign countries.

would not a daughter be a natural candidate to spend the old age with?

This question is a potential thread starter.

This question was discussed by my sister and me. She too has the same idea where the aged Parents can be taken care of by the daughter's family. The link can be continued and if it becomes acceptable, it will somewhat reduce the prejudice among the Parents to stay with a married daughter. And here is also a hitch! The S-i-l should be really and willingly accommodating the Parents without whose concurrence this cannot be a success!

Thanks
Anamika
 
I did not want to drag the arguments about old parents!

But after seeing the reply from Anamika, I think it is apt to post my write up here,

though it has appeared already in my thread 'eNNa alaigaL'...

It is the lament of parents of different types, all in one poem!!

அறிவீரே பெற்றோரே!

பாசம் காட்டி வளர்த்த மகன் மேலை நாடு சென்ற பின்
நேசம் காட்ட மறந்தால் என்னதான் செய்வது?

“தென்னையை வெச்சா இளநீரு; பிள்ளையைப் பெத்தா கண்ணீரு!”
உண்மைதான் உரைத்துள்ளார்! அது மிகக் கசப்புத்தான்!

தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேடணுமாம் – பெற்றோர்
தன் வேலை வளர்த்ததுடன் தீர்ந்த்ததென எண்ணணுமாம்!

நம் இனத்தில் நல்ல பெண்ணிருந்தால் கூறு என்றால்,
எவ்வினமாயின் என்ன? உன் வேலையைப் பார் என்கின்றார்!

தன்னைப் பேணிய பெற்றோரை விடவும் – தான் அந்த
மண்ணில் கண்ட மடந்தை உயர்வாகப் போகின்றாள்!

இந்நாளில் பெண்களுக்கோ அமெரிக்க மாப்பிள்ளை வேணும்;
எந்நாளும் மாமன் மாமி இந்தியாவில் இருக்கவேணும்!

பெண்கள் மட்டும்தான் பெற்றோரைப் பேணுகின்றார் – இல்லை!
பெண்கள் தன் பெற்றோரை மட்டும் பேணுகின்றார்!!


சாண்பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்று எண்ணித்
தான் மகிழ்ந்த காலமெல்லாம் மலை ஏறிப் போயிற்று!

பிற் காலத்தில் தன் தேவைகளைத் தன் பிள்ளை கவனிப்பான் என
எக்காலத்திலும் கற்பனை வேண்டாம்! அறிவீரே! பெற்றோரே!

தன் உழைப்பால் சேர்த்த செல்வம் தானம் தருமம் போகத்
தனக்கென்றே வைத்தவர்தான், கலிநாளில் பிழைத்திடுவர்!!

:ballchain:
 
anamika,

i will start a new thread. great idea.

would not a daughter be a natural candidate to spend the old age with?
 
பார்வைகள் - அனாமிகா

பார்வைகள்
*********

"சார், போஸ்ட்..."

தணிகாசலம் லெட்டர்களை எடுத்துக்கொண்டு நுழையவும், மரகதம் சமையல் அறையிலிருந்து வந்தாள்.

"யார்கிட்டேர்ந்துங்க? இந்திராவா, சந்திராவா?"

மரகதம் ஆவலுடன் கேட்டாள்.

"ரெண்டு பேருகிட்டேர்ந்தும் வந்திருக்கு; இரு, படிக்கிறேன்" என்றபடி லெட்டரைப் பிரித்தார்.

தணிகாசலம் - மரகதம் தம்பதிக்கு வாரிசு இந்திரா - சந்திரா மட்டுமே; இரட்டையர். இந்திரா கோயமுத்தூரிலும், சந்திரா ராஜபாளையத்திலும் வசிக்கிறார்கள்.

முதலில் இந்திராவின் லெட்டரைப் படித்தார்.

"அன்புள்ள அப்பா, அம்மாவிற்கு...." - வழக்கமான விசாரிப்புகள் எல்லாம் முடிந்ததும், " எனக்கு வாழ்க்கை மெஷின் மாதிரி இருக்கிறது. வேலைக்குப் போக இஷ்டமே இல்லை; ஆனால், இவர் 'எம்.காம் படித்து விட்டு, வீட்டில் சும்மா இருப்பதா?' என்கிறார். வீட்டிலும் வேலை; வெளியிலும் வேலை; இந்த லெட்டர் நான் எழுதும் போது நேரம் ராத்திரி மணி பதினொன்று! இவரையும், நிவேதாவையும் நான் சரியாக கவனிப்பதில்லையோ என்று
அடிக்கடி தோன்றுகிறது. சந்திரா கொடுத்து வைத்தவள்! வீட்டில் வேலைகளை முடித்து விட்டு, அக்கடாவென்று கால் நீட்டி உட்கார அவளுக்கு வாழ்க்கை அமைந்திருக்கிறது. யாரைச் சொல்லி என்ன ஆகப்போகிறது?"

அதற்குமேல் அதைப் படிக்க மனமின்றி மரகதத்திடம் கொடுத்த தணிகாசலம், சந்திராவின் கடிதத்தைப் படித்தார்.

"அன்புள்ள அப்பா, அம்மாவிற்கு...." வழக்கமான உடல் நல விசாரிப்புக்குப் பின், " எனக்கு ரொம்ப போரடிக்கிறது. தினமும் காலை இவர் ஆஃபீசுக்கும், கணேஷ் ஸ்கூலுக்கும் கிளம்பிப் போய்விடுகிறார்கள். சாயங்காலம் வரை கொட்டுகொட்டென்று எத்தனை நேரம் உட்கார்ந்திருப்பது? வீட்டைச் சுற்றி சுற்றி வந்து என்ன செய்வது? சமையல் செய்து குடும்பம் நடத்த எட்டாம் கிளாஸ் போதாதா? இதற்கா என்னை எம்.காம் வரை படிக்க வைத்தீர்கள்? உங்கள் மாப்பிள்ளைக்கு என்னை வேலைக்கு அனுப்ப துளியும் இஷ்டம் இல்லை; 'என் சம்பளமே நமக்குப் போதும்' என்று சொல்லி என் வாயை அடைத்து விடுகிறார். ஹ்ம்...எல்லாவற்றுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்; அழகாக டிரெஸ் செய்து வேலைக்குப்
போகவும், கணக்குப் பார்க்காமல் சம்பாதித்ததை செலவு செய்யவும், ஹ்ம்....இந்திரா மாதிரி இருக்க எனக்கு அதிர்ஷ்டம் இல்லைதான்..."

தணிகாசலத்துக்கு தலை சுற்றுவது போலிருக்க, நாற்காலியில் அமர்ந்து விட்டார்.

*********************
 
நச்சுன்னு ஒரு குட்டிக் கதை, அனாமிகா!

'இக்கரைக்கு அக்கரை பச்சை'-ன்னு சும்மாவா சொன்னார்கள்? :director:
 
தன் வினை - அனாமிகா

தன் வினை
********

மாலை. அலுவலகம் முடிந்து வரும் போதே "சாந்தி, சாந்தி" என்று அழைத்துக் கொண்டே மோகன் வீட்டுக்குள் நுழைந்தான்.

"என்னங்க? என்ன விஷயம்?" சாந்தி வர,

"ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அப்பா, அம்மா எங்கே?"

"வெள்ளிக்கிழமைனு கோயிலுக்குப் போயிருக்காங்க"

"அவங்க வீட்டுல இல்லாததும் நல்லதுக்குத் தான். அது சரி, வயசானவங்களை முதியோர் இல்லத்துல சேர்க்கறதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?"

"அதுல ஒண்ணும் தப்பே இல்லீங்க; வயசானவங்களை வீட்டுல வெச்சிட்டு நாம மட்டும் வெளில, வாசல்ல போக முடியுதா? மாசத்துக்கு ரெண்டு, மூணு தரமாவது மூட்டு வலி, சர்க்கரை, அது இதுனு அவங்க கூட வீட்டுக்கும், ஆஸ்பத்திரிக்கும் அலையணும்; விழுந்து விழுந்து கவனிச்சாலும், ஆயிரம் தப்பு சொல்வாங்க; பேசாம முதியோர் இல்லத்துல சேர்த்து பணத்தைக் கட்டிட்டா, அவங்களுக்கும் வசதி; அங்கேயே டாக்டர் இருப்பாங்க;
கவனிச்சுக்குவாங்க; நமக்கும் தொந்தரவில்லை; என்னங்க, அத்தை, மாமாவை சேர்க்கப் போறீங்க தானே?"

ஆவலுடன் சாந்தி கேட்க,

"சீச்சீ! எங்கப்பா, அம்மாவை சேர்க்க இல்லை. உங்க அண்ணன் ஆஃபீஸ்லேர்ந்து போன் பண்ணியிருந்தான்; நீ சொல்ற மாதிரியே உங்க அண்ணியும் முதியோர் இல்லத்துல உங்க அப்பா, அம்மாவை சேர்க்கணும்னு பிடிவாதமா இருக்காங்களாம்; உன் அபிப்ராயம் என்னன்னு நாளைக்கு கேட்டு சொல்லச் சொன்னான்....."

சாந்தி அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள்.

****************
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top