• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரம்

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரம்

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் !


ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரம் -ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தவை —


ஸ்ரீபராசர பட்டார்யா ஸ்ரீரெங்கேச புரோஹித
ஸ்ரீவத்சாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே


சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்யதேச ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ச்வ வின்யச்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் 1


கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் கர்ணாந்த லோலேஷணம்
முக்தஸ் மேரம நோஹரா தர தளம் முக்தா க்ரீடோஜ்ஜ்வலம்
பச்யன்மா நஸ பச்யதோ ஹரருசி பர்யாய பங்கே ருஹம்
ஸ்ரீ ரங்காதீபதே கதா நு வதநம் சேவேய பூயோப் யஹம் 2


கதாஹம் காவேரி தட பரிசரே ரங்க நகரே
சயானம் போகீந்த்ரேசதமகமணி ச்யாமல ருசிம்
உபாசீன க்ரோசன் மதுமதன நாராயண ஹரே
முராரே கோவிந்தேத்ய நிசமப் நேஷ்யாமி திவசான் 3


கதாஹம் காவேரி விமல சலிலே வீத கலுஷோ
பவேயம் தத்தீரே சரம முஷி வசேயம் கநவநே
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்
பஜேயம் ரங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் 4


பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிக்த நீரோப கண்டாம்
ஆவீர்மோத ஸ்திமித சகுநா நூதித ப்ரஹ்ம கோஷாம்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம்
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம் நஹ 5


ந ஜாதுபீதாம்ருத மூர்ச்சிதா நாம் நா கௌகசாம் நந்தந வாடிகாஸூ
ரங்கேஸ்வர த்வத்புரமாச்ரிதா நாம் ரத்யா சுநாம் அந்யதாமோ பவேயம் 6


அசந்நிக்ருஷ்டசஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர்
மித்த்யாபவாதேன கரோஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி சந்நிக்ருஷ்டே
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி 7


ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞ்ஜந கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ஸ பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத த்வாரவதீ ப்ராயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முநி 8


ஸ்ரீ பராசுர பட்டர் திருவடிகளே சரணம்!


ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரம் :


* காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோகநித்திரையில் துயில்பவரும், இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கிநிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.


* கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும், முத்துக்களால் இழைக்கப் பட்ட கிரீடத்தைச் சூடியவரும், தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும், தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே! உம்மை மறுபடியும் எப்போது பார்ப்பேன்?


* காவிரிக்கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும், மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே! உம்மை ஹே நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களை சொல்லி மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?


* எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்? அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்? ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?


* தேவேந்திரனின் அமரலோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம். ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக.


* ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்), கூர்மத்தையும் (ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும், அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும், கயாக்ஷத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.


* “பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது’ என்று கூறினால் கருணை கொண்ட தாய், எப்படி குழந்தையை நோக்கி ஓடிவருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க ஓடிவந்து அருள்செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.
 

Latest ads

Back
Top