Tamil Brahmins
Page 1002 of 1002 FirstFirst ... 2502902952992998999100010011002
Results 10,011 to 10,012 of 10012
 1. #10011
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,764
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  bhagavathy bhaagavatam - skanda 11


  11#22a. காயத்ரீ ஜபம் (1)

  நாளொன்றுக்கு ஆயிரம் உரு என்ற கணக்கில்
  நிஷ்காம்யமாக ஜபம் செய்திட வேண்டும்.

  ஆயுள் விருத்தியாகும் ஒரு மாதம் ஜபித்தால்;
  ஆரோக்கியம் வளரும் இரண்டு மாதம் ஜபித்தால்.

  விருத்தியாகும் சம்பத்து மூன்று மாதம் ஜபித்தால்
  விருத்தியாகும் புகழ் நான்கு மாதங்கள் ஜபித்தால்.

  விருத்தியாகும் வித்தை ஐந்து மாதம் ஜபித்தால்
  விருத்தியாகும் மாதங்கள் இன்னும் அதிகரித்தால்.

  இஷ்ட சித்தி உண்டாகும் ஒற்றைக் காலில் நின்று
  இரு கைகளை உயர்த்தி முன்னூறு உரு ஜபித்தால்.

  இஷ்டப்பட்டவை எல்லாம் கிடைக்கும் இதுபோல
  இயல்பாக ஆயிரத்தெட்டு முறைகள் ஜபித்தால்.

  மனம் ஒருமித்து ஜபித்தால் கிடைக்கும்
  மோக்ஷப் பிராப்தி ஒரு மாத காலத்தில்.

  எல்லாமே சித்திக்கும் இது போலத் தொடர்ந்து
  எல்லோரும் மூன்று லக்ஷம் உரு ஜபித்தால்.

  நீரில் மூழ்கி நூறு உரு ஜபித்தால் கைக்கூடும்
  விரும்பும் மனோ ரதங்கள் ஒரே மாதத்தில்.

  மூன்று லக்ஷம் உரு ஜபித்தால் சித்திக்கும்
  மனம் விரும்பியவைகள் அனைத்துமே.

  உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

  11#22a. GAyathree Japam (1)

  Gayathree mantra must be chanted one thousand times per day. Chanting for one month makes one life span longer. Chanting for two months will improve one’s health.

  Chanting for three months bestows wealth on the person. Chanting for four months will make him very famous. Chanting for five months will make him very skillful. As the number of months of chanting increases the benefits also increase.

  If a person stands on one leg, lifts up both his hands and does this japam three hundred times, he will get his ishta siddhi. Doing japam one thousand and eight times will make him get all his desires fulfilled.

  Concentrated japam for one month will make him eligible to obtain moksham or liberation. Doing the japam for three lakh times will make him get everything he can think of.

  Standing in water and doing japam one hundred times a day for one month will make his wishes come true. Doing japam three lakh times in this manner will bestow on him all the greatness.


 2. #10012
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,764
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  ஆழ்வார்கள்

  05b. நம்மாழ்வார் (2)

  மகான் மதுரகவி கண்டார் ஒரு பெரிய ஒளி வட்டத்தை;
  மகான் பயணித்தார் ஒளியின் காரணத்தை அறிந்திட.


  சென்று சேர்ந்தார் நம்மாழ்வார் இருந்த புளிய மரத்தை;
  ஒன்றும் பேசாத சிறுவனிடம் பேசினார் மதுரகவியார்;


  வாய் பேசாத சடகோபனிடம் வினவினார் மதுரகவி
  வாய் பேசுபவர்களும் அறியாத ஓர் அரிய வினாவை.


  “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்
  எத்தைத் தின்று எங்கே கிடைக்கும்?” என்றார்


  சத்தான விடை தந்தான் சடகோபன் வாய் திறந்து,
  “அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்!” என்று.


  ஆச்சாரியான் ஆனான் சடகோபன் ஆழ்வான்
  அவனைத் தேடிவந்த மதுரகவி ஆழ்வாருக்கு.


  நம்மாழ்வார் படைத்தார் 1296 பாசுரங்களை;
  நான்கு தமிழ் மறைகள் ஆயின அப்பாசுரங்கள்.


  திருவிருத்தம், திரு ஆசிரியம் என்பவை இரண்டு;
  திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி என இரண்டு.


  நான்கு படைப்புகளும் விளங்கிகின்றன – உயரிய
  நான்கு வேதங்களின் அரியத் தமிழ்ச் சாரமாகவே.


  “வேதம் செய்த தமிழ் மாறன்” என்னும் பட்டத்தை
  ஆதரவுடன் அளித்தார் ஸ்ரீ ராமானுஜ ஆச்சாரியார்.


  வழக்கழிந்து ஒழிந்து போயின பாசுரங்கள் – அவற்றைத்
  தழைப்பிக்க முயற்சி செய்தவர் திரு நாதமுனிகள் ஆவார்.


  தொடர்பு கொண்டார் யோகநிலையில் நம்மாழ்வாரை;
  தொடரச் செய்தார் பாசுரங்களுக்குப் புத்துயிர் தந்து.


  நான்காயிரம் பாசுரங்கள் நாதமுனிக்குக் கிடைப்பதற்கு
  நம்மாழ்வாரே செய்தார் பேருதவி என்பதில் ஐயமில்லை.


  ஆழ்வார்களை முதன்மையானவர் இவரே, இது உறுதி!
  ஆழ்வாரின் திருவாய்மொழியே ‘திராவிட வேதம்’ ஆனது!


  பிற பட்டப் பெயர்கள் சடகோபன், சடாரி, பராங்குசன்,
  மாறன், வகுளாபரணன், குருகையார் கோன் என்பன

  “உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
  மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
  அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
  துயரறு சுடரடி தொழுதெழென் மனனே”.


  “கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்
  எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே”


  நம்மாழ்வார் திருவடிகளே சரணம்


  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


  05b. NammaAzhvAr (2)


  MahAn Madhurakavi AzhwAr saw a huge glow of light in the sky and went towards it to investigate the cause of that glow. He reached Thiruk kurugoor and the tamarind tree where the sixteen year old Satagopan was sitting – oblivious to the external world.


  Madhurakai AzhwAr put a question to the young boy which was in the form of a riddle. The boy spoke for the first time in his life and answered the riddle correctly.


  The question asked by Madhurakavi was,” If the imperishable soul gets into a perishable body what would it enjoy and where would it be?’ The answer given by Satagopan was,” It would enjoy what was allotted to that body and live in it”


  Madhurakavi AzhwAr recognized the greatness of this young boy and became his foremost disciple. NammazhwAr composed four great works named Thiru Viruttham, Thiru Asiriyam, ThiruvAi mozhi and Periya ThiruvanthAthi. The total number of verses sung by NammAzhwAr form 1296 out of the 4000 verses found in NAlAyiram dhivya prabandham.


  His compositions give the essence of the four vedas in Tamil. RamAnuja AchArya praised him as “Vedham seitha Thamizh mAran” meaning ‘The MARan who rendered the Vedas in Tamil’.


  At one point of time all the pasurams went out of circulation and were forgotten. Nadhamuni took great pains to save them and revive them. He communicated with NammazhwAr through his power of yoga and could save and revive the 4000 verses with the help of NammAzhwAr.


  NammAzhwAr is the foremost among the twelve azhwArs. His works are referred to as DrAvida VEdam. The other popular names attributed to him are Chadakoban, ChadAri, ParAnkusan, MARan, VaguLAbharaNan and Kurugaiyar kOn. 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •