• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என்னுடைய தமிழ்க் கவிதைகள்

Status
Not open for further replies.
என்னுடைய தமிழ்க் கவிதைகள்

1. எம்மதமும் நம் மதம்


மதங்களின் பெயரால்
ஏனிங்கே போராட்டம்?
வீணான ஆர்ப்பாட்டம்?

காளியிடம் சென்று
தொழுகை நடத்தினால்
கருமாரிக்கொன்றும் கோபம் வராது.

நபிகளிடம் சென்று
நாமமிட்டுக்கொண்டால்
நமாசில் எந்தப் பிழையும் வராது

குருத்வாராவிற்க்குச் சென்று
குரான் ஓதினால்
கிரந்தசாகிப் ஒன்றும் கிழிந்து விடாது.

கீதையும் பைபிளும்
நாணயத்தின் இரு பக்கங்கள்
நம்பிக்கையின் சின்னங்கள்..

மனிதனுக்காக மனம்; மனதிற்காக மதம்
எனவே மனிதனுக்காக மதமன்றி
மதங்களுக்காக மனிதனல்ல.

ஆதாம், ஏவாள்
எந்த மதம்?
அனைவரும் இங்கே அந்த மதம்.

எம்மதமும் நம் மதம்
என்ற தத்துவத்துக்கு
என்றென்றும் சம்மதம்.



Lokah samasthaa sukhino bhavantu.
 
2. நெஞ்சு பொறுக்குதில்லையே....


"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது"
அன்பாய்ப் பகன்றாள் அவ்வைக் கிழவி அன்று
அதன் அர்த்தத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு
அநியாயம் செய்கிறர்ர் அனைத்திலும் மாந்தர் இன்று.

சந்தைக்குச் செல்ல பிளாஸ்டிக்; சாப்பிடுவது மாமிசம்;
சாதனங்கள் பலவும் வீட்டில் மின்சார மயம்.
சக்திக் கேற்ற செலவில்லை; சத்தியம் பகர்வதில்லை
சங்கடங்கள் மட்டுமே இப்போது இவர் வசம்.

தண்ணி அடிப்பதில் தைரியம்; இயற்கை ஆதாரத்
தண்ணீரை செலவு செய்வதில் வீணான தாராளம்.
தறிகெட்டுப் போகும் பாதையால் உயர் மனிதத்
தன்மான மிழந்து தரம் கெட்ட அவலம்.

நோவென்றால் மருந்துக்குப் பணம் வேண்டும், இறைவனுக்கான
நோன் பென்றாலு மந்தப் பணம் வேண்டும்.
நுழைவுத் தேர்வுக்குக்குப் பணம் வேண்டும். அனுமதி
'no'வென்றாலும் payment seat பணம் வேண்டும்.

நடந்து செல்லும் தொலைவிற்கும் வாகனத்தில் சென்று
நாட்டு எண்ணெய் வளங்களை வீண் செய்கிறார்
நாலாப் புறமும் புகை விட்டு இயற்கை
நலன்களை எல்லாம் இவர் பாழ் செய்கிறார்

அடுத்தவரைப் பற்றிய கவலை இல்லை; எதனிலும்
அக்கறை என்பது மனதில் துளியு மில்லை.
அஹிம்சை தத்துவம் மறந்து போய் அவணியில்
அப்பாவி உயிர்களை முரட்டு வதம் செய்கிறார்.

அரசியலில் விளையாட்டு; விளை யாட்டிலு மரசியல்
அரிசி, கோதுமை, வெங்காயம் அனைத்திலு மூழல்
அண்டை நாட்டிற்கு ராணுவ இரகசியம் விற்றலென
அய்யோ பொறுக்கு தில்லையே இவர் செயல்.

மழலை களையும் விட்டு வைக்காமல் கொன்று
மண்ணில் புதைத்து வைக்கிறார்; வீடு, பள்ளி,
மற்றேங்கிலு மவரைக் காமக் கணை கொண்டு
மடிய வைக்கிறார், மனதைப் பிழிந தெடுக்கிறார் .

என்றடங்கு மிவர் கொட்டம் இம் மண்ணில்
எகத்தாளமாய் இவர் போடு மகந்தை ஆட்டம்?
என்று இறைவனது அருள் கிட்டும் நல்ல
எண்ணங்கள் என் றெம்மை வழி நடத்தும்?



Lokah samasthaa sukhino bhavantu.
 
நபிகளிடம் சென்று
நாமமிட்டுக்கொண்டால்
நமாசில் எந்தப் பிழையும் வராது

I hope you know how some religions are being spread -

by force and with the threats of death!
:whip:

'nammaz' and 'naamam' may rhyme in a poem

but they can never ever go together! Be realistic!
:shocked:
 
I wrote it just now - meaning it was like straight from the oven. No wonder it is a hot, smoking poem! I am open for admitting corrections. How do we get the icons?


Lokah samasthaa sukhino bhavantu.
 
Last edited:
I think one has to see the substance and not the literal meaning in a poem. Bharathi wrote, "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்?". It does not mean we had a thirst in our throat for freedom. Isn't it?

Lokah samasthaa sukhino bhavantu.
 
Dear Mr. Siva,
Go to the 'Go advanced' option below the 'message box' next to the 'post quick reply'.
you will find five 5 icons displayed and the others hidden under the red colored 'more'
click on it and you will find all the other icons. select the one which you think suits your message and drag it to the spot where you want to add it. It is very simple. So i am waiting for our reply with an icon now. I know you are online now :)
with regards,
V.R.
 
Thirst or 'dhaagam' can be for many things...Thirst for knowledge, thirst for


freedom, thirst for water, thirst for love, thirst for companionship...etc

It is not just dry throat desiring a glass of cool water or a cup of hot tea!
:ranger:
 
:doh:That was exactly my point. We actually have a desire for knowledge. urge for freedom, longing for love/companion but we simply use the word 'thirst' or 'daagam', which literally means thirst (associated with dry throat).

Lokah samasthaa sukhino bhavantu.
 
Dear Mr. Siva,

Today I found out the reason why I am following your posts so closely.

Do you want to know why?

Till recently my pet name in the Forum was 'visa.'

you are 'siva.'

so we share the same alphabets in our pet names.

Also my grandfather's signature (mudra) in his musical composition was

'Haridasa'!

That is why! Interesting psychology! Isn't it so?
:bump2:
 
:horn:That is coooooooollllll....... Periyavaa sonnaa Perumal sonna maadiri.

Just out of interest, was your grandpa's gothram Haridasa? 'Vitta kurai, totta kurai'nu solvaale, idudaanaa athu? You have a sharp mind. I just now had Brook Bond 3 Roses Mind Sharp tea! (it is 4.30 p.m. in SA).

Did I change your pet name as VR? Hope we(V) are(R) well aligned!


Lokah samasthaa sukhino bhavantu.
 
Dear Mr. Haridasa Siva,

We are Tamil brahmins(Kerala origin-whatever may be its significance).

My gandpa's gothram was Pourakuthsya Gothram.

(Hope I guessed the spelling right!).

You reminded me of a north Indian lady friend who used tell her other friends

about me, very often, "Iski dimaag razor sharp hain".
:laser:

Don't know where she is now! Must be older to me by 10 to 15 years!

I changed my name to V.R - since half of my time was being wasted in signing my

long name:).

It will save time for both parties. Another reason is with all kinds of spellings for

my name (permutation and combination?) I thought I might forget the real

spelling in due course.

Enjoy your tea. I just had some supper and am ready to post in all my threads.

with best wishes,

V.R.

P.S. Are you in Tanzania? After hearing from you I will tell you how I guessed it -if

I turn out to be correct in my guessing.
 
" Emm Mathamum Sammatham " - These words are Spelled,Practically Followed in India Only by Hindus.
No Christian or a Muslim will write and abide by this.

One man in this Corner .... One man in That Corner.... Dont say like this ...

In General no Non Hindu will say it out of his Heart.
 
We don't decide our course of action based on what others do. That is what animals do. It is not meant to be followed by humans. Notwithstanding what 'other people' believe/practise let us spread the message of religious harmony. I have donated my blood only once and it was for a person born and lpractising Christian religion. Blood knows no religion. Don't we have muslim/christian neighbours celebrating Deepavali? Please see the logic in my poem

மனிதனுக்காக மனம்; மனதிற்காக மதம்
எனவே மனிதனுக்காக மதமன்றி
மதங்களுக்காக மனிதனல்ல


Lokah samasthaa sukhino bhavantu.
 
Last edited:
Icon Courtesy VR. She herself is an icon!?:attention:

Your payanak kavithaigal is just amazing.


Lokah samasthaa sukhino bhavantu.
 
Dear Mr. Siva,
............... select the one which you think suits your message and drag it to the spot where you want to add it. It is very simple.
with regards,
V.R.
Oh my! No need to drag and drop!!

Just select the place to place the icon and go to icon box and click ON THE ICON!!

More simple...... Is it not?

By the way, by using the icons for sometime, we can even type out the proper word within : : and get the needed expression!

The icon we need, may NOT appear in the box sometimes. Make a note of the words for each icon ........ cool, tape, pray, pray2, whip, thumb, hungry etc......

:cool: Raji Ram
 
பிச்சைக்காரர்கள்

யாசகம் இழிவென்ற நிலைபோய் - இன்று
வாசகம் வைத்துப் பிச்சை கேட்கிறார்
நல்லதான அங்கங்களை ஊனமாக்கி - சாலை
நடுவிலும் நின்று கை ஏந்துகிறார்

பாசத்தால் தூக்கிய நிலைபோய் - குழந்தையைப்
பணத்துக்காக இடுப்பில் தூக்கி நிற்கிறார்
பரிதாபம் அதிகமாக வேண்டுமென்று - பாவமதைப்
பசியாலும் அடியாலும் துடிக்க வைக்கிறார்

பெற்ற சிசுவை வாடகைக்குவிட்டு - சிலர்
பெறுவதோ சில ரூபாய் நோட்டு
பெண்ணாகப் பிறந்து தொலைத்தாலோ - அதன்
பெருமைக்கு வைத்திடுவார் வேட்டு

ஐந்தறிவு கொண்ட விலங்குகள்கூட - கேவலம்
ஐந்து, பத்துக்காக தன்மானம் இழக்காது
அரிது, அரிதென பிறந்த மனிதன் - மானமிழந்து
அந்தோ பரிதாபமாய் காட்சி அளிக்கிறான்

உழைப்பிற்கு சோம்பிய கூட்டம் - எண்சாண்
உடல் சரியாக அமையப்பெறாத கூட்டம்
உயர்வுக்கு வழி தெரியாக் கூட்டம் - இந்த
உலகிற்கு பாரமாய் வாழும் கூட்டம்

நிலைமாற வழிஏது மில்லையோ? - நம்நாடு
நிமிர்ந்தெழ வாய்ப்பு தான் என்னவோ?
நித்தமும் மனம் துடிக்கிறது - இரவில்
நிம்மதி இல்லாமல் கண்ணீர் வடிக்கிறது
 
நாடு விட்டு நாடு போனவர் எல்லோரும் :bolt:

கேடு எவர் கெட்டால் நமக்கு என்ன என;

மேட்டுக்குடி மக்களாக வாழும் பொழுது,

வெட்டியாகக் கண்ணீர் மாலை சிந்தாதீர்!
:Cry:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top