Tamil Brahmins
Page 1002 of 1002 FirstFirst ... 2502902952992998999100010011002
Results 10,011 to 10,017 of 10017
 1. #10011
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,796
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  bhagavathy bhaagavatam - skanda 11


  11#22a. காயத்ரீ ஜபம் (1)

  நாளொன்றுக்கு ஆயிரம் உரு என்ற கணக்கில்
  நிஷ்காம்யமாக ஜபம் செய்திட வேண்டும்.

  ஆயுள் விருத்தியாகும் ஒரு மாதம் ஜபித்தால்;
  ஆரோக்கியம் வளரும் இரண்டு மாதம் ஜபித்தால்.

  விருத்தியாகும் சம்பத்து மூன்று மாதம் ஜபித்தால்
  விருத்தியாகும் புகழ் நான்கு மாதங்கள் ஜபித்தால்.

  விருத்தியாகும் வித்தை ஐந்து மாதம் ஜபித்தால்
  விருத்தியாகும் மாதங்கள் இன்னும் அதிகரித்தால்.

  இஷ்ட சித்தி உண்டாகும் ஒற்றைக் காலில் நின்று
  இரு கைகளை உயர்த்தி முன்னூறு உரு ஜபித்தால்.

  இஷ்டப்பட்டவை எல்லாம் கிடைக்கும் இதுபோல
  இயல்பாக ஆயிரத்தெட்டு முறைகள் ஜபித்தால்.

  மனம் ஒருமித்து ஜபித்தால் கிடைக்கும்
  மோக்ஷப் பிராப்தி ஒரு மாத காலத்தில்.

  எல்லாமே சித்திக்கும் இது போலத் தொடர்ந்து
  எல்லோரும் மூன்று லக்ஷம் உரு ஜபித்தால்.

  நீரில் மூழ்கி நூறு உரு ஜபித்தால் கைக்கூடும்
  விரும்பும் மனோ ரதங்கள் ஒரே மாதத்தில்.

  மூன்று லக்ஷம் உரு ஜபித்தால் சித்திக்கும்
  மனம் விரும்பியவைகள் அனைத்துமே.

  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

  11#22a. GAyathree Japam (1)

  Gayathree mantra must be chanted one thousand times per day. Chanting for one month makes one life span longer. Chanting for two months will improve one’s health.

  Chanting for three months bestows wealth on the person. Chanting for four months will make him very famous. Chanting for five months will make him very skillful. As the number of months of chanting increases the benefits also increase.

  If a person stands on one leg, lifts up both his hands and does this japam three hundred times, he will get his ishta siddhi. Doing japam one thousand and eight times will make him get all his desires fulfilled.

  Concentrated japam for one month will make him eligible to obtain moksham or liberation. Doing the japam for three lakh times will make him get everything he can think of.

  Standing in water and doing japam one hundred times a day for one month will make his wishes come true. Doing japam three lakh times in this manner will bestow on him all the greatness.


 2. #10012
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,796
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  ஆழ்வார்கள்

  05b. நம்மாழ்வார் (2)

  மகான் மதுரகவி கண்டார் ஒரு பெரிய ஒளி வட்டத்தை;
  மகான் பயணித்தார் ஒளியின் காரணத்தை அறிந்திட.


  சென்று சேர்ந்தார் நம்மாழ்வார் இருந்த புளிய மரத்தை;
  ஒன்றும் பேசாத சிறுவனிடம் பேசினார் மதுரகவியார்;


  வாய் பேசாத சடகோபனிடம் வினவினார் மதுரகவி
  வாய் பேசுபவர்களும் அறியாத ஓர் அரிய வினாவை.


  “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்
  எத்தைத் தின்று எங்கே கிடைக்கும்?” என்றார்


  சத்தான விடை தந்தான் சடகோபன் வாய் திறந்து,
  “அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்!” என்று.


  ஆச்சாரியான் ஆனான் சடகோபன் ஆழ்வான்
  அவனைத் தேடிவந்த மதுரகவி ஆழ்வாருக்கு.


  நம்மாழ்வார் படைத்தார் 1296 பாசுரங்களை;
  நான்கு தமிழ் மறைகள் ஆயின அப்பாசுரங்கள்.


  திருவிருத்தம், திரு ஆசிரியம் என்பவை இரண்டு;
  திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி என இரண்டு.


  நான்கு படைப்புகளும் விளங்கிகின்றன – உயரிய
  நான்கு வேதங்களின் அரியத் தமிழ்ச் சாரமாகவே.


  “வேதம் செய்த தமிழ் மாறன்” என்னும் பட்டத்தை
  ஆதரவுடன் அளித்தார் ஸ்ரீ ராமானுஜ ஆச்சாரியார்.


  வழக்கழிந்து ஒழிந்து போயின பாசுரங்கள் – அவற்றைத்
  தழைப்பிக்க முயற்சி செய்தவர் திரு நாதமுனிகள் ஆவார்.


  தொடர்பு கொண்டார் யோகநிலையில் நம்மாழ்வாரை;
  தொடரச் செய்தார் பாசுரங்களுக்குப் புத்துயிர் தந்து.


  நான்காயிரம் பாசுரங்கள் நாதமுனிக்குக் கிடைப்பதற்கு
  நம்மாழ்வாரே செய்தார் பேருதவி என்பதில் ஐயமில்லை.


  ஆழ்வார்களை முதன்மையானவர் இவரே, இது உறுதி!
  ஆழ்வாரின் திருவாய்மொழியே ‘திராவிட வேதம்’ ஆனது!


  பிற பட்டப் பெயர்கள் சடகோபன், சடாரி, பராங்குசன்,
  மாறன், வகுளாபரணன், குருகையார் கோன் என்பன

  “உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
  மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
  அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
  துயரறு சுடரடி தொழுதெழென் மனனே”.


  “கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்
  எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே”


  நம்மாழ்வார் திருவடிகளே சரணம்


  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


  05b. NammaAzhvAr (2)


  MahAn Madhurakavi AzhwAr saw a huge glow of light in the sky and went towards it to investigate the cause of that glow. He reached Thiruk kurugoor and the tamarind tree where the sixteen year old Satagopan was sitting – oblivious to the external world.


  Madhurakai AzhwAr put a question to the young boy which was in the form of a riddle. The boy spoke for the first time in his life and answered the riddle correctly.


  The question asked by Madhurakavi was,” If the imperishable soul gets into a perishable body what would it enjoy and where would it be?’ The answer given by Satagopan was,” It would enjoy what was allotted to that body and live in it”


  Madhurakavi AzhwAr recognized the greatness of this young boy and became his foremost disciple. NammazhwAr composed four great works named Thiru Viruttham, Thiru Asiriyam, ThiruvAi mozhi and Periya ThiruvanthAthi. The total number of verses sung by NammAzhwAr form 1296 out of the 4000 verses found in NAlAyiram dhivya prabandham.


  His compositions give the essence of the four vedas in Tamil. RamAnuja AchArya praised him as “Vedham seitha Thamizh mAran” meaning ‘The MARan who rendered the Vedas in Tamil’.


  At one point of time all the pasurams went out of circulation and were forgotten. Nadhamuni took great pains to save them and revive them. He communicated with NammazhwAr through his power of yoga and could save and revive the 4000 verses with the help of NammAzhwAr.


  NammAzhwAr is the foremost among the twelve azhwArs. His works are referred to as DrAvida VEdam. The other popular names attributed to him are Chadakoban, ChadAri, ParAnkusan, MARan, VaguLAbharaNan and Kurugaiyar kOn. 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #10013
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,796
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  bhagavathy bhaagavatm - skanda 11

  11#22b. காயத்ரீ ஜபம் (2)

  உண்ண வேண்டும் உப்பில்லாமல் உணவு;
  உண்ண வேண்டும் இரவு மட்டுமே உணவு;

  ஒற்றைக் காலில் நீரில் நின்று கைகளை உயர்த்தி
  ஒரு வருஷம் ஜபிக்கின்றவன் ரிஷியாகி விடுவான்.

  இரண்டு வருஷங்கள் ஜபித்தால் வித்தைக் கைக் கூடும்;
  மூன்று வருஷங்கள் ஜபித்தால் முக்கால உணர்வு வரும்.

  நான்கு வருஷங்கள் ஜபித்தால் மஹாதேவன் தரிசனம்;
  ஐந்து வருஷங்கள் ஜபித்தால் அணிமா சக்திகள் வரும்.

  ஆறு வருஷங்கள் ஜபித்தால் விரும்பிய உரு எடுக்கலாம்;
  ஏழு வருஷங்கள் ஜபித்தால் தேவனின் வடிவம் கிடைக்கும்.

  ஒன்பது வருஷங்கள் ஜபித்தால் மனுத்வம் கிட்டும்;
  பத்து வருஷங்கள் ஜபித்தால் இந்திரத்வம் கிட்டும்.

  பதினோரு வருஷங்கள் ஜபித்தால் பிரஜாபதித்வம் கிட்டும்;
  பன்னிரண்டு வருஷங்கள் ஜபித்தால் பிரம்மத்வம் கிட்டும்.

  உணவு ஆகலாம் கிழங்குகள், சருகுகள், பால் மற்றும்
  கனிகள், சோமபானம், பிக்ஷா அன்னம் போன்றவை.

  உரு மூவாயிரம் தினம் ஜபித்தால் ஒழிந்து போகும் இவை:
  குருபத்னி சம்போக பாவம், பொன் திருட்டு, சுராபானம்!

  காட்டில் குடிசையில் இருந்து ஜபித்தால்
  விட்டு விலகும் பிரம்மஹத்தி ஒரே மாதத்தில்!

  பாவங்களை ஒழிக்கலாம் ஆயிரம் உரு தினமும்
  நீரில் மூழ்கி பன்னிரண்டு ஆண்டுகள் ஜபித்து.

  ஒரு மாத காலம் மௌனத்தோடும் நியமத்தோடும்
  பிராணாயாமத்துடன் மூவாயிரம் உரு ஜெயித்தால்

  அகன்று விடும் தீவினைகள் – பிரம்மஹத்தி
  அகலும் ஆயிரம் முறை பிராணாயாமத்தால்.

  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

  தேவி பகவதி பாகவதம் பதினொன்றாம் ஸ்கந்தம் முற்றுப் பெற்றது


  11#22b. GAyatree japam (2)


  A person must eat only once a day at night – food without any salt. If such a person stands in water on one leg, lifts up both his hands and does GAyatree japam for one full year, he can become a rishi.

  If he does japam for two years he will will become the master of learning. If he does the japam, for three years he can know all the happenings in the past, the present and the future.

  If he does this for four years, he will get the darshan of Lord Siva. If he does this for five years he will get the ashta siddhis. If he does this for six years he will get the power to assume any form.

  If he does this for seven years he will get the form of a Devan. Doing this for nine years will make him a Manu. If he can do this for ten full years he can become an Indra.

  If he can do this for eleven years, he can become a prajApati. If he can do this for twelve long years he can become a BrahmA. The food he can take may be roots, fruits, leaves, milk, water, soma rasa and biksha annam.

  Chanting three thousand times GAyatree mantra will destroy the sins incurred by stealing gold, consuming intoxicating drinks and copulating with one’s own guru patni.

  Chanting GAyatree staying in a hut in the forest can remove even Brahma hathi dosham in one month. Standing in water and doing japam one thousand times a day, for twelve days, will deliver him from all his sins.

  Brahma hatthi can be got rid off by doing one thousand prANAyAma and doing japam three thousand times a day, for one month, observing the vow silence and proper niyamam.


  Skanda 11 of Devi Bhagavathy Bhaagavatam gets completed with this.

 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #10014
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,796
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  ஆழ்வார்கள்

  06a. மதுரகவி ஆழ்வார் (1)

  நம்மாழ்வாரின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு புரிந்தார்
  இறையடிகளுக்குத் திருத்தொண்டு திரு மதுரகவி ஆழ்வார்.


  அவதரித்தார் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில்,
  திருக்கோளூரில் நித்யஸூரி குமுதரின் அம்சமாக.


  உண்டு ‘ஆழ்வாருக்கு அடியான்’ என்ற பட்டம் இவருக்கு;
  உண்டு ‘குருகைப் பிரான்’ என்னும் பட்டமும் இவருக்கு.


  செவிக்கு இனிய சொற்களால் பாசுரங்கள் பாடியதால்
  அளித்தனர் ‘மதுரகவி ஆழ்வார்’ என்னும் அரிய பட்டம்.


  வணங்கினார் ஆழ்வார் அயோத்தி நகரில் ராம பிரானை;
  வனப்புடன் ஒளிர்ந்தது தென் திசையில் அற்புத ஜோதி!


  அடைந்தார் ஆழ்வார் திருநகரியை மதுரகவியார்;
  அறிந்தார் அந்த ஊரின் சிறப்பைப் பிறர் மூலம்.


  சென்றார் புளிய மரத்தினுள் பத்மாசனத்தில்
  சின்முத்திரையுடன் அமர்ந்திருந்த சடகோபரிடம்.


  குண்டுக்கு கல் ஒன்றைத் தூக்கிப் போட்டார் கீழே;
  கண் விழித்துப் பார்த்தார் சடகோபன் அது கேட்டு.


  “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்
  எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என வினவ


  “அதைத் தின்று அங்கே கிடைக்கும்” சடகோபன்
  அளித்தார் உயரிய ஆத்ம ஞானத்தை விடையாக.


  ஆட்கொள்ளும்படி விண்ணப்பித்தார் மதுரகவியார்;
  ஆட்கொண்டு ஆணையிட்டார் பிரபந்தங்களை எழுதிட.


  எழுதி அருளினார் நம்மாழ்வாரின் பிரபந்தங்களை;
  எழுந்தருளச் செய்தார் நம்மாழ்வாரின் விக்ரஹத்தை


  அழைத்தனர் ஒரு வாதத்துக்கு நம்மாழ்வாரை
  அன்றைய முன்னூறு தமிழ்ச் சங்கத் புலவர்கள்.


  கவிழ்த்தது சங்க பலகை; அழித்தது புலவர் செருக்கை;
  வீழ்த்தியது பலகை தமிழ்ப் புலவர்களை அக்குளத்தில்!


  மதுரகவி வைத்தார் நம்மாழ்வார் பிரபந்தங்களை
  மதுரைத் தமிழ்ப் புலவரின் சங்கப் பலகையின் மீது.


  உணர்ந்தது உலகம் ‘நம்மாழ்வார் இறையம்சம்’ என்பதை;
  உலகெங்கும் பரப்பினார் நம்மாழ்வாரின் மகிமைகளை!


  ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்னும் திவ்வியப் பிரபந்தம்
  கண்கண்ட கடவுளாகப் போற்றும் குருவாகிய நம்மாழ்வரை


  இறைவனைப் புகழ்ந்து பாடவில்லை மதுரகவியார்
  இனிய குருவைப் போற்றிப் பாடினார் பாசுரங்கள்.

  ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் திருவடிகளே சரணம்


  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


  #06. Madhurakavi AzhwAr


  Madhurakavi AzhwAr served Lord Vishnu indirectly by serving his guru NammAzhwAr directly. He was born in the month of Chithirai in th star Chithirai as the amsam of Nithya soori Kumudhar.


  ‘AzhwArukku adiyAn’ (The servant of AzwAr), Kurugaip pirAn (The lord of Kurugai), Madhurakavi (The poet who sings sweet poems) are some of the other names that denote this AzhwAr.


  While Madhurakavi was in Ayodhya worshiping Sree Rama, he saw a glow of light or an illumination in the South. He went Southwards to find out the cause of this unusual glow.


  He reached AzhwAr Thirunagari and learned about its greatness. He went to the tamarind tree under which Satagpan was sitting. The lad seemed to be oblivious to the external world.


  Madhurakavi dropped a huge stone. The lad Satagopan opened his eyes hearing the sound. Now Madhurakavi posed a question to the young lad in the form of a riddle.


  “What happens when the imperishable soul enters inside a perishable body?” The young boy conveyed Atma JnAnam ( True knowledge) as his reply and said,”It will enjoy what was destined to that body and will reside in it”


  Madhurakavi requested Satagopan to accept him as his disciple, Satagopan did as requested and the ordered Madhurakavi to write down his pAsurams. Madhurakavi wrote down all the pAsurams of Satagopan (NammAzhwAr) pasurams. He also made a vigraham of his guru appear.


  The three hundred poets of Madurai Tamil sangam challenged the greatness of NammAzhwAr. Madhurakavi placed the pasurams of NammAzhwAr on the Sangap palagai. It heldon to those pasurams but overturned plunging all the poets who challenged NammazhwAr into the pond of water.


  Everyone realised that NammAzhWAr was an amsam of God Vishnu. Madhurakavi spread the name and fame of NammAzhwAr all over the world. He did not sing in praise of God. He chose to sing in praise of his guru NammAzhvAr instead.


  ‘KaNNi nuN siruth thAmbu’ consists of eleven verses sung by Madhurakavi AzhwAr in praise of his guru NammAzhwAr. 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #10015
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,796
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  bhagavathy bhaagavatam - skanda 12

  12#1a. காயத்ரி ஜபம்

  “தேவியின் அருளைப் பெறுவதற்குச் செய்யத்
  தேவையான கர்மா எது என்று கூறுங்கள்!


  காயத்ரீ ஜெபத்தின் விதிமுறைகள் யாவை?
  காயத்ரீ ஜெபத்தின் இன்றியமையாமை என்ன?


  காயத்ரீயின் வர்ணங்கள், சந்தஸ்ஸுகள் எவை?
  காயத்ரீயின் ரிஷிகள், தேவதைகள் யார் யார்?”


  வினவினான் நாரதன் நாராயணனிடம் இவற்றை;
  விளக்கினான் நாரதனுக்கு நாராயணன் இவற்றை.


  “பிற அனுஷ்டானங்களைச் செய்யாது இருந்தாலும்
  பிராமணன் செய்யதேயாக வேண்டும் காயத்ரீ ஜபம்.


  மூன்று வேளைகளிலும் சந்தியா வந்தனம் செய்து
  மூவாயிரம் உரு காயத்ரீ ஜபம் செய்கின்றவனை


  போற்றிப் பூஜிப்பர் விண்ணுலகத் தேவர்களும்;
  போற்றிப் பூஜிப்பர் மண்ணுலக மாந்தர்களும்.


  நியாசங்களைச் செய்யாது விட்டு விட்டாலும்
  நிச்சயமாக ஜபித்தாக வேண்டும் காயத்ரீயை.


  தியானிக்க வேண்டும் தேவியை ஜெபத்தின் மூலம்;
  தியானிப்பவன் பெறுவான் பற்பல மேன்மைகளை.


  அக்ஷர சித்தி தரும் மும்மூர்த்திகளுடன் சமத்துவம்!
  அக்ஷர சித்தி தரும் சோமசூர்யாக்னியுடன் சமத்துவம்!”


  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


  12#1a. The importance of GAyatree Mantra

  NArada said to NArAyaNA, ” You have described the rules of SadAchAra and the glories of Devi. Most of the Devi’s vratams are difficult to follow for the ordinary people. Please tell me that vratam which can be followed easily by all men and which will win the grace of Devi.


  Please tell me how GAyatree Japam is necessary for SadAchArA. Also tell me the names of the Rishis, Chhandas, Devatas and varNas of the twenty four syllables in GAyatree.”


  Sri NArAyaNan replied, “The brahmins can reap all the benefits just by repeating GAyatree mantra as by observing all those difficult vratas. If a Brahmin performs SandhyA vandanam thrice a day and repeats GAyatree three thousand times, he will be worshiped even by Devas.


  Whether or not a brahmin practises NyAsa, if he sincerely repeats the GAyatree mantra, worships GAyatree Devi and attains the siddhi of those syllables, he will earn respect at par with The Trinity as well as The Sun, The Moon and Agni.
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #10016
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,796
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  ஆழ்வார்கள்

  06b. மதுரகவி ஆழ்வார் (2)

  கண்ணி நுண் சிறுத்தாம்பு

  கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
  பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
  நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
  அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (1)

  நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
  மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
  தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
  பாவின் இன்னிசை பாடித் திரிவனே (2)


  திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
  கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
  பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்-
  உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே (3)


  நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
  புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
  அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
  தன்மையான் சடகோபன் என் நம்பியே (4)


  நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
  நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
  செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
  அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே (5)


  இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
  நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
  குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
  என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே (6)


  கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
  பண்டை வல் வினை பாற்றி அருளினான்
  எண் திசையும் அறிய இயம்புகேன்
  ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே (7)


  அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
  அருளினான் அவ் அரு மறையின் பொருள்
  அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
  அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே (8)


  மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
  நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
  தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்-
  புக்க காதல் அடிமைப் பயன் அன்றே (9)


  பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
  செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
  குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
  முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே (10)


  அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
  அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
  அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
  நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே (11)


  A wonderful legend about this great literary work follows!

 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #10017
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,796
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  The legend of the recovery and compilation of the 4000 AzhwAr pAsurams which were lost at one point of time....

  The collection, once thought to have been lost, was organized in the form of an anthology by
  Nathamuni.


  Nathamuni
  was born in Veera Naarayanapuram (Veeranam) or present-day Kaattu Mannaar Koil. There is a long time gap between Thirumangai Alvar (the last alvar) and Nathamuni. In this dark period, nobody knew what happened to the 4,000 verses of the text.


  Legend has it that once
  Nathamuni heard some people reciting the decad of Aaraavamudeof Nammaazhvaar at Kumbakonam. Captivated by these pasurams (hymns), he wanted to know more about them.

  One of the verses also mentioned Aayiraththul Ippaththu (
  Tamil: these 10 out of the 1000). When Nathamuni enquired about the remaining 990, the people who sang the 10 did not know anything about the other verses. But as the song mentioned the name and place of the azhwar (Kurugoor Satakopan), Nathamuni proceeded to Thirukurugoor and asked the people there about Swami Nammazhwar's 1,000 verses.


  The people did not know the 1,000 verses that
  Nathamuni wanted, but they told him about 11 pasurams (hymns) of Madhurakavi Alvar, a disciple of Nammazhwar Kanninun Siruthaambu. They asked him to go to Thiruppuliaazhwar, the place where Nammazhwarlived, and recite these 11 pasurams 12,000 times.

  Nathamuni did as advised, and pleased with his penance, Nammazhwar granted him not only his 1,000 pasurams, but the entire 4,000-pasuram collection of all the Alvars.


  https://en.wikipedia.org/wiki/Naalay...ya_Prabhandham
 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •