Tamil Brahmins
Page 875 of 957 FirstFirst ... 375775825865871872873874875876877878879885925 ... LastLast
Results 8,741 to 8,750 of 9566
 1. #8741
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  DEVI BHAAGAVATAM - SKANDA 6

  6#13a. நரமேத யாகம் (1)

  “பின் விளைவுகளைச் சிந்தியாமல் உன் தந்தை
  சொன்னான் ஒரு நரமேத யாகம் செய்வதாக!”


  மாற்றிவிட்டான் லோகிதாசன் மனத்தை இந்திரன்
  மறைந்து வாழ்ந்தான் அவனும் மாயை வயப்பட்டு.


  சிந்தித்தான் வியாதி மாறுவது பற்றி அரிச்சந்திரன்.
  சந்தித்தான் தன் குலகுரு வசிஷ்டரை அரிச்சந்திரன்.


  உபாயம் கூறினார் குலகுரு வசிஷ்டர் – வந்துள்ள
  அபாயம் நீங்குவதற்கு மன்னன் அரிச்சந்திரனுக்கு.


  “புத்திரர்கள் ஆவார் பதின்மூன்று வகையினர்.
  புத்திரன் ஆவான் நீ விலைக்கு வாங்கியவனும்!


  விலைக்கு வாங்கிவிடு பிராமணப் பிள்ளையை;
  நிலைமையை சமாளிப்போம் யாகப் பசுவாக்கி.


  பூர்த்தியாகிவிடும் நீ செய்த அந்த சங்கற்பமும்;
  தீர்ந்துவிடும் உன் கொடிய வியாதியும்!” என்றார்


  “விலைக்கு வாங்கும் அமைச்சரே ஒரு பிள்ளையை!
  விலைக்குப் பிள்ளையை விற்கும் பெற்றோர் இருப்பர்.


  அறிவியுங்கள் நாடு முழுவதும் இந்தச் செய்தியை;
  வறியவர் எவரேனும் விலைக்குத் தருவர்” என்றான்.


  அமைச்சர் சென்றார் ஊர் ஊராகச் சுற்றி அலைந்து;
  அமைச்சர் கண்டார் வறிய அந்தணன் அஜீகர்த்தனை.


  இருந்தனர் அவனுக்கு மூன்று மகன்கள் – அத்துடன்
  இருந்தது அளவற்ற வறுமையும், பொருளாசையும்.


  முதல் பிள்ளையைத் தர விரும்பவில்லை தாயார்;
  கடைப் பிள்ளையைத் தர விரும்பவில்லை தந்தை.


  நடுப் பிள்ளைத் தந்தனர் விலைக்கு அமைச்சருக்கு.
  நடுப் பிள்ளையின் பெயர் சுனஸ்சேபன் என்பதாகும்.


  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


  6#13a. Narameda yAgam


  Indra confused the mind of LohidAsan further,”Your father King Harischandra promised to VaruNa to offer you in a Narameda yaaga without thinking of the consequences. It was very wrong on his part to do so!” Indra changed the mind of LohidAsan and the boy continued to live in seclusion.


  King Harischandra wanted to get rid of the terrible jalodaram afflicting him. ‘May be my kulaguru Vasishta could help me to get out of this mess and curse.’


  Sage Vasishta came up with a master plan. “Thirteen categories of boys are as good as one’s own son for all practical purposes. A boy bought for money ia also as good as one’s own son. Try to buy a young brahmin boy.


  Some poor parent may be willing to sell one of their sons for a good sum of money. Perform the Narameda yAgam with that boy and your since promise will be fulfilled, you will be rid of this terrible disease.”


  A minister was sent with a fat sum of money to buy a brahmin boy for the yAgam. Ajeekartan was a poor brahmin with three sons. He was utterly poor and utterly greedy as well. He was willing to sell one of his sons in exchange for a fat purse.


  But the mother would not part with her eldest son and Ajeekartan would not part with his youngest son. So they willingly gave away the middle one of their three son named Sunascheban.

 2. #8742
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

  14c. அனைவரின் திகைப்பு!

  திருவிளையாடல்களைக் காட்டினான் கந்தன்,
  திரு உருவத்தைக் காட்டவில்லை ஒருவருக்கும்!

  “செய்வது யார்?” என்று திகைப்பில் மூழ்கிவிடச்
  செய்யோன் மறைத்துக் கொண்டான் மேனியை.


  “மால் அயன் காண இயலாத பிரான் செய்யும்
  மாயம் போலும்!” என்று மயங்கினர் அவுணர்.

  வேலன் லீலைகளைக் கண்டவர் விண்டனர்,
  “வேரோடு அழிப்பான் அவுணர்களை இவன்!”


  ஆறுமுகனைக் காணாமல் ஆட்டத்தைக் கண்டோர்
  “வேறு யார் செய்கிறார்கள் இவற்றை?”மயங்கினர்.

  தேவர்களும் திகைத்து நின்றனர், பின் விரைந்தனர்;
  தேவர்கோனுக்குத் தெரிவித்தனர் பொன் மேருவில்!


  “அயோ மயம் இது! அறிய முற்படுவோம்!
  அயனிடம் சென்று இதனை ஆராய்வோம்!”

  தேவர்கள் நான்முகனிடம் செல்லுகையில்
  தோன்றினான் குமரன் அவர்கள் முன்னே!


  கொடி, முடிகளைப் பறித்தெறிந்தான் குஹன்.
  “கொடியவன் இவன் வேலை தான் எல்லாம்!

  வல்லவன்! மாயாவி! அவுணரிலும் கொடியவன்!
  வெல்ல வேண்டும் சமரில் இச்சிறுவனை நாம்!”


  எண்ணியவுடனே தோன்றியது ஐராவதம்;
  எண்ணற்ற படைக் கலங்கள் தோன்றின!

  போர்க்கோலம் பூண்ட தேவர்கள் உடன்
  போர் தொடங்கினர் சிறுவன் முருகனுடன்.


  இந்திரன் வீசிய பாணங்கள் மாறிவிட்டன
  சுந்தரச் சிறுவன் மீது மென் மலர்களாக!

  சினந்து வீசினான் குலிசத்தை இந்திரன்!
  சிறுவன் மீது பட்ட அது துகள்கள் ஆனது!


  காழ்ப்புடன் எதிர்த்த வெள்ளை யானை
  வீழ்ந்து மடிந்தது ஒரு சிறு கணையால்!

  அழிந்தன இந்திரன் கொடியும், முடியும்,
  விழுந்தான் மார்பில் ஏழு கணைகளுடன்!


  வருணன், யமன், திங்கள், கதிரவன்,
  வாயு, வஹ்னி, மாய்ந்தனர் அனைவரும்,

  எஞ்சிய தேவர்கள் விரைந்து அங்கிருந்து
  அஞ்சி ஓடினர் சரபம் கண்ட அரிமா என.


  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


  1#14c. THE WAR WITH THE DEVAS.


  Everyone saw Murugan’s pranks but he hid his form so that no one knew who really was behind all these unusual happenings! The Asuras thought that these rare feats and acts were performed by Lord Siva Himself.


  Those who knew that Murugan was behind all these things were certain that he would get rid of the Asuras.

  The Devas were confused too. They rushed to Mount Meru to inform these to Indra. Indra told them, “Let us go to Brahma and investigate about this!” When they were about to leave, Murugan appeared there. He grabbed the crowns and the flags of the Devas and tossed them away.

  The Devas thought, “So this must be the boy who is behind all these mischiefs. He is a trickster. He is also very talented. He is worse than even the Asuras. We will have to fight with Him to teach Him a lesson He will remember!”


  Indra thought of his four tusked white elephant IrAvata and it appeared there in front of him immediately. The other Devas got all their asthrams and sasthrams . They were ready for the battle with the little and lonely boy.


  A fierce battle ensued. All the asthras thrown on Murugan transformed into flowers. The vajrAyutham thrown on the boy by Indra broke into one thousand pieces. The elephant IrAvata charged at Murugan in a mad frenzy and dropped dead by his arrows.


  With two arrows Murugan cut off the flag and crown of Indra and shot seven more arrows on his chest. Varuna, Yama, the Sun, the Moon, Vayu, Agni all lay dead there. The remaining Devas took to their heels very much like the lion cubs running away from the mythological giant bird Sarabam. 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #8743
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  SRI VENKATESA PURAANAM

  15b. திருமணப் பேச்சு

  “உத்தமமானதே இந்த சம்பந்தம் என் ராணி!
  பத்மாவதி யாரென்பதை மறந்து விடாதே நீ!


  மஹாலக்ஷ்மியின் அம்சமே நம் பத்மாவதி;
  மஹாவிஷ்ணுவை மனத்தால் வரித்தவள்.


  சம்மதம் பெறுவோம் நமது குலகுருவிடம்;
  சம்மதம் தருவோம் பின் அந்த மாதரசியிடம்.”


  தொண்டைமானை அழைத்தான் ஆகாசராஜன்,
  விண்டான் நடந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம்.


  “கேட்போம் குலகுருவிடம் அவரது அபிப்ராயம்;
  கேட்போம் நலம் விரும்பும் பிரதானிகளிடமும்.”


  குலகுருவுக்குக் குதூகலம் கொப்பளித்தது!
  “குமாரத்தியை மணம் செய் ஸ்ரீநிவாசனுக்கு!


  வம்சம் அடைந்துவிடும் நற்கதியினை;
  அம்சம் ஸ்ரீநிவாசன் மஹாவிஷ்ணுவின்.


  வைகுந்தவாசனை அடைவதற்கு மருமகனாக,
  வெகுபுண்ணியம் செய்தாய் முற்பிறவியில்!


  நிலத்தில் கிடைத்தவள் நிலமகளே அல்லவா?
  நிலமகள் மணாளன் அலைகடல் துயில்பவன்!”


  பிரதானிகள் ஏற்றனர் இதனை மனமார.
  பிரபுக்களும் ஏற்றனர் இதனை மனமார.


  ஆடிப் பாடத் தொடங்கினாள் பத்மாவதி!
  ஆனந்த வெள்ளத்தில் வகுள மாலிகை.


  நிலவியது மகிழ்ச்சி அந்த அரண்மனையில்;
  நிலவியது அமைதி பெற்றோரின் மனத்தில்.


  பொன்னும், மணியும் அள்ளித் தந்தாள் அரசி.
  “பின்னர் வரும் திருமணவோலை!” என்றாள்.


  ஆசிகள் தந்தாள் பத்மாவதியை முத்தமிட்டு;
  ஆவலுடன் காத்திருப்பான் ஸ்ரீநிவாசன் என;


  அவசரமாகத் திரும்பினாள் வகுள மாலிகை;
  அரசனும், அரசியும் வந்து வழியனுப்பினர்.


  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


  #15b. The wedding alliance

  The king AakAsa RAjan was very pleased to hear of these developments . He told his queen, “Remember my dear, our PadmAvati is the amsam of MahA Lakshmi and she had decided to marry none other than MahA Vishnu? We will consult our kulaguru sage Sukar and then give our consent for this alliance. ”


  He sent for his younger brother ThoNdaimAn and told him of the recent events in great detail. Kulaguru Sage Sukar was overwhelmed with happiness to hear of the good news. He told the king AakAsa RAjan,


  “Get you princess wedded to SrinivAsan. He is the asmam of MahA Vishnu. You must have done a lot of good deeds in your past birth to get Sree VishNu Himself as your dear son in law.


  The child who was found while ploughing the earth is Lakshmi Devi Herself. Her consort can not be anyone other than VishNu. ” The courtiers and the prabhus also consented for this alliance.

  PadmAvati began to sing and dance as was her custom before she got bitten by the love bug. VaguLa MAlikA was very happy that her mission had been successful. There was happiness in the palace and peace in the mind of the king and the queen.

  DharaNi Devi presented VaguLa MAlikA with gold and gemstones. She promised to send the marriage invite later on. VaguLa MAlikA embraced, kissed and blessed PadmAvati.


  She knew that SrinivAsan would be waiting for her return very anxiously. She took leave of the king and the queen and they came out with her to see her off.

 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #8744
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  DEVI BHAAGAVATAM - SKANDA 6

  6#13b. நரமேத யாகம் (2)

  நரமேத யாகத்தைத் தொடங்கினான் அரிச்சந்திரன்;
  வருகை தந்தார் யாகசாலைக்கு விஸ்வாமித்திரர்.


  கண்டார் யூபஸ்தம்பத்தில் சுனஸ்சேபனை பசுவாக;
  கொண்டார் அளவிறந்த இரக்கம் அச்சிறுவன் மீது!


  “கொல்லாதே அரிச்சந்திரா இச்சிறு குழந்தையை!
  நல்லது நடக்கும் இவனை விடுதலை செய்தால்!


  மக்களைக் காப்பதே மன்னனின் கடமை;
  மக்களை மாய்ப்பது அல்ல என்றறிவாய்.


  பாவத்தால் வந்த வியாதி தீர்ந்து விடுமா – நீ
  பாவத்தை மேலும் மேலும் செய்வதால் கூறு?


  தேஹத்தின் மீது ஆசை கொண்டாய் மன்னா நீ!
  தேஹத்தின் மீது ஆசை கொண்டான் இவனும்!”


  கருத்தில் கொள்ளவில்லை அரிச்சந்திரன்
  உருக்கமாக முனிவர் கூறிய அறிவுரைகளை.


  சிறுவனிடம் சென்றார் விஸ்வாமித்திர முனிவர்;
  “பெறுவாய் விடுதலை இதை உச்சரித்தால்!” என்று


  உபதேசித்தார் வருணனின் மந்திரத்தை அவனுக்கு;
  உச்சரித்தான் உரத்த குரலில் சிறுவன் சுனஸ்சேபன்.


  அழுதான், தொழுதான் அவன் வருணதேவனை;
  அழுத குரல் கரைத்து விடும் எவர் மனத்தையும்.


  விரைந்து வந்தான் வருணதேவன் யாகசாலைக்கு;
  விடுவித்தான் சுனஸ்சேபனை ஸ்தம்பத்திலிருந்து.


  நீக்கி விட்டான் அரிச்சந்திரனின் ஜலோதர நோயை;
  நீங்கிச் சென்று விட்டான் தனது இருப்பிடத்துக்கு.


  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


  6#13b. Narameda yAgam (2)


  King Harischandra commenced performing the Narameda yAgam. Suddenly Sage ViswAmitra visited the yAga sAla. He was shocked to see the young brahmin boy Sunascheban tied to the yoopa sthambam in the place of the sacrificial animal. He was moved with sympathy towards that child.


  He spoke to King Harischandran, “Release this child immediately. All will be well with you. As a king your duty is to protect your citizens and not sacrifice them in this manner. Your disease incurred by committing a sin will not be cured by committing more and more sins. You want to save your life and live longer. In the same manner this boy also wants to save his life and live longer.”


  But King Harischandra would not listen to the good advice given by the sage ViswAmitra.

  Now the sage walked to the boy and told him,”I will teach you VaruNa japa mantra. Keep chanting it as loudly and clearly as you can my dear child!”

  He taught the boy the VaruNa mantra. The boy was shedding copious tears but he chanted the VaruNa mantra amidst his tears and sobs. The scene was so pathetic that the heart of every onlooker got melted by it.


  VaruNa appeared in the YAga sAla. He untied and freed the boy from the sthambam. He also cured the Jalodaram of the king Harischandra and vanished from there. 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #8745
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

  14d. நாரதர் தொண்டு

  விடாமல் சஞ்சரிக்கும் நாரதர் கண்ணுற்றார்;
  உடன் சென்று வியாழனிடம் தெரிவித்தார்.

  துணுக்குற்ற குலகுருவும் சென்று குஹன்
  கணுக்கால்களைப் பற்றி இறைஞ்சினார்.

  “அவுணருக்கு அஞ்சிய தேவர்கோன்
  தவம் புரிந்தான் மேருமலையின் மேல்.

  உம்மை இனம் கண்டு கொள்ளாத தேவர்கள்
  தம்மையே அழித்துக் கொண்டனர் சமரில்.

  அன்னை தந்தை பிள்ளைக்கு அருளாவிடில்
  பின் எவர் அருள் செய்வர் எளியவருக்கு?

  அழியுங்கள் அவுணர்களை! உம் ஆற்றலுக்கு
  அழகு சேர்க்கும் செயல் அதுவே அறிவீர் !

  பிழை பொறுத்து அருள வேண்டும் – இவர்
  பிழைத்து எழ அருள வேண்டும் குமரா!”

  குலகுருவின் சொற்களுக்கு இணங்கினான்
  மலர்முக அழகன் சரவணபவன் முருகன்.

  யாவரும் உடன் உயிர்த்தெழும் வண்ணம்
  தாமதம் இன்றித் தன் திருவருள் செய்தான்.

  எழுந்த தேவர்கள் உணர்ந்து கொண்டனர் தம்
  பிழைகளையும், மற்றும் அறிவின்மையையும்!

  விழுந்து வணங்கினர் தேவர்கள் முருகனை!
  குழந்தை வடிவாகி நகைத்தபடி நின்றவனை!

  உருவில் சிறியவனாயினும் அழகன் முருகன்
  அருளில் பெரியவன் என அவர்கள் அறிந்தனர்.

  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

  1#14d. NAARADA’S HELP.


  NArada – The Deva rushi always on the move – saw these unhappy events. He rushed to report them to Bruhaspati. The Deva guru was upset with this piece of news. He rushed to the spot and prayed to Murugan.

  “Soorapadman and his Asuras had driven out Indra and all his Devas out of Swarggam. Indra did penance on mount Meru. Without recognizing you they have waged a battle against you and got killed foolishly.

  Killing the Devas does not befit your valor. You must put an end to the Asuras. Please pardon these Devas and bring them back to life.” Murugan did as was requested by Bruhaspathi. All the Devas woke up as if from deep sleep.


 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #8746
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  SRI VENKATESA PURAANAM

  16. சுகரின் செய்தி

  நாட்குறிப்புக்களைக் கொண்டு ஆராய்ந்து
  நாளைத் தேர்வு செய்தனர் திருமணத்துக்கு.


  மஞ்சள் தடவிய ஓலையில் எழுதினார்
  மணப் பத்திரிக்கையை குலகுரு சுகர்.


  வைத்தனர் திருமண ஓலையை பவ்யமாக
  சந்தனப் பேழையில் அரசனும், அரசியும்.


  மங்கல வாத்தியம் முழங்க ஓலையுடன்
  அங்கிருந்து சென்றார் பல்லக்கில் சுகர்.


  வகுள மாலிகையைக் கண்டவுடன் அவளை
  வரவேற்றான் ஸ்ரீனிவாசன் ஆர்வத்தோடு வந்து.


  “விருப்பம் நிறைவேறியது உன் மனம் போல.
  திருமணத்துக்குக் கிடைத்து விட்டது சம்மதம்.


  விவரித்தாள் முதல் நாள் நடந்த நிகழ்வுகளை.
  அவளருகே அமர்ந்து ரசித்தான் ஸ்ரீனிவாசன்.


  அகத்தியர் ஆசிரமத்தில் ஆலயம் சென்றது;
  அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டது;


  அரசி தரணி தேவியை சந்தித்துப் பேசியது;
  அரசனிடம் பேசி அவன் அனுமதி பெற்றது;


  பிரபுக்கள் மனம் மகிழ்ந்து சம்மதம் தந்தது ;
  பிரதானிகள் மனம் மகிழ்ந்து சம்மதித்தது;


  குறத்தி ஒருத்தி வந்து சொன்ன செய்திகள்;
  குடி மக்களிடம் காணப்பட்ட மன மகிழ்ச்சி;


  நகரத்தின் எல்லைவரை வந்து தன்னை
  நட்புடன் வழியனுப்பிய அரசன், அரசியர்;


  வகுள மாலிகையைப் பேசச் சொல்லி விட்டு
  வெகு சுவாரசியமாகக் கேட்டான் ஸ்ரீனிவாசன்.


  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


  #16. The marriage invite

  Sage Sukar consulted an almanac and selected an auspicious day for the wedding. He wrote the wedding invitation on a palm leaf smeared with the auspicious turmeric paste.


  The king and the Queen placed it inside a small sandal wood box and handed it over to sage Sukar, to be taken and handed over to VaguLa MAlikA and SrinivAsan. The sage left in his palanquin to SeshAchalam.


  SrinivAsan was happy to see VaguLa MAlikA come back with a beaming face. He ran to receive her and asked her one hundred questions. She related the events of the previous day to him in great detail.


  Her attending the Siva AarAdhana in the ashram of sage Agasthya; her meeting with the queen; getting the consent of the king, the kulaguru and the courtiers; the fortune teller who had helped her in her mission; the kindness and respect shown by the king and the queen who accompanied her to some distance to see her off etc.


  SrinivAsan sat by her side and listened to all these with a great interest.

 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #8747
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  DEVI BHAAGAVATAM - SKANDA 6

  6#13c. பறவைகளின் யுத்தம் (1)

  மறக்கவில்லை விஸ்வாமித்திரர் – தன் சொல்லை
  மதிக்கவில்லை அரிச்சந்திரன் என்ற உண்மையை.


  எதிர் நோக்கி இருந்தார் பழி வாங்குவதற்கு;
  எதிர் நோக்கி இருந்த சந்தர்ப்பம் வாய்த்தது.


  வேட்டைக்கு வந்த அரிச்சந்திர மன்னனிடம்
  கேட்டுப் பெற்றார் அவன் நாடு, நகரங்களை.


  அந்தணர் வடிவைத் துறந்து விட்டுத் தன்னுடைய
  சொந்த வடிவைக் காட்டினர் பின்பு அவனுக்கு.


  கோபம் கொண்டார் இதைக் கண்ட வசிஷ்டர்;
  சாபம் தந்தார் அவர் விஸ்வாமித்திர முனிவருக்கு.


  “கெட்ட எண்ணத்துடன் காத்துக் கொண்டிருந்தீர்
  கேட்டு மொத்த சொத்தையும் விழுங்குவதற்கு.


  கொக்கு மீனுக்காகக் காத்திருப்பது போல – எனவே
  கொக்காகக் கடவீர் நீர் விஸ்வாமித்திரரே ! என;


  கோபம் பொது சொத்தாயிற்றே முனிவர்களுக்கு;
  கோபம் வந்தது இப்போது விஸ்வாமித்திரருக்கு.


  சாபம் தந்தார் தன் பங்குக்குத் தனக்குக் கொடிய
  சாபம் தந்த வசிஷ்ட முனிவருக்கு விஸ்வாமித்திரர்.


  “இருப்பேன் நான் கொக்காக எத்தனை காலமோ
  இருப்பீர் நீர் ஆடிப் பறவையாக அத்தனை காலம்!”


  பிறந்தனர் இருவரும் பிற்பாடு இரு பறவைகளாக;
  பிறந்தனர் இருவரும் மானசரோவரில் ஒரு போல.


  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


  6#13c. The war between two birds


  ViswAmitra neither forgot nor forgave King Harischandra for disobeying him and ignoring his good suggestions. He was waiting for an opportunity to punish the foolish king. He got a wonderful opportunity soon enough.


  King Harischandra went th the forest on a hunting expedition. A poor old brahmin appeared there and begged for some gifts from the King. The old brahmin – who was ViswAmitra in disguise – manipulated the king so as to make him donate his entire kingdom to the Brahmin. Later on he revealed his true form to the king.


  Vasishta became very angry when he learned about this treachery. He cursed ViswAmitra, “You were waiting for an opportunity to ruin King Harischandra like a crane waiting to catch a big fat fish! May you be born as a crane!”


  Now ViswAmitra became angry and laid a counter curse on Vasishta, “May you be born as an Aadi bird and live as the bird as long as long as I live as a crane.”


  The two rushis were born as these two birds – sworn to enmity, in the same water body MAnasarovar.


 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #8748
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

  14e. விஸ்வரூப தரிசனம்

  “சிறுவன் இவன் என எண்ணி என்னுடன்
  புரிந்தீர் யுத்தம் முன்பின் ஆலோசியாமல்!


  பெருமைகளை உணரச் செய்வேன் நான்!”
  திருவாய் மலர்ந்து அருளினான் குமரன்.


  எட்டு திசைகள், பதினான்கு லோகங்கள்;
  எட்டு மலைகள், ஏழு கடல்கள், தீவுகள்;


  அனைத்து உலகங்களையும், உயிர்களையும்,
  நினைக்க ஒண்ணாத பேருருவில் காட்டினான்.


  திருவடிகள் நின்றதோ பாதாள உலகில்!
  திருத் தோள்களோ திக்குகளின் முடிவில்!


  திருமுடிகள் நிறைத்தன விண்வெளியை!
  திருக்கண்களோ ஞாயிறு, திங்கள், அக்னி!


  மறைகள் விளங்கின திரு வாய்களாக;
  அறிவுகள் மிளிர்ந்தன திருக் காதுகளாக.


  விண்ணவர் விளங்கினர் உடலின் மீது;
  அண்ணலே ஆத்மா, அன்னையே உள்ளம்;


  உலகங்களும், உலகின் உயிரினங்களும்,
  இலங்கின அப்பேருருவின் திருவடிவில்;


  “அவுணர்களைக் கொன்று உம் அடியோம்
  தேவர்களைக் காத்திடும்” என இறைஞ்சினர்.


  திருவடிகளைத் தொழ விரும்பிய தேவர்கள்
  அரியணையில் அவனை அமர்த்த விழைந்தனர்.


  கந்த மலை என்னும் அற்புத வெற்பில்
  கந்தனுக்கு அமைத்தனர் திருக் கோவில்;


  அரிய கோவிலின் உள்ளே அமைத்தனர்
  அரியணை ஒன்று கந்தன் அமருவதற்கு.


  கயிலை திரும்பிய கந்தன் கண்டான் – நூறு
  ஆயிரத்து ஒன்பதின்மரைத் தன் படையில்.


  வியர்வையில் தோன்றிய நூறாயிரம் பேர்;
  நவ சக்தி குமாரார்கள் ஒன்பது பேர்களுடன்.


  வெல்வதற்கு அரிய பெரும் போர் வீரர்கள்,
  வெல்வதற்கு அரிய படைக் கலங்களுடன் .


  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


  1#14e. VISWAROOPA DHARSHAN.


  Murugan spoke to them,”You failed to recognize me and thought I was a mere child! I shall reveal my true nature and my true form now”. He assumed His viswaroopam.


  All the eight directions, the fourteen worlds, the eight mountains, the seven seas, the seven islands and all the living things were seen on his immense form now.


  His feet were at PAtAla. His shoulders extended up to the end of the directions. His numerous heads were seen spread over the sky. The Sun, the Moon and The Fire were His three eyes.


  The Vedas were His mouths. Intellect were His ears. All the Devas were seen in His body. Siva was His soul and Uma His mind. The entire creation was seen on His Viswaroopam.


  The Devas realized the true power of Murugan and prostrated to Him begging to be saved. They wanted to worship Him with due respect. They built a temple in one of the mountains. Murugan was made to sit on a throne and they worshiped Him well.


  Then they all went back and Murugan went back to Kailash. He was happy to see his valiant army of a hundred thousand and nine great warriors – armed to their teeth.
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #8749
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  SRI VENKATESA PURAANAM

  17a. பணம் தேவை!

  பல்லக்குத் தூக்கிகளின் அரவம் கேட்டது;
  பல்லக்கில் வருவது யாராக இருக்கும் ?


  நெருங்கி அருகில் வந்து நின்றது பல்லக்கு;
  இறங்கினார் சுகமுனிவர் பல்லக்கிலிருந்து.


  மேனி சிலிர்க்கத் தொழுது வணங்கிய பின்,
  ஸ்ரீனிவாசனிடம் சமர்ப்பித்தார் பேழையை.


  “பத்மாவதியின் மணம் பற்றிப் பேச வேண்டும்.”
  உத்தம முனிவரை வரவேற்றான் ஸ்ரீனிவாசன்.


  பாத பூஜை செய்தான் முனிவருக்கு – பின்னர்
  ஆதரவுடன் அழைத்துச் சென்றான் புற்றுக்கு.


  மண நாள் பூரண சம்மதமே மணமகனுக்கு!
  மன மகிழ்வோடு திரும்பினார் சுகர் மறுநாள்.


  “பெரிய இடத்தில் நிச்சயித்துள்ளோம் பெண்ணை.
  சரியான அந்தஸ்துடன் செல்ல வேண்டும் அங்கு!”


  ஆதிசேஷனையும், பிரம்மனையும் நினைத்ததும்
  ஆதிசேஷனும், பிரம்மனும் வந்து தோன்றினார்கள்.


  “சித்திரை சுத்தத் திரயோதசியில் என் திருமணம்;
  உத்தம மணப்பெண் இளவரசி பத்மாவதி தேவி.


  முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள்
  தப்பாமல் வரவேண்டும் என் திருமணம் காண.


  துரிதமாகச் செயல் படவேண்டும் நீங்கள்,
  விரைந்து மணநாள் நெருங்கி வருவதால்!”


  “கூட்டம் சேர்ப்பது எங்கள் வேலை – ஆனால்
  வாட்டம் அடைகிறோம் பணம் இல்லாததால்!


  லக்ஷ்மி இல்லாத இடத்தைச் செல்வம் – அ
  லட்சியம் செய்வது நாம் அறிந்தது தானே!”


  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


  #17a. “We need money!”


  The noise of a palanquin coming nearer was heard clearly. SrinivAsan and VaguLa MAlikA wondered who was arriving there at that time!


  The palanquin stopped near them. Sage Sukar got out of it. He paid his respects to SrinivAsan and gave the sandal wood box containing the wedding invite. “I have to talk to you regarding your wedding with the princess Padmavati.”


  SrinivAsan did pAda pooja for the sage and lead him to his residence in the anthill. The wedding date was agreeable to SrinivAsan and VaguLa MAlikai. Sage Sukar returned to the palace the next day. VaguLa MAlikA told SrinivAsan, “We have chosen a Princess for your bride. We must go to the wedding in a befitting and grand manner.”


  SrinivAsan thought of Brahma and Aadhi seshan and they appeared before him immediately. “My wedding with princess Padmaavati has been fixed to take place on Suddha thrayodasi day, in the month of Chitthirai. All the Devas and rushis must attend the wedding without fail. You must speed up the arrangements as the wedding day is approaching very fast.”


  Adhiseshan and Brahma replied,”We can take care of the arrangements but we need money for the wedding expenses! As we all know, there will be no wealth in a place which Lakshmi Devi has deserted”.
 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 18. #8750
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  DEVI BHAAGAVATAM - SKANDA 6

  6#13d. பறவைகளின் யுத்தம் (2)

  நீங்கவில்லை முன் ஜன்மத்து விரோதம்;
  நீங்கவில்லை முன் ஜன்மத்துக் குரோதம்.


  தாக்கிக் கொண்டனர் கூரிய நகங்களால்;
  தாக்கிக் கொண்டனர் வலிய அலகுகளால்.


  சித்த சுத்தி ஏற்பட்டு இருந்தால் இவ்வாறு
  யுத்தம் செய்வார்களா என சிந்திப்பாய்.”


  “எப்படி விமோசனம் அடைந்தனர் இருவரும்?
  எப்போது விமோசனம் அடைந்தனர் இருவரும்?”


  “வருந்தினான் மனம் பிரமன் இதைக் கண்டதும்;
  வசிஷ்டர் பிரமதேவனின் ஒரு மகன் அல்லவா?”


  வந்தான் பிரமன் தேவர்களுடன் சேர்ந்து கொண்டு;
  நொந்தான் ரத்தம் வழியும் இரு பறவைகளைக் கண்டு!


  செய்வித்தான் சமாதானம் இரு முனிவர்களுக்கும்;
  செய்வித்தான் சாப நிவர்த்தி இரு முனிவர்களுக்கும்.


  நண்பர்களாக வாழச் சொன்னான் அந்த இருவரையும்;
  பண்போடு பழகச் சொன்னான் அவர்கள் இருவரையும்.


  பயன் தரா தானம், தவம், தீர்த்த யாத்திரைகள் முதலியன
  கயமையின்றி மனம் சித்த சுத்தி பெற்று விளங்குவதற்கு.


  அடக்க வேண்டும் ஐம்புலன்களையும் நன்றாக – பின்
  அடைக்கலம் புகவேண்டும் அன்னை சக்திதேவியிடம்.


  சித்த சுத்தி தருவாள் அன்னை பராசக்தி நமக்கு;
  நித்தமும் தருவாள் நல்ல எண்ண ஓட்டங்களை”.


  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


  6#13d. The war between the two birds (2)


  “These two birds did not forget the enmity of their previous birth. They did not forgo their anger for each other. They attacked each other fiercely with their claws and beaks thereby causing severe bleeding wounds.


  If they had attained purity of mind by living in the holy MaAnasarovar they would not have fought in this manner. ” VyAsa told King Janamejayan.


  “How did they both get liberated from the curse? When did they get liberated from the curse?” King Janamejayan fired these questions on sage VyAsa.


  Sage VyAsa replied, ” Brahma became very sad to watch these fighting birds. Vasishta was one of the sons of Brahma. So Brahma went to these two fighting birds along with the other Devas.


  Brahma advised them to forget their differences of opinion. He told them to forgive each other and live as gentlemen friends in the future.


  As you can see, living in a holy place or visiting it or doing good karmas like dAnam and tapas will not produce purity of the mind.


  To attain purity of the mind one must attain perfect control over his five senses. He must surrender to the lotus feet of Devi. She will make our hearts pure by giving us pure thoughts and a clean and clear thinking process.” 19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •