• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஓம் நம: சிவாய!

Status
Not open for further replies.
நந்தி3 ஸ்துதி.

நந்தி3கேச' மஹாபா4க3 சி'வத்3யான பராயண |
கௌ3ரி ச'ங்கர ஸேவார்த2ம் அனுஜ்ஞாம் தா3துமர்ஹசி||

சிவபிரான் திருவடியில் சரணம் புகுந்து, சிவ தியானத்தில் ஆழ்ந்து இருக்கும் புண்ணியசாலியாகிய நந்திகேஸ்வரனே!
சந்நிதியில் சென்று பார்வதி பரமேஸ்வரர்களைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருவாய்.
 
ஸ்ரீ சிவ ஸ்தோத்திரம்.

ஹே சந்த்3ரசூட3 மத3னாந்தக சூ'ல பாணே

ஸ்தாணோ கி3ரீச' மஹேச' ச'ம்போ4|
பூ4தேச பீ4தப4ய ஸூத3ன
மமநாத2ம்
ஸம்ஸார து3க்க க3ஹநாத் ஜக3தீ3ச' ரக்ஷ || (1)


சந்திரனை ஜடையில் தரித்தவனே! மன்மதனை எரித்தவனே! கையில் சூலாயுதம் ஏந்தியவனே!
அசையாத நிலையில் அமர்ந்தவனே! கிரியின் அரசனே! மகேஸ்வரனே!
சுகம் அருள்பவனே! பூதகணங்களின் தலைவனே! பக்தர்களின் பயத்தைப் போக்குபவனே!
ஜகத்துக்கெல்லாம் ஈஸ்வரனே! என்னை காக்கும் தலைவனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய்
ஜகதீசனே!
 
Last edited:
ஹே பார்வதி ஹ்ருத3ய வல்லப4சந்த்3ரமௌனே
பூ4தாதி4ப ப்ரமதநாத2கி3ரீச' சாப |
ஹே வாமதே3வ ப4வ ருத்3ர பினாகபாணே |
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச' ரக்ஷ || (2 )

ஹே பார்வதியின் மனம் கவர்ந்தவனே!சந்திரசூட! பூதங்களின் தலைவனே! ப்ரமத கணங்களின் நாதனே!
மேருவை வில்லாக வளைத்தவனே! வாமதேவனே! ஜகத்துக்குக் காரணமானவனே! துயர்களைத் துடைப்பவனே!
பினாகம் என்ற வில்லை ஏந்தியவனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 

ஹே நீலகண்ட2வ்ருஷப4த்4வஜ பஞ்சவக்த்ர

லோகேச' சே'ஷ வலய ப்ரமதே2ச' ச'ர்வ |
ஹே தூர்ஜடே பசு'பதே கிரிஜாபதே மாம்
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச' ரக்ஷ || (3 )

ஹே நீலகண்டனே! விருஷபக் கொடியோனே! ஐந்து திரு முகங்கள் உடையவனே! லோக நாதனே!
ஆதிசேஷனைக்
கங்கணமாக அணிந்தவனே! ப்ரமத கணங்களின் தலைவனே! சர்வ சம்ஹாரனே!
பரந்து விரிந்த ஜடை உடையவனே! அனைத்து ஜீவராசிகளின் தலைவனே! மலைமகள் மணவாளனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 
ஹே விச்'வநாத2 சி'வச'ங்கர தேவதேவ
க3ங்கா3த4ர ப்ரமத நாயக நந்தி3கேச' |
பா3ணேச்'வராந்தகரிபோ ஹரலோக நாத2
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச' ரக்ஷ || (4 )

புவனாதிபதியே! மங்கள மூர்த்தியே! நன்மைகள் செய்பவனே! தேவாதி தேவனே! கங்காதரனே!
ப்ரமத கணங்களின் தலைவனாக நந்தியை உடையவனே! பாணாசுரனுடைய ஈஸ்வரனே!
அந்தகாசுரனைக் கொன்றவனே! பாபங்களைத் தொலைப்பவனே! உலகனைத்துக்கும் நாதனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 
வாரணாஸீபுரபதே மணிகர்ணிகேச'
வீரேச' த3க்ஷ மக2கால விபோ க3ணேச' |
ஸர்வக்ஞ ஸர்வ ஹ்ருத3யைக நிவாஸ நாத2
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச' ரக்ஷ || (5 )

காசி மாநகர் உள்ளானே! ணிகர்ணிகைக்கு நாயகனே! வீரபத்ரனுக்கு ஈசனே!
தக்ஷனின் யாகத்தை அழித்தவனே! எங்கும் நிறைந்துள்ளவனே! தேவ கணங்களின் தலைவனே!
எல்லாம் அறிந்தவனே! எல்லா ஜீவராசிகளின் இருதயங்களில் வாழ்பவனே! என்னுடைய நாதனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 
ஸ்ரீமன் மஹேச்'வர க்ருபாமய ஹே த3யாளோ
ஹே வ்யோமகேச' சி'திகண்ட2 க3ணாதி4 நாத2 |
பஸ்மாங்க3ராக3 ந்ருகபால கலாப மால
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச' ரக்ஷ || (6)

தன்னிகர் இல்லாத அழகு வாய்ந்தவனே! மகேஸ்வரனே! கருணையின் வடிவானவனே! தயை நிரம்பிய உள்ளம் கொண்டவனே! ஆகாயத்தையே உன் கேசமாகக் கொண்டவனே!
நீல கண்டம் உடையவனே! பூத கணங்களின் தலைவனே!விபூதி அணிந்தவனே! கபால மாலையை அணிந்தவனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 
கைலாஸசைலவிநிவாஸ வ்ருஷாகபே ஹே
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகன்நிவாஸ |
நாராயணப்ரிய மதா3பஹ ச'க்திநாத2
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச' ரக்ஷ || (7)

கைலாஸ கிரியை இருப்பிடமாகக் கொண்டவனே! தர்மஸ்வரூபனே! காலனை ஜெயித்தவனே! முக்கண்ணனே! மூன்று உலகங்களிலும் நிறைந்துள்ளவனே! நாராயணப்ரியனே! கர்வத்தை அழிப்பவனே! பராசக்தியின் பதியே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 
இந்த மொழி பெயர்ப்பு, பல க்ருதிகளைப் புரிந்துகொள்ள மிக உதவி செய்யும்.

அன்புடன்,
ராஜி ராம் :ranger:
 
விச்'வேச' விச்'வப4வநாஸக விச்'வரூப
விச்'வாத்மக த்ரிபு4வனைக கு3ணாதி4கேச' |
ஹே விச்'வநாத2 கருணாலய தீ3னப3ந்தோ4
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச' ரக்ஷ || (8)

ஹே விஸ்வச்வர! உலகெல்லாம் படைத்தது அழிப்பவனே!
விஸ்வரூபம் தரித்தவனே! உலகங்களின் பரம் பொருளே!
அனைத்து நற்குணங்களின் இருப்பிடம் ஆனவனே! உலகத்தின் நாதனே! கருணைக் கடலே! ஏழைப்பங்காளனே !
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 
கௌ3ரிவிலாஸ ப4வனாய மகேச்'வராய
பஞ்சானனாய சரணாக3த கல்பகாய |
ஸர்வாய ஸர்வஜக3தாமதி4பாய தஸ்மை
தா3ரித்4ர து3:க2 த3ஹனாய நம: சி'வாய || ( 9 )



பார்வதி தேவியின் லீலைகளுக்கு இருப்பிடம் ஆனவனே! எல்லோருக்கும் ஈஸ்வரனே! ஐந்து முகங்கள் உடையவனே! தஞ்சம் அடைந்தவர்களுக்கு விரும்பியவற்றை அளிக்கும் கற்பகவிருக்ஷம் ஆனவனே! சம்ஹாரகனே! எல்லா உலகங்களுக்கும் அதிபனே! வறுமைப் பிணியைத் தீர்ப்பவனே! சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 
அதி பீ4ஷண கடு பா4ஷண யமகிங்கர படலி
க்ருத தாட3ன பரிபீட3ன மரணாக3ம ஸமயே |
உமையாஸஹ மமசேதஸி யமசா'ஸன நிவஸந்
சி'வச'ங்கர சி'வச'ங்கர ஹர மே ஹர து3ரிதம் (10 )


எமனையே தண்டிக்கின்ற சிவசங்கரா! மிகவும் பயங்கரமான எமதூதர்கள் கர்ண கடூரமான வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் என்னை வதைக்கையில், பார்வதி அன்னையுடன் கூட வந்து, நீங்கள் என் சித்தத்திலிருந்து கொண்டு என் பாவங்களைப் போக்குவீராகுக!
 
Last edited:
அஸாரே ஸம்ஸாரே நிஜ ப4ஜனதூ3ரே ஜட3தி4யா
ப்4ரமந்தம் மாமந்த4ம் பரமக்ருபயா பாதுமுசிதம் |
மத3ன்ய: கோ தீ3னஸ்தவ க்ருபணரக்ஷாதிநிபுண :
த்வத3ன்ய : கோ வா மே த்ரிஜக3தி ச'ரண்ய பசு'பதே || (11)

விவேகம் இல்லாதவர்களுக்கு நல்லறிவு அளித்துக் காப்பவரே! தேஹம் முதலிய ஜடப் பொருட்களில் இருந்து வேறுபட்டவரே! மாயையில் அகப்படாதவரே! உங்கள் பக்திக்கு வெகு தூரத்தில் இருப்பதும், இன்பம் அற்றதுமான சம்சாரத்தில் உழல்கின்ற குருடனான என்னைத் தாங்கள் கருணையுடன் காப்பாற்றுவது உசிதம். என்னை விட தீனன் யார் உள்ளார்?ஏழைகளை ரக்ஷிப்பதில் மிகுந்த சமர்த்தரும், சரணம் அடையத் தகுந்தவரும் என மூன்று உலகில் உம்மை விட்டால் எனக்கு யார் இருக்கின்றார்கள்?
 
ஸ்ரீச' : ச'ர: கனக பூ4மித4ர: ச'ராஸ:
வாஸஸ்து ரூப்யசி'க2ரீ த4நத3: ஸகா2 தே |
த்வாம் ஆச்'ரிதஸ்ய மம கிம் ந து4நோஷி தை3ன்யம்
ஸ்ரீ மாத்ருபூ4த சி'வ பாலயமாம் நமஸ்தே || (12)

ஹே தாயுமான பரமேஸ்வரா! உமக்கு விஷ்ணு வே பாணம்; மஹாமேருபர்வதமே தனுசு; உமது இருப்பிடம் வெள்ளி மலை; உமது நண்பன் குபேரன்; உம்மையே சரணம் அடைந்த என்னுடைய ஏழ்மையை ஏன் இன்னும் நீர் போக்கவில்லை? உமக்கு என்னுடைய நமஸ்காரம். என்னை நீரே காத்தருள வேண்டும்!
 
இந்த்3ராதி3 தி3க்பதி நிரங்குச' பா4க்3ய ஹேதும்
சந்த்3ராதி ரம்ய ப4வதா3ஸ்ய ம்ருகா3யமாணம் |
இந்தீ3வரோ த3ர மனோஹரம் ஈச'தா3ஸே
ஜம்பூ3 பதே மயி நிதே4ஹி க்ருபாகடாக்ஷம் || (13)

ஹே ஜம்புகேஸ்வரா! இந்திரன் முதலான லோகபாலகர்களின் தடையில்லாத பாக்கியத்துக்கு காரணமானதும்; சந்திரனை ஒத்த அழகிய தங்கள் முகத்தில் மானை நினைவூட்டுவதும், கருநெய்தல் மலர்களை நிகர்த்த அழகுடையதும் ஆன தங்களின் அருள் விழிகளை என் மேல் கடாக்ஷிக்க வேண்டும்.
 
கலாப்4யாம் சூடா3லங்க்ருத ச'சி' கலாப்4யாம் நிஜதப :
ப2லாப்4யாம் ப4க்தேஷு ப்ரகடித ப2லாப்4யாம் ப4வது மே |
சி'வாப்4யாமச்'தோக த்ரிபு4வன சி'வாப்4யாம் ஹ்ருதி3 புனர்
ப4வாப்4யாமானந்த3 ஸ்புரத3னுப4வாப்4யாம் நதிரியம் || (14)

சகல வித்யா ஸ்வரூபர்கள்; கூந்தலில் அணியாக வைக்கப்பட்ட சந்திரகலையை உடையவர்கள்; தமது சொந்தத் தவத்தின் பயனாகத் தோன்றியவர்கள் ; தம் பக்தரிடம் பலவித பலதானங்களை பிரகடனம் செய்பவர்கள்; மூன்று உலகங்களுக்கும் மங்கலத்தை அளிப்பவர்கள்; மனதில் அடிக்கடித் தோன்றுபவர்கள்; ஆனந்தமயமாகப் பிரகாசிக்கும் ஞான வடிவினர்களாகிய பார்வதி பரமேஸ்வரர்களுக்கு இந்த நமஸ்காரம்.
 
கரசரணக்ருதம் வா கர்மவாக்காயஜம் வா
ச்'ரவண நயனஜம் வா மானஸம் வாபராத3ம் |
விஹிதமவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சி'வ சி'வ கருணாப்3தே4 ஸ்ரீ மஹாதே3வ ச'ம்போ4|| (15 )


மங்களஸ்வரூபனே! கருணைக் கடலே! ஸ்ரீ மகாதேவா! கரம், பாதம், வாக்கு, தேஹம், காது, கண், மனம் இவற்றால் நான் செய்த அபசாரங்களையும், தவறான செய்கைகளையும் பொறுத்தருள்வீர்!


அந்யதா ச'ரணம் நாஸ்தி த்வமேவ ச'ரணம் மம |
தஸ்மாத் காருண்ய பா4வேன ரக்ஷ ரக்ஷ மஹேச்'வர || (16 )

ஹே பரமேஸ்வர! எனக்கு வேறு கதி இல்லை! நீயே துணை! ஆகையால் என்னைக் கைவிடாது கருணை கூர்ந்து என்னைக் காப்பாற்றுவீர்! :pray:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top