• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அன்னையின் ஆயிரம் நாமங்கள்.

Status
Not open for further replies.
அன்னையின் ஆயிரம் நாமங்கள்.

"அன்னையின் அழகிய நாமங்களு"க்கு
அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு

அனைத்து நாமங்களையுமே நான்
அளிக்க விரும்புகின்றேன் இங்கே.

பொருள் தெரிந்தும் தெரியாமலும் கூறி
அருமையான சொற்களை வீ ணாக்கலாமா?

பொருள் உணர்ந்து உரைக்கும் சொற்கள்
பொன்மலர் நாற்றம் பெற்றைதை போன்று!

அனுதினமும் எட்டு நாமங்கள் காண்போம்.
அன்னை எட்டு புயங்கள் உடையவள் அல்லவா?

அருள் வேண்டி அன்புடன்,
விசாலாக்ஷி ரமணி.

 
1.ஸ்ரீ மாத்ரே = அருளுடைய அன்னையே!

2. ஸ்ரீ மஹாராக்ஞை = மாட்சிமை வாய்ந்த பேரரசி.

3. ஸ்ரீமத் ஸிம்ஹாசநேஸ்வர்யை = சிம்ஹாசனத்தில் வீற்றிருக்கும் பரதேவதை.

4. சிதக்3னிகு1ண்ட3 ஸம்பூ4தா1யை=பேரறிவாகிய தீச்சுடரிலிருந்து தோன்றியவள்.

5. தே3வகார்ய ஸமுத்3யதா1யை = இந்திரியங்களைப் பண்படுத்துவதில் கருத்துடன் இருப்பவள்.

6. உத்3யத்3பா4னு ஸஹஸ்ராபா4யை = ஆயிரம் ஸுரியரர்களுடைய பிரகாசத்தை உடையவள்.

7. சதுர் பா3ஹு ஸமன்விதாயை = நான்கு கரங்களை உடையவள்.

8. ராக3ஸ்வரூப பாசா'ட்4யாயை = பற்றுதல் என்னும் பாசத்தை உடை
த்திருப்பவள்.
 
Last edited:
9. க்ரோதா4கார அங்குச' உஜ்ஜ்வலாயை = குரோதம் என்னும் அங்குசத்தை ஆயுதமாக உடையவள்.

10 . மனோரூப இக்ஷு கோத3ண்டாயை = மனோதத்துவம் என்னும் கரும்பை வில்லாகக் கொண்டு இருப்பவள்.

11 . பஞ்சதன்மாத்ர ஸாயகாயை = ஐந்து இந்திரியங்களை அம்பாகக் கொண்டு இருப்பவள்.

12 . நிஜாருணப்ரபா4பூர மஜ்ஜத் ப்3ரஹ்மாண்ட3 மண்ட3லாயை = தன்னுடைய சிவந்த நிறம் அண்டமெல்லாம் வியாபிக்கப் பெற்றவள்.

13 . சம்பக அசோ'க புன்னாக3 சௌக3ந்தி4க லசத் கசாயை = சம்பகம், அசோகம், புன்னாகம், சௌகந்திகம் ஆகிய புஷ்பங்களால் சோபிக்கின்ற கூந்தலை உடையவள்.

14 . குருவிந்த மணிச்'ரேணி கனத்கோடீர மண்டி3தாயை = வரிசையாகப் பதிக்கப் பெற்ற பத்மராக மணிகள் ஒளி வீசும் அழகிய கிரீடத்தை அணிந்தவள்

15 . அஷ்டமி சந்த்3ர விப்4ராஜத் அலிகஸ்தல ஷோபி4தாயை = பாதி நிலவை போன்ற அழகிய நெற்றியை உடையவள்.

16. முகசந்த்3ர கலங்காப4 ம்ருக3நாபி4 விசேஷகாயை = நிலவில் உள்ள கரும்படிவங்களுக்கு ஒப்பாக முகத்தில் கஸ்துரி திலகம் திகழுகின்றவள்.
 
Dear Mr. R.V.R,
More things are wrought by Prayer than the world dreams of.
So let us pray meaningfully and with correct pronunciation!
Thank you for your words of encouragement.
with warm regards,
V.R.
 
17. வத3னஸ்மர மாங்க3ல்ய க்3ருஹதோரண சில்லிகாயை = மன்மதனின் வீட்டு வாசலில் கட்டப் பட்டுள்ள தோரணங்கள் போன்ற கவர்ச்சியான புருவங்களை உடையவள்.

18. வக்த்ர லக்ஷ்மி பரிவாஹ சலன் மீனாப4லோசனா = அழகிய முகவிலாசம் என்ற தடாகத்தில் நீந்தும் மீன்களுக்கு ஒப்பான கண்களை உடையவள்.

19. நவ சம்பக புஷ்பாப4நாஸாத3ண்ட3 விராஜிதாயை = மலரும் தருணத்தில் இருக்கும் அழகிய செண்பகப் புஷ்பத்தை ஒத்த நாசியை உடையவள்.

20. தாராகாந்தி திரஸ்காரி நாஸாப4ரண பா4ஸுராயை = நக்ஷத்திரங்களை நாணச் செய்யும் அழகிய மூக்குத்தியை அணிந்தவள்.

21. கதம்ப3மஞ்ஜரி க்லுப்த கர்ணபூர மனோஹராயை = அழகிய கடம்பப் புஷ்பத்தை காதில் அணிந்திருப்பவள்.

22. தாடங்க3யுக3லீபூ4த தபநோடு3ப மண்ட3லாயை = சந்திரனையும், சூரியனையும் தன் இரு தோடுகளாக அணிந்திருப்பவள்.

23. பத்3மராக3 சி'லாத3ர்ச' பரிபா4வி கபோலபு4வே =பத்மராகத்தால் செய்யப்பட்ட கண்ணாடிக்கு மிக்கதான அழகிய கன்னங்களை உடையவள்.

24. நவவித்3ரும பி3ம்ப3ஸ்ரீ ந்யக்காரி த3ச'னச்சதா3யை =புதிய பவழம், கோவைப் பழம் ஆகியவற்றிலும் சிவந்த அதரங்களை உடையவள்.

 
25. சுத்3த4 வித்3யாங்குராகார த்3விஜபங்க்தி த்3வய உஜ்ஜ்வலாயை = சுத்த ஞானம் முளைத்திருப்பது போல மிளிரும் பல் வரிசைகளை உடையவள்.

26. கற்பூரவீடிகா ஆமோத3ஸமாகர்ஷி தி3க3ந்தராயை=பிரபஞ்சம் முழுவதிலும் நறுமணம் வீசிக் கவரும் தாம்பூலம் தரித்தவள்.

27. நிஜஸல்லாப மாது4ர்ய விநிர்ப4ர்த்ஸித கச்ச2ப்யை= கச்சபி என்ற சரஸ்வதியின் வீணையைக் காட்டிலும் இனிய குரல் கொண்டவள்.

28. மந்த3ஸ்மித பிரபா4பூர மஜ்ஜத் காமேச'மானஸாயை = காமேஸ்வரரைக் கவர்ந்து வசப்படுத்தும் அழகிய புன்னகையை உடையவள்.

29. அனாகலித ஸாத்3ருச்'ய சிபு3கஸ்ரீ விராஜிதாயை =வாக்தேவதைகள் உட்பட எவராலும் வர்ணிக்க முடியாத அழகு வாய்ந்த முகவாய்க் கட்டையை உடையவள்.

30. காமேச' ப3த்3த4 மாங்க3ல்ய சூத்திர சோ'பி4த கந்த3ராயை =
காமேஸ்வரர் கட்டிய மங்கள நாணுடன் பிரகாசிக்கும் கழுத்தை உடையவள்.

31. கனகாங்க3த3 கேயூர கமனீய பு4ஜான்விதாயை = தங்கத் தோள் வளைகளை அணிந்துள்ளவள்.

32. ரத்ன க்3ரைவேய சிந்தாகலோல முக்தாபல அன்விதாயை =
முத்துக்கள் அசைகின்ற ரத்தினப் பதக்கம் உள்ள அட்டிகையை அணிந்தவள்.

 
33. காமேஸ்வர ப்ரேமரத்ன மணி பிரதிபண ஸ்தன்யை = காமேஸ்வரருடைய உள்ளதைக் கவரவல்ல ஸ்தனங்களை உடையவள்.

34. நாப்4யாலவால ரோமாளி லதாப2ல குசத்3வய்யை = நாபி என்ற பாத்தியிலிருந்து முளைத்த ரோமங்களின் கொடியில் பழுத்த இரு கனிகளை ஒத்த ஸ்தனங்களை உடையவள்.

35. லக்ஷ்யரோம லதாதா4ரதா ஸமுன்நேய மத்4யமாயை = மிகவும் மெல்லிய இடையினை உடையவள்.

36. ஸ்தனபா4ர த3லன்மத்4ய பட்டப3ந்த3 வலித்ரயாயை = வயிற்றில் அழகிய மூன்று மடிப்புக்களை உடையவள்.

37. அருணாருண கெளஸும்ப4வஸ்த்ரபா4ஸ்வாத்கடீதட்யை = இடையில் சிவப்புப் பட்டாடை உடுத்தவள்.

38. ரத்னகிங்கிணிகா ரம்யரச'னாதா3ம பூ4ஷிதாயை = ரத்தினச் சலங்கைகளோடு கூடிய ஒட்டியாணம் அணிந்திருப்பவள்.

39. காமேச'ஞாத சௌபா4க்ய மார்த3வ ஊருத்3வய அன்விதாயை =காமேஸ்வரருடைய மேனியில் செம்பாதி ஆனவள்.

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்3வய விராஜிதாயை = மாணிக்க முகுடம் போன்ற முழந்தாள்களை உடையவள்.

 
41. இந்த்3ரகோ3ப பரிக்ஷிப்த ஸ்மரதூணாப4 ஜங்கி3காயை = மன்மதனின் அம்பறாத் துணிபோன்ற அழகிய முழங்கால்களை உடையவள்.

42. கூ3ட4கு3ல்பா2யை = உருண்டு, திரண்ட குதிகால்களை உடையவள்.

43.கூர்ம ப்ருஷ்ட ஜிஷ்ணு ப்ரபதா3ன்விதாயை = ஆமையின் முதுகைப் போன்று வளைந்த புறங்கால்களை உடையவள்.

44. நக2தீ3தி4தி1 ஸஞ்ச2ன்ன நமஜ்ஜன தமோகு3ணாயை = தன்னை வணங்கும் அடியவர்களின் உள்ளத்தில் உள்ள அஞான இருட்டைத் தன் கால் நகங்களின் காந்தியாலேயே அகற்றுபவள்.

45. பத3த்3வய ப்ரபா4ஜால பராக்ருத ஸரோருஹாயை = தாமரை மலரினும் அழகிய பாதங்களை உடையவள்.

46. ஸிஞ்ஜான மணிமஞ்ஜீரா மண்டி3த ஸ்ரீபதா3ம்4புஜாயை = ஒலிக்கும் ரத்தினப் பரல்கள் கொண்ட சிலம்புகளை அணிந்த அழகிய பாதங்களை உடையவள்.

47. மராளி மந்த3க3மனாயை = அழகிய அன்னநடை உடையவள்.

48. மஹாலாவண்ய சே'வதயே = அழகின் களஞ்சியமாகவே விளங்குபவள்.

 
49. ஸர்வாரூணாயை = ஆடை, ஆபரணம், உருவம் அனைத்துமே சிவப்பு நிறமானவள்.

50. அனவத்3யாங்க்3யை = உடல் அமைப்பிலும், உருவ அமைப்பிலும் குறைவற்ற நிறைவை உடையவள்.

51. ஸர்வாப4ரண பூ4ஷிதாயை = வித விதமான ஆபரணங்களை அணிந்துள்ளவள்.

52. சி'வகாமேஸ்வர அங்கஸ்தாயை = பிரபஞ்சத்தைப் படைக்கும் காமேஸ்வரருடைய இடது தொடைமீது அமர்ந்து, அவருக்கு அச்செயலில் துணை புரிகின்றவள்.

53. சி'வாயை = மங்களகரமானவள்.

54. ஸ்வாதீ4ன வல்லபா4யை = கருத்தில் சிவனுக்கும், தனக்கும் வேறுபாடு இல்லாத பண்பை உடையவள்.

55. ஸுமேருமத்4ய ச்'ருங்க3ஸ்தாயை = மேருமலையின் சிகரத்தில் இருப்பவள்.

56. ஸ்ரீமன் நக3ர நாயிகாயை = ஸ்ரீ நகரம் எனப்படும் பிரபஞ்சத்திற்கு தலைவியாக உள்ளவள்.
 
57. சிந்தாமணி க்3ருஹ அந்தஸ்தா2யை = சிந்தாமணியில் இனிதே வீற்று இருப்பவள்.

58. பஞ்சபிரம்மாஸன ஸ்தி2தாயை = சிருஷ்டி கர்த்தாக்களாகிய
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், சதாசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளைக் கொண்டு அமைந்துள்ள ஆசனத்தில் அமர்ந்து இருப்பவள்.

59. மஹாபத்4ம அடவீ ஸம்ஸ்தா2யை = தாமரைக் காட்டில் உறைபவள்.

60. கத3ம்ப3வன வாஸின்யை = கதம்ப வனத்தில் வசிப்பவள்

61. ஸுதா4ஸாக3ர மத்4யஸ்தா2யை = அமிர்தக் கடலின் நடுவே வீற்று இருப்பவள்.

62. காமாக்ஷ்யை = கவர்ச்சிகரமான கண்களை உடையவள்.

63. காமதா3யின்யை = பக்தர்கள் விரும்புவதை அளிப்பவள்.

64. தே3வர்ஷிக3ண ஸங்கா4த ஸ்தூயமான ஆத்ம வைப4வா = தேவர்களாலும், ரிஷிகளாலும் நன்கு துதிக்கப்படுகின்றவள்.
 
Dear friends,

Can any one tell me whether Bhaja Govindham has been dealt with in this Forum?

I wish to start it, if it has not been done already!

Thanking you in advance and with warm regards,
V.R.
 
Last edited:
65. ப4ண்டா3ஸுர வதோ4த்யுக்த ச'க்திஸேனா ஸமன்விதாயை = பண்டாசுரனை அழிக்கத் தேவையான சேனையை யாண்டும்
ஆயத்தமாக வைத்திருப்பவள்

66. ஸம்பத்கரீ ஸமாரூட4ஸிந்தூ4ர வ்ரஜஸேவிதாயை =
ஸம்பத்கரீ தேவதைகளால் ஆதரிக்கப்பட்ட யானைகளால் போற்றப்படுபவள்.

67. அச்'வாரூட4அதிஷ்டிதாச்'வா கோடிகோடி பி: ஆவ்ருதாயை =
அச்'வாரூட தேவதையால் பரிபாலிக்கப்படும் எண்ணிலடங்காத
குதிரைகளால் சூழப்பட்டு இருப்பவள்.

68. சக்ரராஜ ரதா2ரூட4ஸர்வாயூத4பரிஷ்க்ருதாயை = ஸ்ரீ சக்கரத்தின் மீது எல்லாவித ஆயுதங்களுடனும் வீற்று இருப்பவள்.

69. கே3யசக்ர ரதா2ரூட4மந்த்ரிணீ பரிஸேவிதாயை = கேயச்சக்கரம் என்னும் ரதத்தில் ஏறி இருக்கும் மந்த்ரிணீ தேவதையால் சேவிக்கப்படுபவள்

70. கிரிசக்ர ரதா2ரூட4த3ண்ட3நாதா புரஸ்க்ருதாயை = கிரிச்சக்ரம் என்ற தேரில் ஏறி இருக்கும் தண்டநாதா அல்லது வாராஹியால் வழி காட்டப்பட்டவள்

71. ஜ்வாலாமாலினிகா ஆக்ஷிப்த வஹ்னி ப்ராகார மத்4யகாயை =
ஜ்வாலாமாலினி சக்தியால் அமைக்கப் பட்ட அக்னி மண்டலத்தின் மத்தியில் இருப்பவள்

72. ப4ண்ட3சைன்ய வதோ4த்யுக்த ச'க்தி விக்ரம ஹர்ஷிதாயை =
பண்டாசுரனுடைய சேனைகளை அழிப்பதில் ஊக்கம் படைத்திருந்த சக்தியிடம் மகிழ்ச்சி கொண்டவள்.
 
73. நித்யாபராக்ரம ஆடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகாயை = நித்யா தேவதைகளின் வல்லமையைக் காண்பதில் ஊக்கம் கொண்டவள்.

74. ப4ண்ட3புத்ரவதோ4த்யுக்த பாலாவிக்ரம நந்தி3தாயை = தன் குழந்தையான பாலா தேவி பண்ட புத்திரர்களை அழிப்பதில் காட்டிய பராக்ரமத்தை கண்டு மகிழ்பவள்

75. மந்த்ரிண்யம்பா3விரசித விஷங்க3வத4தோஷிதாயை = மந்த்ரிணீ தேவி நிகழ்த்திய விஷங்க வதத்தைக் கண்டு மகிழ்ந்தவள்.

76. விசு'க்ரப்ராணஹரண வாராஹீவீர்ய நந்தி3தாயை = விசுக்ரனை மாய்த்த வாராஹியின் பராக்ரமத்தை மெச்சுபவள்.

77. காமேஸ்வர முகா2லோக கல்பித ஸ்ரீ க3ணேஸ்வராயை
= காமேஸ்வரருடைய முகதரிசனத்திலே கணேசனைத் தோற்றுவித்தவள் .

78. மஹாக3ணேச' நிர்பி4ன்ன விக்3னயந்த்ர ப்ரஹர்ஷிதாயை = மஹா கணேசனால் விக்னம் என்ற யந்திரம் பழுது அடைவதைப் பார்த்து பரம திருப்தி கொண்டவள்

79. ப4ண்டா3ஸுரேந்த்3ர நிர்முக்த சஸ்த்ரப்ரத்யஸ்தர வர்ஷிண்யை = பண்டாசுரன் எய்த பாணங்களுக்கு எதிர் பாணங்களைப் பொழிந்தவள்

80. கராங்கு3லி நகோ2த்பன்ன நாராயண தசா'க்ருத்யை = நாராயணனுடைய பத்து அவதாரங்களையும் தன்னுடைய நகக் கண்களிலிருந்து தோன்றச் செய்தவள்
 
81. மஹாபாசு'பதாஸ்த்ராக்3னி நிர்த3க்4தாஸுரசைநிகாயை = மஹாபாசு'பத அஸ்திரத்தால் அசுரப் படைகளைக் கொளுத்துபவள்.

82. காமேஸ்வராஸ்த்ர நிர்த3க்3த4 ஸப4ண்டா3ஸுரசூ'ன்யகாயை = காமேஸ்வரருடைய அஸ்திரத்தால் பண்டாசுரனை மாய்த்தவள்.

83. பி3ரம்மோபேந்த3ரமஹேந்த்3ராதி3 தே3வ ஸம்ஸ்துதவைப4வாயை = பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தேவர்களால் போற்றப்படுபவள்.

84. ஹரநேத்ராக்3னிஸம்த3க்3த4 காமஸம்ஜீவன ஓஷத்4யை = சிவனுடைய நெற்றிக் கண்ணினால் சாம்பலாக்கப்பட்ட மன்மதனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தவள்.

85. ஸ்ரீமத்3வாக்3ப4வ கூடைக ஸ்வரூப முக2பங்கஜாயை = வாக்பவம் என்னும் வசீகரமான ஞான அறிகுறிகளோடு கூடிய முகத்தை உடையவள்.

86. கண்டா2த4 கடிபர்யந்த மத்4ய கூட ஸ்வரூபிண்யை = கழுத்திலிருந்து இடுப்புவரை மத்யகூடம் என்ற ஸ்வரூபத்தைப் பெற்றவள்.

87. ச'க்திகூட ஏகதாபன்ன கட்யதோ4 பா4க3தா4ரிண்யை = இடுப்புக் கீழே சக்தி கூடம் என்ற ஸ்வரூபத்தைப் பெற்றவள்.

88. மூல மந்த்ர ஆத்மிகாயை = மூல மந்திரமாக இருப்பவள்.
 
89. மூலகூடத்ரய கலேப3ராயை = மூல மந்திரத்தின் மூன்று கூடங்களைத் தன சரீரமாகக் கொண்டு இருப்பவள்.

90. குலாம்ருத ஏக ரசிகையை =சஹஸ்ராரத்திலிருந்து வடிகின்ற அமிர்தத்தைப் பானம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றவள்.

91. குல ஸங்கேதபாலின்யை = குலத்தை ஒட்டிய அடிப்படைக் கோட்பாடுகளை நன்கு காப்பவள்.

92. குலாங்க3நாயை = ஒரு குலமாதுக்கு உரிய பண்புகளை நன்கு காப்பவள்.

93. குலாந்தஸ்தாயை = குலம் என்னும் த்ரிபுடியில் அறிவு மயமாக இருக்கின்றவள்.

94. கெளலின்யை = சிவ சக்தி மயமாக இருக்கின்றவள்.

95. குலயோகி3ன்யை = குலத்தோடு நன்கு கூடி இருப்பவள்.

96. அகுலாயை = குணங்களுக்கு அதீத நிலையில் இருப்பவள்.
 
97. ஸமயான்தஸ்தாயை = சமயத்திலுள் வீற்றிருப்பவள்.

98. ஸமயாசார தத்பராயை = சமய அனுஷ்டானத்தில் ஆழ்ந்த கருத்துச்செலுத்துபவள்..

99. மூலாதா4ர ஏக நிலையையே = மூலாதாரத்தைத் தன் முக்கிய இருப்பிடமாகக் கொண்டவள்.

100. ப்3ரம்ம க்3ரந்தி2 விபே4தி3ன்யை = பிரம்ம க்ரந்தி என்ற முடிச்சை அவிழ்த்து எடுப்பவள்.

101. மணிபூராந்த ருதி3தாயை = மணிபூரத்தில் எழுந்தருளி உள்ளவள்.

102. விஷ்ணு க்3ரந்தி2 விபே4தி3ன்யை = விஷ்ணு க்ரந்தி என்ற முடிச்சை அவிழ்த்து எடுப்பவள்.

103. ஆக்ஞாசக்ர அந்தராலஸ்தாயை = ஆக்ஞா சக்கரத்தில் எழுந்தருளி உள்ளவள்.

104. ருத்3ர க்3ரந்தி2 விபே4தி3ன்யை = ருத்ர முடிச்சைத் தாண்டிச் செல்ல வல்லவள்.

 
105. ஸஹஸ்ரார அம்பு3ஜாரூடா4யை = ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையில் எழுந்தருளி இருப்பவள்.

106.ஸுதா4ஸார அபி4வர்ஷிண்யை = ஸுதா என்னும் அமிர்தத்தை ஸஹஸ்ராரத்திலிருந்து பொழியச் செய்பவள்.

107. தடில்லதா ஸமருச்யை = மின்னல் கொடி போன்று பிரகாசிப்பவள்.

108. ஷட்சக்ரோபரி ஸம்ஸ்தி2தாயை = ஆறு ஆதாரங்களுக்கும் மேலே ஏழாவதாகிய ஞான பூமியில் ஜோதிமயமாக வீற்று இருப்பவள்.

109. மஹாஸக்த்யை = பேராற்றல் படைத்தவள்.

110. குண்டலின்யை = மூன்றரை வட்டமிட்ட பாம்பைப்போல, மூலாதாரத்தில் ஆத்மசக்தியாக விளங்குபவள்.

111. பி3ஸதந்து தநீயஸ்யை = தாமரையின் நூலைப்போல காட்சிக்கு அகப்படாதவள்.

112. ப4வான்யை = பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கவும், ஜீவர்களுக்கு உயிர் கொடுக்கவும் வல்லவள்.
 
113. பா4வனாக3ம்யாயை = பாவனையின் வாயிலாக அடையப் படுபவள். 114. ப4வாரண்யக் குடா2ரிகாயை = பிறவி என்னும் பெரியகாட்டை அழிக்கும் கோடரி போன்றவள். 115. ப4த்ரப்ரியாயை = நல்லோர்க்கு இனியவள். 116. ப4த்3ரமூர்த்யை = மங்கள வடிவானவள். 117. ப4க்தசௌபா4க்யதா3யின்யை = பக்தர்களுக்கு எல்லா நலன்களையும் அளிப்பவள். 118. ப4க்திப்ரியாயை = பக்தியில் பிரியமுடையவள். 119. ப4க்திக3ம்யாயை = பக்திநெறியால் அடையப்படுப் படுபவள். 120. ப4க்திவச்'யாயை = பக்திக்கு வசம் ஆகின்றவள்.
 
113. பா4வனாக3ம்யாயை = பாவனையின் வாயிலாக அடையப் படுபவள்.

114. ப4வாரண்யக் குடா2ரிகாயை = பிறவி என்னும் பெரியகாட்டை அழிக்கும் கோடரி போன்றவள்.


115. ப4த்ரப்ரியாயை = நல்லோர்க்கு இனியவள்.

116. ப4த்3ரமூர்த்யை = மங்கள வடிவானவள்.

117. ப4க்தசௌபா4க்யதா3யின்யை = பக்தர்களுக்கு எல்லா நலன்களையும் அளிப்பவள்.

118. ப4க்திப்ரியாயை = பக்தியில் பிரியமுடையவள்.

119. ப4க்திக3ம்யாயை = பக்திநெறியால் அடையப்படுப் படுபவள்.

120. ப4க்திவச்'யாயை = பக்திக்கு வசம் ஆகின்றவள்.
 
121. ப4யாபஹாயை = பயத்தைப் போக்குகின்றவள்.

122. சா'ம்பவ்யை = இனிமையை நல்குபவள்.

123. சா'ரதா3ஆராத்4யாயை = சாரதையினால் ஆராதிக்கப்படுபவள்.

124. ச'ர்வாண்யை = நில வடிவத்தில் இருப்பவள்.

125.ச'ர்மதா3யின்யை = இன்பத்தையும், பாதுகாப்பையும் தருபவள்.

126. சா'ங்கர்யை = நன்மைகள் செய்பவள்.

127. ஸ்ரீகர்யை = திருவைத் தருபவள்.

128. ஸாத்4வ்யை = எப்போதும் பதிவிரதை ஆக இருப்பவள்.
 
129. ச'ரத்சந்த்3ர நிப4ஆனநாயை = சரத்காலச் சந்திரனைப் போன்ற தூய முகத்தை உடையவள்.

130. சா'தோத3ர்யை =
மெல்லிய இடையினைப் பெற்றவள்.

131. சா'ந்திமத்யை =
சாந்தமே உருவானவள்.

132. நிராதா4ராயை = புறப் பொருளின் மீது ஆதாரப்படவேண்டிய அவசியம் இல்லாதவள்.

133. நிரந்ஜநாயை = மாசு இல்லாதாவள்.

134.நிர்லேபாயை = மேற்பூச்சு இல்லாதவள்.

135.நிர்மலாயை = அழுக்குப் படியாதவள்.

136. நித்யாயை = எப்போதும் இருப்பவள்.
 
137. நிராகாராயை = வடிவம் அற்றவள்.

138. நிராகுலாயை = குழப்பம் அற்றவள்.

139. நிர்கு3ணாயை = குணங்களுக்கு அப்பாற்பட்டவள் .

140. நிஷ்களாயை = அவயவங்கள் இல்லாதவள்.

141. சா'ந்தாயை = அமைதியே உருவானவள்.

142. நிஷ்காமாயை = ஆசைகள் அற்றவள்.

143. நிருபப்லாவாயை = அழிவற்றவள்.

144. நிர்முக்தாயை = எப்போதும் எதிலும் கட்டுப்படாதவள்.
 
145. நிர்விகாராயை = விகாரம் ஏதும் அற்றவள்.

146. நிஷ்ப்ரபஞ்சாயை = பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டவள் .

147. நிராச்'ரயாயை = ஆச்ரயம் என்று ஒன்றும் இல்லாதவள்.

148. நித்ய சு'த்3தா4யை = எப்போதும் சுத்தமானவள்.

149. நித்ய பு3த்3தா4யை = எப்போதும் பேரறிவின் வடிவமாக இருப்பவள்.

150. நிரவத்3யாயை = அவத்யம் ஏதும் இல்லாதவள்.

151. நிரந்தராயை = இடைவெளி என்பதே இல்லாதவள்.

152. நிஷ்காரணாயை = காரணம் இல்லாதவள்.
 
153. நிஷ்களங்காயை = குற்றம் அற்றவள்.

154. நிருபாத4யே = உபாதி ஒன்றுமே இல்லாதவள்.

155. நிரீச்'வராயை = யாருடைய ஆளுகைக்கும் அடிமைப்படாதவள்.

156. நீராகா3யை = பற்றுதல் இல்லாதவள்.

157. ராக3மத2ன்யை = பற்றுதலைப் போக்குகின்றவள்.

158. நிர்மதா3யை = மதத்தால் பீடிக்கப்படாதவள்.

159. மத3நாசி'ன்யை = மதத்தை ஒழித்துத் தள்ளுபவள்.

160. நிச்'சிந்தாயை = கவலைகள் அற்றவள்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top