A poem a day to keep all agonies away! - Page 949
Tamil Brahmins
Page 949 of 949 FirstFirst ... 449849899939945946947948949
Results 9,481 to 9,484 of 9484
 1. #9481
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  59,838
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  bhagavathy bhaagavatam - skanda 3

  3#16c. பீஜாக்ஷரம்

  மனோரமை வாழ்ந்தாள் பரத்வாஜர் ஆசிரமத்தில்;
  மகன் சுதர்சனனுக்கு ஆகிவிட்டது அகவை ஐந்து.

  விளையாடும் முனிகுமாரன் அழைத்தான் உரக்க,
  “ஏ க்லீபனே! இங்கு வா!’ என்று தன் நண்பனை.

  ‘க்லீம்’ என்பது தேவியின் காம பீஜாக்ஷரம்;
  ‘க்லீம்’ என்பதை உச்சரித்தான் சுதர்சனன்.

  பூர்வ புண்ணியம் பெருகத் தொடங்கி விட்டது!
  ஆர்வத்துடன் உச்சரித்தான் ஆறு ஆண்டுகள்!

  உபநயனம் செய்வித்தார் பரத்வாஜர் – தானே
  உபதேசித்தார் அனைத்து சாஸ்திரங்களையும்.

  மந்திர பலத்தினால் விரைவாகக் கற்றான்;
  எந்த சாஸ்திரத்தையும் எளிதாகக் கற்றான்!

  தோன்றினாள் தேவி தன் கருட வாகனத்தில்;
  தோன்றினாள் தேவி லக்ஷ்மியின் வடிவத்தில்.

  சிவந்த நிறத்துடன், சிவந்த ஆடை அணிந்து,
  சிவந்த ஆபரணங்களுடன், சிவந்த மலர்கள் சூடி!

  தந்தாள் வில்லும் அம்புகளும் அவனுக்கு;
  தந்தாள் வஜ்ஜிர கவசத்தையும் அவனுக்கு!

  சென்றனர் காசி ராஜனின் தூதுவர் அவ்வழியே;
  நின்றனர் தம்மை மறந்து, அவன் வடிவழகில்!

  பூரண சந்திர முகம் கொண்ட இளவரசியிடம்
  வர்ணித்தனர் தாம் கண்ட குமாரனைக் குறித்து.

  காசி ராஜனின் மகள் கன்னி சசிகலை – அந்தக்
  காமதேவனின் வர்ணனையில் மயங்கினாள்.

  வரித்தாள் அவனைத் தன் கணவனாக;
  தவித்தாள் மன்மத பாணங்கள் தாக்கியதால்!

  தேவி தோன்றினாள் சசிகலையின் கனவில்;
  தேவி கூறினாள், “சுதர்சனன் என் பக்தன்!

  மணந்து கொள்வாய் நீ அவனை விரும்பி;
  மனம் விரும்புவதையெல்லாம் அடைவாய்!”

  மகிழ்ச்சிக் கடலில் மிதந்தாள் சசிகலை – கனவை
  நெகிழ்ச்சியுடன் கூறினாள் உயிர்த் தோழியிடம்.

  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

  3#16c. BheejAksharam

  Queen Manorama and Prince Sudarsanan lived under the care of Sage BhatarwAj. The boy became five years old. One day when the sons of the rushis were playing, one of them called out loudly his friend “Hey Kleeba! Come here!”

  The word appealed to Sudarsanan. ‘Kleem’ is the KAma Bheeja Aksharm of Devi. He kept repeating that beeja aksharam playfully. His poorva-janma-puNyam started growing fast. He kept chanting the beeja mantra for six long years.

  Sage BharatwAj performed his upanayanam and taught him all the sAstrAs. He learned them very easily and quickly due the effect of the manata japam.

  One day Devi appeared before him in the form of Lakshmi Devi on her Garuda VAhanam. She was very fair and wore red silk, red flowers and red colored ornaments. She blessed the young prince Sudarsanan and presented him with a bow and arrows. She gave him a vajra kavacham (a diamond armor) to protect him.

  The prince was a now a very handsome lad – well versed in all the sAstrAs and very devoted to Devi. The messengers of the King of KAsi passed by. They were duly impressed by the beauty and knowledge of the young prince in vanavAsam.

  They went back and described about this handsome prince to their young princess Sasikala. She fell head over heels in love with the prince – whom she had yet set her eyes on.

  Devi appeared in Sasikala’s dream and said, “Prince Sudarsanan is my ardent devotee. You will marry him and you will get everything you desire to have!”

  Sasikala was happy with this dream and shared it with her closest friend with great emotion.

 2. #9482
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  59,838
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  kandha purANam - pOr puri kANdam

  9b. கடும் போர்!

  கடலோடு கடலெனக் கலந்தது
  படையோடு படை அக்களத்தில்.


  மாய்ந்தனர் எண்ணற்ற படைவீரர்கள்;
  பாய்ந்த குருதியாறு கலந்தது கடலில்.


  தாக்கிய அவுணர் படைக்குச் சற்றுத்
  தளர்ந்து விட்டனர் பூதப் படையினர்.


  நூறாயிரவரில் வந்தார் ஓராயிரவர்
  மூவாயிரவரை எதிர்த்துப் போரிட!


  ஆயிரவர் தேர்களை அழித்தனர்
  மூவாயிரவர்கள் கணை மழையால்.


  கணைகளும், கற்களும் பறந்தன.
  இணையாகவில்லை பூதப் படை.


  ஆயிரவர் தோற்றதும் முன் வந்தார்
  மூவாயிரவருடன் போரிட விசயர்!


  மாண்டு விழுந்த பின்னரும் மூவாயிரவர்
  மீண்டும் உயிர்தெழுந்தனர் விந்தையாக!


  அறுபட்ட உறுப்புக்கள் ஒரு நொடியில்
  மறுபடி வளர்ந்து விட்டன முன்போலவே.


  “நான்முகன் தந்த மேன்மை உள்ளவரை
  போர்முகத்தில் வெல்லுவது எங்ஙனம்?”


  விண்ணில் தோன்றினான் வேல் முருகன்.
  தண்ணருள் புரிந்தான்; தந்தான் ஆயுதம்.


  வைரவர் படைக் கலத்தை உருவாக்கி
  “எய்வாய் இதை மூவாயிரவர் மீது!” என.


  மாயப் படையைச் செலுத்தினர் அவுணர்.
  மாயத்தை அழித்தது அந்த வைரவப் படை.


  அவுணர்கள் மூவாயிரவரையும் ஒரே
  கணத்தில் அழித்தது வைரவர் படை!


  நூறாயிரம் வீரர்களில் ஒருவன் தனியே
  மூவாயிரவரை அழித்ததை
  அறிந்தான்;

  தாளாத துன்பத்தை அடைந்த சூரபத்மன்
  மாளாதத் துயரக் கடலில் மூழ்கினான்!


  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


  4#9b. Sooran’s three thousand sons


  The two armies moved in like the merging of two oceans. A terrific war broke out. Many thousands of warriors fell dead. A river of fresh blood started flowing into the sea. The army of demons faced a slight setback due to the powerful attack of the asura army.


  One thousand valiant warriors from the army of demons came forward to fight with the three thousand sons of Soorapadman. Their chariots were broken by the rain of arrows shot by the asura army. A lone worrier Vijayan came forward to fight with the three thousand asura princes.


  The asura princes who got killed, came back to life almost immediately! Their cut off limbs grew back immediately. These princes had special boons given by Brahma. How could anyone defeat these princes with such rare boons?


  Then Murugan appeared in the sky. He created the Bhairava asthram and gave it to Vijayan for shooting at the three thousand asura princes.


  Meanwhile the asura princes shot the MAya astram for deluding the army of demons. The Bhairava asthram destroyed the MAya astram and went on to kill the three thousand princes. That a single warrior killed the three thousand princes was too much to bear and Soorapadman fell in a sea of sorrow.
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #9483
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  59,838
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  The 64 Thiru ViLaiyAdalgaL

  62c. சமணரும், சம்பந்தரும்.

  # 62 (c). சமணரும், சம்பந்தரும்.

  ஓலையைப் பெற்றுக்கொண்ட பிள்ளை,
  ஆலவாய் அம்பதிக்குப் புறப்பட்டார்;
  உடன் இருந்த திரு நாவுக்கரசர் பற்பல
  தடைகள் கூறி தடுத்தார் பயணத்தை.


  “சிறு பாலகன் நீர்! சமணர்களோ எனில்
  கூறும் பழி பாவங்களுக்கு அஞ்சாதவர்;
  நாளும் , கோளும் நன்றாக இல்லை!
  வேளை மாறியபின் செல்லலாம் அங்கு!”


  “சமணர்கள் தந்த துன்பங்களில் இருந்து,
  அமலன் அருளால் பிழைத்த பெருமானே!
  நாளும், கோளும் நடப்பது நம்மை எல்லாம்
  ஆளும் அரசன் அரன் ஆணைப்படி அன்றோ?


  எம்பெருமான் முன்னின்று காப்பார்,
  நம்புவீர் மனக்கிலேசம் வேண்டாம் !”
  கோளறு பதிகம் என்னும் பாடல்களை,
  ஆளுடைபிள்ளை பாடிப் புறப்பட்டார்.


  முத்துப் பந்தல் குலங்கி நிழல் தர,
  முத்துச் சிவிகையில் பயணித்தார்.
  செல்லும் வழியில் க்ஷேத்திரங்களில்,
  உள்ளம் கனிந்து பதிகங்கள் பாடினார்.


  ஆலவாயை நெருங்கியது அக்குழாம்,
  கலகலத்தது அவர்கள் திருச்சின்னம்;
  “வந்தான் பரசமயக் கோளரி இங்கே!
  வந்தான் சமணஇருள் கெட ஞானபானு!”.


  சமணர்கள் வழிமறித்துக் கலகம் செய்ய,
  சம்பந்தர் தடைகளை எளிதில் உடைத்தார்;
  ஆலவாய் அடைந்து திருக்கோவில் புகுந்து,
  வலம் வந்து வணங்கினார் ஆளுடைபிள்ளை.


  “காமனைக் காய்ந்து நைத்த தேவனே!
  தாமதம் இன்றி எனக்கு நாவலிமை தா!
  வாது செய்து சமணக் குரவரை வென்று,
  தீதற்ற சைவத்தை மீண்டும் உயிர்ப்பிக்க!”


  வாகீச முனிவரின் வேண்டுகோளின்படி,
  ஏகினார் அவர் மடத்தில் தங்குவதற்கு,
  அன்றிரவு செய்தனர் சமணக் குரவர்கள்,
  வென்றிடப் பகைவனை, ஒரு ஹோமம்;


  அக்னியை அழைத்து ஆணை இட்டனர்,
  “ஆக்கிரமிப்பாய் பகைவன் தங்குமிடம்!”
  ‘அக்னியை அக்னியால் தகிக்க முடியுமா?’
  அக்னி தேவன் அஞ்சி நடுங்கலுற்றான்.


  மடச்சமணர்களே அக்னியைக் கொண்டு
  மடத்தில் இட்டு எரிக்க முயன்றனர்;
  புகை எழும்பியது; அக்னி தயங்கியது;
  தகவல் சென்றது ஆளுடை பிள்ளைக்கு!


  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


  # 62 (C). THE JAINS AND SAMBANDHAR.


  Sambandhar wanted to go to Aalavaai. At that time Thiru Navukkarasu was with him and stopped the proposed journey.


  He said,” The positions of the planets are unfavorable. The Jain will stop at nothing to have their way. Please postpone your visit until the planetary positions become better. You are no more than a child yet!”


  Sambandhar replied,”Sire! you have survived the terrible hardships inflicted on you by the ruthless Jain by the mercy and grace of Lord Siva. He will surely protect me from dangers. The planets are all his loyal servants.”


  He sang the collection of songs known as Kolaru pathigam. and left for Aalavaai in his pearl palanquin under the pearl canopy .


  On the way he stopped in all the holy places and sang on Lord Siva. They reached near Madurai. The group was shouting,


  “He, who is the terror to the other religions, is here!
  He, who is the Sun dispelling the dark Jainism, is her!”


  The Jain guru blocked their way. But Sambandhar got through their blockade and reached Aaalavaai. He did pradakshinam and worshiped Siva.


  He prayed to God,”Oh god, who had burnt Manmathan! Please give me the power and ability to win over the Jain gurus in a debate and revive Saivism as before!”


  Vaageesar requested Sambandhar to spend the night in his madam. Sambandhar readily accepted the invitation. That very night the Jain gurus performed an Abhichaara homam.


  They ordered Agni to burn down the madam where Sambandhar was staying. Agni shivered at the prospectus, wondering how could fire burn fire?


  The gurus carried the fire and placed it in the madam. Fumes of smoke rose high but Agni was hesitating to burn down the madam. Sambandhar was informed of the happenings.

 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #9484
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  59,838
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  62d. கோளறு பதிகம்

  https://youtu.be/OsNv9MIgezc

  Attachments area

  Preview YouTube video Kolaru Padhigam - Bombay Saradha


  Kolaru Padhigam - Bombay Saradha
  கோளறு பதிகம்

  வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
  மிகநல்ல வீணை தடவி
  மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
  ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
  சனிபாம்பி ரண்டு முடனே
  ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே. (01)


  என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
  எருதேறி யேழை யுடனே
  பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
  உளமே புகுந்த அதனால்
  ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
  உடனாய நாள்க ளவைதாம்
  அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே. (02)


  உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
  உமையோடும் வெள்ளை விடைமேன்
  முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
  திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
  திசை தெய்வ மானபலவும்
  அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே. (03)


  மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
  மறையோது மெங்கள் பரமன்
  நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
  கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
  கொடுநோய்க ளான பலவும்
  அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே. (04)


  நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
  விடையேறும் நங்கள் பரமன்
  துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
  வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
  மிகையான பூத மவையும்
  அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே. (05)


  வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
  மடவாள் தனோடு முடனாய்
  நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
  உளமே புகுந்த அதனால்
  கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
  கொடுநாக மோடு கரடி
  ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே. (06)


  செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
  விடையேறு செல்வ னடைவார்
  ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
  வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
  வினையான வந்து நலியா
  அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே. (07)


  வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
  மடவாள் தனோடும் உடனாய்
  வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
  உளமே புகுந்த அதனால்
  ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
  இடரான வந்து நலியா
  ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே. (08)


  பலபல வேடமாகும் பரனாரி பாகன்
  பசுவேறும் எங்கள் பரமன்
  சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
  மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
  வருகால மான பலவும்
  அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே. (09)


  கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
  குணமாய வேட விகிர்தன்
  மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
  உளமே புகுந்த அதனால்
  புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
  திருநீறு செம்மை திடமே
  அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
  அடியா ரவர்க்கு மிகவே. (10)


  தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
  வளர்செம்பொன் எங்கும் நிகழ
  நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
  மறைஞான ஞான முனிவன்
  தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
  நலியாத வண்ணம் உரைசெய்
  ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
  அரசாள்வர் ஆணை நமதே. (11)
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •