Tamil Brahmins
Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by disabling your ad blocker.
Alternatively, consider donating to keep the site up. Donations are accepted via PayPal & via NEFT. Details on how to donate can be found at here
Page 1015 of 1015 FirstFirst ... 15515915965100510111012101310141015
Results 10,141 to 10,149 of 10149
 1. #10141
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  65,009
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  சிந்தனை தந்த இந்திர ஜாலம்

  #041. மாயா விலாசம்

  நர நாராயணர்களாக அவதரித்த இறைவன்,
  வரங்கள் பலவற்றைத் தர விரும்பினாலும்,
  இறைவனின் மாயா விலாசத்தை காணவே,
  மறை முனிவர் மார்க்கண்டேயர் விழைந்தார்.

  வீசும் காற்றாலும், பெய்யும் மழையாலும்,
  வாசம் செய்து வந்த உலகமே மூழ்கிவிட்டது!
  எங்கு நோக்கினும் சுழித்து ஓடும் நீர் தான்;
  எங்குமே எதுவுமே காணப்படவில்லை!

  பத்துக் கோடி ஆண்டுகள் தனிமையிலே
  ஒற்றையாகச் சுழன்றவர் பிறகு கண்டார்,
  ஆல் இலை மேல் ஒரு அழகிய குழந்தையை;
  கால் விரலை வாயில் இட்டுச் சுவைப்பவனை!

  தழுவ விரும்பி அதன் அருகே சென்றவரை,
  முழுதுமாக கவர்ந்தது உள் மூச்சுக் காற்று.
  முழு உலகமும் கண்டார் குழந்தையினுள்!
  முழுதுமாய் வெளி வந்தார் வெளி மூச்சில்.

  மீண்டும் குழந்தையைத் தழுவ முயன்றவர்,
  மீண்டும் தன் ஆசிரமத்திலேயே இருந்தார்!
  காற்று, வெள்ளம், மேகம், மழை, சுழல்கள்,
  பார்த்த எல்லாம் மாயா விலாசம் அல்லவா?

  மாயையின் சக்தியை வெல்வது கடினம்.
  மாலவன் பூரண அருள் இருந்தால் அன்றி
  மாயையை வெல்லவே முடியாது என்று
  மாதவனே தன் கீதையில் உரைக்கின்றான்!

  வாழ்க வளமுடன்,
  விசாலாக்ஷி ரமணி.

  #041. MAYA VILASAM.

  God wanted to confer many boons on MArkaNdEya maharishi but he wanted to witness Lord’s mAyA vilAsam (power of delusion) more than anything else.

  There came a torrential rain resulting in a heavy flood. MArkaNdEya maharishi alone survived the swirling flood which had destroyed the entire world. He floated on the water for one hundred million years – all by himself!

  He saw a beautiful baby floating on a Bunyan leaf, at a distance, in the water. He wanted to embrace the divine baby. He went near it and got drawn into the child’s body by the inhalation of the child.

  He entered the baby’s body along with the flow of air and saw the whole creation inside the baby. He was thrown out by the outgoing breath. Again he wanted to embrace the baby and went near it.

  At that time he found himself in his ashram safe and dry as he was before. If such is the power of mAyA even on maharishis who were enlightened, what would it be on us the mere mortals – puny, powerless and completely ignorant?

 2. #10142
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  65,009
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  சிந்தனை தந்த இந்திர ஜாலம்

  #042. பக்திப் பரவசம்

  சமாதியில் இருந்த கௌராங்க சுவாமிகள்
  சமுத்திரத்தில் தவறி விழுந்துவிட்டபோது,
  செம்படவர்களில் சிலர் வலை ஒன்றை வீசி,
  சுவாமிகளைக் காப்பற்றினர் நீரிலிருந்து.

  சுவாமிகளைக் காப்பாற்றும்போது, சிறிது
  சரீர சம்பந்தம் அவர்களுக்கும் ஏற்படவே,
  உன்மத்தம் தலைக்கு ஏறியவர்கள் போல
  உலவத் தொடங்கிவிட்டனர், பரவசத்துடன்.

  “ஹரி” நாமத்தைப் பாடிக்கொண்டும் மேலும்
  “ஹரி ஹரி” என்று ஆடிக்கொண்டு திரிபவரை,
  சரி செய்ய முயன்றும், முடியாமல் போகவே,
  திரிபவரின் உறவினர்கள், சுவாமிகளிடமே

  வந்து சரணடைந்தனர், ஒவ்வொருவராக!
  பந்துக்களின் துயரைக் கண்டவர் கூறினார்,
  “சரி செய்வதற்கு ஒரு வழிதான் உண்டு!
  புரோஹிதர் வீட்டுச் சோற்றை ஊட்டுங்கள்.”

  என்ன அதிசயம் இது! என்ன மாயம் இது!
  அன்னத்தை வாயில் இட்டவுடனேயே,
  பரவச நிலை நீங்கிய அச்செம்படவர்கள்,
  பழையபடியே மாறி விட்டனர், பாருங்கள்!

  பரவசம் அடையத் தேவை ஒரு
  உத்தம பக்தரின் சரீர சம்பந்தம்.
  பரவசம் நீங்கவோ, புரோஹிதர்
  பத்தினி அளித்த அன்னமே போதும்!

  வாழ்க வளமுடன்,
  விசாலாக்ஷி ரமணி

  #042. The ecstacy of devotion

  One Saint named Gowranga accidentally fell into the sea when he was in deep samAdhi state (oneness with God). He was saved by the fishermen who threw a net and dragged him out of water to safety.

  These fishermen later started to sing and dance with ecstasy and devotion – due to their brief bodycontact with the saint, while saving him from the sea.

  Their relatives tried every means known to them to bring those men back to normalcy- but without any success.

  They went back to Gowranga for advice. He told them to feed those dancing men with the food brought from the house of a prOhith (a priest).

  Those men were brought back to normalcy when they were fed with the food cooked by the wives of the prOhiths.

  For gaining ecstasy, one needs the bodycontact of a holy man. To regain normalcy he had to merely eat the food cooked in the house of a prOhith. Such was the divinity and supremacy of a prOhith!

 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #10143
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  65,009
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  சிந்தனை தந்த இந்திர ஜாலம்

  #043. வெள்ளாட்டுக் குட்டி

  ஆனி மாதத்தில் அன்னையின் அருகே,
  அச்சம் என்பதே இன்றி, மிக உல்லாசமாகத்

  துள்ளி விளையாடிய வெள்ளாட்டுக் குட்டி,
  தள்ளி நின்ற அன்னையிடம் சொன்னது.

  “ராசலீலை புஷ்பப் பண்டிகையின் போது,
  ராச புஷ்பங்களை நான் நிறைய உண்பேன்!”

  ”கண்ணே! அது நிறைவேறுமா – உந்தன்
  எண்ணம் போல என்று நான் அறியேன்!

  ராசலீலைக்கு முன்னரே நமக்கு
  ராசி இல்லாத காலம் தொடங்கும்!

  புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் நம்மை
  துர்கா பூஜையில் பலி இட்டுவிடலாம்.

  தப்பியே பிழைத்தாலும் அடுத்து வரும்,
  தப்ப முடியாத அந்த ஜகதாத்ரி பூஜை.

  ஆடுகள் அனைத்தையுமே பலிகொள்ளும்
  அதிலும் ஒருவேளை தப்பிப் பிழைத்தால்,

  ராஸ புஷ்பப் பண்டிகையை நாம்,
  ரசமாகக் கொண்டாடலாம் கண்ணே!”

  “நித்ய கண்டம், பூரண ஆயுசு” என்பர்!
  நினைவில் கொள்வோம் இவ்வுண்மையை!

  வாழ்க வளமுடன்,
  விசாலாக்ஷி ரமணி

  #043. A little lamb

  A little lamb was hopping carefree near its mother and is making plans as to how it would eat the various flowers during the RAsa Pushpam festival.

  Its mother wished that it should become a reality but she could never be very sure. She knew that all the lambs would be sacrificed as offerings to Durga DEvi, during DasarA.

  She elaborated on the various perils awaiting them during the DasarA festivals. If by God’s grace they are left alive and did not get sacrificed either in DurgA poojA or in the JagadhAthri festival, they could eat as much flowers as they wanted, during the rAsa pushpam festival!

  It is better to remember the old and wise adage ‘Nithya kaNdam Poorna Ayusu’ meaning “Life is full of perils and yet one may live a long life”.

 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #10144
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  65,009
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  சிந்தனை தந்த இந்திர ஜாலம்

  #044. பரிஹாரம்


  அழகிய நந்தவனத்தை உருவாக்கி,
  அதைச் செழிப்பாக வளர்த்தான்;
  அந்தணன் ஒருவன், தன் வேலை
  ஆட்களின் கடின உழைப்பினாலே.

  ஏமாந்த நேரம் தோட்டதினுள்ளே
  புகுந்து விட்ட கறவைப் பசு ஒன்று,
  மேய்ந்து சர்வ நாசமாக்கி விட்டது
  பூந்தோட்டம் மொத்தத்தையுமே!

  கோபத்தில் கண் மண் தெரியாமல்
  கோரமாக அந்தணன் அடித்ததனால்,
  விழுந்து சுருண்டு தன் இன்னுயிரை
  இழந்து விட்டது அந்தப் பசு பாவம்!

  பசுவைக் கொன்ற பாவம் தன் மேல்
  படர்ந்த போதிலும் அந்த அந்தணன்,
  பசுவைக் கொன்றது தன் கையே என்றும்,
  கையின் தேவதை இந்திரனே என்றும்,

  மொத்தப் பழியையும், பாவத்தையும்,
  தத்தம் செய்து விட்டான் இந்திரனுக்கு.
  தாத்தா வேடம் அணிந்து வந்த இந்திரன்
  தள்ளாடியபடியே அவனிடம் சென்றான்.

  ” மிகவும் அழகிய பூந்தோட்டம்” என
  தள்ளாடும் தாத்தா புகழவே, அந்தணன்
  “மிகவும் கடின முயற்சியின் பரிசு” எனத்
  தன்னைத் தானே மெச்சிக் கொண்டான்.

  “மரங்களும், செடிகளும்கூட அழகான
  வரிசைகளில் அமைந்துள்ளனவே?”
  “மரங்கள், செடிகளின் வரிசையும் கூட
  வரை வகுத்துத் தந்தது நான் தானே”

  ‘பாதைகளும் நூல் பிடித்தாற்போல
  பார்க்கவே அருமையாக உள்ளனவே!”
  “பாதைகளும் கூட என் திட்டமே!” எனப்
  பரவசமாகச் சொன்னான் அந்தணன்.

  “வேறு ஆட்கள் செய்தவற்றுக்கெல்லாம்
  பேரும் புகழும் நீ ஏற்றுக் கொள்வாய்.
  பசுவைக் கொன்று விட்ட பழி மட்டும்
  பாவம் அந்த இந்திரனையே சாருமா?”

  வெட்கித் தலை குனிந்த அந்தணன்
  வெட்டிப் பேச்சுக்களை விட்டு விட்டு,
  பசுவைக் கொன்ற தன் தோஷத்துக்குப்
  பரிஹாரம் ஒன்றைத் தேட முயன்றான்.

  வாழ்க வளமுடன்,
  விசாலாக்ஷி ரமணி

  #044. ParihAram (The Remedy )

  A brahmin owned a beautiful garden and took the credit for maintaining it – even though all the hard word was done by his gardeners.

  He killed a cow in mad anger when it ruined his garden but he shifts the blame to Indra, who is the God of man’s hands. Indra came disguised as an old man and made the brahmin realize his folly.

  He told the brahmin, “You take the credit for maintaining the garden, for planting all the trees in beautiful rows and for making beautiful paths to walk through in the garden – even though all these hard jobs have been done by the gardeners.

  You have killed a cow with your own hands but you want to shift the burden of the sin to Indra’s shoulders. Why?”

  The brahmin realized his folly, hung his head in shame and tried to find parihAram to get out of the sin he had committed – even though killing the cow was purely unintentional.

 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #10145
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  65,009
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  சிந்தனை தந்த இந்திர ஜாலம்

  #045. ஈஸ்வரன்

  “உலகில் உள்ள பொருட்கள் அனைத்துமே
  உண்மையில் ஈஸ்வரனின் ஸ்வரூபங்களே!”
  உபதேசித்தார் பெரும் குரு நாதர் ஒருவர்;
  உபதேசம் பெற்றான் அவருடைய சீடன்.


  எல்லோரும் ஈஸ்வரர்களே என்பதால்
  எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அவன்
  செல்லும்போது எதிரே வந்தான் ஒரு
  பொல்லாத யானை மேல் அமர்ந்த பாகன்.


  “விலகுங்கள்! விலகுங்கள்!” என்று பாகன்
  விலாப் புடைக்கக் கத்திய போதிலும்;
  விலகவில்லை கொஞ்சமும் அந்தச் சீடன்
  விரும்பி யானையின் அருகிலேயே வந்தான்!


  “நானும் ஈஸ்வரன், யானையும் ஈஸ்வரன்,
  நான் ஏன் அஞ்சிப் பாதை விலக வேண்டும்?”
  நடந்து வந்த யானை துதிக்கையால் தூக்கி.
  நாலு வட்டங்கள் சுழற்றி வீசிச் சென்றது!


  நல்ல வேளையாக உயிர் போகவில்லை!
  நல்ல காயங்களுடனே தப்பிவிட்டான்.
  நடந்ததைத் தன் குருவிடம் சொல்லவே,
  நகைக்கலானார் அவர் விழுந்து விழுந்து!


  “யானையும் ஈஸ்வரன் தான்! அதுவும் சரி.
  நீயும் ஈஸ்வரன்தான் ஒப்புக் கொள்கின்றேன்.
  யானையின் மேல் அமர்ந்த இன்னொரு ஈஸ்வரன்
  நீங்கிச் செல்லும்படிச் சொன்னது கேட்கவில்லையா ?”


  சொற்களின் பொருளை அறிவதால் மட்டும்
  சொல்லப்பட்ட கருத்துக்கள் புரிந்து விடாது.
  கருத்தினைப் புரிந்து கொண்டால் மட்டுமே
  கற்றதன் பயன் நமக்குத் தப்பாது கிடைக்கும்.


  வாழ்க வளமுடன்,
  விசாலாக்ஷி ரமணி


  #045. All are Eshwars!


  A man learned from his Guru that all the things we see are forms of God. He became very happy that he as well as all the others were forms of Gods or all were Eshwars.


  While returning home, he came across an angry elephant. The mahout warned him to keep away but the man would not listen to him. He thinks to himself, “I am an Eshwar and the elephant is another Eshwar. Why would one Eshwar harm another Eshwar?”


  Foolishly he went near the elephant, ignoring the warnings of the mahout. He got lifted, swirled round and thrown away by the angry elephant.


  He escaped with many injuries and became very angry. His Guru told him that even though he and the elephant were both Eshwars, so was the mahout who warned everyone to keep away from the angry elephant!


  We should not take the words at their face value, but should realize the real message being conveyed by those words.

 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #10146
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  65,009
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  சிந்தனை தந்த இந்திர ஜாலம்

  #046. கனியாத பக்தி

  “ஹரியும் சிவனும் ஒண்ணு ; இதை
  அறியாதவன் வாயில் மண்ணு!”
  என்று கூறுவார் முன்னோர்கள்;
  என்றாலும் சிலர் கேட்பதில்லை.

  கனியாத பக்தி உடைய ஒருவன்,
  தனியாக சிவபிரானை மட்டுமே
  கனிவோடு தொழுது வந்ததான்;
  பணியான் வேறொரு கடவுளை.

  ஒரு நாள் சிவனே நேரில் தோன்றி
  “ஒன்றே தெய்வம் என்றறியாயோ?”
  என்ற போதிலும் மீண்டும் அவன்
  எந்தக் கடவுளையும் வணங்கவில்லை.

  சங்கர நாராயணனாய் வந்தபோதும்,
  சங்கரனை மட்டுமே வணங்கினான்;
  ஹரியை விடுத்து விட்டான் அவன்;
  ஹரனாலும் மாற்ற முடியவில்லை.

  தீவிர பக்தியும், மாறாத வெறுப்பும்,
  தூண்டிவிட்டது மற்றவர்களையும்!
  “விஷ்ணு! விஷ்ணு!” என்ற நாமத்தை
  வெறுப்பேற்ற வேண்டிக் கூறலாயினர்.

  காதில் அப்பெயர் விழாமல் இருக்க,
  காதில் இரண்டு மணிகளை அணிந்து,
  காதுகளை ஆட்டிச் சப்தம் செய்தவன்,
  கண்டா கர்ணன் எனப் பெயர் பெற்றான்.

  கண்டா கர்ணனைப் போன்றே பல
  கண்மூடித்தனமான வேறு பக்தர்களும்
  இறைவனிடம் காட்டும் வினோத பக்தியில்,
  வெறுப்பே விருப்பையும்விட அதிகம்!

  வாழ்க வளமுடன்,
  விசாலாக்ஷி ரமணி

  #046. Unripe Devotion.

  A man worshiped only Lord Siva and hated the very name of Lord VishnU. Lord SivA Himself told the man that both He and Hari are one and the same God. The man does not listen even to those words spoken by Lord Siva.

  Then Lord Siva appeared as Sankara nArAyaNan. Even then the man worshiped only the half that was SankarA and ignored the half that was NArAyanA.

  His strange bhakti amused everyone. Just to irritate him people kept calling out the name of VishnU. He wore two bells on his ears and keeps ringing them so that he won’t hear the name of VishnU. His name now gets changed to GantA KarNan.

  There are many people in whose devotion (bhakthi), hatred predominates the love for God. This kind of weird bhakthi is the unripe bhakti!

 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #10147
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  65,009
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  சிந்தனை தந்த இந்திர ஜாலம்

  #047. யார் பொய்யன்?

  கிணற்றிலேயே பிறந்து அந்தக்
  கிணற்றிலேயே வாழ்ந்து வந்தது,
  வெளியேறி ஒரு முறையேனும்
  வெளி உலகைக் காணாத தவளை.

  ஒரு நாள் பெய்த பெரு மழையில்,
  பெருகிய வெள்ளத்துடன் வந்து
  விழுந்தது கிணற்றில், வெளியே
  வெகுநாள் வாழ்ந்த வேறு தவளை.

  அறிமுகம் நன்றாக முடிந்தபின்,
  அதிசய வெளி உலகைப் பற்றி
  அளக்கலானது புதுத் தவளை.
  ஆச்சரியப்பட்ட கிணற்றுத் தவளை,

  “உலகம் எவ்வளவு பெரியது?” என
  உற்சாகத்தோடு அதைக் கேட்டது.
  முன்னங்கால்களை நன்கு விரித்து
  “இவ்வளவு பெரியதா?” என்றது.

  “இதையும் விடப் பெரியது!” என,
  இங்கிருந்து அங்கு தாவிவிட்டு,
  “இவ்வளவு பெரியதா?” என்றது.
  “இன்னும் மிகப் பெரியது” எனவே,

  “இதைவிடப் பெரியதாக ஏதும்
  இருக்கவே முடியாது; அறிவேன்!
  பொய் சொல்லுகின்றாய் நீ;
  போய் விடு இங்கிருந்து, உடனே”

  விரிந்த நோக்கம் இல்லாதவனும்கூட,
  விவரமில்லா இந்தத் தவளை போன்றே,
  தனக்குத் தெரியாததே இல்லையெனத்
  தம்பட்டம் அடித்துக் கொள்கின்றான்!

  வாழ்க வளமுடன்,
  விசாலாக்ஷி ரமணி

  #047. Who is the liar?


  The story is a conversation between the two frogs, one of which had lived in a well all his life and the other which had lived in a big lake.

  During a heavy rain a frog which had lived in a big lake and had seen the wide world got washed into a well.

  The frog dwelling in the well wanted to know where he had come from. The new frog described the lake he had lived in and its surrounding areas.

  The frog in the well asked how big was the world. It opened up both its front legs and asked whether the world was that big?

  Then it jumped from one side of the well to the other and asked whether the world was that big. When the new frog said that the world was much bigger than he could describe or show inside this small well, the frog in the well got annoyed and branded the other frog as a liar!

  Even among people, those who imagine that they know everything – when actually they don’t – tell the others that they are all liars!

 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #10148
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  65,009
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  சிந்தனை தந்த இந்திர ஜாலம்

  #048. சரணாகதி

  ஒரு சிறந்த இறை பக்தனுக்கும்,
  ஒரு சலவைத் தொழிலாளிக்கும்

  வலுத்து விட்ட வாக்குவாதம்
  வம்புச் சண்டையில் முடியவே;

  துவைக்கலானான் அப்பக்தனையும்
  துணிகளைப் போலவே வண்ணான்.

  “கண்ணா! கண்ணா!” என்று பக்தன்
  கதறுவது கேட்டதும் எழுந்தான்,

  ஒய்யாரமாக வைகுண்டத்திலே
  ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவன்.

  நான்கடிகள் நடந்து சென்றவன்,
  மீண்டும் வந்து அமர்ந்துவிடவே,

  நாயகனிடம் விவரம் கேட்டாள்,
  நானிலம் வணங்கும் இலக்குமி.

  “நானே செல்ல வேண்டியதில்லை;
  தானே திருப்பி அடிக்கத் துணிந்தவன்,

  தன்னையே காத்துக் கொள்வான்;
  என்னை எதிர்பார்க்க மாட்டான்!”

  சரணாகதியும் பலன்கள் தரும்
  பூரணமாக இருந்தால் மட்டுமே.


  போராடியவரை பாஞ்சாலிக்குமே
  புடவைகள் தரவில்லையே கண்ணன்!

  வாழ்க வளமுடன்,
  விசாலாக்ஷி ரமணி

  #048. Total Surrender

  A quarrel broke out between a devotee of Lord Krishna and a washerman. At first it started as a verbal fight. But very soon it became a fist fight. Naturally the washerman was better equipped for the exchange of blows than the devotee of Krishna

  The devotee called out for Krishna’s help. God was about to go and help him, but He saw that his devotee had started returning the blows to the washerman.

  God sat back saying to Lakshmi dEvi that His devotee could take care of himself now. God does not come to help us – unless we surrender totally.

  Even to PAnchAli, when she was disrobed by DuschAsanan in the durbar of the wicked DhuryOdhanan, Krishna did not give a sari – until she stopped struggling and surrendered to Him totally.

 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #10149
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  65,009
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  சிந்தனை தந்த இந்திர ஜாலம்

  #049. சிறு தவளை

  வனவாசம் செய்யும்போது ராமன்,
  தனது தாகத்தைத் தணிக்கவேண்டி;

  அம்பையும், வில்லையும் மண்ணில்
  ஆடாமல் பதித்துவிட்டுச் சென்றான்.

  வந்து பார்க்கையில், மண்ணில்
  சிந்தும் ரத்தத்தில் சிறு தவளை.

  வில் ஊடுருவியதால் அதற்கு
  விளைந்து விட்டது விபரீதம்!

  “ஒரு குரல் கொடுத்திருந்தால்
  ஒரு கொலை நிகழ்ந்திராதே!”

  மறுகிய மனத்துடன் ராமன்,
  மரணம் தழுவும் தவளையிடம்

  மனம் வருந்திக் கேட்கவே,
  மறுமொழி பகர்ந்தது அது.

  “யார் எனக்குத் தீங்கு செய்தாலும்
  யாரை நான் அழைப்பேனோ,

  அவனே எனக்குத் தீங்கிழைத்தால்,
  யாரிடம் சொல்வேன் நான்?”

  தெய்வம் உதவிடும் நமக்கு,
  மற்றவர் தொல்லை செய்தால்!

  தெய்வமே தொல்லை செய்தால்,
  மற்று எவர் உதவுவார் நமக்கு?

  வாழ்க வளமுடன்,
  விசாலாக்ஷி ரமணி

  #049. A Tiny Frog

  During His vanavAsam ( while living in the forest) RAma planted his bow on the ground – while going for a drink of water. The tip of the bow pierced through a frog by RAma’s oversight.

  When RAmA returned, He found the tiny frog dripping blood and in severe pain. He felt very sad and asked the frog,” Why didn’t you croak to let me know of your presence? This accident could have been easily averted then!”

  The frog replied in a feeble voice,” When the others harm me, I call out your name. When you yourself harm me, whose name can I call out?”

  When the world punishes us, we can seek asylum in the lotus feet of the Lord.
  When the Lord himself punishes us, who can save us?

  “When God is with us, no one can harm us.
  When God is against us, no one can save us!” 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •