Tamil Brahmins
Page 969 of 969 FirstFirst ... 469869919959965966967968969
Results 9,681 to 9,682 of 9682
 1. #9681
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  61,459
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  bhagavathy bhaagavatam - skanda 9

  9#26b. சாவித்திரி துதி

  “சச்சிதானந்த ரூபிணி! மூலப் பிரகிருதி வடிவே!
  ஹிரண்ய கர்ப்ப ரூபிணி! பிரசன்னமாகுவாய்!

  வேத ஸ்வரூபிணி! பரமானந்த ரூபிணி!
  தேவி நீ நித்யை! நித்ய புருஷனின் பத்தினி!

  நித்யானந்த ஸ்வரூபிணி! பிரம்மஜாதி ஸ்வரூபிணி!
  நிகர்த்தவள் நீ ஒளிர்ந்து சுடரை உமிழும் அக்னிக்கு!

  மந்திர ரூபிணி நீ! பராத்பரை நீ! காட்சி தா!
  மோக்ஷமும், தேஜசும் தருபவளே காட்சி தா!

  பஸ்பமாகிவிடும் மனோ, வாக், காயங்களின்
  பாவங்கள் உன் பெயரை உச்சரித்தவுடனேயே!”

  கோலோகத்தில் கிருஷ்ணன் பிரம்மனுக்குத் தர
  குதூஹலத்துடன் உச்சரித்தான் பிரம்ம தேவன்.

  பிரம்ம லோகத்தை அடைந்தாள் சாவித்திரி;
  பிரம்மனின் மனைவியாக வாழ்கின்றாள் அங்கே.

  துதித்தான் அஸ்வபதி இந்த மந்திரத்தை;
  மதித்தாள் அவன் துதியை சாவித்திரி தேவி.

  சந்தியா வந்தனத்துக்குப் பின் இதை ஓதினால்
  வந்து சேரும் நான்கு வேதபாராயண பலன்கள்.

  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

  9#26b. SAVITRI DEVI STUTI


  “You are the everlasting existence, everlasting intelligence and everlasting bliss! You are the Moolaprakriti! You are the HiraNya Garbha! You get pleased!

  You are of the nature of Fire and Energy! You are the Highest! You are the Highest Bliss! You belong to the caste of the twice-born. Do become appeased!

  You are eternal! You are dear to the Eternal! You are of the nature of the Everlasting Bliss. O Devi! You, the all auspicious One! Please become satisfied.

  Thou art present in everything and everyone! You are the essence of all mantras of the BrAhmaNas! You are higher than the highest! You are the bestower of happiness and the liberation! O Devi! Please become pleased.

  You are like the burning flame to the fuel of sins of the BrAhmaNas! You bestow the BrahmA teja (the brilliance of BrahmA)! O Devi! Please become appeased.

  All the sins committed by me through my body, my mind and my speech are burnt to ashes – just be remembering your holy name.”

  Thus saying, the Creator of the world reached the assembly there. Then SAvitri came to the Brahmaloka with BrahmA. The King Aswapati chanted this stotra to SAvitri. She gave him her darshan and all the boons desired by the king.

  Whosoever recites this highly sacred king of Stotras after SandhyA Vandanam, quickly acquires the fruits of studying all the four Vedas.

 2. #9682
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  61,459
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  SEkizhArin Periya PurANam

  #6r. தவறும், தண்டனையும்

  வந்தது மீண்டும் வசந்தகாலம் வையகம் மகிழ்ந்திட;
  வசந்தவிழா வீதிவிடங்கனுக்கு மிகவும் சிறப்பானது.

  காண விரும்பினார் திருவாவூர்த் தேர்விழாவை;
  காண விரும்பினார் பரவையாரின் நடனத்தை.

  சித்தம் கலங்கினார் பழைய நினைவுகளால்;
  புத்தி பேதலித்தது பெருமானின் பிரிவினால்;

  மறந்தார் மகிழமரத்தின் கீழ் செய்த சத்தியத்தை;
  புறப்பட்டார் திருவாரூர் ரகசியமாகச் செல்வதற்கு.

  நடந்தது கொடுமை ஊர் எல்லையைக் கடந்ததும்;
  நாயனார் மூர்ச்சித்தார் இருகண் ஒளியையிழந்து.

  அருள் வேண்டிப் பாடிப் பணிந்தார் பரமனை;
  அருள் செய்யாது வாளே இருந்தார் பெருமான்.

  உறுதியில் தளரவில்லை பார்வையிழந்த சுந்தரர்;
  'திருவாரூர் தியாகேசனைத் தொழுதிட வேண்டும்'.

  திருவெண்பாக்கத்தில் பாடினார் உள்ளம் நெகிழ்ந்து;
  திருவருள் புரிந்தார்; ஈசன் ஊன்றுகோல் அளித்தார்;

  அடைந்தார் சுந்தரர் தட்டுத் தடுமாறிக் காஞ்சி மாநகரை;
  அடைந்தார் ஈசன் சன்னதியைக் காமாக்ஷியை வணங்கி.

  பார்வை வேண்டினார்; பரிதவித்துப் பரவினர் அரனை;
  பாடினார் பதிகங்கள்; பலவாறு கதறி இறைஞ்சினார்;

  கனிந்தார் மனம் ஈசன் பாடிப் பரிதவிக்கும் சுந்தரர் மீது;
  இனிதாக அளித்தார் இடக்கண் பார்வையை மட்டும்.

  தங்கினார் சுந்தரர் மாநகர் காஞ்சியில் சில நாட்கள்;
  தொடங்கினார் தல யாத்திரையை அதன் பின்னர்;

  நடை தளர்ந்தார் இரவு பகல் பாராமல் நடந்ததால்;
  தொடர்ந்த யாத்திரையால் பற்றியது வெப்புநோய்!

  திருத்துருத்தி உறை பெருமானிடம் இறைஞ்சினார்;
  "விரட்ட வேண்டும் துன்பம் தரும் வெப்பு நோயினை!"

  "வெப்பு நோய் விலகிவிடும் ஆரூரா! வருந்தாதே!
  இப்போதே நீராடு வலப்புறத்தில் உள்ள குளத்தில்!"

  மூழ்கி எழுந்தார் அக்குளத்து நீரில் சுந்தரர் - மனம்
  மூழ்கி இருந்தது ஈசனின் திருவைந்தெழுத்துக்களில்.

  மறைந்து விட்டது மாயமாக சுந்தரரின் வெப்பு நோய்!
  மறுபடிச் சுடர்விட்டது பொன்மேனி மாணிக்கம் போல்!

  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

  #6r. The punishment

  The world rejoiced the arrival of the Spring Season once again. The famous festivals of Veedhi Vidangap perumAn of Aaroor would be celebrated in a very grand manner during this season. Sundarar wished to partake in the festival in Aaroor. He wished to witness the divine dance of Paravai nAchiyAr.

  The separation from Aroor Veedhi Vidangan and ParavaiyAr made him feel like a mad man. He forgot the promise he had made to ChangiliyAr never to leave her side and go away from Thiruvotriyoor. He planned to visit Aaroor secretly and set out on his journey.

  When he crossed the city limits something terrible happened. Sundarar became blind in both eyes and fainted right away. Sundarar begged for the mercy of Lord and wanted his eye sight to be restored. But Siva turned a deaf ear to his padhigams.

  Sundarar was not discouraged by the loss of his eyesight. He was determined to reach ThiruvAroor at any cost. He walked with faltering steps and kept his journey on. He sang soulful padhigam in Thiru VeNpakkam begging for the mercy of the lord. Lord Siva took pity on Sundarar and presented him with a sturdy walking stick.

  Sundarar stumbled on and manged to reach KAnchipuram. He prayed to KAmAkashi Devi and reached the sannadhi of EkAmbarEsar. He sang the praise of his lord and begged for his mercy. Siva was moved with compassion and restored the eye sight in Sundarar's left eye only.

  Sundarar stayed on there for some more days and resumed his his journey. He was afflicted by Veppu Noi due to his constant travel. He prayed to Thiruth Thuruthi Sivan and begged for mercy.

  Siva told Sundarar, "Take a dip in the pond in the northern side of the temple.You will get cured of your Veppu noi. Sundarar took a dip and got cured of his terrible Veppu Noi. Sundarar's golden hued body started to shine like before with the luster of carbuncle. 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •