Tamil Brahmins
Page 968 of 968 FirstFirst ... 468868918958964965966967968
Results 9,671 to 9,678 of 9678
 1. #9671
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  61,431
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  SEkkizhArin Periya PurANam

  #6m. அரன் அளித்த உணவு

  திருத்தல யாத்திரையை மேற்கொண்டார் சுந்தரர்;

  திருத்தோணியப்பரைத் தொழுதார் சீர்காழியில்.

  தளர்ந்து விட்டனர் குருகாவூர் செல்கையில் - நடந்த
  களைப்பினால் சுந்தரரும், அவரது தொண்டர்களும்.

  குளிர்ப்பந்தல் அமைத்தார் சிவபெருமான் அங்கே.
  குளிர்ந்த நீரும், உணவும் அளித்தார் குழுவினருக்கு

  துயின்றனர் குழுவினர் பயணக் களைப்பு மேலிட்டதால்!
  மயங்கினர் விழித்தபின் அந்தப் பந்தலைக் காணாமல்!

  தில்லையை அடைந்தனர் சுந்தரரும், தொண்டர்களும்;
  தில்லைவாழ் அந்தணர் எதிர்கொண்டு வரவேற்றனர்.

  கண்டு களித்தனர் தில்லை நடராஜனை - சுந்தரர்
  தொண்டர்களுடன் தெடர்ந்தார் தல யாத்திரையை.

  அந்தணர் வடிவம் தங்கி வந்தார் அங்கு எம்பெருமான்.
  "அன்னம் இரந்து வருகின்றேன் அமருங்கள் இங்கேயே!"

  இரந்து பெற்றார் அன்னத்தை அங்குவாழும் அந்தணரிடம்;
  உவந்தது அளித்தார் அன்னத்தை அந்தக் குழுவினருக்கு.

  வந்து சேர்ந்தார் தொண்டர்கள் குழுவுடன் காஞ்சி நகருக்கு;
  வரவேற்றனர் மெய்யன்பர்கள் இனிய வாத்திய இசையுடன்.

  வணங்கினார் சுந்தரர் காஞ்சி ஏகாம்பரேசர் சன்னதியை.
  வணங்கினார் சுந்தரர் கஞ்சி காமாக்ஷியின் சன்னதியை.

  தொடர்ந்தனர் தலயாத்திரையைச் சில தினங்களுக்குப் பின்;
  அடைந்தனர் நடந்தும் கடந்தும் திருக் காளஹத்தி மலையை.

  அடைந்தனர் திருவொற்றியூரைத் தலயாத்திரையின் போது;
  விட மனம் இன்றித் தங்கிவிட்டனர் குழுவினர் அங்கேயே.

  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

  #6m. The food given by Siva

  Sundarar and his disciples went on their next pilgrimage. They worshiped Thiru ThONiyappar in SeerkAzhi. They became tired, hungry and thirsty while travelling to Guru KAvoor.

  Siva took pity on them and erected a pandhal on their way. He served them food and gave cool drinking water. All the pilgrims fell asleep after eating. After they woke up the pandhal vanished into thin air.

  The group then reached Thillai Chidambaram. The brahmins of Thillai welcomed them heartily. The pilgrims prayed to Thillai NatarAjan and continued their journey. The group became very hungry and thirsty.

  Siva came to them disguised as a brahmin. He told them, "I will beg for food from the brahmins and bring it for you. Please stay here and do not go away till I come with the food." He went around and collected food for the group.

  Then the pilgrims went to KAnchi. The devotees of Siva welcomed them. The pilgrims prayed to KAnchi EkAmbarEsar and to Kanchi KAmAkshi Devi. They visited KALahasthi giri and then Thiru Votriyoor where they decided to stay on longer.

 2. #9672
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  61,431
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  நந்தன் சரிதம் ஆனந்தம் அல்லவா ?

  தயார் ஆயின கவிதைகள் இப்போதே.

  தருகின்றேன் ஓவன் ஃ பிரெஷ்ஷாக!
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #9673
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  61,431
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #18a . திரு நாளைப் போவார் நாயனார்

  அமைந்திருந்தது கொள்ளிட நதிக் கரையில்
  ஆதனூர் என்னும் சிறந்த சிவத் தலம் ஒன்று.

  பூலைப்பாடி ஒன்று இருந்தது ஆதனூரில் - அதில்
  புலையர் வாழ்ந்தனர் வேளாண் தொழில் செய்து.

  பிறந்தார் நந்தனார் புலையர் குலத்தில் - எனினும்
  சிறந்தார் நந்தனார் தம் சீரிய சிவ பக்தியினால்.

  புரிந்து வந்தார் நந்தனார் திருத் தொண்டுகள் பலவும்
  விரிசடையான் கோயிலுக்குத் தன்னால் இயன்ற அளவு.

  வழங்கினார் இசைக் கருவிகளுக்கு நரம்பு, தோல்;

  வழங்கினார் இறைவன் பணிக்குக் கோரோசனை.

  அனுமதி இல்லை தாழ்குலத்தவர் ஆலயம் நுழைய!
  அனுதினமும் ஆடுவார், பாடுவார் ஆலய வாயிலில்!

  விரும்பினார் நந்தனார் சிவலோக நாதனைத்
  திருப்புன்கூர் திருத்தலத்தில் சென்று வணங்க.

  அந்தோ பரிதாபம்! காண முடியவில்லை ஈசனை;
  நொந்தார் மனம் மலைபோல மாடு மறைத்ததால்!

  விலக்கினான் நடுவே நின்ற நந்தியை எம்பிரான்;
  விளக்கினான் நந்தன் பெருமையை உலகினருக்கு.

  புல்லரித்தது அவர் மேனி ஈசனின் தரிசனத்தால்;
  சொல்லரிய பெரும் பேறு பெற்றார் நந்தனார்.

  இருந்தது ஊரின் நடுவே ஒரு பெரும் பள்ளம்;
  இருந்தது ஊற்று ஒன்று பள்ளத்தின் நடுவே.

  மாறியது பள்ளம் ஸ்வாமி புஷ்காரிணியாக
  மாறாது உழைத்த நந்தனாரின் முயற்சியால்.

  மீண்டும் அழைத்தான் சிவலோகநாதன் நந்தனை
  மீண்டும் அடைந்தார் திருப்புன்கூரை நந்தனார்;

  தில்லை சென்று அம்பலக் கூத்தனைக் காண
  எல்லை கடந்து பெருகியது நந்தனின் ஆவல்!

  மாலையில் சொல்வார், "நாளை செல்வேன் தில்லை!"
  காலையில் கலைந்து விடும் கனவு பனிமூட்டம் போல!

  "நாளைப் போவேன்!" என்று நாளும் கூறி வந்ததால்
  "நாளைப் போவார்" என்ற நாமம் அமைந்து விட்டது!

  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #9674
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  61,431
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #18b. திரு நாளைப் போவார் நாயனார்

  கனிந்து விட்டது அரும்பிய ஆவல் பூத்துக் காய்த்து!
  "இனியும் செல்லாது இரேன் தில்லைக்கு!" என்றார்.

  அடைந்து விட்டார் சென்று தில்லையின் எல்லையை;
  அடைய முடியவில்லை ஆலயத்தில் ஈசன் தரிசனத்தை.

  மண்ணுலகம் அதிர்ந்தது வேதங்கள் ஓதும் ஒலியால்!
  விண்ணுலகம் நிறைந்தது வேள்விகளின் புகையால்!

  வலம் வந்தார் தில்லை நகரை! பாடினார்! கூத்தாடினார்!
  வலம் வந்தார் ஆலய மதிலை ! பாடினார்! கூத்தாடினார்!

  ஈடேறுமா நடராஜனைக் காண விரும்பும் அவர் கனவு?
  ஈசன் விடை அளித்தான் இதற்கு ஓரிரவு அவர் கனவில்!

  "இப்பிறவி நீங்கிட மூழ்கி எழுவாய் அனலிடை - பின்பு
  முப்புரி நூலுடன் வந்தணைவாய் என்னை!" என்றான்.

  தோன்றினான் பிரான் தில்லை அந்தணர் கனவிலும்;
  ஊன்றினான் இதே கருத்தை அந்தணர் சிந்தையிலும்;

  "அழைத்து வாருங்கள் என் அன்பன் நந்தனை - வளரும்
  அனலிடை மூழ்கச் செய்து எந்தன் சன்னதிக்கு!" என்றான்.

  வந்தனர் தில்லை வாழ் அந்தணர்கள் நந்தனிடம் - வந்து
  தந்தனர் நந்தனுக்கு அனுமதி அனலிடை மூழ்கி எழுந்திட.

  நெருப்புக்குழி தயாரானது ஆலயத்தின் மதிலின் அருகே;
  நெருப்பு நெருப்பை அழித்து விடுமா என்ன? காண்போம்!

  வீழ்ந்தார் நந்தனார் அக்கினிக் குண்டத்தில் - அதன் பின்
  எழுந்தார் செந்தாமரையின் மேல் உள்ள பிரம்மன் போல்!

  பால் வண்ண மேனியோடு, பளீரிடும் வெண்நீற்றோடு,
  நூல் அணிந்த மார்போடு, புரளும் உருத்திராக்கத்தோடு.

  வியந்தனர் அந்தணர் நந்தனின் திவ்விய ரூபம் கண்டு!
  மயங்கினர் தில்லை நடராஜனின் திருவருளைக் கண்டு!

  பொழிந்தது மலர் மழை; எழுந்தது வேதங்களின் ஒலி!
  வழி காட்டினார் தில்லைவாழ் அந்தணர்கள் நந்தனுக்கு.

  குவிந்த கரங்களுடனும், திரு ஐந்தெழுத்துக்களுடனும்
  குனித்தப் புருவப் புனிதப் பிரானுடன் ஒன்றி விட்டார்!

  திரும்பி வரவில்லை நந்தனார் மீண்டும் வெளியே!
  திருவடி நிழலிலேயே கலந்து இணைந்து விட்டார்.

  "திருநாளைப்போவார் அடியார்க்கடியேன்"

  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #9675
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  61,431
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  bhagavathy bhaagavatm - skanda 9

  9#25b. சாவித்திரி பூஜை (2)

  “செய்வாய் காயத்திரி ஜபம் ஒரு லக்ஷம் முறை!”
  செப்பியது அசரீரி அஸ்வபதிக்கு இவ்வறிவுரை!


  சென்றார் முனிவர் பராசரர் அவ்வழியே – மன்னன்
  செய்திருந்த நற் கர்மங்களின் பயனாகப் போலும்!


  பணிவுடன் மன்னன் வணங்கினான் முனிவரை;
  கனிவுடன் கூறினார் முனிவர் அவனிடம் இதை.


  “ஒருமுறை ஜபித்தால் அழியும் ஒரு நாள் பாவம்;
  நூறு முறை ஜபித்தால் அழியும் ஒரு மாதப் பாவம்.


  ஒரு லக்ஷம் ஜபித்தால் அழியும் ஒரு ஜன்ம பாவம்.
  பத்து லக்ஷம் ஜபித்தால் அழியும் பல ஜன்ம பாவம்.


  பத்து முறை இதைச் செய்தால் சித்திக்கும் முக்தி;
  எத்தகைய பாவத்தையும் அழித்துவிடும் காயத்ரி.


  செய்ய வேண்டும் ஜபம் கிழக்கு முகமாக அமர்ந்து!
  செய்ய வேண்டும் ஜபம் ஆலயம், நதிக்கரையினில்.


  அணிய வேண்டும் ஜபமாலை ஸ்படிக மணிகளால்;
  அணிய வேண்டும் வெண்டாமரைக் கொட்டைகளால்!


  பூச வேண்டும் கோரோசனை நூறு காயத்ரி ஜபித்து;
  புனிதப் படுத்த வேண்டும் கங்கை, பஞ்சகவ்யத்தால்.


  பத்து லக்ஷம் காயாத்ரி இந்த மாலையுடன் ஜபித்தால்
  பிரத்தியக்ஷம் ஆவாள் கண்முன்னே சாவித்திரி தேவி.”


  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


  9#25b. SAvithri Devi Pooja (2)

  An asareeri sounded from the heavens “Do Gayathri Japam one hundred thousand times!” By the good fortune of King Aswapathi, sage ParAsara was passing by at that time. The king paid obeisance to the sage and asked about the significance of the asareeri.


  The sage explained to the king patiently,”If we do the japam of GAyathri mantra once, the sins committed by us in one day will get destroyed! If we do the japam one hundred times, the sins committed in one month will get destroyed.


  If we do japam one lakh times, the sins committed in one whole birth will be destroyed. If we do the japa ten lakh times, the sins committed in many births will vanish.


  If this is repeated ten times all over again, one will be liberated from SamsAra chakram. One must sit facing east while doing the japam – either in a temple or on a river bank.


  The japamAla must be made of crystals or the seeds of white lotus flower. One must do the japa of Gayathri mantra one hundred times and smear Gorochana on the japamAlA. The mAlaA must be sprinkled with pancha gavaya and Ganga water.


  If you do the japam of GAyathri mantrA ten lakh times with this mAlA, SAvitri Devi will surely give you her dharshan!” The sage ParAsAra advised the king.
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #9676
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  61,431
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  SEkkizhArin Periya PurANam

  #6n. ஞாயிறு கிழார்

  இருந்தது ஞாயிறு பதி திருவொற்றியூர் தலத்தருகே;
  இருந்தார் வேளாண்குலச் செல்வந்தர் ஞாயிறு கிழார்.

  அருந்தவப் பயனாக வந்து அவதரித்தாள் புதல்வியாக
  அநிந்திதை என்னும் உமையன்னையின் அன்புத் தோழி.

  சூட்டினார் சங்கிலியார் என்ற திரு நாமத்தை மகளுக்கு;
  காட்டினாள் தெய்வத் தன்மை, பக்தி, ஆற்றல், நற்பண்பு.

  நாளொரு மேனி காட்டினாள்; பொழுதொரு வண்ணமும்;
  வளர்ந்தாள் அந்தத் திருமகள்; அடைந்தாள் மணப் பருவம்;

  தேடினர் அருமை மகளுக்கு எற்ற மணாளன் ஒருவனை;
  வாடினாள் சங்கிலியார் தன் மன விருப்பத்தைக் கூறாமல்!

  தயக்கம் ஏற்படுத்தியது ஆழ்ந்த மன வருத்தத்தை அவளிடம்;
  மயக்கம் ஏற்பட்டது அவளிடம் ஏற்பட்ட மன வருத்தத்தினால்.

  தெளிவித்தனர் மகள் கொண்ட மயக்கத்தை பெற்றோர்கள்;
  வெளியிட்டாள் உள்ளக் கிடக்கையைத் தன் பெற்றோர்களிடம்.

  "மணம் முடிப்பேன் இறைவன் அருள் பெற்ற ஒருவரை மட்டுமே!
  மனம் ஒப்பாது வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள!

  திருவொற்றியூர் செல்வதற்கு விழைகின்றது எந்தன் மனம்;
  திருவருள் வழியில் ஒழுகி நிற்க விழைகின்றது என் மனம்";

  கதி கலங்கினர் பெற்றோர்கள் மகளின் விருப்பத்தைக் கேட்டு.
  மதி மயங்கிய பெண்ணுக்குத் தேடவில்லை வேறு மணாளனை.

  மணக்க விரும்பினான் சங்கிலியாரையே ஒரு செல்வந்தன்;
  மரணம் அடைந்து விட்டான் அவன் திருமணம் முடியும் முன்பே.

  பரவி விட்டன புயலில் பரவும் தீயைப்போல பற்பல வதந்திகள்;
  வரவில்லை வேறு எவருமே அவளைப் பெண் கேட்டு அதன் பின்.

  முடிவு செய்தனர் பெற்றோர் மகளின் விருப்பத்தை நிறைவேற்றிட;
  வழி வகுத்தனர் அவள் கன்னி மாடத்தில் கன்னியாக வாழ்ந்திட.

  அமைத்தனர் அழகிய கன்னி மாடத்தைத் திருவொற்றியூரில்
  ஆலயத்தின் அருகிலேயே மகளின் அருந்தவ வாழ்க்கைக்கு.

  இருந்தனர் சேடிகளும், பணிப் பெண்களும் சங்கிலியாருடன்;
  இருந்தாள் சங்கிலியார் இறைவன் நினைவாகவே எப்போதும்.

  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

  #6n. JnAyiru kizhAr

  JnAyiru pathi was situated near ThiruvOtriyoor. JnAyiru kizhAr was a rich man in the race of cultivators. He was blessed with a beautiful daughter who was in fact Anindhithai - the friend of Uma Devi - reborn on the earth. She was named as ChangiliyAr. She exhibited all the divine qualities even from a very young age.

  ChangiliyAr grew up well and attained the marriageable age. GnAyiru kizhAr searched for a suitable groom for her daughter. But ChangiliyAr had other plans which she could not revel to her parents. She kept brooding and worrying about it so much that she fell faint.

  Her anxious parents revived her and asked her the cause of her distress. ChangiliyAr took courage and told her parents,"I can marry only a man who has won the grace of Lord Siva. I can't marry any other ordinary man. I wish to live in ThiruvOtriyoor in close proximity to Lord Siva. "

  KizhAr and his wife were shocked to hear about the strange wish of their daughter. They lost all interest in finding a suitable groom for her.

  A rich young man wished to marry ChangiliyAr but he died before the wedding could take pace. All kinds of rumors started spreading about ChangiliyAr like wild fire. After that no one approached KizhAr asking for the hand of his daughter.

  KizhAr decided to give in to the strange wish of his daughter. He built a Kanni mAdam in ThiruvOtriyoor very close to the temple. He provided his dear daughter with everything she needed to live in safety and comfort. She was provided with maid servants and had her close friends with her. ChangiliyAr lived constantly thinking about God.
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #9677
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  61,431
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  bhagavathy bhaagavatam - skanda 9

  9#25c. சந்தியா வந்தனம்

  அந்தணன் ஆகும் தகுதியை இழக்கின்றான்
  சந்தியா வந்தனம் செய்யாத ஒரு வேதியன்.

  மூன்று சந்திகளையும் முறையாகச் செய்பவன்
  விண்ணில் ஆதவன் போல நன்கு ஒளிர்வான்!

  இணையவான் அவன் தேஜஸில் சூரியனுக்கு!
  இணையாவான் அவன் தவத்தில் சூரியனுக்கு!

  தூய்மையடையும் பூமி அவன் பாதத் துளிகளால்!
  தூய்மையடையும் பாயும் நதி அவன் நீராடுவதால்!

  சந்தி செய்யாத அந்தணனும் ஒரு சூத்திரனே!
  சந்தி செய்யாதவன் செய்யும் கர்மங்கள் வீணே!

  ஏற்க மாட்டார்கள் தேவர்கள் இவன் செய்யும் பூஜையை!
  ஏற்க மாட்டார்கள் பித்ருக்கள் இவன் தரும் பிண்டத்தை!

  மூலப் பிரகிருத்யின் பக்தன் ஆகாத ஒருவனும்,
  மூல மந்திரத்தை ஜபம் செய்யாத ஒருவனும்,

  தேவிக்கு உற்சவங்கள் செய்யாத ஒருவனும்,
  வேளைக்குச் சந்தியைச் செய்யாத ஒருவனும்,

  ஏகாதசி விரதம் அனுஷ்டிக்காத ஒருவனும்,
  நிவேதிக்காத உணவை உண்ணும் ஒருவனும்,

  சூத்திரான்னத்தைச் சுவைத்துப் புசிப்பவனும்,
  சூத்திரப் பெண்ணைத் திருமணம் செய்தவனும்,

  சூத்திரனுக்குச் சமையல் செய்து போடுபவனும்,
  சூத்திரனிடம் தானம் பெறுகின்ற அந்தணனும்,

  கத்தியைக் காட்டி வயிறு வளர்ப்பவனும்,
  வட்டியை வாங்கி வயிறு வளர்ப்பவனும்,

  சூரியோதயத்தின் போது நித்திரை செய்பவனும்,
  பூஜை, புனஸ்காரங்களை விட்டு ஒழித்தவனும்,

  வேஷத்தால் அந்தணர்கள் போல இருந்தாலும்,
  விஷமற்ற பாம்புகளுக்கு இணையாவார்கள்!

  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

  9#25c. SandhyA Vandanam

  A brahmin who does not perform SandhyA Vandanam does not qualify to be called as a Brahmin. The man who performs all the three SandhyA Vandanams regularly will shine like the Sun in the sky!

  He will become equal to the Sun in his tejas and penance. The earth will become purified by his foot steps. The running rivers will get purified when he takes bath in their water.

  A brahmin who does not perform SandhyA Vandanam is a SoodrA – even if he is born as a Brahmin. All the karmas performed by him will go in waste. Devas will not accept his pooja and Pitrus will not accept his srAddha karmas.

  The brahmin who is not the devotee of Moola Prakruti Devi; The brahmin who does not chant her divine mantrAs; The brahmin who does not follow EkAdasi vratam;

  The brahmin who eats the food not offered to God; The brahmins who eats the food cooked by a SoodrA; The brahmin who has married a SoodrA woman; The brahmin who cooks for food for a SoodrA; The brahmin who receives DAnam from a SoodrA;

  The brahmins who makes a living by brandishing a knife; The brahmin who makes money lending his profession for earning his livelihood; The brahmin who sleeps at Sooryodhaya kAlam and The brahmin who has given up the pooja and other form of worship may look like brahmins but they are equal to the non poisonous snakes.

 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #9678
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  61,431
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  SEkkizhArin Periya PurANam

  #6p. சங்கிலி நாச்சியார்

  வாழ்ந்தாள் கன்னிமாடத்தில் தோழியர், சேடியருடன்;
  வாழ்ந்தாள் சிந்தையில் எந்தையையே நிலை நிறுத்தி.

  வைகறையில் நீராடுவாள்; வெண்ணீறு அணிவாள்;
  ஐயனுக்கு வண்ண வண்ண மாலைகள் தொடுப்பாள்;

  சாத்தி வழிபடுவாள் காலத்துக்கு ஏற்ற மாலைகளை;
  ஏத்தி வழிபடுவாள் திரு ஐந்தெழுத்து மந்திரத்தால்.

  செய்து வந்தாள் திருத்தொண்டு திருவொற்றியூரில்;
  சென்று சேர்ந்தது சுந்தரர் குழுவும் திருவொற்றியூர்.

  புகுந்தார் ஆலய மண்டபத்தில் சுந்தரமூர்த்தியார் ஒரு நாள்;
  புகுந்தாள் ஆலய மண்டபத்தில் சங்கிலியார் மாலையுடன்;

  தென்றல் போல வந்தாள்; ஒரு மின்னல் போல மறைந்தாள்;
  கன்னிமாடத்தில் நுழைந்தாள்; சுந்தரர் உள்ளத்திலும் தான்!

  மனம் பறிபோனது கண நேரத்தில்; உடன் மையல் பிறந்தது ;
  'இனம் காண வேண்டும் இந்த எழில் தேவதை யாரென்பதை'!

  கண்டுபிடித்தார் 'மின்னல் மோகினியின் பெயர் சங்கிலியார்;
  கன்னி மாடத்தில் வசிக்கும் ஒரு கன்னி மயில் அவள்' என்று.

  மணந்தேன் பரவையைப் பரமன் திருவருளால் - அது போல்
  மணக்க வேண்டும் சங்கிலியாரையும் பரமன் திருவருளால்.

  "மறைத்தாய் உமையாளை உன் மேனியின் இடப்புறம்!
  மறைத்தாய் கங்கையை உன் சென்னிமேல் சடையில்!

  தீர்த்தருள்வாய் என் தாபத்தையும், என் மோகத்தையும்;
  தீர்த்தருள வல்லன் நீ ஒருவனே என்று அறிவேன் நான்".

  துயின்றார் சுந்தரர் சங்கிலியாரின் நினைவாகவே;
  துயரைத் தெரிவித்து விட்டார் தோழன் அரனுக்கு;

  தோன்றினான் அரன் சுந்தரர் கனவில் அன்றிரவு,
  "துயர் உற வேண்டாம்; மணப்பாய் நீ சங்கிலியை!"

  தோன்றினான் வேதியராகச் சங்கிலியார் கனவில்;
  "மணம் புரிவாய் என் தோழன் சுந்தரனை நீ !" என்றார்

  "திருவாரூரில் வாழ்கின்றார் பரவையாருடன் சுந்தரர்;
  திருமணம் அவருடன் செய்து கொள்வது எங்ஙனம்?" என

  "உறுதி மொழி அளிப்பான் உன்னைப் பிரியேன் என்று!"
  மறுபடி மறைந்தருளினார் வேதியர் வேடமிட்ட சிவன்.

  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

  #6p. Changili nAchiyAr

  Changili nAchiyAr lived in the Kanni mAdam (the abode of virgins) with her friends and maidservants. Her thoughts were firmly fixed on Lord Siva. She would get up early in the morning and bathe. She would smear her forehead with the holy ash. She would pluck fresh fragrant flowers and make them into lovely garlands.

  She would offer the appropriate garland to Siva depending on the time of the day. She would be chating the Siva panchAksharm all the time. While ChangiliyAr was thus serving Lord Siva, Sundarar and his disciples reached Thiru votrioor.

  One day Sundarar went to the mandapam in the temple. At the same time ChangliyAr also entered the mandapam holding the garland meant for Siva. She entered like a whiff of fresh breeze and vanished as swiftly as a streak of lightning.

  ChangiliyAr went back and entered her Kanni mAdam. At the same time she had entered the heart of Sundarar. He fell head over heels in love with her at the very first sight. He found out her name and her place of residence.

  He told to himself., "I could marry Paravai since Siva helped me. I will marry ChangilyAr also since Siva will surely help me. Oh Lord! You have successfully hidden Uma Devi in the left half of your body . You have hidden Ganga in your matted coils.Only you can help me now. You must show me a way to marry the pretty ChangiliyAr."

  He slept in fits and starts thinking of ChangiyAr all the while. He had conveyed his wishes to his God and friend Siva. Siva appeared in his dream and assured Sundarar, "Do not worry. You will surely marry ChangiliyAr."  Now Siva appeared in the dream of ChangiliyAr and said," You must marry my friend and devotee Sundaran." ChangiliyAr asked this question to Siva disguised as a brahmin,


  "Sundarar has married ParavaiyAr and is living in ThiruvAroor. How can I marry him knowing this?" Siva reassured ChangiliyAr, "Sundarar will promise to you never to leave your side"
  With this Siva disguised as a brahmin vanished again.
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •