• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!

Status
Not open for further replies.
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!

எனது கேள்விகளுக்கெல்லாம் விடையாக வந்து உதவும் எனது "நண்பன்" மயிலை மன்னார், நாயர், சாம்பு சாஸ்திரிகள் பங்குபெறும் குறிப்புகளை இந்த இழையில் அளிக்க நினைக்கிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!

[மயிலை மன்னார் பற்றிய ஒரு சிறு குறிப்பு! என்னுடைய பால்ய சிநேகிதன். தொடக்கப் பள்ளியில் படித்த காலத்தில் நல்ல நட்பு மலர்ந்து, அது இன்றும் தொடர்கிறது! மயிலாப்பூர் பகுதியில் ஒரு பேட்டை ரவுடியாக இவன் காலம் திசை மாறிப் போனாலும், எங்களது நட்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது! பார்ப்பதற்கு முரடன் போல இருந்தாலும், மிகப் பெரிய விஷயங்களையும் அநாயசமாகச் சொல்லிவிடுவான்! நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடம் [எப்போவாவதுதான்!] மயிலை வடக்கு மாட வீதியில் இருக்கும் நாயர் டீக்கடை! நாயரின் மசால் வடையும் டீயும் உலகிலேயே சிறந்த இரண்டு என நான் அடித்துக் கூறுவேன்! சாம்பு சாஸ்திரிகள் என்னும் மிகப் பெரிய வேத பண்டிதர் ஒருவர் இந்த மன்னாரின் பேச்சுக்கு அடிமை! இவனுக்கும் அவர் மீது நல்ல மதிப்பு உண்டு. இந்தச் சிறு குறிப்புடன் மேலே பயணிப்போம்! வணக்கம்.]

"கந்தர் அநுபூதி" -- 1

வழக்கம் போலவே கலகலப்புக்குக் குறைவில்லாது மயிலாப்பூர் மாடவீதி நிறைந்திருந்தது!

'மன்னாரைப் பார்த்தியா?' எனக் கேட்டபடியே நாயர் கடைக்குள் நுழைந்தேன்.

'ஞான் கண்டிட்டில்லா. எந்து சமாச்சாரம்?' என அக்கறையுடன் கேட்டான் நாயர்.

'ரெண்டு மசால்வடை, ஒரு டீ கொண்டா. சொல்றேன்' எனச் சொல்லிலிவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தேன்.

சற்று நேரத்தில் சூடான மசால்வடை, டீ சகிதமாய் என் முன் வந்து, டேபிளில் வைத்துவிட்டு, 'இப்ப பறையு!' என்றான்.

'ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான்' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு ஆட்டோவில் வந்து அலட்சியமாக இறங்கி உள்ளே வந்தான் மயிலை மன்னார்!
என்னைப் பார்த்ததும் நேராக வந்தவன் என் முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான்.

'ம்ம்... இன்னா சமாச்சாரம்? சொல்லு!' என அமர்த்தலாகக் கேட்டான்.

ஒண்ணுமில்லை. பொங்கலும் அதுவுமா நல்ல நாளில் உன்னிடம் ஏதாவது கேட்கலாமே என வந்தேன். அதுக்காக நீதான் புதுசா ஒண்ணு சொல்லணும்' என்றேன்.

'இவ்ளோதானே! அல்லாம் நல்லபடியா நடக்கும்! கவலிய வுடு! எத்தத் தொடங்கினாலும் புள்ளையாரை வைச்சுத்தான் தொடங்கணும். அதுக்காப்பால, ஒனக்கு ரொம்பவும் இஸ்டமான முருகனைச் சொல்லணும்.

அதுனால, கந்தரனுபூதி பத்தி சொல்றேன் கேட்டுக்கோ. அருணகிரிநாதரு முருகனைக் கும்பிட்டு ஆருக்கும் கெடைக்காத ஒரு அற்புதமான உணர்வை அடைஞ்சாராம். அதுக்கு அனுபூதின்னு பேரு.

'அனு'ன்னா ஒரு விசயத்த உணர்றபோது உள்ளுக்குள்ள வர்ற ஒரு ஆனந்தம்.
'பூதி'ன்னா இந்தப் பஞ்சபூதத்த இன்னான்னு அறிஞ்சுகினு கெடைக்கற ஞானம்!
ஆகக்கூடி, 'அனுபூதி'ன்னா ஞானத்த உணர்றதுனால கெடைக்கற ஆனந்தம்னு சொல்லலாம்.

இதெல்லாம் தெரியலைன்னாலும் கூடப் பரவாயில்ல. இத்தப் படிச்சாலே, ஒனக்குள்ள ஒரு ஆனந்தம் பொறக்கும்! அதுக்காவ மட்டுமே இத்தப் படிச்சாலே ஒனக்கும் ஒரு தெளிவு கெடைக்கும். அதுனாலத்தான், இத்தச் சொல்லலாம்னு நெனைக்கறேன்! சரி, ஒங்கிட்ட அந்தக் குட்டிப் பொஸ்தவம் இருக்குமே! அதுலேர்ந்து அந்த மொதப் பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

படித்தேன்!

திருச்செந்திலாதிபன் துணை
கந்தரநுபூதி

'காப்பு'

நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே
பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்.

[ நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கர ஆனை பதம் பணிவாம்.]

"எப்ப ஒனக்கு ஒரு கஸ்டம் வந்தாலும் நீ இன்னா பண்றே? ஒடனே 'முருகா ஒன்னிய வுட்டா கெதியில்ல எனக்கு! நீதான் காப்பாத்தணும்'ன்னு ஒரு சவுண்டு வுடறே! அவனும் இன்னா பண்றான்? 'நான் இருக்கக்கொள்ள ஒனக்கு எதுக்குரா பயம்?'னு அந்த ஆறுமுகசாமி ஆறுதலா வந்து ஒனக்கு ஒரு தெளிவைக் குடுக்கறாரு!

அந்த முருகன் மேல நம்ம அருணகிரிநாதரு பாட்டாலியே ஒரு மாலை கட்டறாரு. தானா அப்பிடியே வந்து வுளுந்த வார்த்தையால கட்டின மாலை! இந்த மாலையப் படிச்சா இன்னா ஆவும்னும் சொல்றாரு.

பலான பலான விசயத்தையெல்லாம் பார்த்துப் பார்த்துக் கல்லாயிப் போயிட்ட ஒன்னோட மனசு, அப்பிடியே ஒரு பாகு மாரி கொளைஞ்சு போறமாரி ஆயிருமாம்...இத்தப் படிச்சாலே..... அந்தமாரி ஒரு மாலை!

அப்பிடி எளுதின இந்தப் பாட்டுல்லாம் எப்ப ஒசந்ததா ஆயிப்போவும் தெரியுமா? நாலு கையோட கூட, அஞ்சாவது கையா ஒரு தும்பிக்கையும் வைச்சுக்கினு ஆத்தங்கரையிலியும், அரசமரத்தடியிலியுமா குந்திக்கினு க்கீறாரே, அந்தப் புள்ளையாரோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கினு தொடங்கற எந்தக் காரியமும் கெலிச்சிரும்! அதுனால, அவரோட காலடியுல போயி இத்தை வைச்சு,'நீதான் இத்த நல்லபடியா ஆக்கித் தரணும்'னு தொடங்கறாரு. அதான், இதுக்கு 'காப்புச் செய்யுள்'னு பேரு.

இப்பவும் அப்பிடித்தானே இன்னைக்குன்னு பாத்து, சினிமா, பீச்சுன்னு அலையாம எங்கையுல வந்திருக்கே? ஒரு கொறைவும் வராது" என ஆதரவாய் என்னைத் தட்டிக் கொடுத்தான் மயிலை மன்னார்.

'கணபதி எல்லாம் தருவான்!' என்னும் புத்துணர்வோடு மேலும் கேட்கத் தயாரானேன் நான்!
************
[தொடரும்]
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்க்ம்!
****************
 
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!

எனது கேள்விகளுக்கெல்லாம் விடையாக வந்து உதவும் எனது "நண்பன்"
மயிலை மன்னார், நாயர், சாம்பு சாஸ்திரிகள் பங்குபெறும் குறிப்புகளை இந்த
இழையில் அளிக்க நினைக்கிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!

[மயிலை மன்னார் பற்றிய ஒரு சிறு குறிப்பு! என்னுடைய பால்ய சிநேகிதன். தொடக்கப் பள்ளியில்
படித்த காலத்தில் நல்ல நட்பு மலர்ந்து, அது இன்றும் தொடர்கிறது! மயிலாப்பூர் பகுதியில் ஒரு
பேட்டை ரவுடியாக இவன் காலம் திசை மாறிப் போனாலும், எங்களது நட்பு இன்னமும் அப்படியேதான்
இருக்கிறது! பார்ப்பதற்கு முரடன் போல இருந்தாலும், மிகப் பெரிய விஷயங்களையும்
அநாயசமாகச் சொல்லிவிடுவான்! நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடம் [எப்போவாவதுதான்!]
மயிலை வடக்கு மாட வீதியில் இருக்கும் நாயர் டீக்கடை! நாயரின் மசால் வடையும் டீயும்
உலகிலேயே சிறந்த இரண்டு என நான் அடித்துக் கூறுவேன்! சாம்பு சாஸ்திரிகள் என்னும்
மிகப் பெரிய வேத பண்டிதர் ஒருவர் இந்த மன்னாரின் பேச்சுக்கு அடிமை!
இவனுக்கும் அவர் மீது நல்ல மதிப்பு உண்டு. இந்தச் சிறு குறிப்புடன் மேலே பயணிப்போம்! வணக்கம்.]
"கந்தர் அநுபூதி" -- 1

வழக்கம் போலவே கலகலப்புக்குக் குறைவில்லாது மயிலாப்பூர் மாடவீதி நிறைந்திருந்தது!

'மன்னாரைப் பார்த்தியா?' எனக் கேட்டபடியே நாயர் கடைக்குள் நுழைந்தேன்.

'ஞான் கண்டிட்டில்லா. எந்து சமாச்சாரம்?' என அக்கறையுடன் கேட்டான் நாயர்.

'ரெண்டு மசால்வடை, ஒரு டீ கொண்டா. சொல்றேன்' எனச் சொல்லிலிவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தேன்.

சற்று நேரத்தில் சூடான மசால்வடை, டீ சகிதமாய் என் முன் வந்து, டேபிளில் வைத்துவிட்டு,

'இப்ப பறையு!' என்றான்.

'ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான்' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு ஆட்டோவில்
வந்து அலட்சியமாக இறங்கி உள்ளே வந்தான் மயிலை மன்னார்!
என்னைப் பார்த்ததும் நேராக வந்தவன் என் முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான்.

'ம்ம்... இன்னா சமாச்சாரம்? சொல்லு!' என அமர்த்தலாகக் கேட்டான்.

ஒண்ணுமில்லை. பொங்கலும் அதுவுமா நல்ல நாளில் உன்னிடம் ஏதாவது கேட்கலாமே என வந்தேன்.
அதுக்காக நீதான் புதுசா ஒண்ணு சொல்லணும்' என்றேன்.

'இவ்ளோதானே! அல்லாம் நல்லபடியா நடக்கும்! கவலிய வுடு! எத்தத் தொடங்கினாலும் புள்ளையாரை
வைச்சுத்தான் தொடங்கணும். அதுக்காப்பால, ஒனக்கு ரொம்பவும் இஸ்டமான முருகனைச் சொல்லணும்.

அதுனால, கந்தரனுபூதி பத்தி சொல்றேன் கேட்டுக்கோ. அருணகிரிநாதரு முருகனைக் கும்பிட்டு
ஆருக்கும் கெடைக்காத ஒரு அற்புதமான உணர்வை அடைஞ்சாராம். அதுக்கு அனுபூதின்னு பேரு.

'அனு'ன்னா ஒரு விசயத்த உணர்றபோது உள்ளுக்குள்ள வர்ற ஒரு ஆனந்தம்.
'பூதி'ன்னா இந்தப் பஞ்சபூதத்த இன்னான்னு அறிஞ்சுகினு கெடைக்கற ஞானம்!
ஆகக்கூடி, 'அனுபூதி'ன்னா ஞானத்த உணர்றதுனால கெடைக்கற ஆனந்தம்னு சொல்லலாம்.

இதெல்லாம் தெரியலைன்னாலும் கூடப் பரவாயில்ல. இத்தப் படிச்சாலே, ஒனக்குள்ள ஒரு ஆனந்தம்
பொறக்கும்! அதுக்காவ மட்டுமே இத்தப் படிச்சாலே ஒனக்கும் ஒரு தெளிவு கெடைக்கும்.
அதுனாலத்தான், இத்தச் சொல்லலாம்னு நெனைக்கறேன்! சரி, ஒங்கிட்ட அந்தக் குட்டிப் பொஸ்தவம்
இருக்குமே! அதுலேர்ந்து அந்த மொதப் பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

படித்தேன்!

திருச்செந்திலாதிபன் துணை
கந்தரநுபூதி

'காப்பு'

நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே
பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்.

[ நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கர ஆனை பதம் பணிவாம்.]

"எப்ப ஒனக்கு ஒரு கஸ்டம் வந்தாலும் நீ இன்னா பண்றே? ஒடனே 'முருகா ஒன்னிய வுட்டா
கெதியில்ல எனக்கு! நீதான் காப்பாத்தணும்'ன்னு ஒரு சவுண்டு வுடறே! அவனும் இன்னா பண்றான்?
'நான் இருக்கக்கொள்ள ஒனக்கு எதுக்குரா பயம்?'னு அந்த ஆறுமுகசாமி ஆறுதலா வந்து ஒனக்கு
ஒரு தெளிவைக் குடுக்கறாரு!

அந்த முருகன் மேல நம்ம அருணகிரிநாதரு பாட்டாலியே ஒரு மாலை கட்டறாரு. தானா அப்பிடியே
வந்து வுளுந்த வார்த்தையால கட்டின மாலை! இந்த மாலையப் படிச்சா இன்னா ஆவும்னும்
சொல்றாரு.

பலான பலான விசயத்தையெல்லாம் பார்த்துப் பார்த்துக் கல்லாயிப் போயிட்ட ஒன்னோட மனசு,
அப்பிடியே ஒரு பாகு மாரி கொளைஞ்சு போறமாரி ஆயிருமாம்...இத்தப் படிச்சாலே..... அந்தமாரி
ஒரு மாலை!

அப்பிடி எளுதின இந்தப் பாட்டுல்லாம் எப்ப ஒசந்ததா ஆயிப்போவும் தெரியுமா?
நாலு கையோட கூட, அஞ்சாவது கையா ஒரு தும்பிக்கையும் வைச்சுக்கினு ஆத்தங்கரையிலியும்,
அரசமரத்தடியிலியுமா குந்திக்கினு க்கீறாரே, அந்தப் புள்ளையாரோட காலைக் கெட்டியாப்
பிடிச்சுக்கினு தொடங்கற எந்தக் காரியமும் கெலிச்சிரும்! அதுனால, அவரோட காலடியுல போயி
இத்தை வைச்சு,'நீதான் இத்த நல்லபடியா ஆக்கித் தரணும்'னு தொடங்கறாரு. அதான், இதுக்கு
'காப்புச் செய்யுள்'னு பேரு.

இப்பவும் அப்பிடித்தானே இன்னைக்குன்னு பாத்து, சினிமா, பீச்சுன்னு அலையாம எங்கையுல
வந்திருக்கே? ஒரு கொறைவும் வராது" என ஆதரவாய் என்னைத் தட்டிக் கொடுத்தான்
மயிலை மன்னார்.

'கணபதி எல்லாம் தருவான்!' என்னும் புத்துணர்வோடு மேலும் கேட்கத் தயாரானேன் நான்!
************
[தொடரும்]
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
****************
 
நீங்க கவனிக்கலைன்னாலும், நான் ஒரு தட்டச்சுப் பிழையைப் பார்த்ததால!!

இதுவே 'லாங்'குன்னா இனி வரப் போறதைப் பார்த்தா!:))

விளக்கம் சுருக்கமா இருந்தா சுவைக்காது!

[இன்னொரு விஷயம்!
எனக்கு மட்டுமா. இல்லை எல்லாருக்குமா?
க்விக் ரிப்ளையோட நீளம் ரொம்ம்ம்ம்ம்ம்ப நீளமா இருக்கே!
அதுக்காகத்தான் மீண்டும் ஒருமுறை வெட்டி ஒட்டிப் போட்டேன்!]
 
"கந்தர் அநுபூதி" -- 2

'ம்ம். புள்ளையாரைக் கும்புட்டுக்கிட்டாச்சு! மேல அடுத்த பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

"நூல்"

1.
ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
சாடுந் தனியானைசகோ தரனே.

[ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே.]


இந்தப் பாட்டுங்கல்லாம் ஒரு அநுபூதி அனுபவத்தைச் சொல்ற பாட்டுங்கன்னு மட்டும் எப்பவுமே
மனசுல வைச்சுக்கோ! ஒரு சில விசயம் கொஞ்சம் முந்திப் பிந்தி வரலாம்; இல்லேன்னா, ஒரு
சிலது அப்பிடியே 'கடகட'ன்னு வரிசையாக் கொட்டலாம்! அதுனால, நான் சில சமயம் ஒரே ஒரு
பாட்டுல ஒரு வரிக்கு மட்டுமே ஒளறிக்கினு இருப்பேன்! சில சமயத்துல, ஒரு அஞ்சாறு பாட்டுக்கு
ஒண்ணா வெளக்கம் சொல்லுவேன்! சரியா! நீ கண்டுக்காம கேட்டுக்கினே இரு!' என ஒரு பெரிய
பீடிகையைப் போட்டுவிட்டு, மன்னார் தொடர்ந்தான்!

மொதப் பாட்டுல 'காப்பா' கணபதியப் பாடினாரு! ஆனாக்காண்டியும், இன்னும் அவரோட தாக்கம்
தீரலை! நூலோட மொதப் பாட்டுலியும் அவரைக் கொணாந்து வைக்கறாரு! அப்பிடியே தான்
சொல்லப்போற சமாச்சாரம் இன்னான்னும் இதுல ஒரு கோடி காட்டுறாரு!

ஒரு மூணு விசயத்த மொத வரியுல சொல்றாரு!

ஆடும் பரி, வேல், அணி சேவல்னு!

ஆடிக்கினே போற ஒரு பரி.... அதான், குதிரை,
வேலு,
அளகான ஒரு சேவலு!

முருகனைப் பத்தி நெனைச்சதுமே ஒன்னோட மனச்சுல வர்றதுதான் இந்த மூணுமே!

அதெப்பிடி குதிரை நெனைப்பில வரும்ன்றியா?
குதிரைன்னா இன்னா?
சவாரி பண்ற ஒரு வாகனம்!
ஆடு, மாடு, கோளின்னு எத்த நெனைச்சாலும் அதுங்கள வைச்சு ஒண்ணுத்துக்கும் மேலியும்

நெனைப்பு வரும்!
ஆனாக்க, குதிரைன்னா, ஒடனே ஒண்ணே ஒண்ணுதான் ஞாபகத்துக்கு வரும்.
அதான்.... ஏறி சவாரி பண்ற ஒரு வாகனம்!


ஆனா, முருகனுக்கு எது வாகனம்?.... மயிலு!
சும்மா தத்தித் தத்திப் போவும் இந்த மயிலு!
மெய்யாலுமே மத்த பறவைங்க மாரி, பறக்கக்கூட முடியாது!

ஆனாலும், இத்த ஆரு வாகனமா வைச்சிருக்காரு? .... முருகன்!
அவரோட வாகனம் குதிரை மாரி பறக்குமாம்!


அது மட்டுமில்ல!
'இங்கே போயி அவனை அடிக்கணுமா? அங்க போயி அவனுக்கு ஆறுதல் சொல்லணுமா?

அல்லாத்துக்குமே ரெடி'ன்றமாரி எப்பவுமே ஆடிக்கினே இருக்குமாம்! அதான் 'ஆடும் பரி'ன்னு
சொல்லிப் பாடறாரு! அது இன்னா தெரியுமா?

ஒரு மயிலை நல்லா தோகை விரிச்சு ஆடறப்ப பாரு! அப்பிடியே 'ஓம்'னு எளுதறமாரி
இருக்கும்! அப்பனுக்கே வெளக்கம் சொன்ன அந்த ஓமு "இப்ப எப்ப சாமியை ஏத்திக்கினு
போவணும்"னு காலடியுல காத்துக்கினு க்கீது!
அது ஒரு பக்கத்துல!


அப்பாலிக்கா, இன்னோரு பக்கத்துல 'அணி சேவல்'னு வைக்கறாரு!
அளகான சேவலாம்!
ஆரு அது?
ஆணவம் புடிச்சு அலைஞ்ச சூரன்!
இப்ப இன்னா பண்றான்?
அடங்கி ஒடுங்கி சேவகம் பண்றான்!


இன்னாதான் ஆணவம் புடிச்சு அலைஞ்சாலும், இவன் எதுத்தாப்புல வண்ட்டா, அடங்கி
ஒடுங்கி 'அம்பேல்'னு நிக்க வேண்டியதுதான்ற மாரி அந்தச் சேவலு நிக்குது!
அதுவும் இன்னா சொல்லிக்கினு?
'வாங்கப்பா! வாங்க! அல்லாரும் வாங்க! வந்து இவரோட காலுல வுளுந்து சரணாகதி

பண்ணுங்க' ன்னு சொல்றமாரி அந்தக் கொக்கரக்கோ சேவலு கூவிக்கினே க்கீது!
அது இந்தாப் பக்கமா!


நடுவுல 'வேலு'!
அதுக்கு ஆடும் பரின்னு சொன்னாரு! இதுக்கு அணிசேவல்னு சொன்னாரு!
ஆனாக்காண்டிக்கு, வேலுக்கு மட்டும் ஒண்ணுமே சொல்லலை!
ஏன்னு கொஞ்சம் நெனைச்சுப் பாரு!


வேல்னா இன்னா?
ஞானம்!
ஆரு குடுக்கறது அத்த?
அவந்தான் !... அந்த கந்தந்தான்!


உண்மைக்கு எப்பிடி பட்டம் குடுக்கறது?
உண்மை உணமைதான்!... மெய்யி மெய்யிதான்! ... ஞானம் ஞானந்தான்!
அந்த ஞானத்துக்கு, இது, அதுன்னு சொல்லி பெருமைப் படுத்தவே முடியாது!
அதான் ஒண்ணுமே சொல்லாம சும்மா 'வேலு'ன்னு மட்டும் சொல்லிடறாரு!

ஆகக்கூடி, மயிலு, , சேவலு, ...நடுவுல வேலு!

இந்த மூணைப் பத்தி மட்டுமே நான் எப்பவுமே பாடிக்கினு இருக்கணும்னு .... அதுவே
என்னோட தொளிலா இருக்கணும்னு முருகன்கிட்ட வேண்டுறாரு அருணகிரிநாதரு!

அப்பிடி வேண்டறப்ப, கொஞ்சம் புள்ளையாரையும் கூடவே சேர்த்துக்கறாரு!
இன்னான்னு சொல்லி?

நீ முந்தி புள்ளையார் கதைன்னு ஒண்ணு எளுதினியே... அதுல ஒரு கதை வருமே...
அதாம்ப்பா.. தங்கிட்டியே வரம் வாங்கிக்கினு, தேவருமாருங்கள அல்லாம் எங்க எங்கன்னு
தேடிப்போயி, தொல்லை பண்ணிக்கினே இருந்தானே, கஜமுகன்னு ஒரு ராட்சசன்....
அவனைத் தீர்த்துக் கட்றதுக்குன்னு புள்ளையாரை அனுப்பி வைச்சாரே நம்ம கபாலி!...
கெருவம் ஜாஸ்தியாப் போயி, எதுத்தாப்புல வர்றது ஒரு ஆனைதானேன்னு நெனைச்சு
சண்டை போட்டானே கஜமுகாசுரன்! அந்தக் கதைதான்!

ஆனா, இவுரு இன்னா சாதாரண ஆனையா? தனி ஆனை! அதாவுது ஸ்பெசல் ஆனை!
இவுரப் போல ஒரு ஆனைய ஆருமே பாத்திருக்க முடியாது.... பார்த்ததும் கெடையாது!
தனின்னா இன்னா?

இவுருக்கு சோடி கெடையாது! அதும்னால தனி!

இவுரு ரொம்பவே விசேசமானவரு! அதுனாலியும் இவுரு தனி!
அல்லாரும் ஒருமாரி நெனைச்சா, இவுரு மட்டும் தனியா நெனைப்பாரு....
அப்பா அம்மாவச் சுத்திவந்து மாம்பளம் வாங்கின கதை மாரி... அதுனாலியும் தனி!
அதான், தனி ஆனைன்னு சொல்றாரு அருணையாரு... புள்ளையாரை!

அவரோட தம்பிதான் நம்ம கந்தன்!
இவுருகிட்ட ஒரு பக்கம் மயிலு!.... தேடி வந்து ஒதவுறதுக்காவ!
மறுபக்கம் சேவலு!..... ஆணவமே சேவகம் பண்ணும்ன்றதக் காட்றமாரி!
நடுவுல ஞானம்!......

இவுங்க ரெண்fடு பேரையும் கும்ப்ட்டுகிட்டா.... ஏன் அவருக்கு அனுபூதி கெடைக்காது?!
அதான் இந்த மொதப் பாட்டு!

ரொம்ப இளுத்துட்டேன்ல!?
மொதப் பாட்டுன்றதால கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்டுட்டேன்! இனிமே அடக்கி

வாசிக்கறேன்,... இன்னா?' என கபடமின்றிச் சிரித்தான் மயிலை மன்னார்!
'நீ சொல்லு மன்னார்!' என உற்சாகப் படுத்தினேன் நான்!
****************
[தொடரும்]
 
"கந்தர் அநுபூதி" -- 3 [முதல் பகுதி]

[இந்தப் பாடலுக்கான மன்னாரின் விளக்கம் இரண்டு பகுதிகளாக அடுத்தடுத்து வரும்!
அருள்கூர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கவும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!]

உல்லா சநிரா குலயோ கவிதச்
சல்லா பவிநோ தனுநீ யலையோ
எல்லா மறவென் னையிழந் தநலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.


உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனு[ம்] நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.


மேலும் கேட்கும் ஆவலில் மூன்றாம் பாடலைப் படித்தேன்.
மன்னாரின் முகத்தில் ஒரு புதிய உற்சாகம் தெரிந்தது!
கண்களை மூடிக்கொண்டு பாடலை இரண்டு, மூன்று தரம் படிக்கச் சொல்லிக் கேட்டான்!
ஏதோ தியானத்தில் ஆழ்ந்தவன் போல் அவன் முகம் இருந்தது.
முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது!


'என்னோடு வா! இந்தச் சந்தடி இனிமே நமக்கு வேண்டாம்! நாயர்! நீயும் சீக்கிரமாக்
கெளம்பி ஐயரு வூட்டாண்ட வா!' எனச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கலானான்!
நானும் நாயரும் கூடவே நடந்தோம்.
'ஹோட்டல் சங்கீதா' தாண்டி தெற்கு வீதியில் திரும்பியதும், என் தோளில்
கை போட்டுக்கொண்டு மயிலை மன்னார் பேசலானான்!

'இந்தப் பாட்டு ரொம்பவே ஒசத்தியானுது! சொல்றவங்க சொன்னா அப்பிடியே
சொல்லிக்கினே போலாம்! அவ்ளோ மேட்டர் க்கீது இதுக்குள்ள!
இந்தப் பாட்டை புரிஞ்சுக்கறதுக்கு, எப்பிடிப் படிக்கணும்னு சொல்றேன் கேட்டுக்கோ!

மிச்சத்த அப்பாலிக்கா ஐயரு வூட்ல வந்து சொல்றேன்!

கடசி வரிலேர்ந்து அப்பிடியே படிப்படியா மேல போயிப் பார்க்கணும் இத்த!
சுரபூபதியே! முருகா! நலம் சொல்லாய்!
இன்னா நலம்?
என்னை இள[ழ]ந்த நலம்!
என்னை இள[ழ]க்கணும்னா இன்னாத்தயெல்லாம் தொலைக்கணும்?
இது அதுன்னு எதுவுமே இல்லாம, எல்லாம் அற என்னை இள[ழ]ந்த நலம்!


இப்ப மொத ரெண்டுவரியையிம் சேர்த்துப் படிக்கணும்!
உல்லாசலேர்ந்து ஆரம்பிச்சு, நீயலையோ வரைக்கும்!

எங்கே நான் சொன்னமாரி சொல்லிக் காட்டு, பார்க்கலாம்' என்றான்
வரிகளைப் பார்த்துக்கொண்டே நானும் சொன்னேன்.

சுரபூபதியே! முருகா! எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்!
உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ!


'சரிதான்!' என்பதுபோல நாயர் தலையாட்டினான்!
சந்தோஷமாகச் சிரித்தான் மன்னார்.
பேசிக்கொண்டே சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையை அடைந்தோம்.

ஆளரவம் கேட்டு அவரும் வந்து மௌனமாக உட்கார்ந்தார்!

மன்னார் தொடங்கினான்!
'சுர பூபதி'ன்னு சொல்றாரு!
சுரர்னா ஆரு? நீதான் கொஞ்சம் திருப்புகள்[ழ்]லாம் படிச்சிருக்கியே! அதுல நெறைய

வரும் இந்த வார்த்தை! 'சுரர்'னா தேவருங்க! 'பதி'ன்னா ராசா! 'பூ'ன்னா பூமி! ஒலகம்!
'பூபதி'ன்னா ஒலகத்துக்கே ராசா! எந்த ஒலகத்துக்கு? தேவருங்களோட ஒலகத்துக்கே
ராசாவேன்றாரு!

இப்ப ஒனக்கு ஒரு டவுட்டு வரும்!
தேவருங்களுக்கெல்லாம் இந்திரந்தானே ராசா! இவுரு எப்பிடி ராசாவாக முடியும்னு!
சூரங்கிட்டேர்ந்து அல்லாரையும் வெளில கொணாந்து, இந்திரனுக்கு மறுபடியும்

பட்டம் கட்ட வராரு நம்ம முருகன்!
அப்ப, அவன், 'எனக்கு இதெல்லாம் வோணாம் முருகா! நீயே ராசாவா இரு!'ன்னு

சொல்லி, பொண்ணையும் கட்டிக் குடுத்திட்டு ஒக்கார வைச்சுடறான்!
அப்பாலிகா, இவுரு 'நம்ம வேலை நெறைய க்கீது! நம்மளோட அடியாருங்கல்லாம்

காத்துக்கினு க்கீறாங்க! அதுனால, இங்க தோதுப்படாது! நீயே ராசாவா இருப்பா!'ன்னு
இந்திரன் கையுல சொல்லிட்டு கெளம்பிடறாரு!
அதான் இவுரு சுர பூபதி!


இப்ப ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க!
ஒரு மந்திரி இருக்காரு.
அவரு முன்னால அல்லாரும் சலாம் போட்டுக்கினு நிக்கறாங்க.
இப்ப முதல்மந்திரி அங்க வராரு.
அப்போ இன்னா ஆவும்?
இந்த மந்திரியே எளு[ழு]ந்திரிச்சு அவரு முன்னாடி கைகட்டிக்கினு,

வாய் பொத்திக்கினு, பயபக்தியா நிப்பாரு!
முதல் மந்திரியும் அமத்தலா இந்தாளோட சேர்ல போயி குந்திக்குவாரு!


அதும்மாரித்தான் இதுவும்!
இவுரு எப்ப தேவலோகத்துக்கு வந்தாலும் தேவேந்திரன் எளுந்து

தன்னோட நாக்காலியக் குடுத்திருவான்!

அதுனால... இவுரு சுரபூபதி!
ஆச்சா! இப்ப 'முருகா'ன்னா இன்னான்னு ஒனக்கு நல்லாவே தெரியும்!
'அள[ழ]கு'ன்னு சொல்லலாம்! 'சின்ன வயசு'ன்னு சொல்லலாம்!
எப்பிடிச் சொன்னாலும் முன்னே வந்து நிப்பான் முருகன்!

இதுக்கு முந்தின வார்த்தையப் பாரு!
'சொல்லாய்'னு வருது!
ரொம்பவும் இஸ்டமானவங்களத்தான் இப்பிடிக் கூப்புடுவோம்!
அதுலியும் முக்கியமா சின்னக் கொளந்தையா இருந்தா, 'சொல்லும்மா,

எங்கண்ணுல்ல, சொல்லுவியாம்'னு இன்னான்னாமோ சொல்லிக் கொஞ்சுவோம்!
அதான் இந்தச் "சொல்லாய்"!


இன்னா சொல்லச் சொல்றாரு அருணகிரியாரு?
எல்லாமற என்னை இள[ழ]ந்த நலத்தை எனக்கு சொல்லித்தாப்பான்னு கொஞ்சிக்
கொஞ்சிக் கேக்கறாரு!

இவுரே ஒரு கிளி! அதான் இதுவும் கொஞ்சுது!

'எல்லாம்'னா இன்னா?

சைவசித்தாந்தத்துல இந்த பஞ்ச பூதத்தப் பத்தியும், அதுனால வர்ற மத்த சமாச்சாரமும்
அன்னிக்கு சொன்னேன்ல,
அந்த இருவதும்
[ஐம்பூதங்கள்[5] ஐம்புலன்கள்[5],ஞானேந்திரியங்கள்[5],
கன்மேந்திரியங்கள்[5]] வெளியே தெரியுது! மனம், புத்தி, சித்தம், அகங்காரம்னு உள்ளார
க்கீற நாலும் சேர்ந்ததுதான் இந்த 'எல்லாம்'!

இதெல்லாம் அத்துப் போச்சுன்னாலும்,' நானு'ன்ற ஆணவமலம் மட்டும் வுடாம
தொத்திக்கினே இருக்கும்! அத்தயும் தொலைச்சுட்டு, ஒரு தனி நெலைல இருக்கற அந்த
சொகமான அனுபவத்த நீ எனக்கு சொல்லுன்னு கொஞ்சறாரு!

அந்த நெலையுல இன்னா ஆவும்னா, கண்ணு எத்தயோ பார்க்கும்! ஆனா பார்த்ததே
தெரியாது! காது கேக்கும்! ஆனா கேக்குதுன்னு தெரியாது! புத்தி இருக்குன்னு புரியும்!
ஆனா, அதுவா ஒண்ணுத்தியும் முடிவு பண்ணாது! இப்பிடி சொல்லிக்கினே போலாம்!
அதும்மாரி ஒரு ஆளரவமே இல்லாத நெலையாம் அது! அதைச் சொல்லித் தாப்பான்னு
முருகங்கிட்ட கொஞ்சிக் கேக்கறாரு!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.
****************
[தொடரும்]
 
"கந்தர் அநுபூதி" -- 3 [இரண்டாம் பகுதி]

[தயவுசெய்து, முதல் பகுதியைப் படித்துவிட்டு, இதனைப் படிக்கவும்!]

"மேல சொல்றதுக்கு முந்தி இதுல சொல்லாம சொல்லி க்கீற ஒரு சூட்சுமத்தப் புரிஞ்சுக்கோ!

இந்த அல்லாத்தியும் தொலைக்கறது; என்னைத் தொலைக்கறதுன்றதுல்லாம் சாமானியமா ஒர்த்தரால
தானா செய்யுற சமாச்சாரம் இல்லன்னு பூடகமா சொல்லி வைக்கறாரு அருணையாரு! அதுக்குல்லாம்
ஒரு நல்ல குரு வரணும்! அவுரு வந்துதான் இத்த எப்பிடித் தொலைக்கறதுன்னு சொல்லித் தருவாரு!
இவுருக்கு அப்பிடிக் கெடைச்ச குருதான் முருகன்! அதான் இப்ப அடுத்த ரெண்டு வரியுல சொல்லிக்காட்றாரு'
என்றான் மன்னார்.

'அப்போ அந்த முதல் இரண்டு வரிகளும் சும்மா முருகன் புகழைப் பாடறதுதானே' என்றேன் நான்!
இரக்கத்துடன் என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!


'அதெல்லாம் நீ பண்றது! சும்மானாச்சும் வார்த்தையப் போட்டு ரொப்பறதுல்லாம் நீதான் செய்வே!
ஆனா, அருணையாரு அப்பிடியாப்பட்ட ஆளு இல்ல! நீ கொளந்தை கொளந்தைன்னு கொஞ்சுவியே

ஒர்த்தரை... அவுரு அடிக்கடி சொல்லுவாருன்னு நீதானே சொல்லிருக்கே முந்தி! பெரியவங்க சொல்ற
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பெரிய அர்த்தம் இருக்கும்! பொளுது போவாம ஒன்னியமாரி
எளுதறவங்க இல்ல அவங்கல்லாம்! அதுக்காவ ஒன்னியக் குத்தம் சொல்றேன்னு மூஞ்சியத் தூக்கிக்காத!
பக்தியோட நீ எளுதறதுலியும் தப்பே இல்ல! ஆனா, இங்க, அருணையாரு சும்மா மணி மணியா
வார்த்தைங்களைப் பொறுக்கிப் போட்டுருக்காரு!
ஒண்ணொண்ணாப் பாக்கலாம்!'

உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ!
'உல்லாச'ன்னா எப்பவுமே மாறாம ஒரே நெலையா நிக்கறவன்னு அர்த்தம்! எதுன்னாலும்
கலங்காம ஒரே 'ஷ்டெடி'யா நிக்கறவன்!
இங்க நடக்கற எத்த வோணும்னாலும் அவனால மாத்த முடியும்! ஆனா, அவன் மட்டும் மாறாம

அல்லாத்தியும் பார்த்து ஒரு கொளந்தை மாரி சிரிச்சுக்கினே இருப்பான்! அவந்தான் உல்லாசன்!

'நிராகுலன்'னா ஒரு கஸ்டமும் இல்லாதவன்னு பொருளு! தும்பமே இல்லாதவனுக்கு நிராகுலன்னு பேரு!
ஆருக்கு து[ன்]ம்பமே வராது? ஞானம் இருக்கறவனுக்கு! அறிவு இருந்தாலும் அத்த 'யூஸ்' பண்ணாம,
இல்லாக்காட்டிக்கு அறிவே இல்லாம காரியத்த செய்யறவனுக்கு, எப்பவுமே கஸ்டந்தான் வந்து சேரும்!
அறிவே வடிவமா க்கீறவனுக்கு கஸ்டம் வரும்...
ஆனாக்க, அதுக்காவ அவன் அள மாட்டான்! அவந்தான் நிராகுலன்!
'யோக'ன்னா, யோக வடிவா க்கீறவன்னு சொல்லலாம். ஞானம் வந்தப்பறம், யோகமும்
கூடவே வந்திருச்சுன்னா, அதுவே பெரிய சந்தோஷமா மாறிடும்! அப்பிடியாப்பட்டவன் நம்மாளு!

இந்த மூணையும் இன்னோரு வகையாக்கூடச் சொல்லலாமாம்! உல்லாசம்னா 'சத்து'.
நிராகுலன்னா அறிவு... 'சித்து', யோகம்னா 'ஆனந்தம்'.
ஆகக்கூடி, இந்த மூணையும் சேர்த்தா சத்துசித்து ஆனந்தம்.. சச்சிதானந்தம்! அப்பிடிச்

செல்லமாக் கூப்புடறாரு அருணகிரியாரு!

இப்ப, அடுத்த மூணையும் பாப்பமா?
'இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ'னு கொஞ்சுறாரு!
'இதம்'னா நெனைப்பு.... நெனைக்கறது.
'சல்லாபம்'னா பேசறது
'விநோதம்'னா செய்யறது.

சச்சிதானந்தமா க்கீற கந்தன் இப்ப இவரை, நெனைக்க, பேச, செய்ய வைக்கணும்னு முடிவு
பண்ணனுமாம்!
இவுரையும் சச்சிதானந்தமா மாத்தணுமாம்!

அதுக்குத்தான் ஒரு கொளந்தையக் கொஞ்சறமாரி, 'நீ இப்பிடியாப்பட்ட செல்லக் கொளந்தைதானே!
எனக்குச் சொல்லுவியாம்'னு முருகன்கிட்ட ஒரு கிளிமாரி கொஞ்சறாரு அருணகிரிநாதரு.
அதான் அந்த 'நீ அலையோ!'
'அலையோ'ன்னா இல்லையோன்னு அர்த்தம்!

இப்ப, இந்த ஆறுக்கும் இன்னொரு விதமாச் சொல்றேன் கேளு' என மன்னார் சொன்னதும்,
கண்களை மூடிக்கொண்டு, கைகளைக் கூப்பியபடி, சாஸ்திரிகள் நிமிர்ந்து உட்கார்ந்தார்!

எப்பவும் மாறாத உல்லாசந்தான் திருப்பரங்குன்றம்!
தும்பமே இல்லாம ஞானமயமா கீறதுதான் திருச்செந்தூரு!
யோகமா எப்பவும் ஆனந்தமா க்கீறது பள[ழ]னிமலை!
இதமா நெனைப்பைக் குடுக்கறது சாமிமலை!
இங்கியும் அங்கியுமா குதிச்சு குதிச்சுப் பேசற இதந்தான் திருத்தணி.. குன்றுதோறாடல்னும்

இத்தச் சொல்லுவாங்க!
விநோதமாத் தெரியறது பள[ழ]முதிர்சோலை!

இந்த ஆறையும் இதுக்குள்ள காட்றாரு அருணைகிரி!' எனச் சொல்லி நிறுத்தினான்
மயிலை மன்னார்!

மூடிய கண்களைத் திறக்காமலேயே, சாஸ்திரிகள் பேசத் தொடங்கினார்... திடீரென!
'அற்புதமா இதுவரைக்கும் சொன்னே மன்னார்! நீ சொன்னதுந்தான் இந்த ஆறுக்கும்
இன்னொரு வியாக்யானம் இருக்குன்னு எனக்குப் பட்டுது!

திருப்பரங்குன்றம்தான் மூலாதாரம். ஸ்திரமா நிக்கறது!.. உல்லாஸம்!
திருச்செந்தூர்தான் ஸ்வாதிஷ்டானம்!.. ஞானமயமானது!.... நிராகுலம்!
பழநிமலை யோகத்தால எப்பவும் ஆனந்தமா இருக்கறதால.. அது மணிபூரகம்!
இதம்னு சொன்ன ஸ்வாமிமலைதான் அநாகதம்!
ஸல்லாபம்னு சொன்னியே அதான் விசுத்தி!
விநோதம்..ஆக்ஞா சக்ரம்!


இப்பிடி யோக ஸாஸ்த்ரத்துல சொல்லியிருக்கற ஆறு சக்ரத்தையுந்தான் இந்த ஆறும் காட்றதுன்னு
நெனைக்கறேன்!' என்றபடியே கண்களைத் திறந்தார்!

'ஐயரு சொல்றதும் சர்யாத்தான் க்கீது' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

இப்ப வெளங்குதா?... நான் ஏன் இந்தப் பாட்டு அவ்ளோ முக்கியம்னு சொன்னேன்னு? இப்ப அடுத்தாப்புல
வர்ற ரெண்டு பாட்டும் இத்த ஒட்டியே வரும்! இந்த 3.4.5 மூணும் ஒரு செட்டுன்னு நெனைப்புல வைச்சுக்க'
எனச் சொல்லிவிட்டு, கொஞ்சம் எழுந்து சோம்பல் முறித்தான் மன்னார்!

தனது செல்ஃபோன் மூலம் டீ, வடைக்கு சொல்லிக்கொண்டிருந்தான் நாயர்!
**************
[தொடரும்]
 
"கந்தர் அநுபூதி" -- 3 [இரண்டாம் பகுதி]

[தயவுசெய்து, முதல் பகுதியைப் படித்துவிட்டு, இதனைப் படிக்கவும்!]

"மேல சொல்றதுக்கு முந்தி இதுல சொல்லாம சொல்லி க்கீற ஒரு சூட்சுமத்தப் புரிஞ்சுக்கோ!

இந்த அல்லாத்தியும் தொலைக்கறது; என்னைத் தொலைக்கறதுன்றதுல்லாம் சாமானியமா ஒர்த்தரால
தானா செய்யுற சமாச்சாரம் இல்லன்னு பூடகமா சொல்லி வைக்கறாரு அருணையாரு! அதுக்குல்லாம்
ஒரு நல்ல குரு வரணும்! அவுரு வந்துதான் இத்த எப்பிடித் தொலைக்கறதுன்னு சொல்லித் தருவாரு!
இவுருக்கு அப்பிடிக் கெடைச்ச குருதான் முருகன்! அதான் இப்ப அடுத்த ரெண்டு வரியுல சொல்லிக்காட்றாரு'
என்றான் மன்னார்.

'அப்போ அந்த முதல் இரண்டு வரிகளும் சும்மா முருகன் புகழைப் பாடறதுதானே' என்றேன் நான்!
இரக்கத்துடன் என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!


'அதெல்லாம் நீ பண்றது! சும்மானாச்சும் வார்த்தையப் போட்டு ரொப்பறதுல்லாம் நீதான் செய்வே!
ஆனா, அருணையாரு அப்பிடியாப்பட்ட ஆளு இல்ல! நீ கொளந்தை கொளந்தைன்னு கொஞ்சுவியே

ஒர்த்தரை... அவுரு அடிக்கடி சொல்லுவாருன்னு நீதானே சொல்லிருக்கே முந்தி! பெரியவங்க சொல்ற
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பெரிய அர்த்தம் இருக்கும்! பொளுது போவாம ஒன்னியமாரி
எளுதறவங்க இல்ல அவங்கல்லாம்! அதுக்காவ ஒன்னியக் குத்தம் சொல்றேன்னு மூஞ்சியத் தூக்கிக்காத!
பக்தியோட நீ எளுதறதுலியும் தப்பே இல்ல! ஆனா, இங்க, அருணையாரு சும்மா மணி மணியா
வார்த்தைங்களைப் பொறுக்கிப் போட்டுருக்காரு!
ஒண்ணொண்ணாப் பாக்கலாம்!'

உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ!
'உல்லாச'ன்னா எப்பவுமே மாறாம ஒரே நெலையா நிக்கறவன்னு அர்த்தம்! எதுன்னாலும்
கலங்காம ஒரே 'ஷ்டெடி'யா நிக்கறவன்!
இங்க நடக்கற எத்த வோணும்னாலும் அவனால மாத்த முடியும்! ஆனா, அவன் மட்டும் மாறாம

அல்லாத்தியும் பார்த்து ஒரு கொளந்தை மாரி சிரிச்சுக்கினே இருப்பான்! அவந்தான் உல்லாசன்!

'நிராகுலன்'னா ஒரு கஸ்டமும் இல்லாதவன்னு பொருளு! தும்பமே இல்லாதவனுக்கு நிராகுலன்னு பேரு!
ஆருக்கு து[ன்]ம்பமே வராது? ஞானம் இருக்கறவனுக்கு! அறிவு இருந்தாலும் அத்த 'யூஸ்' பண்ணாம,
இல்லாக்காட்டிக்கு அறிவே இல்லாம காரியத்த செய்யறவனுக்கு, எப்பவுமே கஸ்டந்தான் வந்து சேரும்!
அறிவே வடிவமா க்கீறவனுக்கு கஸ்டம் வரும்...
ஆனாக்க, அதுக்காவ அவன் அள மாட்டான்! அவந்தான் நிராகுலன்!
'யோக'ன்னா, யோக வடிவா க்கீறவன்னு சொல்லலாம். ஞானம் வந்தப்பறம், யோகமும்
கூடவே வந்திருச்சுன்னா, அதுவே பெரிய சந்தோஷமா மாறிடும்! அப்பிடியாப்பட்டவன் நம்மாளு!

இந்த மூணையும் இன்னோரு வகையாக்கூடச் சொல்லலாமாம்! உல்லாசம்னா 'சத்து'.
நிராகுலன்னா அறிவு... 'சித்து', யோகம்னா 'ஆனந்தம்'.
ஆகக்கூடி, இந்த மூணையும் சேர்த்தா சத்துசித்து ஆனந்தம்.. சச்சிதானந்தம்! அப்பிடிச்

செல்லமாக் கூப்புடறாரு அருணகிரியாரு!

இப்ப, அடுத்த மூணையும் பாப்பமா?
'இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ'னு கொஞ்சுறாரு!
'இதம்'னா நெனைப்பு.... நெனைக்கறது.
'சல்லாபம்'னா பேசறது
'விநோதம்'னா செய்யறது.

சச்சிதானந்தமா க்கீற கந்தன் இப்ப இவரை, நெனைக்க, பேச, செய்ய வைக்கணும்னு முடிவு
பண்ணனுமாம்!
இவுரையும் சச்சிதானந்தமா மாத்தணுமாம்!

அதுக்குத்தான் ஒரு கொளந்தையக் கொஞ்சறமாரி, 'நீ இப்பிடியாப்பட்ட செல்லக் கொளந்தைதானே!
எனக்குச் சொல்லுவியாம்'னு முருகன்கிட்ட ஒரு கிளிமாரி கொஞ்சறாரு அருணகிரிநாதரு.
அதான் அந்த 'நீ அலையோ!'
'அலையோ'ன்னா இல்லையோன்னு அர்த்தம்!

இப்ப, இந்த ஆறுக்கும் இன்னொரு விதமாச் சொல்றேன் கேளு' என மன்னார் சொன்னதும்,
கண்களை மூடிக்கொண்டு, கைகளைக் கூப்பியபடி, சாஸ்திரிகள் நிமிர்ந்து உட்கார்ந்தார்!

எப்பவும் மாறாத உல்லாசந்தான் திருப்பரங்குன்றம்!
தும்பமே இல்லாம ஞானமயமா கீறதுதான் திருச்செந்தூரு!
யோகமா எப்பவும் ஆனந்தமா க்கீறது பள[ழ]னிமலை!
இதமா நெனைப்பைக் குடுக்கறது சாமிமலை!
இங்கியும் அங்கியுமா குதிச்சு குதிச்சுப் பேசற இதந்தான் திருத்தணி.. குன்றுதோறாடல்னும்

இத்தச் சொல்லுவாங்க!
விநோதமாத் தெரியறது பள[ழ]முதிர்சோலை!

இந்த ஆறையும் இதுக்குள்ள காட்றாரு அருணைகிரி!' எனச் சொல்லி நிறுத்தினான்
மயிலை மன்னார்!

மூடிய கண்களைத் திறக்காமலேயே, சாஸ்திரிகள் பேசத் தொடங்கினார்... திடீரென!
'அற்புதமா இதுவரைக்கும் சொன்னே மன்னார்! நீ சொன்னதுந்தான் இந்த ஆறுக்கும்
இன்னொரு வியாக்யானம் இருக்குன்னு எனக்குப் பட்டுது!

திருப்பரங்குன்றம்தான் மூலாதாரம். ஸ்திரமா நிக்கறது!.. உல்லாஸம்!
திருச்செந்தூர்தான் ஸ்வாதிஷ்டானம்!.. ஞானமயமானது!.... நிராகுலம்!
பழநிமலை யோகத்தால எப்பவும் ஆனந்தமா இருக்கறதால.. அது மணிபூரகம்!
இதம்னு சொன்ன ஸ்வாமிமலைதான் அநாகதம்!
ஸல்லாபம்னு சொன்னியே அதான் விசுத்தி! திருத்தணி
விநோதம்..ஆக்ஞா சக்ரம்! அது பழமுதிசோலை!


இப்பிடி யோக ஸாஸ்த்ரத்துல சொல்லியிருக்கற ஆறு சக்ரத்தையுந்தான் இந்த ஆறும் காட்றதுன்னு
நெனைக்கறேன்!' என்றபடியே கண்களைத் திறந்தார்!

'ஐயரு சொல்றதும் சர்யாத்தான் க்கீது' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

இப்ப வெளங்குதா?... நான் ஏன் இந்தப் பாட்டு அவ்ளோ முக்கியம்னு சொன்னேன்னு? இப்ப அடுத்தாப்புல
வர்ற ரெண்டு பாட்டும் இத்த ஒட்டியே வரும்! இந்த 3.4.5 மூணும் ஒரு செட்டுன்னு நெனைப்புல வைச்சுக்க'
எனச் சொல்லிவிட்டு, கொஞ்சம் எழுந்து சோம்பல் முறித்தான் மன்னார்!

தனது செல்ஃபோன் மூலம் டீ, வடைக்கு சொல்லிக்கொண்டிருந்தான் நாயர்!
**************
[தொடரும்]
 
கதை சொல்ல வந்த மன்னாரு
காணாமே எங்கே போனாரு?
:confused:

எட்டு நாளாகியும் இன்னும்
தட்டுப்படலே கண்ணிலே!:noidea:
 
வேலைகொஞ்சம் அதிகமாகிப் போனதினாலே
காணாமல் போயிருந்தான் மயிலை மன்னாரு
ஓலையொன்று வந்திலே மனம்நெகிழ்ந்தே
நேரத்திலே வருவேனெனச் சொல்லச்சொன்னாரு!:))
 
மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 4

"கந்தர் அனுபூதி" -- 4

வானோ புனல்பார் கனன்மா ருதமோ
ஞானோ தயமோ நவினான் மறையோ
யானோ மனமோ வெனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண் முகனே!

வானோ? புனலோ? பாரோ? கனலோ? மாருதமோ?
ஞானோதயமோ? நவில் நான்மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ?
பொருள் ஆவது சண்முகனே!?!?!?

போன பாட்டுல நெறையச் சொல்லிட்டதால, நொந்துபோயி ஆருமே வரலைன்னு சொன்னே!
அத்தப் பத்திக் கவலைப்படாதே!
இது ஆருக்குப் போவணுமோ, அவங்களைப் போயிச் சேரும்!
அதுக்காவ, நான் சொல்ல வந்ததச் சொல்லாம் வுடவும் மாட்டேன்!

நீ மட்டும் இதுல கவனம் வைச்சு இத்த மட்டுமே கவுனி! சரியா?' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

'வரலைன்றதை மட்டுந்தான் சொன்னேனே தவிர, அதனால எனக்கு வருத்தம்னு சொல்லவே இல்லியே, மன்னார்!

நீ மேலே சொல்லு ! நான் கேட்கிறேன்!' என்றேன் நான்!
'ஞானும் உண்டு' என்றான் நாயர்!
'நீ சொல்லுடா! நான் கேழ்க்கறேன்!' என்றார் சாஸ்திரிகள்!

அன்புடன் எங்க எல்லாரையும் பார்த்தவாறே மன்னார் தொடர்ந்தான்!

'இந்தப் பாட்டை முந்தின பாட்டோடையும், அடுத்த பாட்டோடையும் சேர்த்துப் படிச்சுப் பொருள் வெளங்கிக்கணும்!

சரி, இதுல இன்னா சொல்லிருக்காருன்னு பாப்பம்!

'எல்லாம் மற என்னை இழந்த நலம் சொல்லுப்பா'ன்னு போன பாட்டுல கிளிமாரி கொஞ்சிக் கேட்டாரு
அருணகிரிநாதரு!
இப்ப, இந்தப் பாட்டுல, அந்த நலம் இன்னான்னு சொல்ல வராரு!

வானோ? புனலோ? பாரோ? கனலோ? மாருதமோ?
அது ஆகாசமா? ... இல்லை!
தண்ணியா?.... அதுவுமில்ல!
அப்ப, ... இந்த பூமியா... ம்ஹூம்.. சான்ஸே இல்லை
இதுல்லாம் இல்லேன்னா,?... ஒருவேளை நெருப்பா இருக்குமோ?.... இல்லவே இல்லை!
அப்ப... நிச்சயமா அது காத்தாத்தான் இருக்கணும்! என்ன? அதுவுமில்லியா?

இப்பிடி ஒண்ணொண்ணா பஞ்ச பூதம் அஞ்சையும் இதில்ல, இதில்லன்னு தள்ளிகிட்டே பார்த்தா, ..........ஒண்ணு

புரியுது எனக்கு! இந்தப் பஞ்ச பூதத்தையும் கைக்குள்ள வைச்சிருக்கறதே நீதானே! அப்போ, எப்பிடி, நீ இதுல
ஒண்னுதான்னு சொல்லி ஒன்னியக் கொறைச்சுப் பேசறதுன்னு!

அப்ப, பஞ்ச பூதத்துக்கும் மேலான நீ இதுல ஒண்ணா இருக்கறதுக்குச் சான்ஸே இல்லை!

ஞானோ தயமோ நவினான் மறையோ

அப்பிடீன்னா, .... இன்னாமோ இதையெல்லாம் தாண்டின ஞானம்னு சொல்றாங்களே அதுவான்னா, ... அதுவும்
இல்லை! ஏன்னா, அத்தயெல்லாந்தான் நாலு வேதமும் சொல்லுதுன்னு சொல்றாங்களே!

அப்ப,....இந்த ஞானத்தையெல்லாம் சொல்ற வேதமான்னா, அதும் இல்லியாம்! வேதத்துக்கே பொருளைச்

சொன்னவன் நீன்னு தான் ஒனக்கு 'தகப்பன் சாமி'ன்னே ஒரு கதையும், பேரும் இருக்கு! அதுனால நீ அந்த வேதமும்
இல்லை!

ஆஹா! இதென்னடா,' மதுரைக்கு வந்த சோதனை'ன்றமாரி கலங்கறாரு அருணையாரு!

'ஏன் இதெல்லாம் வருது? இந்த நான்ற நெனைப்பு இருக்கறதாலத்தானே? அந்த நானுன்றதுதான் இதுவோ'ன்னு ஒரு

சந்தேகம் வருது! பொட்டுல அடிச்சாமாரி, அதுவும் இல்லைடான்னு ஒரு கொரலு உள்ளேர்ந்து வருது!

ஆரது கொரல் குடுக்கறதுன்னு பார்க்கறாரு!

இதுவரைக்கும் சொன்ன இத்தெல்லாம் இல்லைன்னா, ஒருவேளை இத்தயெல்லாம் நெனைக்கற இந்த மனசான்னு

ஒரு கேள்வி கேக்கறாரு! அதுவும் இல்லைன்னு புரியுது! அதான் போன பாட்டுலியே சொல்ட்டாரே! இந்த
மனசையெல்லாம் இள[ழ]ந்த நலத்தை எனக்குச் சொல்லுப்பான்னு கேட்டாரே... அப்ப எப்பிடி இந்த மனசான்னு
நெனக்கமுடியும்னு செவுட்டுல அறைஞ்சமாரி, புரியுது!

அப்போ....... இந்த மனசும் இல்லை!

அப்ப......... எதான் இது?

இந்த 'எனை ஆண்ட இடம்'?

கோபுரத்துலேர்ந்து குதிச்சப்பக் காப்பாத்தினாரே..... ரெண்டு கையுலியும் வாங்கிக்கினு?

அதுவா? அந்த நிமிசமா?

பொம்பளை சொகமே பிரதானமின்னு திரிஞ்சவரை, 'சொல்லற! சும்மாயிரு!'ன்னு சொன்னாரே!... அந்த நேரமா?


இந்த "எடம்"ன்றதுலதன் சூட்சுமம் இருக்கு!

அதைத்தான் 'பொருளாவது'ன்னு சொல்லிக் குதிக்கறாரு இங்க!

என்னை இழந்த நலம்னு போன பாட்டுல சொன்னதோட பொருளு இதான்!

எந்த நேரத்துல, எந்த நொடியில, எந்த எடத்துல இந்த பொருளு அவருக்கு வெளங்கிச்சோ, அதான் அந்த எடம்! ..

அந்த நலம்!!

இது வரைக்குமா இருந்த ஒரு சாதாரணமான ஆளு,....... 'என்னியே எடுத்துக்கோடா'ன்னு தன்னோட அக்காவே

மாராப்பை விரிச்சுப்போட்டுக் சொல்ற அளவுக்குப் பொம்பளைப் பித்து புடிச்சு அலைஞ்சோமேன்னு மனசு
வெறுத்துப்போயி, 'இனிமே உசுரோட இருந்து இன்னா பிரயோசனம்'னு நெனைச்சு கோவுரத்து உச்சிலேர்ந்து
வுளுந்தவனை...... ரெண்டு கையால தாங்கிப் புடிச்சுக் காப்பாத்தி, 'முத்தைத்தரு'ன்னு ஒரு சொல்லையும்
சொல்லி, 'இனிமே என்னியப் பத்தி மட்டும் பாடு!'ன்னு சொன்ன ஒரு அன்பான சாமியை நல்லாப் புரிஞ்சுகிட்ட
அந்த நொடிதான்..'அவரை ஆண்ட எடம்'!!!!! அல்லாத்தியும் எளந்த நலம்!

அதுக்குத்தான் இந்த ரெண்டுபாட்டையுமே சேர்த்துப் படிக்கணும்னு சொன்னேன்!

அது மட்டுமில்ல!

அந்தக் கடைசி வார்த்தையுல கூட ஒரு குசும்பு பண்ணி வைச்சிருக்காரு!


சண்முகனேன்னு சொல்லி முடிக்குறாரு!

இந்த வார்த்தைய......., நேரம், நொடி, காலம் பொருளுல்லாம் எதுவுமே இல்ல! அல்லாமே நீதான்
சண்முகா.....ன்னும் புரிஞ்சுக்கலாம்!

இல்லாங்காட்டிக்கு,... வானோ, புனலோ, பாரோ, கனலோ, மாருதமோ, ஞானோதயமோ, சொல்ற நாலு வேதமோ,

நானோ, மனசோ..... இல்லைன்னா.... இத்தெல்லாம் இல்லாம என்னிய நீ கண்டுகிட்ட எடமோ, இதான்
பொருளா ஆச்சா ஆறுமுகா?ன்னு முருகனையே கேக்கறாருன்னும் புரிஞ்சுக்கலாம்!

அடுத்த பாட்டையும் சேர்த்துப் பார்த்தியானா, எதுக்கு இப்பிடிச் சொன்னாரு.... இல்லைன்னா.... கேட்டாருன்னு

புரியவரும்!' என ஒரு சஸ்பென்ஸோடு முடித்தான் மயிலை மன்னார்!

'சும்மா இதைப் படிச்சிருக்கேண்டா! ஆனா, நீ சொல்லச் சொல்ல, இதுக்குள்ள இத்தனை அர்த்தம் இருக்கான்னு

மலைச்சுப் போய் நிக்கறேன் மன்னார்!' எனக் கண்களைத் துடைத்துக் கொண்டார் சாஸ்திரிகள்!

எதுவுமே சொல்லத் தெரியாமல் நானும் நாயரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்!
**********
[தொடரும்!
 
மன்னார் ஸ்வாமிகள் உறக்கத்தை
மறந்தோ துறந்தோ திரும்பியுள்ளார்!
:welcome:

கால தாமதத்துக்கு ஈடு செய்வதுக்கு

கால க்ஷேபத்தையும் வளர்த்துள்ளார்!:clap2:
 
Last edited:
ஆஹா ! அதி அற்புதம். அடியேனால் இப்படி எழுத கற்பனை கூட
செய்து பார்க்கமுடியாது. ஹாஸ்ய ரஸத்திலே பெரிய கருத்தை
சொல்லிப்புட்டாரு மயிலை மன்னாரு.
 
அன்புடையீர்,
அருணகிரிநாதர் அனுபூதி பெற்ற பின் ' கந்தர் அனுபூதி' யை எழுதினார் என்று
சொல்கிறார்கள். அத்வைதானுபூதி பெற்றபின் எங்கிறார்கள் - நீ வேறு எனாதிருக்க
,நான் வேறு எனாதிருக்க ' . மன்னார் என்ன சொல்கிறார்.
 
'சும்மா இதைப் படிச்சிருக்கேண்டா! ஆனா, நீ சொல்லச் சொல்ல, இதுக்குள்ள இத்தனை அர்த்தம் இருக்கான்னு
மலைச்சுப் போய் நிக்கறேன் மன்னார்!' எனக் கண்களைத் துடைத்துக் கொண்டார் சாஸ்திரிகள்!


நானும் தான்
 
அன்புகொண்டு பாராட்டிய, வாழ்த்திய, ஆசி வழங்கிய அனைவருக்கும்
மயிலை மன்னார் தன் பணிவான வணக்கத்தைச் சொல்லச் சொன்னான்!
 
மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 3 [முதல் பகுதி]

[இந்தப் பாடலுக்கான மன்னாரின் விளக்கம் இரண்டு பகுதிகளாக அடுத்தடுத்து வரும்! அருள்கூர்ந்து
ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கவும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!]

உல்லா சநிரா குலயோ கவிதச்
சல்லா பவிநோ தனுநீ யலையோ
எல்லா மறவென் னையிழந் தநலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.

உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனு[ம்] நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.

மேலும் கேட்கும் ஆவலில் மூன்றாம் பாடலைப் படித்தேன்.
மன்னாரின் முகத்தில் ஒரு புதிய உற்சாகம் தெரிந்தது!
கண்களை மூடிக்கொண்டு பாடலை இரண்டு, மூன்று தரம் படிக்கச் சொல்லிக் கேட்டான்!
ஏதோ தியானத்தில் ஆழ்ந்தவன் போல் அவன் முகம் இருந்தது.
முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது!


'என்னோடு வா! இந்தச் சந்தடி இனிமே நமக்கு வேண்டாம்! நாயர்! நீயும் சீக்கிரமாக் கெளம்பி ஐயரு வூட்டாண்ட வா!'

எனச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கலானான்! நானும் நாயரும் கூடவே நடந்தோம்.

'ஹோட்டல் சங்கீதா' தாண்டி தெற்கு வீதியில் திரும்பியதும், என் தோளில் கை போட்டுக்கொண்டு

மயிலை மன்னார் பேசலானான்!

'இந்தப் பாட்டு ரொம்பவே ஒசத்தியானுது! சொல்றவங்க சொன்னா அப்பிடியே சொல்லிக்கினே போலாம்!
அவ்ளோ மேட்டர் க்கீது இதுக்குள்ள!

இந்தப் பாட்டை புரிஞ்சுக்கறதுக்கு, எப்பிடிப் படிக்கணும்னு சொல்றேன் கேட்டுக்கோ!

மிச்சத்த அப்பாலிக்கா ஐயரு வூட்ல வந்து சொல்றேன்!

கடசி வரிலேர்ந்து அப்பிடியே படிப்படியா மேல போயிப் பார்க்கணும் இத்த!


சுரபூபதியே! முருகா! நலம் சொல்லாய்!

இன்னா நலம்?
என்னை இள[ழ]ந்த நலம்!
என்னை இள[ழ]க்கணும்னா இன்னாத்தயெல்லாம் தொலைக்கணும்?
இது அதுன்னு எதுவுமே இல்லாம, எல்லாம் அற என்னை இள[ழ]ந்த நலம்!

இப்ப மொத ரெண்டுவரியையிம் சேர்த்துப் படிக்கணும்!
உல்லாசலேர்ந்து ஆரம்பிச்சு, நீயலையோ வரைக்கும்!

எங்கே நான் சொன்னமாரி சொல்லிக் காட்டு, பார்க்கலாம்' என்றான்

வரிகளைப் பார்த்துக்கொண்டே நானும் சொன்னேன்.

சுரபூபதியே! முருகா! எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்!
உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ!

'சரிதான்!' என்பதுபோல நாயர் தலையாட்டினான்! சந்தோஷமாகச் சிரித்தான் மன்னார்.

பேசிக்கொண்டே சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையை அடைந்தோம். ஆளரவம் கேட்டு அவரும் வந்து மௌனமாக உட்கார்ந்தார்!
மன்னார் தொடங்கினான்!

'சுர பூபதி'ன்னு சொல்றாரு!

சுரர்னா ஆரு? நீதான் கொஞ்சம் திருப்புகள்[ழ்]லாம் படிச்சிருக்கியே! அதுல நெறைய வரும் இந்த வார்த்தை!

'சுரர்'னா தேவருங்க! 'பதி'ன்னா ராசா! 'பூ'ன்னா பூமி! ஒலகம்! 'பூபதி'ன்னா ஒலகத்துக்கே ராசா! எந்த ஒலகத்துக்கு?
தேவருங்களோட ஒலகத்துக்கே ராசாவேன்றாரு!

இப்ப ஒனக்கு ஒரு டவுட்டு வரும்!


தேவருங்களுக்கெல்லாம் இந்திரந்தானே ராசா! இவுரு எப்பிடி ராசாவாக முடியும்னு!
சூரங்கிட்டேர்ந்து அல்லாரையும் வெளில கொணாந்து, இந்திரனுக்கு மறுபடியும் பட்டம் கட்ட வராரு நம்ம முருகன்!
அப்ப, அவன், 'எனக்கு இதெல்லாம் வோணாம் முருகா! நீயே ராசாவா இரு!'ன்னு சொல்லி, பொண்ணையும்

கட்டிக் குடுத்திட்டு ஒக்கார வைச்சுடறான்!

அப்பாலிகா, இவுரு 'நம்ம வேலை நெறைய க்கீது! நம்மளோட அடியாருங்கல்லாம் காத்துக்கினு க்கீறாங்க!

அதுனால, இங்க நமக்குத் தோதுப்படாது! நீயே ராசாவா இருப்பா!'ன்னு இந்திரன் கையுல சொல்லிட்டு கெளம்பிடறாரு!
அதான் இவுரு சுர பூபதி!

இப்ப ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க!


ஒரு மந்திரி இருக்காரு.

அவரு முன்னால அல்லாரும் சலாம் போட்டுக்கினு நிக்கறாங்க.
இப்ப முதல்மந்திரி அங்க வராரு.
அப்போ இன்னா ஆவும்?
இந்த மந்திரியே எளு[ழு]ந்திரிச்சு அவரு முன்னாடி கைகட்டிக்கினு, வாய் பொத்திக்கினு, பயபக்தியா நிப்பாரு!
முதல் மந்திரியும் அமத்தலா இந்தாளோட சேர்ல போயி குந்திக்குவாரு!
அதும்மாரித்தான் இதுவும்!


இவுரு எப்ப தேவலோகத்துக்கு வந்தாலும் தேவேந்திரன் எளுந்து தன்னோட நாக்காலியக் குடுத்திருவான்!
அதுனால... இவுரு சுரபூபதி!

ஆச்சா! இப்ப 'முருகா'ன்னா இன்னான்னு ஒனக்கு நல்லாவே தெரியும்! 'அள[ழ]கு'ன்னு சொல்லலாம்!

'சின்ன வயசு'ன்னு சொல்லலாம்! எப்பிடிச் சொன்னாலும் முன்னே வந்து நிப்பான் முருகன்!

இதுக்கு முந்தின வார்த்தையப் பாரு!
'சொல்லாய்'னு வருது!


ரொம்பவும் இஸ்டமானவங்களத்தான் இப்பிடிக் கூப்புடுவோம்!
அதுலியும் முக்கியமா சின்னக் கொளந்தையா இருந்தா, 'சொல்லும்மா, எங்கண்ணுல்ல, சொல்லுவியாம்'னு

இன்னான்னாமோ சொல்லிக் கொஞ்சுவோம்!
அதான் இந்தச் "சொல்லாய்"!

இன்னா சொல்லச் சொல்றாரு அருணகிரியாரு?

எல்லாமற என்னை இள[ழ]ந்த நலத்தை எனக்கு சொல்லித்தாப்பான்னு கொஞ்சிக் கொஞ்சிக் கேக்கறாரு!
இவுரே ஒரு கிளி! அதான் இதுவும் கொஞ்சுது!

'எல்லாம்'னா இன்னா?


சைவசித்தாந்தத்துல இந்த பஞ்ச பூதத்தப் பத்தியும், அதுனால வர்ற மத்த சமாச்சாரமும் அன்னிக்கு சொன்னேன்ல,
அந்த இருவதும் [ஐம்பூதங்கள்[5] ஐம்புலன்கள்[5],ஞானேந்திரியங்கள்[5], கன்மேந்திரியங்கள்[5]] வெளியே தெரியுது!

மனம், புத்தி, சித்தம், அகங்காரம்னு உள்ளார க்கீற நாலும் சேர்ந்ததுதான் இந்த 'எல்லாம்'!

இதெல்லாம் அத்துப் போச்சுன்னாலும்,' நானு'ன்ற ஆணவமலம் மட்டும் வுடாம தொத்திக்கினே இருக்கும்!

அத்தயும் தொலைச்சுட்டு, ஒரு தனி நெலைல இருக்கற அந்த சொகமான அனுபவத்த நீ எனக்கு சொல்லுன்னு
கொஞ்சறாரு!

அந்த நெலையுல இன்னா ஆவும்னா, கண்ணு எத்தயோ பார்க்கும்! ஆனா பார்த்ததே தெரியாது!

காது கேக்கும்! ஆனா கேக்குதுன்னு தெரியாது! புத்தி இருக்குன்னு புரியும்! ஆனா, அதுவா ஒண்ணுத்தியும்
முடிவு பண்ணாது! இப்பிடி சொல்லிக்கினே போலாம்! அதும்மாரி ஒரு ஆளரவமே இல்லாத நெலையாம் அது!
அதைச் சொல்லித் தாப்பான்னு முருகங்கிட்ட கொஞ்சிக் கேக்கறாரு!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.

****************
[தொடரும்]


 
"கந்தர் அநுபூதி" -- 3 [இரண்டாம் பகுதி]

உல்லா சநிரா குலயோ கவிதச்
சல்லா பவிநோ தனுநீ யலையோ
எல்லா மறவென் னையிழந் தநலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.

[தயவுசெய்து, முதல் பகுதியைப் படித்துவிட்டு, இதனைப் படிக்கவும்!]

"மேல சொல்றதுக்கு முந்தி இதுல சொல்லாம சொல்லி க்கீற ஒரு சூட்சுமத்தப் புரிஞ்சுக்கோ!

இந்த அல்லாத்தியும் தொலைக்கறது; என்னைத் தொலைக்கறதுன்றதுல்லாம் சாமானியமா

ஒர்த்தரால தானா செய்யுற சமாச்சாரம் இல்லன்னு பூடகமா சொல்லி வைக்கறாரு அருணையாரு!
அதுக்குல்லாம் ஒரு நல்ல குரு வரணும்! அவுரு வந்துதான் இத்த எப்பிடித் தொலைக்கறதுன்னு
சொல்லித் தருவாரு!
இவுருக்கு அப்பிடிக் கெடைச்ச குருதான் முருகன்! அதான் இப்ப அடுத்த ரெண்டு வரியுல

சொல்லிக்காட்றாரு' என்றான் மன்னார்.

'அப்போ அந்த முதல் இரண்டு வரிகளும் சும்மா முருகன் புகழைப் பாடறதுதானே' என்றேன் நான்!
இரக்கத்துடன் என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

'அதெல்லாம் நீ பண்றது! சும்மானாச்சும் வார்த்தையப் போட்டு ரொப்பறதுல்லாம் நீதான் செய்வே!
ஆனா, அருணையாரு அப்பிடியாப்பட்ட ஆளு இல்ல! நீ கொளந்தை கொளந்தைன்னு

கொஞ்சுவியே ஒர்த்தரை... அவுரு அடிக்கடி சொல்லுவாருன்னு நீதானே சொல்லிருக்கே முந்தி!
பெரியவங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பெரிய அர்த்தம் இருக்கும்! பொளுது
போவாம ஒன்னியமாரி எளுதறவங்க இல்ல அவங்கல்லாம்! அதுக்காவ ஒன்னியக் குத்தம்
சொல்றேன்னு மூஞ்சியத் தூக்கிக்காத!
பக்தியோட நீ எளுதறதுலியும் தப்பே இல்ல! ஆனா, இங்க, அருணையாரு சும்மா மணி

மணியா வார்த்தைங்களைப் பொறுக்கிப் போட்டுருக்காரு!
ஒண்ணொண்ணாப் பாக்கலாம்!'

உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ!

'உல்லாச'ன்னா எப்பவுமே மாறாம ஒரே நெலையா நிக்கறவன்னு அர்த்தம்! எதுன்னாலும்
கலங்காம ஒரே 'ஷ்டெடி'யா நிக்கறவன்!
இங்க நடக்கற எத்த வோணும்னாலும் அவனால மாத்த முடியும்! ஆனா, அவன் மட்டும்

மாறாம அல்லாத்தியும் பார்த்து ஒரு கொளந்தை மாரி சிரிச்சுக்கினே இருப்பான்! அவந்தான்
உல்லாசன்!

'நிராகுலன்'னா ஒரு கஸ்டமும் இல்லாதவன்னு பொருளு! தும்பமே இல்லாதவனுக்கு

நிராகுலன்னு பேரு!
ஆருக்கு து[ன்]ம்பமே வராது? ஞானம் இருக்கறவனுக்கு! அறிவு இருந்தாலும் அத்த 'யூஸ்'

பண்ணாம, இல்லாக்காட்டிக்கு அறிவே இல்லாம காரியத்த செய்யறவனுக்கு, எப்பவுமே
கஸ்டந்தான் வந்து சேரும்!
அறிவே வடிவமா க்கீறவனுக்கு கஸ்டம் வரும்...
ஆனாக்க, அதுக்காவ அவன் அள மாட்டான்! அவந்தான் நிராகுலன்!
'யோக'ன்னா, யோக வடிவா க்கீறவன்னு சொல்லலாம். ஞானம் வந்தப்பறம், யோகமும்

கூடவே வந்திருச்சுன்னா, அதுவே பெரிய சந்தோஷமா மாறிடும்! அப்பிடியாப்பட்டவன்
நம்மாளு!

இந்த மூணையும் இன்னோரு வகையாக்கூடச் சொல்லலாமாம்! உல்லாசம்னா 'சத்து'.
நிராகுலன்னா அறிவு... 'சித்து',

யோகம்னா 'ஆனந்தம்'.
ஆகக்கூடி, இந்த மூணையும் சேர்த்தா சத்துசித்து ஆனந்தம்.. சச்சிதானந்தம்! அப்பிடிச்

செல்லமாக் கூப்புடறாரு அருணகிரியாரு!

இப்ப, அடுத்த மூணையும் பாப்பமா?


'இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ'னு கொஞ்சுறாரு!

'இதம்'னா நெனைப்பு.... நெனைக்கறது.
'சல்லாபம்'னா பேசறது
'விநோதம்'னா செய்யறது.
சச்சிதானந்தமா க்கீற கந்தன் இப்ப இவரை, நெனைக்க, பேச, செய்ய வைக்கணும்னு முடிவு

பண்ணனுமாம்! இவுரையும் சச்சிதானந்தமா மாத்தணுமாம்!

அதுக்குத்தான் ஒரு கொளந்தையக் கொஞ்சறமாரி, 'நீ இப்பிடியாப்பட்ட செல்லக்

கொளந்தைதானே! எனக்குச் சொல்லுவியாம்'னு முருகன்கிட்ட ஒரு கிளிமாரி கொஞ்சறாரு
அருணகிரிநாதரு.
அதான் அந்த 'நீ அலையோ!'
'அலையோ'ன்னா இல்லையோன்னு அர்த்தம்!
இப்ப, இந்த ஆறுக்கும் இன்னொரு விதமாச் சொல்றேன் கேளு' என மன்னார் சொன்னதும்,

கண்களை மூடிக்கொண்டு, கைகளைக் கூப்பியபடி, சாஸ்திரிகள் நிமிர்ந்து உட்கார்ந்தார்!

எப்பவும் மாறாத உல்லாசந்தான் திருப்பரங்குன்றம்!
தும்பமே இல்லாம ஞானமயமா க்கீறதுதான் திருச்செந்தூரு!
யோகமா எப்பவும் ஆனந்தமா க்கீறது பள[ழ]னிமலை!
இதமா நெனைப்பைக் குடுக்கறது சாமிமலை!
இங்கியும் அங்கியுமா குதிச்சு குதிச்சுப் பேசற இதந்தான் திருத்தணி.. குன்றுதோறாடல்னும்

இத்தச் சொல்லுவாங்க!
விநோதமாத் தெரியறது பள[ழ]முதிர்சோலை!
இந்த ஆறையும் இதுக்குள்ள காட்றாரு அருணைகிரி!' எனச் சொல்லி நிறுத்தினான்

மயிலை மன்னார்!

மூடிய கண்களைத் திறக்காமலேயே, சாஸ்திரிகள் பேசத் தொடங்கினார்... திடீரென!
'அற்புதமா இதுவரைக்கும் சொன்னே மன்னார்! நீ சொன்னதுந்தான் இந்த ஆறுக்கும்

இன்னொரு வியாக்யானம் இருக்குன்னு எனக்குப் பட்டுது!

திருப்பரங்குன்றம்தான் மூலாதாரம். ஸ்திரமா நிக்கறது!.. உல்லாஸம்!
திருச்செந்தூர் ஸ்வாதிஷ்டானம்!.. ஞானமயமானது!.... நிராகுலம்!
பழநிமலை யோகத்தால எப்பவும் ஆனந்தமா இருக்கறதால.. அது மணிபூரகம்!
இதம்னு சொன்ன ஸ்வாமிமலைதான் அநாகதம்!
ஸல்லாபம்னு சொன்னியே அதான் விசுத்தி! திருத்தணி
விநோதம்..ஆக்ஞா சக்ரம்! அது பழமுதிர்சோலை!

இப்பிடி யோக ஸாஸ்த்ரத்துல சொல்லியிருக்கற ஆறு சக்ரத்தையுந்தான் இந்த ஆறும்

காட்றதுன்னு நெனைக்கறேன்!' என்றபடியே கண்களைத் திறந்தார்!

'ஐயரு சொல்றதும் சர்யாத்தான் க்கீது' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

இப்ப வெளங்குதா?... நான் ஏன் இந்தப் பாட்டு அவ்ளோ முக்கியம்னு சொன்னேன்னு?

இப்ப அடுத்தாப்புல வர்ற ரெண்டு பாட்டும் இத்த ஒட்டியே வரும்! இந்த 3.4.5 மூணும்
ஒரு செட்டுன்னு நெனைப்புல வைச்சுக்க' எனச் சொல்லிவிட்டு, கொஞ்சம் எழுந்து
சோம்பல் முறித்தான் மன்னார்!

தனது செல்ஃபோன் மூலம் டீ, வடைக்கு சொல்லிக்கொண்டிருந்தான் நாயர்!
**************
[தொடரும்]
 
#4 has already been put. #3 was accidentally put twice I see. I am sorry. #5 will follow.
Thanks.
 
மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 5

"கந்தர் அனுபூதி" -- 5

வளை பட்டகை மாதொடு மக்களெனுந்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ
கிளை பட்டெழுசூ ருரமும் கிரியும்
தொளை பட்டுருவத் தொடு வேலவனே

வளைபட்ட கை மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே!

'அல்லாத்தியும் தொலைச்ச நலத்தைக் குடுப்பா'ன்னு கேட்டவரு, அது இன்னான்னு அடுத்த பாட்டுல சொன்னாரு.
'சண்முகா! ஆறுமுகா!' நீதான் அது'ன்னு ஒரு குன்ஸா' சொல்லிட்டாரு' எனத் தொடங்கினான் மயிலை மன்னார்!.

இப்ப இந்தப் பாட்டுல, இப்பிடி அல்லாத்தியுமே தொலைச்சிட்டாலும், ஆரு அதுன்னு தெரிஞ்சுகிட்டாலும், அத்தச்

சேரவுடாம தடுக்கற ரெண்டு கைவெலங்கைப் பத்திச் சொல்றாரு!

'எங்கிட்ட இருக்கறது அல்லாத்தியுமே ஒண்ணொண்ணா களட்டி வுட்டுட்டேனே... ஆனாக்க, ... இந்த ரெண்டு வெலங்கை

மட்டும் என்னால களட்டவே முடியிலியேப்பா! இப்பிடி என்னியப் பண்ணிட்டியே! இது அடுக்குமா? சரியா? மொறையா?'ன்னு
பொலம்பறாரு... இந்தப் பாட்டுல!

அப்பிடி இன்னாது அந்த ரெண்டு வெலங்கும்? அதைத்தான் 'தளை'ன்னு சொல்றாரு!

மொதத் தளை, தொட்டுத் தாலி கட்டுன பொண்டாட்டி! பொதுவா 'மாது'ன்னு சொல்லாம, 'வளைபட்ட கை மாது'ன்னு

சொல்றாரு,..... கெவனி!

வளைன்னா கையுல போட்டுக்கற வளைன்னு பொதுவாப் புரியும்! ஆனாக்காண்டிக்கு, இப்ப நேத்திக்கு ஒன்னோட 'பெருசு'..

அதாம்ப்பா... அடிக்கடி கொளந்தை, கொளந்தைன்னு நீ கொஞ்சுவியே அந்தப் பெருசைத்தான் சொல்றேன்!!....
அவுரு சொன்னாருன்னு ஒண்ணைப் படிச்சுக் காமிச்சியே! .......பெரியவங்க சொல்ற சொல்லுக்கு நாமளா
புரிஞ்சுக்கறதுன்னு ஒரு அர்த்தம் இருக்கும்! அவங்களா சொன்னது இன்னான்னு ஒரு பொருளு இருக்கும்னு!
அதே கதைதான் இங்கியும்!!

வளைன்னு இங்க சொல்றது தன்னோட அன்பால ஒன்னிய வளைச்சுப் போட்டுருக்கே... அந்தப் வூட்டுக்காரியை!

அவங்கதான் 'வளை பட்ட கை மாது'! வெளங்கிச்சா? ஒன்னிய நம்பி, நீயே சதமின்னு வந்தவங்களை எப்பிடி வுடறது?
நீ பாட்டுக்கு 'சர்த்தான் போம்மா'ன்னு 'டொப்'புன்னு கெளம்பிற முடியுமா? முடியாதுதானே?

சரி, இப்ப அடுத்த தளை இன்னான்னு பாப்பம்!

இவங்களைக்கூட.... வூட்டுக்காரியக் கூட, ஏதோ ஒரு ஆத்தர அவசரத்துல வுட்டுட்டுப் போறவங்க இருக்காங்க!

ஆனாக்காண்டிக்கு, பெத்த மக்களை எப்பிடி வுடறது? 'அப்பா'ன்னு அது வந்து காலைக் கட்டிக்கக்கொள்ள,
அப்பிடியே பாசம் பொத்துக்கினு வருதுல்ல?

அதுங்களுக்கு ஒண்ணுன்னா, ஒம் மனசு எப்பிடி பதறித் துடிச்சுத் தவிக்குது? அதுங்க ஒன்னிய மதிக்குதா,
பாசமா க்கீதான்றதப் பத்தி, துளிக்கூடக் கவலயே படாம, 'ஐயோ! என்னோட பசங்க'ன்னு உள்ளுக்குள்ள கெடந்து
அடிச்சுக்குது இல்ல? அந்த 'மக்கள்'தான் இவுரு சொல்ற ரெண்டாவது தளை!

இந்த ரெண்டு வெலங்குமேவோ, இல்லாங்காட்டிக்கு இதுல ஏதோ ஒண்ணோ, ஒரு ஆளைப் பாடாப் படுத்தி

அலையவைக்குது! இன்னா நான் சொல்றது? இன்னா அப்பிடிப் பாக்கறே?' என்றான் மன்னார்!

அதில்லை மன்னார்! மனைவி, மக்களை 'அம்போ'ன்னு தவிக்கவிட்டுட்டுப் போற சில 'நல்லவங்களும்' இருக்காங்கதானே?

அப்போ எப்படி இது சரியாகும்?'.... என்று இழுத்தேன்!

'ஊரு ஒலகத்துல பொதுவா க்கீற கதையைத்தான் அருணகிரியாரு சொல்றாரு! நீ சொல்றமாரி, அல்லாத்துக்குமே

அங்கங்க ஒரு விதிவெலக்கு இருக்கலாம்! ஆனா, அத்த வுட்டுட்டு, பொதுவாப் பார்த்தியானா, இதான் அல்லா
எடத்துலியும் நடக்கறது!

இந்த தளைங்கல்லேர்ந்து எப்பிடி வெளியே வர்றதுன்னு யோசிக்கறாரு! இம்மாம் பெரிய மாயையுல மாட்டிக்கினோமே!

எப்பிடிரா தப்பிக்கறதுன்னு மயங்கிப் போயி ஒக்காந்துடறாரு!

ஒடனே உள்ளுக்குள்ள ஒரு 'பல்பு' எரியுது அவருக்கு!

ரெண்டு சமாச்சாரம் நெனைப்புக்கு வருது!
கேக்கறது ஆரை? நம்ம முருகனை!
அவுரு இன்னா பண்ணினாரு?
சூரனையும், ஒரு மலையையும் அளிச்சாருன்னு புரியுது! எப்பிடி இத்தப் பண்ணினாருன்னு ஒக்காந்து யோசிக்கறாரு!

தாரகாசுரன்னு ஒர்த்தன்! சூரனோட தம்பி!
வீரவாகுத்தேவரு தாம் போயி அளிச்சுர்றேன்னு வீராப்பாச் சொல்லிட்டு, ஒரு பெரிய படையோட அங்க போறாரு!

கந்தன் சிரிச்சுக்கினே "போய்ட்டு வாப்பா! அவனைப் பார்த்து மயங்கிராதே!'ன்னு அனுப்பி வைக்கறாரு!
அங்க போனா, அந்த ராட்சசன் ஒரு பெரிய மலையா...கிரவுஞ்ச மலையா.... உருவம் எடுத்துக்கினு நிக்கறான்!

அல்லாரையும் மாயமா வளைச்சுப் போட்டுர்றான்!

உள்ளார போன ஆளுங்கல்லாம், நாம எங்க க்கீறோம்னே தெரியாம மயங்கறாங்க! சுத்திச் சுத்தி வராங்க!
வெளியே வர வளியே தெரியலை!
ஆரோ ஒர்த்தர், ரெண்டு பேரு மட்டும் இதுல சிக்காம தப்பிச்சு வந்து முருகன் கையுல விசயத்தச் சொல்றாங்க!
இது ஒரு கதை!

அடுத்தாப்புல, இந்த ஆணவம் புடிச்ச சூரன் !
தங்கூட இருந்த மொத்தப் பேரும் காலியானதுக்கு அப்புறமுங்கூட, தன்னோட ஆணவத்த வுடாம, தனக்குத்தான்

அல்லாமுந் தெரியும்னு கிறுக்குப் புடிச்சு, மாயாரூபமா, ஒரு பெரிய மாமரமா நிக்கறான்! தன்னை ஆரும்
கண்டுபுடிக்கவே முடியாதுன்னு அவன் மனசுல ஒரு நெனைப்பு!
பெரிய்ய்ய்ய்ய சூரன்ல இவன்! அதான்! பூனை கண்ண மூடிக்கினு பூலோகமே இருட்டாயிருச்சுன்னு நெனைச்சமாரி!
நம்மாளு கண்ணுலேர்ந்து எதுனாச்சும் தப்பிச்சுப் போவ முடியுமா?
இது ரெண்டாவது கதை!

இந்த ரெண்டுலியுமே இன்னா ஆச்சுன்னு யோசனை பண்றாரு அருணகிரியாரு!
ரெண்டு கேஸுலியுமே, முருகன் ஒண்ணுமே பண்ணலை!
சும்மா கையுல க்கீற வேலைத் தொட்டாரு!
அவ்ளோதான்!
மலை பொடிப்பொடியாப் போச்சு! மாமரம் ரெண்டாப் பொளந்திருச்சு!
அன்னிக்கு 'சிவக்குறளுக்கு' சொல்றப்ப சிவன் வில்லை எடுக்காமலியே, அம்பு வுடாமலியே, அம்மாவைப் பார்த்து

லேசா சிரிக்கக்கொள்ளியே, அந்த மூணு லோகமும் எரிஞ்சு போச்சுன்னு பார்த்தோமே, அதும்மாரி, இவுரு
வேலைத் தொட்டதுமே, இப்பிடில்லாம் நடந்திருச்சு!

அப்பிடியாப்பட்ட சக்தி முருகன் கைவேலுக்கு க்கீதுன்னு புரிஞ்சுபோச்சு இவுருக்கு!
அத்தயெல்லாம் பண்ணினவருக்கு, அம்மாம் பெரிய மாயாசக்தியையே ஒண்ணுமில்லாமப் பண்ணினவருக்கு,

இந்தக் துக்கினியூண்டு மாயையை தொலைக்கறதா பெரிய காரியம்னு ஒரு தெம்பு வருது!

ஒடனே, அடுத்த ரெண்டு வரியுல, 'கிளைபட்டெளு[ழு] சூரரும் கிரியும் தொ[து]ளை பட்டுருவத்.....

தொடு.... வேலவனே!'ன்னு
கெஞ்சறாரு!

தொடு வேலவனேன்றதுல இத்தினியையும் சொல்லிட்றாரு! இதுல இன்னொரு விசேசம் இன்னான்னா,

மாயை மட்டுந்தான் தொலைஞ்சுது ரெண்டு எடத்துலியும்! மலைக்கு உள்ள இருந்த ஆளுங்களுக்கும்
ஒண்னும் ஆவலை; சூரன்.... சேவலும், மயிலுமா மாறிட்டான்! அதேமாரி, ஒன்னிய இந்த மாயைலேர்ந்து
வெளியே கொணார்றப்போ, மத்தவங்களுக்கும் [மனைவி, மக்கள்] ஒரு கெடுதியும் வராதுன்னு சூசகமா
சொல்லிப் புரியவைக்கறாரு அருணகிரியாரு!

'இப்பப் புரியுதா? எதுனால இந்த மூணு பாட்டையும் சேர்த்தே படிக்கணும்னு சொன்னேன்னு?

மொதப் பாட்டுல எனக்கு சொல்லித் தாப்பான்னு, கொஞ்சலாக் கேக்கறாரு!
ரெண்டாவது பாட்டுல இன்னாது அதுன்னு தெரிஞ்சுக்கின ஒரு சந்தோசம்!
இப்ப, இந்த மூணாவது பாட்டுல ஒரு கெஞ்சலு!

எப்பிடி முருகன்கிட்ட சரணாகதி பண்றதுன்ற அனுபூதிய இந்த மூணு பாட்டுலியும் வைச்சு சொல்லிக்கீறாரு

அந்த மகாப் பெரியவரு! இத்தப் படிச்சு, அவுரு காலுல நாம வுளுந்தாலே போறாதா?' என்றான் மயிலை மன்னார்!

'அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்! வேலாயுதப் பெருமானே சரணம்!

கொஞ்சிடும் மழலையின் மலர்த்தாள் சரணம்!' என்று உரத்த குரலில் சொல்லிக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!
நாங்கள் மூவரும் அதை அப்படியே திருப்பிச் சொன்னோம்!

கபாலி கோவில் மணியும் 'ஓம்! ஓம்' என்பதுபோல் ஒலித்தது!
**********
[தொடரும்]
Read more...
 
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 6

கந்தரநுபூதி: 6

'சரி! முதல் அஞ்சு பாட்டுக்குச் சொல்லிட்டே! இப்ப அடுத்த பாட்டைப் படிக்கவா?' என்றேன்.

மன்னாரை இரண்டு நாட்களுக்குப் பின் பார்த்து, மீண்டும் சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையில்,
நால்வரும் கூடியிருந்தோம்!

'அதுல சொன்னதுல்லாம் நல்லாப் புரிஞ்சிருந்திச்சுன்னா, இப்ப வரபோற பாட்டு ஈஸியாப் புரியும்!
எங்கே. அத்தப் படி, கேப்போம்!' என்றான் மன்னார்!

நேரத்தை வீணாக்காமல் படித்தேன்!

மகமா யைகளைந் திடவல் லபிரான்
முகமா றுமொழிந் துமொழிந் திலனே
அகமா டைமடந் தையரென் றயருஞ்
செகமா யையுணின் றுதயங் குவதே.

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகம் மாடை மடந்தைய ரென்றயரும்
செகமாயையில் நின்று தயங்குவதே.

முருகனைப் பாத்துட்டாரு! கொஞ்சிக் கொஞ்சிப் பேசிட்டாரு! ஆனந்தத்துல கூத்தாடினாரு! அவரைக் கட்டித்
தொல்லைப் படுத்துற ரெண்டு வெலங்கையும் களட்டச் சொல்லிக் கெஞ்சினாரா? இப்ப, இத்தினியும்
ஆனதுக்கப்பாலியும், மறுபடியும் பொலம்பறாரு!
இன்னான்னு?

நீ இன்னாருன்னுக் கண்டுக்கினேன்! நீயே எதுக்க வந்து, 'பேச்சையெல்லாம் வுட்டுட்டு சும்மா இருடா!'ன்னு

சொன்னதியும் கேட்டேன்! ஆனாக்க, இன்னும் எனக்கு புத்தி வரலியே! அகம்னா வூடு, மாடுன்னா செல்வம்;
மடந்தையர்னா பொண்ணுங்க!

இப்பிடி,இந்த வூடு, சொத்து, சொகம், அளகான பொண்ணுங்கன்னு இன்னான்னமோ மாயையுல சிக்கிக்கினு
இன்னமும் அல்லாடறேனே! இதுங்கல்லாம் என்னியப் போட்டுப் பொரட்டிப் பொரட்டி எடுக்குதுங்களே!
அதுலேர்ந்து வெளியே வர்றதுக்கான வளி[ழி] தெரியாமத் திண்டாடித் தெருவுல நிக்கறேனே!
வுடணும்னுதான் மனசு நெனைக்குது! ஆனா, அடுத்த செகண்டே ஒரு சபலம் வந்து தட்டுது!
இன்னாத்துக்காவ இத்தயெல்லாம் வுடணும்னு இன்னோரு மனசு கேக்குது! அதானே! இன்னாத்துக்குன்னு
இன்னொரு கொரலு சவுண்டு வுடுது! இன்னா பண்றதுன்னே தெரியாம இப்பிடித் தத்தளிக்கிறேனேன்னு மருகறாரு!

இன்னான்னமோ மாயையெல்லாம் சும்மா பொசுக்குன்னு தம்மாத்தூண்டு நேரத்துல 'ப்பூ'ன்னு ஊதித்

தள்ளற சாமியே எதுருல வந்து சொன்னாக்கூடக் கேக்காத சென்மமாப் பூட்டேனேன்னு கதறுறாரு!

அதுவும் சும்மாவா சொன்னாரு? ஒரு வாயி இல்ல; ரெண்டு வாயி இல்ல! ஆறு மொவத்துலேர்ந்தும்

ஆறு வாயால அமுதமாச் சொன்னாரு! அப்பவும் கேக்க மாட்டேங்குதே இந்த மனசுன்னு கண்ணால
தண்ணி வுடறாரு!

நேத்து கூட ஃபோன்ல எனக்குப் படிச்சுக் காமிச்சியே! மாணிக்கவாசகரு சொன்னத எளுதியிருக்கார்னு

சொன்னியே... அதும்மாரி, ஒன்னிய நல்லா ஆசைதீரப் பாத்ததுக்கப்பாலியும், நீ ஆறுமுகமா வந்து
சொன்னதக் கேட்டதுக்கப்புறமும் எனக்குப் புத்தி வரலியே.... அது இன்னா சொன்னே? ஆங்!... புன்மை...
அந்தப் புன்மை என்னிய வுட்டுப் போவலியேன்னு உருகுறாரு!

எதுக்காவ இந்த எடத்துல ஆறுமுகமேன்னு சொன்னாருன்னு கெவனி !
இப்ப, ஒனக்கு இருக்கற ரெண்டு கண்ணால நீ என்னியப் பாக்க முடியுது... நான் எதுத்தாப்புல க்கீறதால!


அதுவே பின்னாடியும் ஒரு மொகம்! அதுல ரெண்டு கண்ணு இருக்குன்னு வைச்சுக்க.. அப்ப
பின்னாலியும் பாக்க முடியும்!
ஆனாக்காண்டிக்கு, சைடுல பாக்க முடியாது ஒன்னால!


சரி நாலு பக்கமும் நாலு தலை...ரெண்டு ரெண்டு கண்ணு இருக்குன்னு வைச்சுக்க.. அதுங்கூட
அல்லாத்தியும் பாத்திரும்னு சொல்ல முடியாது!

ஆனா, ஆறு கோணத்துலியும் ஆரு மொகம்;;; அதுல ஒண்ணொண்னுலியும் தலா ரெண்டு ரெண்டு கண்ணு!
கணக்கு படிச்சவங்களைக் கேட்டியானா சொல்லுவாங்க....... அப்ப, மொகத்தத் திருப்பாமலியே

அல்லாத்தியும் பாத்துற முடியும்! தலைக்கும் மேலே கூட பாக்க முடியும்!
அப்படிப் பாக்கறப்ப, எந்தப் பக்கத்துலேந்து மாயை வந்தாலும் நம்மளால பாக்க முடியும்!

நமக்குத்தான் அப்பிடி இல்லியே!
ஆனா முருகனுக்கு மட்டுந்தான்ஆறு மொகம், பன்னெண்டு கண்ணு!
அதுனால அவரைக் கூப்புட்டு காவலா வரச் சொல்றாரு!
யப்பா! முருகா! ஆறுமுகனே! நீதான் இந்த மாயைலேந்து என்னியக் காப்பத்தணும்னு கூப்புடறாரு!

அப்பிடி அவரே வந்து, 'தோ, பாரு! ஜாக்கிரதியா இரு'ன்னு காபந்து பண்ணினாக்கூட, தன்னோட

ஆறு வாயாலியும் சொன்னாக்கூடக் கேக்க மாட்டாம, இத்தயெல்லாம் விட்டொளிக்காம, ரெண்டு
பக்கமும் எரியுற குச்சிக்கு நடுவுல சிக்கிக்கின எறும்பு மாரி, இந்தப் பக்கமும் போகமுடியாம,
அந்தப் பக்கமும் போகமுடியாம, இப்பிடி கெடந்து தவிக்கறேனேன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு!

இதுல நீ இன்னொண்ணக் கெவனிக்கணும்!

ரெண்டே ரெண்டு பேராலத்தான் இப்பிடி நேரடியா, தெகிரியமாச் சொல்லமுடியும்!


ஒண்ணு,... நெசமாவே இப்பிடி அனுபவிக்கற ஒரு ஆளால, தான் பாத்து அனுபவிச்சதெல்லாம் ,
இப்பிடி தன்னோட நடத்தையால மறைஞ்சு போச்சே'ன்னு அங்க மாணிக்கவாசகர் திருவாசகத்துல
உருகுறாரே அதும்மாரி ஆளால!

ரெண்டாவதா,.... ஞானம் கெடச்சதுனால, தான் வேற, நீ, நானுல்லாம் வேறன்னு பிரிச்சுப் பாக்ககூட

முடியாம, இந்த ஒலகத்துல க்கீற அத்தினியியுமே தானாப் பாக்கற ஆளால!

மத்தவங்க கெடந்து அல்லாடுறதக் கூட தன்னோடதா எடுத்துக்கினு, 'வாடின பயிரைப் பாத்தப்பால்லாம்
நானும் வாடினேன்'ன்னு அளுதாரே ராமலிங்க சாமியாரு.. அதும்மாரி பாக்கறவங்க!

இந்த ரெண்டு பேருங்கதான் இப்பிடி எத்தயும் மறைக்காம, உண்மையைப் பேசுவாங்க!
அவங்களால மட்டுந்தான் இப்பிடில்லாம் அளமுடியும்! நாம அளுவுறதுல்லாம், 'இத்தக் குடு! அத்தக் குடு'ன்னு

கேக்கறதுக்கு மட்டுந்தான்!

இருக்கற ஒவ்வொரு செகண்டுலியும், 'எனக்கு ஒன்னோட தெரிசனத்த நீ எப்பவுமே எனக்குக் காட்டுறமாரி,

என்னிய இருக்கச் செய்யுப்பா'ன்னு அளுவுறதுதான் நெசமான அளுகை!
மத்ததுல்லாம் சும்மா ...டுபாக்கூரு சமாச்சாரம்!' எனச் சற்று உணர்ச்சியுடன் சொன்னான் மயிலை மன்னார்!


இன்னவெனச் சொல்லவியலாத ஒரு மௌனம் அங்கே நிலவியது!
மன்னார் எங்களைப் பார்த்து லேசாகச் சிரித்தான்!
***********
[தொடரும்]
Read more...
 
தங்களது ஆசிகளுக்கு மன்னாரின் பணிவான வணக்கங்கள்!
 
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 7

கந்தரநுபூதி: 7

'அதெப்பிடி நீ சொல்லலாம்!? லோகத்துல வந்து பொறந்துட்டேன்! இங்க எனக்குன்னு சில கடமைகள்
விதிச்சிருக்கு! அதுக்கும் அவனைத் தானே நான் கேழ்க்கணும்? என்னை இப்பிடி கொண்டுவந்து போட்டுட்டியே
ஷண்முகா! இப்ப நான் என்ன பண்றது? எனக்கு ஒன்னை விட்டா ஆரு கெதின்னு அந்த பகவானைக் கேழ்க்காம
வேற ஆரைப் போய் நான் கேழ்க்கணும்ன்றே? எனக்கு நீ சொன்னது சரியாப் படலை மன்னார்!' என்றார் சாஸ்திரிகள்!

அவர் கண்கள் மயிலை மன்னாரைப் பார்த்து, லேசாகச் சிமிட்டியதுபோலத் தெரிந்தது என் மாயையோ?

எனக்குத் தெரியவில்லை!

ஆனால், அவர் கேட்ட கேள்வியில் நியாயம் இருப்பதாகப் பட்டது!
'ஞானும் அதே விளிக்க நெனைச்சு' என நாயரும் எங்கள் பக்கம் சேர்ந்து கொண்டதும், இது சரிதான்

எனும் முடிவுக்கே நானும் வந்துவிட்டேன்!
மன்னாரின் முகத்தில் குறும்பு மிளிர்ந்தது!

முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, 'அடுத்த பாட்டைப் படி!' என்றான்!
நானும் படித்தேன்!

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந் தமரும் புமதோ
பணியா வெனவள் ளிபதம் பணியுந்
தணியா வதிமோ கதயா பரனே.

திணியான மனோசிலை மீது உனது தாள்
அணியார் அரவிந்தம் அரும்பும் அதோ
பணியா என வள்ளி பதம் பணியும்
தணியா அதி மோக தயாபரனே

'இன்னா சொல்றாரு இதுல?
எம் மனசு கல்லு போல க்கீது! அதுல ஒன்னோட தாமரைக் காலை வையி! மெல்லிசா க்கீற

வள்ளியோட பாதத்தும் மேல தலைவைச்சுப் படுத்துக்கினுக்கீறியே, முருகா! அவ மேல ஒனக்கு
இத்தினி ஆசையா? எம்மேல கருணை காட்ட மாட்டியா'ன்ற மாரி ஒரு பாட்டை இப்பக் குடுக்கறாரு!

படிக்கறப்ப ரொம்பவே சிம்ப்பிளாப் புரிஞ்சிரும் இந்தப் பாட்டு!
ஆனா, இன்னா சொல்றாருன்னு பாத்தா.... அடேங்கப்பா! இன்னால்லாம் சொல்லிக்கீறாருன்னு மலைச்சிப் போயிருவே!

'திணியான மனோசிலை'ன்னா இன்னா?
"திணி"ன்னா கெட்டியான்னு அர்த்தம்.
'சிலை'ன்னா கல்லு
'மனோசிலை'ன்னா, என்னோட மனசு கல்லுமாரி கீது!
'திணியான மனோசிலை'ன்னா, கெட்டியான கல்லுமாரிக்கீற மனசு!
ஆரோட மனசு?
ஒம் மனசைப் பத்தி எனக்கு இன்னா தெரியும்?
அல்லாம் என்னோட மனசுதான்!

'தாள்'னா காலு.... பாதம்னும் சொல்லலாம்!

'அணி' ன்னா அள[ழ]கானன்னு பொருளு.
அணி ஆர்னா ரொம்ப ரொம்ப அள[ழ]கான.

அரவிந்தம்னா தாமரை.
அரும்புன்னா மொட்டு. ஆனா, அதுவே அரும்புமதோன்னு சொன்னா, மொட்டு பூக்குமோன்னு வந்துரும்!

ஆகக்கூடி, "உனது தாள் அணியார் அரும்புமதோ"ன்னா, தாமரை போல க்கீற ஒன்னோட காலு

எம்மேல மலருமோன்னு கேக்கறாரு!

கல்லுமாரி கீற என்னோட மனசுமேல, தாமரை மாரிக்கீற ஒன்னோட காலு பட்டு மலருமோன்னு

மொத ரெண்டு வரியுல கேக்கறாரு!

எது மலரணும்?
காலா? இல்லாங்காட்டிக்கு.. என்னோட மனசா?
அதான் தாமரைன்னு சொல்லிட்டாரே! தாமரை மொட்டுன்னா சொன்னாரு? இல்லதானே!
அப்ப, என்னோட கல்லு மனசை பூக்க வையிப்பான்னு கெஞ்சறாரு!

கல்லு எங்கியாச்சும் பூக்குமா?
இல்லேன்னா, கல்லுலதான் எதுனாச்சும் பூக்குமா?
நெனைச்சுப் பாரு! ஒனக்கே சிரிப்பு சிரிப்பா வரும்!
இன்னாடா இவுரு? ரொம்பப் பெரிய ஆளுன்னு நெனைச்சு இவுரு பாட்டைப் படிக்கறோம்!

இவுரு இன்னாடான்னா இப்பிடிக் கூமுட்டையாட்டம் ஒரு கேள்வி கேக்கறாரேன்னு தோணும்!

ஆனாக்காண்டிக்கு, இவுரா கூமுட்டை?
நாமதான் கூமுட்டை!

அடுத்த ரெண்டு வரியுல ஒரு போடு போட்டு அப்பிடியே சாய்ச்சிடுறாரு!

அப்பிடியே படிச்சியானா, இதுல இன்னா க்கீதுன்னுதான் தோணும் ஒனக்கு!

இன்னா சொல்றாரு?
பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதி மோக தயாபரனே

மெல்லிசா, பஞ்சுமாரி கீற வள்ளியோட பாதத்தும் மேல தன்னோட தலையை வைச்சுக்கினு,

'நீ இன்னா சொல்றே வள்ளி? இப்ப நானு இன்னா பண்ணணும்ன்றே?'ன்னு கெஞ்சுறாராம் இந்த முருகன்!
அதான் இந்த 'பணியா என வள்ளி பதம் பணியும்'!!

அதும் எதுனால?
அவ மேல வைச்சிருக்கற அடக்க முடியாத காதல்னாலியாம்! அதி மோகன்னு சொல்றாரு!
ஆனாக்க, அவுரு பெரிய தயாபரனாம்!
தயாபரன்னா, ரொம்பவே கருணை வைச்சிருக்கற ஆளுன்னு அர்த்தம்!

வெச கெட்டுப் போயி, தனக்குப் பிடிச்ச வள்ளியோட பாதத்துல தலையை வைச்சுக்கினு,

அவ சொல்ற வேலையச் செய்யுறதுக்கு தயாரா இருந்துக்கினு கெஞ்சற ஆளு கருணைக்கடலாம்!!!!

வேடிக்கையா இல்ல ஒனக்கு?
கேட்டா சிரிப்புத்தான் வரும்!

மொத ரெண்டு வரியுல அப்பிடி முருகனைக் கெஞ்சினவரு, இப்ப கேக்கற ஆளு ஆரைன்னா,

ஒரு பொம்பள காலுல தன்னோட தலையை வைச்சுக்கினு, அவளைக் கெஞ்சற ஆளு!

இன்னா சொல்றாருன்னு ஆராயணும்!

வள்ளி ஆரு?
முருகனை மட்டுமே மனசுல நெனைச்சுக்கினு, வேற ஆரையும் கிட்டக்கக் கூட அண்ட வுடாத ஒரு பொண்ணு!
முளிச்சதுலேந்து, படுக்கற வரைக்கும், அவன் நெனைப்புத்தான் அவ மனசுல!
வேற ஆரையும் கிட்டக்க நெருங்க வுடாம, அவ எத்த வைச்சு வெரட்றான்னு கொஞ்சம் யோசி!


தெனைப்புனத்தும் மேல நிக்கறா வள்ளி!
அவ கையுல கவங்[ண்]கல்லு!
தன்னோட பொருளை தொடணும்னு ஆரு வந்தாலும் கல்லால அடிச்சு வெரட்டுற பொண்ணு அது!


அப்பிடி கல்லுமாரி க்கீற மனசைப் பாத்ததும், இவுருக்கு மனசு எளகிருது!
தனக்குன்னே க்கீற பொண்ணுக்கு தன்னை வுட்டா வேற ஆரு க்கீராங்கன்னு ஒரு நெனைப்பு

வந்தவொடனியே, ஓடோடி வந்து அவ காலுல தன்னோட தலையை வைச்சு, 'இப்ப நான் இன்னா
பண்ணனும்னு சொல்லு தாயி'ன்னுக் கெஞ்சறாரு இந்த கந்தன்!
இதான் அவரோட கொணம்~!

தன்னை நெனைச்சு உருகினாப் போறும் அவுருக்கு!
ஓடிவந்து கெஞ்சற ஒன்னியக் கொஞ்சுவாரு அவுரு!
அத்தத்தான் இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு!

ஒன்னியத் தவுர, வேற ஆரையும் மனசுல நெனைக்காம இருந்த வள்ளிக்காவ நீ எறங்கிவந்து,

அவ சொல்ற வேலையைச் செய்யறதுக்குத் தயாராக் கீறமாரி, என்னோட மனசையும் ஒன்னோட
பாதத்த வைச்சு மாத்துப்பான்னு!

இப்ப சொல்லு! அவரை மட்டுமே நெனைச்சு நீ உருகினா ஒன்னோட காலுலியே வந்து வுளறதுக்கு

அவுரு ரெடியா க்கீறாரு.
அத்த வுட்டுட்டு, நீ இது வேணும், அது வேணும்னு கேட்டியானா அது டுபாக்கூரா இல்லியா?'

என என்னைப் பார்த்துக் கேட்டுவிட்டு, ஓரக்கண்ணால் சாஸ்திரிகளைப் பார்த்தான் மயிலை மன்னார்!

சாம்பு சாஸ்திரிகள் தன் கண்ணாடியைக் கழற்றித் தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்!
நாயர் மௌனமாக எழுந்து இப்படியும் அப்படியுமாகத் தெருவில் நடந்தான்!
*********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top