Tamil Brahmins
Page 1003 of 1003 FirstFirst ... 35039039539939991000100110021003
Results 10,021 to 10,025 of 10025
 1. #10021
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,871
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  ஆழ்வார்கள்

  07b. பெரியாழ்வார் (2)

  பெரியாழ்வாரின் பல்லாண்டு

  பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
  மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வித்திருக்காப்பு (1)


  அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
  வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
  வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
  படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2)


  வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மிண்
  கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்
  ஏழாட்காலும் பழிபபிலோம் நாங்கள் இராக்கதர்வாழ் இலங்கை
  பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாணடு கூறுதுமே. (3)


  ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
  கூடுமனமுடையீர் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
  நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணா வென்று
  பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாணடு கூறுமினே. (4)


  அண்டக்குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை
  இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் றனக்கு
  தொண்டைக்குலத்தில் உள்ளீர்!வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி
  பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாணடு பல்லாயிரத்தாண்டென்மினே. (5)


  எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
  வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத்திரு விழவில்
  அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை
  பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே. (6)


  தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின்
  கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
  மாயப்பொருபடை வாணனை ஆயிரம்தோளும் பொழிகுருதி
  பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (7)


  நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
  கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
  மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல
  பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. (8)


  உடுத்துக் களைந்தநின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு
  தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்
  விடுத்த திசைக் கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில்
  படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (9)


  எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
  அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற் றுய்ந்ததுகாண்
  செந்நாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனித்து ஐந்தலைய
  பைநாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. (10)


  அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்கோன் அபிமான துங்கன்
  செல்வனைபபோலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்
  நல்லவகையால் ந்மோநாராயணா வெனறு நாமம் பலபரவி
  பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. (11)


  பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமெனும்
  வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விரும்பியசொல்
  நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று
  பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே. (12)

  பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 2. #10022
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,871
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  bhagavathy bhaagavatam - skanda 12

  12#1d. காயத்ரீயின் தேவதைகள்


  12#1d. The 24 DevatAs of GAyatree Mantra

  (1) Agni,
  (2) PrajApati,
  (3) Soma,
  (4) EesAna,


  (5) SavitA,
  (6) Aditya,
  (7) Brihaspati,
  (8) MaitrAvaruNa,


  (9) Bhagadeva,
  (10) AryamA,
  (11) GaNesa
  (12) TvashtrA


  (13) PooshA
  (14) IndrAgnee
  (15) VAyu,
  (16) VAmadeva,


  (17) MaitrA varunee
  (18) Visvadeva,
  (19) MAtrikA,
  (20) VishNu,


  (21) Vasu,
  (22) Rudra Deva,
  (23) Kuvera,
  (24) Asvinee KumAras.


  These are the DevatAs of the twenty-four syllables. The hearing of this will destroy all the sins and yields the merits of repeating the mantra GAyatree.
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #10023
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,871
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  ஆழ்வார்கள்

  08a. ஆண்டாள் நாச்சியார் (1)

  ஆண்டாள் என்னும் பிராட்டி அவதரித்தாள்
  அன்னை சீதை போலவே இம்மண்ணுலகில்.


  அவதரித்தாள் ஆண்டாள் நாச்சியார்
  ஆடிப் பூரத்தில், ஸ்ரீ வில்லிபுத்தூரில்.


  பூமியில் அவதரித்தாள் பெண் குழந்தையாக
  பூமாதேவியே ஒரு துளசிச் செடியின் அடியில்.


  கண்டெடுத்தார் தெய்வக் குழந்தையை பெரியாழ்வார்;
  கொண்டாடினார் ‘சுரும்பாற் குழற்கோதை’ என அவளை.


  பெருமான் மீது பெரியாழ்வார் கொண்ட பக்தி கண்டு
  பெருமான் மீது தானும் கொண்டாள் அளவற்ற அன்பு.


  அரங்கனையே மணக்க விரும்பினாள் ஸ்ரீ ஆண்டாள்;
  அரிய பாவை நோன்பை அனுஷ்டித்தாள் மார்கழியில்.


  மாறிவிட்டது ஸ்ரீ வில்லிபுத்தூர் பிருந்தாவனமாக!
  மாறிவிட்டனர் தோழியர் கோபிகா ஸ்திரீகளாக!


  பாடினாள் முப்பது பாசுரங்களை முப்பது நாட்களில்;
  பாசுரங்கள் அமைந்தன அழகிய திருப்பாவையாக.

  இணையாயிற்று இது திவ்விய பிரபந்தங்களுக்கு!
  இணையாயிற்று இது சதுர்மறை வேதங்களுக்கு!


  “கோதைத்தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
  வையம் சுமப்பதும் வம்பு”
  என்று கூறிப் போற்றுகின்றனர்.


  பாடிய பாசுரங்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி
  பாடிய பாடல்களின் எண்ணிக்கை மொத்தம் 173 ஆகும்


  ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்தது


  அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
  பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
  பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை; பூமாலை
  சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


  08a. Sree ANdAL nAchiyAr (2)


  ANdAL was born on earth as an amsam of Bhoo DEvi (The Goddess of Earth ) just SitA Devi herself did. ANdAL was born In the month of Adi under the star Pooram in Sree villipuththoor.


  She was found under a Tulsi plant by PeriyAzhwAr. He named her as KOdhai and brought her up well asif she were his own daughter.


  Even as a young child, ANdAl developed intense love and devotion towards Lord Vishnu impressed by the love and devotion of PeriyAzhwAr. ANdAl wanted to marry none other Lord Vishnu!


  She observed the ‘PAvai NOnbu’ with her friends in the month of MArgazhi. Sree villipuththoor became the BrindhAvan and her friends became the Gopikas of BrindhAvan.


  She sang a pAsuram every day during the thirty days of that month. The collection of these thirty pAsurams is known as ThiruppAvai. It is believed that ThiruppAvai is equivalent to the four vedas in its essence. It has the essence of the nAlAyiram dhivya prabandham in it.


  ANdAL dreamed of marrying Vishnu and her other work is ‘NAchiyAr Thirumozhi’ consisting of 143 pAsurams. It is said that “A person who does not know the ThiruppAvai is not worth living on the face of the earth” 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #10024
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,871
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  bhagavathy bhaagavatam - skanda 12

  12#2a. காயத்ரீயின் 24 சக்தியர்

  12#2a. The twenty four Shaktis

  The twenty four Shaktis for the twenty four letters of Gayatree mantra.

  (1) VAma Devi,
  (2) PriyA,
  (3) SathyA,
  (4) ViswA,

  (5) BhadhravilAsinee,
  (6) PrabhAvathee
  (7) JayA,
  (8) S’AnthA,

  (9) KAnthA,
  (10) DhurgA,
  (11) Saraswathi,
  (12) VidhrumA,

  (13) VisAlesA,
  (14) VyApinee,
  (15) VimalA,
  (16) ThamOpahAriNee,

  (17) SookshmA,
  (18) ViswayOni,
  (19) JayA,
  (20) VashA,

  (21) PadhmAlayA,
  (22) ParAshobhA,
  (23) BhadhrA,
  (24) TripadhA.
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #10025
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,871
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  ஆழ்வார்கள்

  08b. ஆண்டாள் நாச்சியார் (2)

  மாதவனுக்கு மாலைகள் தொடுப்பதே ஆழ்வாரின் பணி;
  கோதை அணிந்து அழகு பார்ப்பாள் மாதவன் மாலையை.


  சூடி முடிவு செய்வாள் “அந்த மாலை மாதவனுக்கு ஏற்றதா?”
  சூடிய பின்னர் கொடுத்து அனுப்புவாள் மாலையை ஆலயம்.


  சூடிய மாலையில் இருந்தது நீண்ட தலைமுடி ஒருநாள்;
  வாடி நின்றார் பெரியாழ்வார் நிகழ்ந்து விட்ட தவறுக்காக.


  நொந்த மனத்துடன் தொடுத்தார் இன்னொரு மலர்மாலை;
  வந்த புதுமாலையை ஏற்க மறுத்து விட்டான் எம்பெருமான்!


  தோன்றினான் பெருமான் பெரியாழ்வாரின் கனவில்;
  தேற்றினான் பெருமான் பெரியாழ்வாரைக் கனவில்;


  “சூடிக் கொடுத்த மாலையே ஏற்புடையது எனக்கு” எனச்
  ‘சூடிக் கொடுத்த சுடர் கொடி!’ ஆகிவிட்டாள் ஆண்டாள்.


  மணப் பருவம் எய்தினாள் சுரும்பாற் குழற் கோதை;
  மணக்க மறுத்துவிட்டாள் வெறும் மானிடப் பிறவியை.


  ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்;
  மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
  மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்”
  என்றாள்


  மனத்தைத் தேற்றிக் கொண்டு வினவினார் பெரியாழ்வார்
  “மணக்க விரும்புவது எந்தப் பதியின் பெருமானை?” என


  குண நலன்களைக் கூறுமாறு வேண்டுகின்றாள் கோதை;
  குண நலன்களை விவரித்துக் கூறுகின்றார் பெரியாழ்வார்.


  அரங்கத்துறையும் பெருமானை வரிக்கின்றாள் கோதை;
  அரங்கன் சம்மதிக்கிறான் கோதையின் கைத்தலம் பற்றிட.


  “அழைத்து வருவீர் திருவரங்கத்துத் திருமுற்றத்துக்கு;
  அவள் கைத்தலம் பற்றுவேன் உரிய முறையில்” என.

  “சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
  பாடி அருளவல்ல பல்வளையாய் – நாடிநீ
  வேங்கவற்(கு) என்னை விதி என்ற இம் மாற்றம்
  நாங்கடவா வண்ணமே நல்கு”.

  (ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்தது)

  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


  08b. Sree ANdAL NAchiyAr (2)


  PeriyAzhwAr was committed to making beautiful garlands out of fresh flowers and taking them to the temple to offer to God. ANdAl would wear the garland secretly and look in the mirror to decide whether the garland was good enough to be offered to her Lord.


  One day PeriyAzhwAr noticed a long hair in the garland he took to the temple. He felt greatly pained that he had committed a grave blunder and insulted God. He made another new garland and took it to the temple. But Lord would not accept the new garland.


  Lord Vishnu appeared in the dream of PeriyAzhwAr that night. He consoled PeriyAzhWar and said the he prefered only the garlands which had been worn by Kodhai first. Now ANdAL got a new title “Choodik koduttha chudar kodi” meaning “The lissome lass who offered her Lord the garland worn by her”


  ANdAl attained marriageable age but firmly refused to marry any mortal man. She had made up her mind that she would marry none other than Lord Vishnu Himself.


  PeriyAzhwAR grew heavy in his heart wondering whether his pet daughter’s wish would ever get fulfilled. Will the Lord consent to marry a mere mortal woman?


  He wished to know which particular form of Vishnu AndAl wanted to marry. She requested him to expatiate on the good qualities of all the forms of Vishnu before she could make up her mind. She finally decided to marry Sree RanganAthan.


  Sree RanganAthan also agreed to marry AndAl and He wanted ANdAL to be brought to his temple dressed as a beautiful bride. 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •