• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

tamil haiku kavithaigal- anamika

Status
Not open for further replies.

anamika

Active member
வனவாசம்


மகனென்னும் தேசத்தில்
மகிழ்ந்திருக்க உரிமையுள்ள
பாண்டவராய் பெற்றோர்கள்!
ஊசிமுனை நிலம் கூட
உங்களுக்கு இல்லையென
உரைத்திடும் துரியனாய்
உருமாறினாள் மருமகள்!

இதோ - இந்தப் பாண்டவர்கள்
புறப்பட்டு விட்டார்கள்:
குருக்ஷேத்திரம் நோக்கி அல்ல!
மீண்டும் அடுத்த வனவாசத்துக்கு!!

**********************

முரண்

சிக்னலுக்காக
காத்திருக்கும் கார்-
வெளியே
கையேந்தி நிற்கும் சிறுமி;
உள்ளே
கம்பீரமாய் வாலாட்டும் 'டாமி'!

*******************

கருணை

காற்றே!
கருணை செய்க!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!
 
Hello Ma'am,

Thanks for your appreciation; I'll upload a few more poems of mine too.

Regards
Anamika
 
Hello Ma'am,

Thanks for your appreciation; I'll upload a few more poems of mine too.

Regards
Anamika
Hi Anamika!

You mean to say that those poems are written by someone else? If so, please give the author's name.

Best wishes,
Raji Ram
 
Hi Raji Ma'am,

The poems are written by me; I was just replying to V.R.Ma'am's post where she asked for more poems.

Hope this clarifies your doubt.

Thanks
Anamika

Hi Anamika!

You mean to say that those poems are written by someone else? If so, please give the author's name.

Best wishes,
Raji Ram
 
request - to know about veda classes in Coimbatore

Dear V.R. Ma'am,

I browsed some previous threads and came to know that you have learnt Rudram, Chamakam and vedas,too. I would like to get my son enrolled in veda class for the summer vacation. I am also located in Saravanampatty in Coimbatore. If you know of any individual/ organisation imparting veda classes during summer for kids, please let me know. My son had his upanayanam last year. Also, Please let me know any place /person imparting veda classes, if in and around Saibaba colony, Ganapathy etc.

Thank you
with regards
Anamika.
 
Hi Anamika,

Expected a poem and saw your request! You can utilize the option of sending a private message to VR mam.
Just left click on her avthar, get her profile page and send the PM! :typing:

Best wishes,
Raji Ram
 
வனவாசம்


மகனென்னும் தேசத்தில்
மகிழ்ந்திருக்க உரிமையுள்ள
பாண்டவராய் பெற்றோர்கள்!
ஊசிமுனை நிலம் கூட
உங்களுக்கு இல்லையென
உரைத்திடும் துரியனாய்
உருமாறினாள் மருமகள்!

இதோ - இந்தப் பாண்டவர்கள்
புறப்பட்டு விட்டார்கள்:
குருக்ஷேத்திரம் நோக்கி அல்ல!
மீண்டும் அடுத்த வனவாசத்துக்கு!!

**********************

முரண்

சிக்னலுக்காக
காத்திருக்கும் கார்-
வெளியே
கையேந்தி நிற்கும் சிறுமி;
உள்ளே
கம்பீரமாய் வாலாட்டும் 'டாமி'!

*******************

கருணை

காற்றே!
கருணை செய்க!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!


Your poems are quite interesting. But you are not posting regularly??!! We would be too happy to see you.
 
காதலாய் முதன் முதல்
தலைவனாய் என் இதயம்
தொட்ட கள்வனே..
எழுதி முடித்து முடிவுரை
மட்டும் நீ எழுத என் பக்கங்கள்
திறந்திருக்கின்றன ..

செறேம்பன் ..மலேசியா
 
இதுவரை நாங்கள் ...

இரவில் சிரித்து பகலில் அழும்
காட்டுப் புஷ்பங்கள் நாங்கள் !

விதிவசத்தால் வீதியில்
நிற்கின்றோம் சிகப்பு விளக்குத்
தூண்களாக !

வங்கிக்கணக்கு இல்லை
வாடிக்கையாளர்களின் கணக்கு
மட்டுமே உண்டு !

பிறருக்கு மோட்சத்தை கொடுத்து
எங்கள் பாவ விமோச்சனத்தைத் தேடி
அலைகின்றோம்!

செறேம்பன் ..மலேசியா.
 
இதுவரை நாங்கள் ...
.................
செறேம்பன் ..மலேசியா.
Hi Shivalaxmi!

You may start a new thread for your poems. This thread starter is Anamika.

Find a catchy caption for your new thread and start posting your poems!

Best wishes...........
 
Hi raji ram.
Im a new one in this tamil brahmins.i dont know the customs of this tamil brahmins.this haiku kavithaikal is originally started by anamika.i dont understand how hari dasa siva and yourself is writing in this ?if any
wrongful doing or in my activation obviously i request ur pardon..
 
Hi Shivalaxmi,

NO NEED TO ASK FOR PARDON, please!

I am giving a suggestion to start a new thread so that, we can read all you poem in one place!

Other members comment on the poems written by the thread starter and sometimes start their

arguments too! Hence you find our posts in Anamika's thread. Hope it is clear to you, now.

Best wishes,
Raji Ram
 
Hi raji [COLOR=#DA7911 ! important][FONT=inherit ! important][COLOR=#DA7911 ! important][FONT=inherit ! important]ram[/FONT][/FONT][/COLOR][/COLOR].
Im a new one in this tamil brahmins.i dont know the customs of this tamil brahmins.this haiku kavithaikal is originally started by anamika.i dont understand how hari dasa siva and yourself is writing in this ?if any
wrongful doing or in my activation obviously i request ur pardon..


Hello sister!

Welcome to the Forum! :welcome:

You will find the option 'Start a new thread' under every topic.

When you click on it a box opens. You have to give a title in the space allotted for it.

The poem is to be posted in the box below.

You can start the thread and post your writings in it.

All the readers will give their comment and opinions in your thread.

You may also enter the other threads and leave your comments.

So you can have your very own thread!

Go ahead and start one today itself!

Good luck!

All are friends here who will help you and guide you! :)

with best wishes,
Visalakshi Ramani.
 
ஹைகூ கவிதைகள் - அனாமிகா
********************

முரண்
*****

இடுப்பில் கோவணத்தோடு
ஏக்கத்தோடு பார்க்கும்
ஏழைச் சிறுவன்;
ஏளனச் சிரிப்போடு
வைக்கோல் பொம்மை -
பேண்ட், சர்ட்டில்!

முரண்
*****

வறுமை -
உழைப்பென்னும் துணிஎடுத்து
உதிரத்தாலே நெய்து
உடுத்த வைக்கும்;
வளமை -
அரங்கத்தில்
ஆடைகளை விற்று
'அழகி' பட்டம் வாங்கும்!!

தூறல்
****

பொழிந்து முடிப்பதும்
இல்லை;
நிலம் காய
அனுமதிப்பதும் இல்லை;
எப்போதும் சாரலாய்
இடைவிடாத தூறலாய்
என் மனத்துள்
உன் நினைவுகள்!

மல்லிகை
******

மரகத விரிப்பில்
வெள்ளிப் பூக்கள் -
அட, மல்லிகைகள்!
 
வாக்குறுதி
******
குடும்பத்திற்கொரு வீடு
கொடுத்து விட்டோம் எனக்
கூறும் அரசின் போஸ்டர்
ஏழை வீட்டுக் கூரையாக -
ஆம், கொடுத்து விட்டார்கள்
குடும்பத்திற்கொரு வீடு!

கலப்படம்
******
எங்கும் கலப்படம்
எதிலும் கலப்படம்
வழியெங்கும் கலப்படம்
வாழ்வெல்லாம் கலப்படம்
கல்வியில் கரன்சிகள்
கடைவீதியில் பதுக்கல்
அரசியலில் ஊழல்
அலுவலகத்தில் மாமூல்
வெறுத்துப் போய்
விஷமருந்தினால் -
இறைவா,
இதிலுமா கலப்படம்?!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top